பதிவுகள்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
பதிவுகள்

உச்சம் - படைப்புக் கட்டுரை

E-mail Print PDF

கங்காரு என்ற பெயர் முதன் முதலாக 1770 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி கப்டன் ஜேம்ஸ் குக் என்பவரால் பதியப்பட்டுள்ளது. கப்பலைத் திருத்துவதற்காக Endeavour river (தற்போது cook town) இல் தங்கியிருந்தபோது, அந்த அதிசய மிருகத்தைப் பார்த்து 'அதன் பெயர் என்ன?' என்று அங்குள்ள ஆதிவாசிகளிடம் கேட்டிருக்கின்றார்கள். ஆதிவாசிகள் 'Kangaroo' ('நீங்கள் கேட்பது புரியவில்லை') என்று தமது Guugu Yimithirr பாஷையில் சொல்லியிருக்கின்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் அந்த மிருகத்தின் பெயராயிற்று.1.
அவுஸ்திரேலியாவில் வருடக்கடைசி - கோடைகால விடுமுறை. மிக நீண்டதாக இருக்கும். பள்ளிக்கூடங்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். வேலையில் இருந்து எனக்கு மூன்று கிழமைகள் விடுமுறை கிடைக்கும். பாடசாலை விடுமுறை விட இன்னமும் இரண்டு கிழமைகள்தான் இருந்தன. காலையில் மகனைப் பாடசாலைக்குக் கூட்டிச் செல்லும் போது, வீதியில் பெரியதொரு கங்காரு இறந்து கிடப்பதைப் பார்த்தோம். வாகனங்கள் அதை விலத்திப் போய்க் கொண்டிருந்தன.

Last Updated on Thursday, 17 May 2012 16:21 Read more...
 

முல்லைப் பெரியார் அணை இனப் பற்றா? இன வெறியா?

E-mail Print PDF

திலகபாமா(குறிப்பு: கௌதம சித்தார்த்தன், முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து என்னுடைய கருத்தை பதிவு செய்து தரச் சொல்லிக் கேட்டிருந்தார். பல பேருடைய கருத்துக்களும் திரட்டி தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கொண்டு வரப் போவதாகவும், ஆனால் அது என்ன காரணத்தினாலோ நூலாக வடிவம் பெறவில்லை எனது கட்டுரை  இதோ)  பட்டி வீரன் பட்டியில் வசிக்கும் 99 வயதான எனது பாட்டனாரான நா. தில்லைக் கோவிந்தன்  2005 இல் சந்தித்த போது மணல் திருட்டு ,மணல் கொள்ளை என மணல் பிரச்சனையாகத் தொடங்கிய காலகட்டம் அப்போது அவர் காமராஜர் காலகட்டத்தில் வைகை அணைகட்டிய போது நடந்த  விசயங்களை  நினைவு படுத்திப் பேசும் போது, இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் இன்று தண்ணீர் மணல் , விவசாயம் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறைகளும் எனக்கு உனக்கு என்று சண்டைகளும் வருவதைக் குறித்துச் சொல்லி “ ”அணையைக் கட்டினார்கள் அடிவயிற்றில் அடித்தார்கள்” என்  தலைப்பிட்டு எழுதிய கட்டுரையை என்னிடம் தந்தார். அது அப்போது இணைய இதழ்களில் வெளி வந்தது. அதில் சொல்லிய ஒரு வரி இன்று என் நினைவுக்கு வருகின்றது.

Last Updated on Wednesday, 16 May 2012 22:57 Read more...
 

காலச்சுவடு: மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் -

E-mail Print PDF

மே 19, 2009 கொண்டாட்டங்களுக்குப் பின் - சுனந்த தேசப்ரிய-மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுகொள்வது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேன். “போர் முடிந்துவிட்டிருக்கலாம்; ஆனால் தமிழ் மக்களின் போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை.” அந்தப் பத்தியின் இறுதிப் பகுதியில் மூன்று விடயங்களைக் குறிப்பிட்டிருந்தேன்.

Last Updated on Tuesday, 15 May 2012 18:45 Read more...
 

காலச்சுவடு: முள்ளிவாய்க்கால் - இன அழிப்பும் போர்க்குற்றங்களும்!

E-mail Print PDF

அறிமுகம்

 ஜூட் லால் பெர்ணாண்டோ டப்ளின் டிரினிட்டி கல்லூரியைச் சார்ந்த ஐரிஸ் ஸ்கூல் ஆஃப் எக்குமெனிக்ஸில் அமைதி மற்றும் இணக்க மேம்படுத்தல் துறையில் உயராய்வு மேற்கொள்வதோடு அங்கு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.  இலங்கையின் களனியிலுள்ள துலானா என்னும் மதம் சார்பான உரையாடல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர். டிரினிட்டி கல்லூரியில் 2010இல் இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தை ஒருங்கிணைத்தவர்.]மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.

Last Updated on Wednesday, 16 May 2012 16:41 Read more...
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 3

E-mail Print PDF

அத்தியாயம் மூன்று: மாமா மகன்

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]     மேற்கு வானம் சிவந்து கிடந்தது. அரவணைப்பில் கதிரை மூடிவிட்ட ஆனந்தத்தில் வெளிப்பட்ட அடிவானப் பெண்ணின் நாணச்சிரிப்பு....  வழக்கம்போல் பார்க்கின் ஓர் ஓரத்தே வழக்கமான அவனிருப்பு; மோனித்த நிலை. அன்று வழமைக்கு மாறாகக் காலநிலை சிறிது சூடாகவிருந்தது. 'பார்க்' ஒரே கலகலப்பாக, உயிர்த்துடிப்புடன் இயங்கியபடி , டொராண்டோ நகரின் பல்லின மக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தபடி விளங்கியது. சீனக்குடும்பமொன்று அவனைக் கடந்து சென்றது. கையில் பலூன் வைத்திருந்த சீனக்குழந்தை அவனைப் பார்த்துக் கையசைத்து முறுவலித்தது.  மோனித்திருந்த நிலையிலும் அவனால் அந்தக் குழந்தையின் பார்வையை, சிரிப்பினை உணரமுடிந்தது. பதிலுக்கு இலேசாகச் சிரித்தபடி கையசைத்தான.  இதற்கிடையில் இவர்களிருவருக்குமிடையில் நிகழ்ந்துவிட்ட கணநேர உறவினை அவதானித்து விட்ட தாய் இவனைப் பார்த்து தாய்மைக்குரிய ஒருவித பெருமிதத்துடன் புன்னகைத்தாள்.  குழந்தையை ஏதோ அன்பாக அழைத்துத் தூக்கிக் கொஞ்சி உச்சி மோந்தாள். நாடுகள், கலாச்சாரங்கள் வேறு வேறாகவிருந்தபோதிலும் அடிப்படைப் பண்புகளில் மனிதர்கள் பெரும்பாலும் ஒன்றாகத்தான் செயற்படுகின்றார்ர்கள்.  தன் குழந்தைமேல் அளவில்லாப் பாசத்தை வைத்திருக்கிறாள் இந்தத்தாய்.  தன் குழந்தைக்குக் கிடைத்த பெருமையில் பூரித்து விடுகிறாள். குழந்தையை உச்சி மோந்த விதத்தில்  அதன் அளவினை உணரமுடிந்தது.

Last Updated on Monday, 14 May 2012 17:41 Read more...
 

Australia: No Detention Without Appeal

E-mail Print PDF

This mothers day, Ranjini and her two sons, aged 6 and 8, faced their fourth night of indefinite detention - without charge, without trial, without appeal. Ranjini was verified as a refugee last year after fleeing the civil war in Sri Lanka. On Thursday night, she was told to pick up her kids from school in Melbourne and meet Department of Immigration officials. ASIO had given her an averse security finding. They were flown to Sydney and detained in Villawood detention centre, where they will stay indefinitely. They have no right of appeal. 46 other refugees are currently detained under the same circumstances. On Friday morning, one of them, Kumar, attempted suicide in a Melbourne detention facility.  No matter what, we mustn't allow anyone - let alone children - to be detained indefinitely without charge, trial or appeal. A Parliamentary Committee has already recommended that there should an independent review and appeals process for ASIO findings - a basic principle of justice.

SIGN THE PETITION
Add your name before this petition is delivered to the Attorney-General and Immigration Minister. Attorney-General Nicola Roxon and Immigration Minister Chris Bowen, In Australia no person should be held indefinitely without charge, trial or appeal. Please ensure that ASIO findings can be appealed and independently reviewed. SIGN THE PETITION

http://www.getup.org.au/

Last Updated on Monday, 14 May 2012 17:19
 

“எதுவரை” இணைய சஞ்சிகை ! மே இதழ்-2012

E-mail Print PDF

 எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி — http://eathuvarai.net/  அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்! “நமது மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டதும் பெரியளவிலுமான அரசியல் சமூக பொருளாதார பண்பாட்டு நெருக்கடிகளையும் சவால்களையும் மேலாதிக்கத்தினையும் அக/புற முரண்பாடுகளையும் எவ்விதமான அணுகுமுறைக்கு ஊடாக குறைக்க முடியும் அல்லது தீர்க்கமுடியுமென நீங்கள் நம்புகிறீர்கள்?” என்ற இந்தக் கேள்விக்கு பலரிடம் பல்வேறு பதில்கள் இருக்கலாம்… சமூக மாணவர்களாகிய எங்களைப் பொறுத்தவரை நமது பண்பாட்டுத்தளத்தில் எழுத்து ,வாசிப்பு, கற்றல்,உரையாடலின் மூலம் இந்த நிலைமைகளை மாற்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்க முடியுமென நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.அதற்கான களங்களைத் திறப்பதும் இந்த வழிமுறை மீது நம்பிக்கை வைத்து தொடர்சியாக செயற்படுவதும் இன்று அவசியமாக உள்ளது.!/

Last Updated on Saturday, 12 May 2012 22:52 Read more...
 

'பாரதியைப் பயில.....

E-mail Print PDF

'பாரதியைப் பயில.

அன்பார்ந்த பாரதி அன்பர்களுக்கு, வணக்கம். நமது பாரதி இணையதளத்தில் 'பாரதியைப் பயில...'
http://www.mahakavibharathiyar.info/bharathi_ithazh7.htm
வழக்கம்போல நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இத்தகவலை பகிர்ந்துகொள்ளவும்.
நன்றி.

அன்புடன்,
வீ.சு.இராமலிங்கம்
தஞ்சாவூர்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 12 May 2012 05:00
 

மௌனப் போரும் புன்னகை ஆயுதமும்

E-mail Print PDF

யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழனின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழன் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்யுத்தம் நிறைவெய்தி மூன்றுவருடங்களாகிறது. நமது கண்ணிர்த்துளிகளினதும் செந்நீர்த் துளிகளினதும் பெறுமதி எதனாலும் அளவிட முடியாதது.மே 17 தமிழர் வாழ்வில் இருண்ட நாள். கவிதைகளால் ஒரு நினைவு கூர்தல் இது. மானமுள்ள தமிழரின் மனசாட்சிமிக்க பதிவு. உங்கள் வருகை தமிழர் தன்மானமிழக்கவுமில்லை தாழ்ந்து போகவுமில்லை என்பதன் எடுத்துக்காட்டாகட்டும். இன்னும் இந்த நாட்டில் கவிதை பாட மட்டுப்படுத்தப்பட்ட உரிமையாவது எச்சமிருக்கிறது. - அன்புடன் முஸ்டீன்

Last Updated on Saturday, 12 May 2012 05:01 Read more...
 

எல்லைகளுக்குள் வாழும் உறவு

E-mail Print PDF

நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன. - நடேசன் -நாய் மற்றும் பூனைகளை மனிதர்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் போது அவைகளும் தங்களது ஏஜமானர்கள் போல் தங்களது வாழும் இடங்களை அடையாளப்படுத்தி எல்லைகளை வகுத்துக்கொள்ளும். அவற்றின் எல்லைக்கோடுகள் வேலிகளாலோ மதி;ல்களாலோ  அல்லது முள்ளுக்கம்பி வேலியினாலோ அமைவதில்லை. நமது கண்களுக்கு  அந்த எல்லைக்கோடுகள் தெரியாது. தங்களது குதத்தின் பின் பகுதியில் இருந்து சுரக்கும் இரசாயன திரவத்தால் அவை தமது இடத்தை அடையாளப்படுத்திக்கொள்ளும்.  அத்துடன் வேறு ஏதாவது மிருகங்கள் தங்களது  இடத்திற்கு வந்திருந்தால் அவைகளால் இலகுவில் அதனை உணர்ந்து கொள்ளும் வல்லமையும் கொண்டவை. ஊனுண்ணும் மிருகங்கள் காட்டில் இப்படி அடையாளம் செய்து கொண்டு தங்கள் பிரதேசத்தை பாதுகாக்கும். புலிகள், சிங்கங்கள் காட்டில் வாழும் போது இந்த அடையாளங்கள் அவற்றின் குட்டிகளையும் குடும்பங்களையும் பாதுகாக்கும் கோட்டை கொத்தளமாக இருக்கிறது. நாய்கள் பதினைந்தாயிரம் வருடங்களாகவும் பூனைகள் கிட்டத்தட்ட பத்தாயிரம் வருடங்களாகவும் மனிதர்களோடு வாழத் தொடங்கினாலும் அவற்றின் வனவாழ்க்கையின் இசைவுகள் பல இன்னமும் இருக்கின்றன.

Last Updated on Saturday, 12 May 2012 04:49 Read more...
 

நோர்வே: மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல்!

E-mail Print PDF

இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இன அழிப்பின்  பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

இருபத்தி ஓராம் நூற்றாண்டில் இடம் பெற்ற மிகப் பெரிய மனிதப்படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரல் எழுச்சி நிகழ்வாக இடம்பெறவிருக்கின்றது.

நேரம்: மாலை 5:00 மணிக்கு
காலம்: மே 18ம்
இடம்:   OSLO S ல் ஊர்வலத்துடன் தொடங்கி நோர்வே நாடாளுமன்றத்திற்கு கவனயீர்ப்பு போராட்டத்துடன்  முடிவடையவுள்ளது.

Last Updated on Saturday, 12 May 2012 04:39 Read more...
 

இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா சுவாசிக்கப்படும் நிகழ்வுகள்.

E-mail Print PDF

இடம் - கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ( சங்கரப் பிள்ளை மண்டபம் )
திகதி - 13.05.2012
நேரம் -காலை 09.30 மணி
மதிப்போர்கள் வரலாம் எங்களை மகிழ்வித்துச் செல்லலாம். அழைப்பது 'தடாகம்'' கலை இலக்கிய வட்டம்.

Last Updated on Saturday, 12 May 2012 04:33 Read more...
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 2

E-mail Print PDF

அத்தியாயம் இரண்டு: தூண்டிற் புழுவினைப் போல்....

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

'என் அவயங்களோ சக்தி குன்றிப் போயின.
என் உதடுகளோ ஈரமிழந்து போயின.
என் உடல் நடுங்குகின்றது.
என் கைகளை விட்டு சக்திமிக்க ஆயுதமும் நழுவிப்
போகின்றது.
என் மனமோ குழம்பிப் போயுள்ளது.
என்னால் நிலையாக நிற்கவே முடியவில்லை.
என் செய்வேன். என் செய்வேன்.
பரந்தாமா!
அனர்த்தங்களால் விளையும் அறிகுறிகள் தெரிகின்றன.
போர்க்களத்தே என் உறவினரை
என் நண்பரை, என் ஆசானைக் கொல்வதால்
என்ன பயன்? என்ன பயன்?
பாதை காட்டுவாய் பரந்தாமா?
பாதை காட்டுவாய்.'  - அருச்சுனன் (பாரதியின் 'பகவத் கீதை'யிலிருந்து) -

 பார்க்கில் சனநடமாட்டம் மெல்ல மெல்லக் குறைந்து கொண்டிருந்தது. வழக்கமான அதே மோன நிலையில் ஆழ்ந்த போனபடி, சூழலுக்குள் உறைந்து விட்டவனாக அவன். முழுநிலவின் தண்மையான ஒளிச்சிதறல்கள் இதமாகப் பரவிக் கிடந்தன. மனதை நன்கு ஒரு நிலையில் நிறுத்தியவளாக மெல்ல எழுந்து அவனருகே சென்றாள். அவள் வந்ததையோ, அவனருகே நின்றபடி அவனையே வைத்த கண் வாஙகாது பார்த்தபடி அவள் நிற்பதையோ அவன் கண்டு கொள்ளவேயில்லை. 

Last Updated on Saturday, 12 May 2012 21:44 Read more...
 

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு 2012 - கனடா

E-mail Print PDF

பேராசிரியர் கா. சிவத்தம்பி

அன்புடையீர்,  பேராசிரியர் கா. சிவத்தம்பியின் எண்பதாவது பிறந்த தினத்தை நினைவூட்டிக் கனடாவில் பேராசிரியரைக் கனம் பண்ணும் வகையில், சிறப்புப் பேருரைகளுடன் கலை நிகழ்வுகளும், பேராசிரியர் பங்கேற்ற இரு ஆவணப்படங்களின் திரையீடும் அதிபர் பொ. கனகசபாபதி தலைமையில் நிகழவுள்ளன. தங்களையும் இந் நினைவரங்கில் பங்கேற்க வருமாறு தாழ்மையுடன் வேண்டி நிற்கிறோம்.
 
காலம்: மே மாதம் 20ந் தேதி. 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணிமுதல் 5.30 வரை; இடம்: ஸ்காபரோ சிவிக் சென்டர். Scarborough Civic Centre 150 Borough Drive  (North-west corner of McCowan Road and Ellesmere Road) Toronto, ON M1P 4N7 (Public transit: subway to Kennedy, then L.R.T. to Scarborough Town Centre.)
 
மேலதிக விவரங்களுக்கு
க. நவம் 416-6276583 - மூர்த்தி 647-9690175

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 10 May 2012 21:42
 

ஈழத்தமிழர்களும், சுய மீளாய்வும்

E-mail Print PDF

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழிநுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எஸ்.சபாலிங்கத்துக்கு முக்கியமானதொரு பங்குண்டு. ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆரம்பத்தில் தன்னைப் பிணைத்துக்கொண்டவர் இவர். எழுபதுகளின் ஆரம்பத்தில் கட்டுபெத்தை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவனாகவிருந்த சமயம் பொன்னுத்துரை சத்தியசீலன் போன்றவர்களுடன் இணைந்து தமிழ் மாணவர் பேரவை அமைப்பு உருவாகக் காரணமானவர்களிலொருவர்.  விடுதலைப் புலிகளின் அமைப்பு உருவான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவர்களிலொருவர். இவற்றின் காரணமாக இலங்கைக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்குப் புகழ்பெற்று விளங்கிய இலங்கைப் புலனாய்வுத்துறையினரின் 4ஆம் மாடியில் வைத்து விசாரிக்கப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்குள்ளாகியவர். பின்னர் அரசியல் அகதியாகப் புலம்பெயர்ந்து பாரிசில் வசித்து வந்த சமயத்திலும் பதிப்புத் துறை, இலக்கிய அமர்வுகளை நடாத்துவதிலும் தன் கவனத்தைத் திருப்பினார். தனது ஆசியான் பதிப்பகம் மூலம் ஈழத்துக் கவிஞர்களான வ.ஐ.ச.ஜெயபாலன், சேரன், அருந்ததி, செல்வம், சோலைக்கிளி ஆகியோரின் கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார்.  கோவிந்தனின் 'புதியதோர் உலகம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'புத்தளம் முஸ்லீம் மக்கள் வரலாறு', 'எமர்ஜென்சி 58' மற்றும் தராகியின் 'Eluding Peace' ஆகிய நூல்களை வெளியிட்டார். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களிலொருவராகவும் இவர் கருதப்படுகின்றார்.

Last Updated on Thursday, 10 May 2012 21:45 Read more...
 

உலகத் தமிழர் பேரவை ஊடக அறிக்கை: தோழர், அமைச்சர் றோய் படையாட்சிக்கு எமது கண்ணீர் வணக்கம்

E-mail Print PDF

தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்- மே 8, 2012   - தோழர், அமைச்சர் இராதாகிறிஷ்ணா (றோய்) படையாட்சி அவர்களின் மறைவை அறிந்து நாம் கடும் அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்துள்ளோம்.  அன்னார், மனித மேம்பாட்டுச் செயல்வீரனக விளங்கியதோடு வறியோருக்கும் மிக ஒடுக்கப்பட்டோருக்கும் உதவும் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார். அன்னாரின் மறைவானது அவரது குடும்பத்தினருக்கும் அவரது மக்களுக்கும் உலகளாவிய மட்டத்தில் அவரின் தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, கருணையுள்ளம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டோருக்கும் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும். குடியரசுத் தலைவர் சூமா அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தது போன்று, “படையாட்சி அளவிடமுடியாத அற்பணிப்பையும் ஆளுமையையும் பெற்ற ஒருவர். சிறப்புமிக்க ஆபிரிக்காவையும் உலகத்தையும் உருவாக்கும் தன் குறிக்கோளுக்காக வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துப் புறப்பட்ட பயணத்தில் அவர் தன்  தலைவிதியையும் சாவினையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் கவலை அளிக்கின்றது.”

Last Updated on Thursday, 10 May 2012 21:44 Read more...
 

மீள்பிரசுரம் (நேர்காணல்) : முள்ளிவாய்க்கால்: “மிகவும் கோரமான சம்பவங்களின் சாட்சியாக நான் இருக்கிறேன்”

E-mail Print PDF

பாஷண அபேவர்த்தனநீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?

முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மை, ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:

Last Updated on Thursday, 10 May 2012 17:12 Read more...
 

பிரெஞ்சு மொழியில் தமிழ்ப் படைப்புகள்!

E-mail Print PDF

நாகரத்தினம் கிருஷ்ணாஅன்புடையீர், இந்திய நவீன இலக்கியத்தை குறிப்பாக தமிழ்படைப்புகளை பிரெஞ்சு மட்டுமே அறிந்த நண்பர்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமென்ற வகையிலும், எதிர்காலத்தில் இயலுமாயின் சிறந்த சில படைப்புகளை பிரெஞ்சுமொழியில் கொண்டுவரவேண்டுமென்ற ஆதங்கத்துடன் ஒரு பிரெஞ்சு வலைத்தளத்தை: http://franceindechassecroise.wordpress.com நண்பர் பாவண்ணன் சிறுகதையுடன் தொடங்கியுள்ளோம். மொழிபெயர்ப்பு செய்தவர் நண்பரும் பேராசிரியருமான வேங்கட சுப்புராய நாயக்கர். நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் புதுச்சேரியில் தெரிவித்த யோசனையின் படி மாதம் ஒரு சிறுகதையை எழுத்தாளர்கள் சம்மதத்துடன் வெளியிடுவதென்று திட்டம். இறுதியில் அத்தொகுப்பை பிரெஞ்சு பதிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். பதிப்பிக்கும் முடிவு அவர்கள் விருப்பத்தைச் சார்ந்தது: எனது அமைப்பு மூலம் தொகுப்பை வெளியிட இயலாது. இந்தியப்புத்தகங்களை வெளியிட பிரெஞ்சு அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்க்கவேண்டாமென அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். சொந்தமாக வெளியிட நிதி ஆதாரமில்லை. தவிர அப்படி வெளியிட்டாலும் நண்பர்களுக்கு இலவசாமக கொடுப்பதன்றி வேறு பயன்களை எதிர்பார்க்கமுடியாது. எனவே பிரெஞ்சு பதிப்புலகத்தையன்றி வேறு உருப்படியான வழிகள் தற்போதைக்கு இல்லை.

Last Updated on Sunday, 06 May 2012 21:38 Read more...
 

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் - 1

E-mail Print PDF

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]

அத்தியாயம் ஒன்று: தோர்ன்கிளிவ் பார்க்கில் ...

'தோர்ன்கிளிவ் பார்க்'...  'டொன் மில்ஸ்ஸுக்கும் எக்ளின்டனுக்குமிடையில், அண்மையில்  அமைந்திருந்த பகுதி. 'ஷாப்பிங் மால்' , பாடசாலை, பூங்கா, நூலகம் எனச் சகல வசதிகளுடன், 'டொராண்டோ டவுண் டவு'னிற்கும் அருகில் அமைந்திருந்த பகுதி.  அங்குள்ள தொடர்மாடியொன்றில்தான் அவன் கனடா வந்த நாளிலிருந்து வசித்து வருகின்றான்.  அவனது மாமா மகனின் 'அபார்ட்மென்ட்'. 

Last Updated on Saturday, 12 May 2012 21:40 Read more...
 

அன்புடன் நிலாவிடமிருந்து ...

E-mail Print PDF

இரண்டு மாதம் இந்தியாவில் நான் இருந்தேன். முதல் மாதம் கேரளாவில் வைத்தியம். அதன் பின் தமிழ்நாடு போய் அருமை நண்பர்களை சந்தித்தேன்.

இரண்டு மாதம் இந்தியாவில் நான் இருந்தேன். முதல் மாதம் கேரளாவில் வைத்தியம். அதன் பின் தமிழ்நாடு போய் அருமை நண்பர்களை சந்தித்தேன். என்னைக் கேரளாவிலும் என் நண்பர்கள் சந்தித்தார்கள்.  பல இடையூறுகள் இருந்தாலும் சில இனிய நினைவுகள். என் வாழ்வில். அன்பால் என்னை வாழவைக்கும் என் நண்பர்கள். வாழ்க அவர்கள் அன்பு.

புகைப்படங்களுக்கு ...  https://picasaweb.google.com/105829499702534906589/April242012

சந்திப்போம்
நிலா

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 05 May 2012 18:51
 

மே 18 முள்ளிவாய்க்கால் தேசிய துக்க நினைவு நாள்!

E-mail Print PDF

ஊடக அறிக்கை -  தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் (கனடா) -

இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  இட்லரின் கீழ் நாசி ஜேர்மனி பல்லாயிரக் கணக்கான யூத மக்களைக்  கொலைக் கூடத்தில் நச்சு வாயுவை திறந்துவிட்டு கொன்றொழித்தது. அதனை யூத மக்கள்  இனப்படுகொலை நாள் (Holacaust)  என ஆண்டுதோறும் அனுட்டித்து  வருகிறார்கள்.  அதனை ஒத்த ஒரு இனப்படுகொலை (Genocide) முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தேறியது. அய்.நா வல்லுநர் குழு அறிக்கையின்படி இந்த கால கட்டத்தில் 40,000 மக்கள் சிங்கள இராணுவத்தின் குண்டு வீச்சு, செல்லடி காரணமாக படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோலவே முள்ளிவாய்க்காலிலும் எமது மக்களை சிறீலங்கா இராணுவம் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்தது.  மக்களைப் பாதுகாப்பு வலயத்துக்குள் செல்லுமாறு  அறிவித்துவிட்டு அதே இலக்கை நோக்கி  பன்னாட்டு சமூகத்தால் தடைசெய்யப்பட்ட  தீமுறிக் குண்டுகளையும் (phosphorous)   கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) சரமாரியாக ஏவி முதியோர்,  கர்ப்பிணிப் பெண்கள், இளைஞர்கள்,  குழந்தைகள் என எல்லோரையும் கொன்றொழித்தது.
 
எனவே இந்த இனவழிப்பு நாளான மே 18  யை  தேசிய துக்க நாளாக அனுட்டிக்குமாறு தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதன் மூலம் மடிந்த மக்களுக்குக் கண்ணீர் வணக்கம் செலுத்துவதோடு கனடிய மையநீரோட்ட மக்களின் கவனத்துக்கும் கொண்டு வரலாம்.

Last Updated on Friday, 04 May 2012 05:17 Read more...
 

கனடா: தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து .....

E-mail Print PDF

தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டமும்! அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.

தம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டமும்! ஞாயிறு மே 6, 2012 மாலை 5 மணி.  அனைவரையும் தோழமையுடன் அழைக்கின்றோம்.  விபரங்கள் ... உள்ளே

 

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் "சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா"

E-mail Print PDF

வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளதுஇடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம்
நாள்: மே 11 & 12
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.
அனுமதி: அனைவருக்கும் இலவசம்.

வணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது.

Last Updated on Thursday, 03 May 2012 03:34 Read more...
 

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழி களுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை. இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லை. ஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும் ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

Last Updated on Thursday, 03 May 2012 03:29 Read more...
 

கவீந்திரன் கண்ட கனவு! ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் பங்களிப்பு!

E-mail Print PDF

- அறிஞர் அ.ந.கந்தசாமி -ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளுக்குத் தனியிடமுண்டு. சிறுகதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம் , உளவியல், விமர்சனமென இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்த பெருமையும் இவருக்குண்டு. 'ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றிலே கவிதை மரபில் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த காலப்பகுதி 1940ம் ஆண்டுக் காலப்பகுதியாகும். 1940ம் ஆண்டிலிருந்து ஈழத்தில் முற்றிலும் நவீனத்துவமுடைய கவிதை மரபொன்று தோன்றி வளரத் தொடங்கியது. இக்கவிதை மரபைத் தொடங்கியவர்கள் ஈழத்தின் மணிக்கொடியெனப் பிரகாசித்த மறுமலர்ச்சிக் குழுவினர்களாவர். இந்த மறுமலர்ச்சிக் குழுவிலும் அ.ந.கந்தசாமியவர்கள் , மஹாகவியெனப் புனைபெயர் கொண்ட உருத்திரமூர்த்தி, இ.சரவணமுத்து என்பவர்களே கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்துள்ளனர். இவர்களே ஈழத்தில் நவீனத்துவமுடைய கவிதை மரபையும் தொடக்கி வைத்தவர்கள். இவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட நல்ல கவிதை என்பதும் பண்டித மரபு வழிபட்ட உருவ அம்சங்களையும் , நிலபிரபுத்துவ சமூகக் கருப்பொருட்களையும் உள்ளடக்கமாகக் கொண்ட செய்யுளிலிருந்து வேறுபட்டு நவீன வாழ்க்கைப் போக்குகளைப் பொருளடக்கமாகக் கொண்டமைவது என்ற வரைவிலக்கணம் உடையதாகவுள்ளது' என்று செல்வி ஜுவானா என்னும் யாழ் பல்கலைக்கழக மாணவியொருத்தியின் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது அ.ந.க.வை இன்றைய தலைமுறை மறந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது

Last Updated on Friday, 04 May 2012 21:26 Read more...
 

மீள்பிரசுரம்: சமகால ஈழத்து இலக்கியம்

E-mail Print PDF

1.
- டி.செ.தமிழன் -ச‌ம‌கால‌ ஈழ‌த்து இல‌க்கிய‌ம் என்ப‌து ப‌ர‌ந்த‌ த‌ள‌த்தில் அணுக‌வேண்டிய‌து. விரிவான‌ வாசிப்பும், ஆழ‌மான‌ விம‌ர்ச‌ன‌ப்ப‌ண்பும் இல்லாது ஒரு வாசிப்பை முன்வைத்த‌ல் என்ப‌து க‌டின‌மான‌து.. ஈழ‌த்திலிருந்து என‌க்கு வாசிக்க‌ கிடைத்த‌ பிர‌திக‌ள் மிக‌ச் சொற்ப‌மே. எனவே ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ற‌ வ‌கைக்குள் ஈழ‌த்திலிருந்தும் புல‌ம்பெய‌ர்ந்தும் வ‌ந்த‌ ப‌டைப்புக்க‌ளை சேர்த்து, சில‌ வாசிப்புப் புள்ளிக‌ளை முன்வைக்க‌லாமென‌ நினைக்கின்றேன். அத்துடன், இது எத‌ற்கான‌ முடிந்த‌ முடிபுக‌ளோ அல்ல‌ என்ப‌தையும் த‌ய‌வுசெய்து க‌வ‌ன‌த்திற் கொள்ள‌வும். மேலும் போர் தின்றுவிட்டுப் போயிருக்கின்ற‌ ஈழ‌த்துச் சூழ‌லில், இன்று இல‌க்கிய‌ம் பேசுவ‌து கூட‌ ஒருவ‌கையில் அப‌த்த‌மான‌துதான். ச‌ம‌கால‌ ஈழ‌த்தில‌க்கிய‌ம் என்ப‌தை 2000ம் ஆண்டுக்குப் பிற‌கான‌ சில‌ பிர‌திக‌ளினூடாக‌ அணுக‌ விரும்புகின்றேன். ஈழ‌த்தில‌க்கிய‌த்தில், மிக‌ நீண்ட‌கால‌மாக‌ புனைவுக‌ளின் ப‌க்க‌ம் தீவிர‌மாக‌ இய‌ங்கிய‌வ‌ர்க‌ள் என‌, எவ‌ரேயையேனும் க‌ண்டுகொள்ளுத‌ல் ச‌ற்றுக் க‌டின‌மாக‌வே இருக்கிற‌து.

Last Updated on Tuesday, 01 May 2012 23:01 Read more...
 

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்.

E-mail Print PDF

- எம்.கே.முருகானந்தன் -என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன். ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை. இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது. ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.

Last Updated on Tuesday, 01 May 2012 22:53 Read more...
 

(28) – மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -நம்மவர்களுக்கு அவர்கள் இஷ்டத்துக்கு தரமும், பண்புமற்ற வியாபாரிகளின் சந்தைப் பொருட்கள் காலம் காலமாக பழக்கி விட்ட ரசனையை யாரும் கேள்வி எழுப்பாமல் இருந்தால் சுகமே இருப்பார்கள். அந்த கனவு சுகத்தைக் கலைத்து விட்டால் அவர்களிடமிருந்து தங்கள் ரசனை சார்பான வாதங்களோ பதில்களோ வருவதில்லை. சீற்றம் தான் கனல் அடிக்கிறது. அன்பர் பிரபாகர் என்னை மன்னிக்கவேண்டும்.  நான் மேற்சொன்ன இந்த தரமற்ற ரசனைக்குப் பழக்கப்பட்ட கூட்டத்தில் அவர் தனித்தவரல்லர். எத்தனியோ கோடிகளில் அவர் ஒருவர்.. அவர்களால் தான் தமிழ் சினிமா தொடர்ந்து ஜீவிக்கிறது, இன்னும் கீழ் நோக்கிய பயணத்தில். நான் மாதிரிக்காக ஒருவர் பெயரை, நான் எழுதியதுக்கு பதில் தராது தான் சொன்னதையே சொல்லும் எதிர்வினையைத் தான் குறித்துச் சொன்னேன். அதைச் சுட்டிய பிறகும் அவர் நான் கேட்ட கேள்விக்கு, சுட்டிய அவர் சொன்னதைச் சொல்லும் குணத்திற்கு பதில் சொல்லவில்லை.  ஆடுகளம் படத்தை குறைந்த சமரசங்கள் கொண்ட, மறு[படியும் சொல்கிறேன், குறைந்த சமரசங்கள் கொண்ட, அதிக அளவு யதார்த்த முயற்சி என்றேன். காரணங்களையும், காட்சிகளையும் குறிப்பிட்டேன் உதாரணத்திற்கு. ஆனால் இதை அன்பர் தனது காரணங்களைச் சொல்லி மறுத்திருக்க வேண்டும். இல்லை. மாறாக, இதைப் போய் யதார்த்தம் என்றும், தனுஷைப் போய் பெருமைப் படுத்துவதற்கு என்ன காரணம் என்றும் கேட்கிறார்.

Last Updated on Tuesday, 01 May 2012 16:52 Read more...
 

(91) – நினைவுகளின் சுவட்டில்

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -நாங்கள் அடுத்து பயணம் சென்றது கல்கத்தாவுக்கு. பஞ்சாட்சரம், மணி, இருவரைத் தவிர எங்களில் வேறு யாரும் பெரிய நகரத்தைப் பார்த்திராதவர்கள். அந்த நாட்களில் அப்படித்தான். எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் தஞ்சாவூர், திருநெல்வேலி, மாயவரம் போன்ற டவுன்கள் தான். வாஸ்தவம். சென்னை என்ற பெரு நகரம்  ஹிராகுட்டுக்கும் எங்கள் அவரவரின் சொந்த கிராமம் அல்லது ஊருக்குமான இடையில் இருந்தது தான். அதைக் கடந்து தான் ஹிராகுட் வந்தோம். ஆனால் யார் சென்னையைக் கண்டது? எக்மோர் ஸ்டேஷன் தெரியும், செண்ட்ரல் ஸ்டேஷன் தெரியும். அதிகம் போனால்  மாம்பலத்திலோ தாம்பரத்திலோ பயணத்தின் இடையே ஒரு நாள் தங்கியிருந்திருப்போம். ஆனால் கல்கத்தா..? ஆக, கல்கத்தா போய் பார்த்துவிட வேண்டும். ரொம்ப பெரிய நகரம். டபுள் டெக்கர் பஸ் ஓடும் நகரம். . இன்னமும் ட்ராம் ஓடிக்கொண்டிருக்கும் நகரம். எல்லாவற்றுக்கும் மேல், மிருணால், ரஜக் தாஸ், செக்‌ஷன் ஆபீஸர் பாட்டாச்சார்யா, புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் இரண்டு பெண்கள், இருவரும் வங்காளிகள், மணமானவர்கள். அவர்களில் ஒருத்திக்கு மஞ்சு சென் குப்தாவுக்கு என்னிடம் மிகுந்த ஒட்டுதலும் மரியாதையும் (இதற்கு மிருணால் தான் காரணமாக இருக்க வேண்டும். அவன் அவளிடம் என்னைப் பற்றி ஏதோ நிறைய அளந்து வைத்திருக்க வேண்டும், ஒரு புகழ் மாலையே பாடியிருப்பான்) – இவர்களிடம் எல்லாம் நானும்  கல்கத்தா போய் வந்திருக்கிறேன். எனக்கும் கல்கத்தா தெரியுமாக்கும்  என்று பெருமையாக சொல்லிக் கொள்ளலாமே. ஒருத்தனுக்கு கல்கத்தா தெரியாவிட்டால் அவன் பின் தங்கியவன் தான். இந்தியாவிலேயே பெரிய நகரம். இலக்கியத்தில், கலைகளில் இந்தியாவில் முன் நிற்கும் நகரமாயிற்றே.

Last Updated on Tuesday, 01 May 2012 16:48 Read more...
 

இப்படியும் ஒருவர், ஓர் எழுத்து தமிழ் நாட்டில்

E-mail Print PDF

- வெங்கட் சாமிநாதன் -'இங்கே திரைக் கதைகள் பழுது நீக்கித் தரப்படும்' என்பது புத்தகத்தின் தலைப்பு. அதற்கு ஒரு உபதலைப்பும் உண்டு.  (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்) என்று. இது ஏதோ அந்தக் காலத்தில் சின்ன கடைகளில் காணும் சைக்கிள் ரிப்பேர் ஷாப், பித்தளைப் பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் விளம்பர பலகைகள் மாதிரி இருந்தாலும்,  இது தமிழகம் முழுதும் பரவசத்தில் ஆழ்ந்திருக்கும் சினிமா பற்றியது.  தமிழ் சினிமாவை கலையென்றல்லவா ஏகோபித்த தமிழ் நாடே மொட்டையடித்து, மண்சோறு தின்று, பாலாபிஷேகம் செய்து முரசறைவித்துக் கூவும்?. ஏழாரைக் கோடிப் பேர் மதிமயங்கிக் கிடக்கும் ஒரு கலையைப் போய், ஏதோ ஈயம் பூசுகிற, சைக்கிள் ட்யூப் பங்க்சரை அடைக்கிற சமாசாரமாகக் கீழிறக்கலாமா? செய்திருக்கிறார் ஒரு தமிழர்.  பி.எம். மகாதேவன் என்பது அவர் பெயர்.  புத்தகத்தைப் படித்தால் அவர் ஒரு கலை நயம் படைத்த தமிழ்ப் படம் ஒன்றுக்கு இயக்குனர் ஆகும் தம் தகுதியையும் ஆசையையும் உலகுக்குச் சொல்வது போல இருக்கிறது. தவறில்லை. ஆனால் இது பலனளிக்குமா என்பது தெரியாது. இருந்தாலும் அவர் சொல்லும் விஷயங்கள் சொல்லப்பட வேண்டும்.   தமிழ்த் திரைத் துறையில் இருப்பவர்கள், உள்ளே நுழைய கதவு திறக்க வெளியே காத்திருப்பவர்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள்.

Last Updated on Tuesday, 01 May 2012 17:00 Read more...
 

உழைப்பாளர் தினம்!

E-mail Print PDF

மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம்18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம்1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி (மே 1) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும். தொழிலாளர் போராட்டம்18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை. பிரான்சில் தொழிலாளர் இயக்கம்1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.

Last Updated on Tuesday, 01 May 2012 06:01 Read more...
 

நீரிழிவு நோயாளிகளே உங்கள் சிறுநீரகச் செயற்பாட்டை பரிசோதிப்பது அவசியம்

E-mail Print PDF

- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் -அந்தச் செய்தி என்னை கவலைப்பட வைத்தது. அவளின் நீரிழிவு இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறதோ, பிரஸர் சிறுநீரகச் செயற்பாடு எல்லாம் எப்படி இருக்குமோ எனச் சந்தேகித்தேன். இத்தனைக்கும் அவள் ஒழுங்காக வேளை தவறாது மருந்துகளைச் சாப்பிடுகிறாள். அதுவும் மருத்துவனான அவளது கணவன் நீரிழிவுக்கு என எழுதிக் கொடுத்த அதே மருந்துகளைத்தான். ஆனால் அவர் இறந்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிறது.  அதன் பிறகு அவள் மருத்துவர்களிடம் போகவும் இல்லை.  பரிசோதனைகளைச் செய்யவும் இல்லை.  மருந்துகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.  இது எவ்வளவு தவறானது என்பதை இற்றைவரை அவள் புரிந்திருக்கவில்லை. நீரிழிவு என்பது கால ஓட்டத்துடன் தீவிரமாகும் ஒரு நோய். காலம் செல்லச் செல்ல நோய் அதிகரிக்கும். அத்துடன் நோய் கட்டுப்பாட்டில் இல்லையேல் பல்வேறுவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Last Updated on Sunday, 29 April 2012 23:11 Read more...
 

யமுனா ராஜேந்திரன் பங்கேற்கும் இரு கனடிய நிகழ்வுகள்

E-mail Print PDF

யமுனா ராஜேந்திரன்

முதல் நிகழ்வு

காலம் சனிக்கிமை, மே 12 ஆம் திகதி மதியம் 01.30 முதல் 03.30 மணி வரை

Last Updated on Sunday, 29 April 2012 23:01 Read more...
 

பயனுள்ள 'படிப்பகம்'

E-mail Print PDF

'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம்'படிப்பகம்' இணையத்தளத்தை அண்மையில்தான் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. மிகவும் பயனுள்ள தளம். மார்க்சிய நூல்களையெல்லாம் இங்கு நீங்கள் வாசிக்கலாம். மிகவும் அரிய நூல்களான மார்க்சின் 'மூலதனம்' (தமிழில்), மார்க்ஸ்-எங்கெல்ஸ்ஸின் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை' உட்படப் மேலும் பல நூல்களை நீங்கள் வாசிக்க முடியும். இதுதவிர ஈழ விடுதலைப் போராட்ட அமைப்புகள், அவற்றின் அறிக்கைகள், புலம் பெயர்ந்த தமிழிலக்கிய உலகில் உருவான சஞ்சிகைகள் போன்ற பல ஆக்கங்களை, தகவல்களை இங்கு ஆவணப்படுத்தியிருக்கின்றார்கள். இங்கு ஆக்கங்களை வாசிப்பதற்கு நீங்கள் உங்களை இத்தளத்திற்குச் சென்று பதிவு செய்ய வேண்டும். கட்டணம் எதுவுமில்லை. அதன்பின் ஆக்கங்களை வாசிக்க முடியும். ஆர்வமுள்ளவர்கள் செல்ல வேண்டிய இணையத்தள் முகவரி: http://www.padippakam.com    - ஊர்க்குருவி -

Last Updated on Sunday, 29 April 2012 23:00
 

சிறுகதை: ஒருநாள் ,ஒரு பொழுது!

E-mail Print PDF

 கமலாதேவி அரவிந்தன் -கைகள் கட்டவிழ்க்கப்பட்டிருந்தாலும், பின்புறம் மடிந்த கைகளுடன் குந்த வைத்த நிலையில் அமர்ந்திருந்த செங்கோடனுக்கு உடம்பெல்லாம் அப்படி அதிர்ந்து கொண்டிருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்கவே அவனுக்கு கூசியது. அப்படி துக்கத்திலும் அவமானத்திலும் உறைந்து போயிருந்தான். நினைக்க நினைக்க ரோமக்கால் சிலிர்த்து, முக்கால் ஜடமாக, முழுமூடனைவிடக் கேவலமாகத் தன்னை உணர்ந்தவனுக்கு அழுகை கூட மரத்துப்போயிருந்தது. என்னென்ன கற்பனைக்கோட்டையில் ஆசை ஆசையாய் சிங்கப்பூருக்கு வந்தான். தான் பிறந்து வளர்ந்த மண், தான் பன்னிரண்டு வயதுவரை படித்த மண், என எட்டு ஆண்டுகட்குப்பிறகு சிங்கப்பூருக்கு வந்தவனுக்கு சிங்கப்பூர் விமான நிலையத்தில் கிட்டிய அதிர்ச்சி அவன் சற்றும் எதிர்பாராதது.செல்லில் இருந்த மற்ற மூவரும் செங்கோடனை அணுகி விசாரிக்க முற்பட்டபோது இவனின் கடுத்த மெளனமே அவர்களை வெருட்டியது,” ஹ்ம்ம், என்னமோ இவனுக்குத்தான் துக்கமாம், சரிதான் போடா, அவனவன் பாடு அவனவனுக்கு.‘

Last Updated on Saturday, 28 April 2012 17:24 Read more...
 

மே கவிதைகள்!

E-mail Print PDF

Last Updated on Friday, 27 April 2012 21:58 Read more...
 

மீண்டும் 'புதிய நூலகம்' செய்தி மடல்!

E-mail Print PDF

'புதிய நூலகம்' செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ்  வெளிவந்துள்ளது.'புதிய நூலகம்' செய்தி மடல் சிறிது காலதாமதத்தின் பின்னர் வெளிவந்துள்ளது. 11 இதழில் எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் பற்றிய கட்டுரையும்., பாடசாலை நூலகங்களில் ஆவணமாக்கல் பற்றிய ஜெயகௌரியின் கட்டுரையும், ஆவணப்படுத்தல் பயனும் அதில் தமிழரின் சிறப்பும் என்ற காசி விசுவநாதனின் கட்டுரையும் , அருண்மொழிவர்மன், சிலிக்கான் செல்ப், கோபி ஆகியோரின் குறிப்புக்களுடனும் இதழ்  வெளிவந்துள்ளது. 

http://noolahamfoundation.net/ebooks/publishers/noolahamfoundation/puthiyanoolaham2012.02.15.pdf

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்!

E-mail Print PDF

பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் சந்தாதாரராக இணைந்துகொள்ளுங்கள்!தேசிய ரீதியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும், சிறந்த பல படைப்பாளிகளை உருவாக்கவும் Best Queen Foundation முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் பூங்காவனம் எட்டாவது இதழ் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இச்சஞ்சிகையின் இதழ்களில் தாங்களது ஆக்கங்களை சேர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் தாங்களின் புகைப்படத்தோடு (பாஸ்போர்ட் அளவு) சுயவிபரம் அடங்கிய குறிப்புக்களுடன், ஆக்கங்களை அனுப்பிவைக்க வேண்டும். இச் சஞ்சிகைக்கான பவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனங்கள், பத்தி எழுத்துக்கள் போன்றன பல்வேறான இலக்கியத் தலைப்புக்களிலும் எழுதப்படலாம். குறிப்பாக இலக்கிய கட்டுரைகளே பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனங்களுக்காக அனுப்புபவர்கள் இவ்விரண்டு நூல் பிரதிகளையும் இணைத்தே அனுப்ப வேண்டும். இதுவரை சந்தா கட்டாதவர்கள் ஆகக்குறைந்தது சந்தாவாக 500 ரூபாவை செலுத்தி சந்தாவை பதிவு செய்துகொள்ளலாம்.

Last Updated on Saturday, 28 April 2012 17:57 Read more...
 

கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கும் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு!

E-mail Print PDF

அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும்அன்புடையீர் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஜூன்2,3,4ஆம் திகதிகளில் நடத்தவிருக்கிம் உலகத் தமிழ் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளுமாறு தங்ளை அன்புடன் அழைக்கிறோம். கலந்துகொள்ளமுடியாத நிலையிருப்பின் மலருக்கு கட்டுரை அனுப்பிவைக்கவும். மேலதிக விபரங்கள் இங்கே
 
அன்புடன்
டாக்டர் தி. ஞானசேகரன்
இலக்கியப்பணிச் செயலாளர்,கொழும்புத் தமிழ்ச்சங்கம்
ஆசிரியர் ஞானம்
“பகிர்தலின் மூலம் விரிவும் ஆழமும் பெறுவது ஞானம்!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

நிழல்: வெள்ளிவிழாக் குறும்படப் பயிற்சிப் பட்டறை (மே 8 -14)!

E-mail Print PDF

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது

நிழல் - பதியம் இணைந்து தமிழகத்தின் இருபத்து நான்கு மாவட்டங்களில் குறும்படப் பயிற்சிப் பட்டறையினை நடத்தி வருகிறது. இதன் மூலம் கிராமப்புற இளைஞர்கள் மூவாயிரத்து நானூறு பேர் திரைத்தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு உள்ளனர். இன்று திரைப்படம், தொலைக்காட்சி, இதழ்களில் பணியாற்றி வருகின்றனர். 25-வது குறும்படப் பயிற்சிப் பட்டறையினை மே மாதம் 2-வது வாரம் (8-14) ஈரோட்டில் நடத்த உள்ளது.

Last Updated on Friday, 06 April 2012 22:49 Read more...
 

தொடர்நாவல்: மனக்கண் (13 & 14)

E-mail Print PDF

13-ம் அத்தியாயம்: சிவநேசர்

தொடர்நாவல்: மனக்கண் - அ.ந.கந்தசாமி -அ.ந.கந்தசாமிஸ்ரீதரின் தந்தை சிவநேசரை அவரது புகழளவிலே அறிந்திருக்கிறோமல்லாது அவரை நேரில் ஒரு தடவையாவது சந்தித்ததில்லை. பல்கலைக் கழகத்து நாடகத்தன்று ஒரே ஒரு தடவை அவரை டெலிபோனில் சந்தித்து இருக்கிறோம். அன்று அவருக்குச் சிறிது சுகவீனம். இருந்தாலும் ஸ்ரீதரின் நாடகம் எப்படி நிறைவேறியது என்றறிவதற்காகவும், தன் அன்பு மகனுக்கு அவனது இஷ்டமான கலைத் துறையில் ஊக்கமளிக்க வேண்டுமென்பதற்காகவும் நள்ளிரவு வேளையில் அவனது நாடகத்தைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் அவனுடன் பேசினார் அவர். சிவநேசரைப் பற்றி நாம் இதுவரை அறிந்த விவரங்களின் படி அவர் ஒரு கோடீஸ்வரர், படிப்பாளி, சாதிமான், தன் அந்தஸ்தில் பெரிது அக்கறைக் கொண்டவர் என்பன எங்களுக்குத் தெரியும். அந்தஸ்துதான் அவருக்கு உயிர். அது பெருமளவுக்கு ஒருவன் அணியும் ஆடைகளிலும் தங்கியிருக்கிறது என்பது அவரது எண்ணம். அதன் காரணமாக அவர் எப்பொழுதும் ஆடம்பரமாகவே உடுத்திக் கொள்வார், தமது மாளிகைக்கு வெளியே செல்லும் போது, அவர் ஒரு பொழுதும் தலைப்பாகை அணியாது செல்வதில்லை. எப்பொழுதும் வெள்ளைக் காற்சட்டையும் குளோஸ் கோட்டும் அணிந்திருப்பார். மேலும் தங்கச் சங்கிலியோடு கூடிய பைக் கடிகாரம் ஒன்று அவரது கோட்டை என்றும் அலங்கரித்துக் கொண்டே இருக்கும். கையில் தங்க மோதிரம் ஒன்றும் ஒளி வீசக் கொண்டிருக்கும். ஓரொருசமயங்களில் உள்ளூர்க் கோவிலுக்குப் போகும்போது மட்டும்தான் வேட்டி உடுத்திக் கொள்வார். அந்த வேட்டியும் சாதாரண வேட்டியாய் இராது. ஒன்றில் சரிகைக் கரையிட்ட வேட்டியாகவோ, பட்டு வேட்டியாகவோ தானிருக்கும். கோவிலுக்கு எப்பொழுதுமே அவர் வெறும் மேலுடன் தான் செல்பவரானதால் வடம் போன்ற பெரிய தங்கச் சங்கிலி ஒன்று அவர் பூரித்த நெஞ்சில் என்றும் புரண்டு கொண்டிருப்பதைக் காணலாம்.

Last Updated on Saturday, 07 April 2012 18:50 Read more...
 

யாத்ரா மார்க்கம்

E-mail Print PDF

யாத்ரா மார்க்கம் - 1

நடுகல் 
 
ஜீவன் கந்தையா (மைக்கல்)[பதிவுகள் இணைய இதழில் ஜீவன் கந்தையா (மைக்கல்) யாத்ரா மார்க்கம் என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன.- பதிவுகள்-]

‘வார்த்தைகளின் சப்தங்கள்
அதற்குள்ளேயே மடிந்து விடுகின்றன.
எழுதுங்கள்
பேனாமுனையின் உரசலாவது கேட்கட்டும்’
.

இப்படி ஒரு கவிதையில் ஆத்மாநாம் ஆதங்கப்படுகிறார். வார்த்தைகள் காற்றிலேறிக் கரைந்துபோய்விடும். சில கிளைகளேறி பரந்துவிடும். எழுதுவது எப்போதாவது ஒரு வாசகனுக்காவது பயன்படத்தான் செய்யும். வாசகன் அந்த எழுத்தின் அபத்தத்தை, அல்லது காத்திரத்தை உணரவும், பகிரவும் கூடும். நான் இந்தப் பக்கங்களை இவ்வகைப் பகிர்தலின் பொருட்டே எழுதத் துணிந்தேன். 

Last Updated on Thursday, 15 March 2012 21:12 Read more...
 

கொலஸ்டரோல் பிரச்சனையும்! அதைக் கட்டுப்படுத்துவதும்!

E-mail Print PDF

- Dr.M.K.முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் -[அன்றைய 'பதிவுகளி'ன் 'நலந்தானா? நலந்தானா?' பகுதியில்  பிரசுரிக்கப்பட்ட மருத்துவர் முருகானந்தனின் கட்டுரைகள் வாசகர்களின் நன்மை கருதி மீள்பிரசுரமாகும். - பதிவுகள்] உங்களுக்கு இரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகம் என இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மாத்திரமல்ல இன்னும் பலர் இந்தக் கொலஸ்டரோல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பரிதாபம் என்னவென்றால் மிகப் பெரும்பாலானவர்கள்  தமக்கு இப்பிரச்சனை இருப்பதை அறியாமல் இருப்பதுதான். இதற்குக் காரணம் இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் அதிகரித்த  நிலையானது எந்தவித அறிகுறிகளையோ பாதிப்புகளையோ உடனடியாக வெளிக் காட்டுவதில்லை. வைத்திய ஆலோசனையும் இரத்தப் பரிசோதனையும் மாத்திரம்தான் இப்பிரச்சனை உங்களுக்கு இருப்பதை ஆரம்பத்திலேயே உணர்த்தும். ஆனால் நடுத்தர வயதிலும் முதுமையிலும் வரக்கூடிய சில ஆபத்தான நோய்களுக்கு இரத்தத்தில் அதிகரித்த கொலஸ்டரோல் ஒரு அடிப்படைக் காரணமாகும்.

Last Updated on Thursday, 15 March 2012 18:13 Read more...
 

வ.ந.கிரிதரனின் 25 சிறுகதைகள் (பகுதி 1)!

E-mail Print PDF

- வ.ந.கிரிதரன் சிறுகதைகள் -[ ஏற்கனவே பதிவுகள், திண்ணை, தாயகம், கணையாழி, மான்சரோவர.காம், தட்ஸ்தமிழ்.காம், தேடல் போன்றவற்றில் அவ்வப்போது வெளிவந்த எனது  சிறுகதைகள் இவை. இவற்றில் சில கனடாவிலிருந்து வெளியான 'வைகறை' மற்றும் வெளிவரும் 'சுதந்திரன்', ஈழநாடு' ஆகிய பத்திரிகைகளில் மீள்பிரசுரமானவை. ஒரு பதிவுக்காக ஒருங்குறி எழுத்தில் இங்கு மீள்பிரசுரமாகின்றன. இதில் பல சிறுகதைகள் புலம்பெயர்ந்த சூழலினைச் சித்திரிப்பவை. இன்னும் சில விஞ்ஞானப் புனைவுகள். மேலும் சில இழந்த மண்ணைப் பற்றிப் பேசுபவை. - ஆசிரியர், பதிவுகள்]

Last Updated on Sunday, 16 October 2011 23:15 Read more...
 

வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்': இருப்பு பற்றிய தேடல்!

E-mail Print PDF

வ.ந.கிரிதரனின் 'இருப்பதிகாரம்' : இருப்பு பற்றிய தேடல்!நான் எழுதிய கவிதைகளில் பல இப்பிரபஞ்சத்தில் நமது , மானுட, இருப்புப் பற்றிய தேடல்களாகவே இருப்பதை எனது கவிதைகளை வாசிப்பவர்கள் அறிந்து கொள்வர். மாணவனாக இருந்த காலத்திலிருந்து இன்று வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட அத்தகைய கவிதைகளின் தொகுப்பாக இதனைக் கருதலாம். எனது புனைகதைள் இன்றைய மனிதரினின் சமகால சமூக, அரசியல்ரீதியிலான பாதிப்புகளைக் களமாகக் கொண்டியங்கினால், எனது கவிதைகளோ பெரும்பாலும் இந்தப் பிரபஞ்சம் பற்றி, அது பற்றிய தேடல்களைப் பற்றியே அதிகமாகப் பிரதிபலிக்கும். ஆயினும் அவ்வப்போது சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளின் பாதிப்புகளைப் பற்றியும் அவை பேசும். ஆயினும் 'இருப்பதிகாரம்' என்னுமித் தொகுப்பு எனது இருப்பு பற்றிய தேடல்களின் விளைவான உணர்வுகளைப் பிரதிபலிக்கும். பல்வேறு இணைய இதழ்களில் (திண்னை, பதிவுகள், ஆறாந்திணை, தட்ஸ்தமிழ்.காம் போன்ற) வெளிவந்த கவிதைகள், என் மாணவப் பிராயத்திலே ஈழநாடு மாணவர் மலர், மற்றும் பலவேறு ஈழத்துப் பத்திரிகைகளான வீரகேசரி, ஈழமணி, சிந்தாமணி, தினகரன் போன்ற் பத்திரிகைகளில் வெளிவந்த ஆரம்பகாலக் கவிதைகளில் இருப்பு பற்றிய தேடலைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பிது. ஏற்கனவே 'பதிவுக'ளில் வெளிவந்தது.

Last Updated on Friday, 09 September 2011 18:26 Read more...
 

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு'

E-mail Print PDF

மந்திரிமனையின் உட்தோற்றமொன்று..ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).

Last Updated on Thursday, 04 August 2011 21:31 Read more...
 

பதிவுகள் வாசகர்களுக்கு ...

E-mail Print PDF

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

பதிவுகள் வாசகர்களே! பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு இவ்விதழில் மாறியிருப்பதை அவதானித்திருப்பீர்கள். அதே சமயம் பதிவுகளின் வழமையான அம்சங்கள் பல இவ்விதழில் விடுபட்டுள்ளதையும் அவதானித்திருப்பீர்கள். பதிவுகளின் வழமையான அனைத்து அம்சங்களும், இதுவரை வெளியான ஆக்கங்கள் அனைத்தும் படிப்படியாக இப்புதிய வடிவமைப்பினுள் இணைத்துக்கொள்ளப்படும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை சிறிது பொறுமை காக்க. வழமைபோல் உங்கள் ஆக்கங்களை நீங்கள் பதிவுகளுக்கு அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே: இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011) :  கடந்தவை

 

Last Updated on Monday, 09 May 2011 20:03
 


உங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்

counter for tumblr

அண்மையில் வெளியானவை

கூகுளில் தேடுங்கள்

Custom Search

Speak English

Sell your books to Powell's Online

Sell your books to Powell's

பதிவுகள் இதுவரையில் (2000 - 2011)

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:

இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை

 

 

தமிழ் வர்த்தகக் கையேடு
'பதிவுகள்' வழங்கும் இன்னுமொரு சேவை: தமிழ் வர்த்தகக் கையேடு. .உங்களது வர்த்தக விபரங்களைப் பதிவு செய்து உங்களது வர்த்தகத்தை உலகளாவியரீதியில் பெருக்குங்கள். இதுவோர் இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல

இலவச வரி விளம்பரம்
இது ஒரு இலவச சேவை. இங்கு பதிவு செய்யப் படும் தகவல்களுக்கு அவற்றைப் பதிவு செய்பவர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பல்ல.

அ.ந.கந்தசாமி படைப்புகள்

புதிய பனுவல்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்

அம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)

அம்புலிமாமா

Welcome to The Literature Network!

We offer searchable online literature for the student, educator, or enthusiast. To find the work you're looking for start by looking through the author index. We currently have over 3000 full books and over 4000 short stories and poems by over 250 authors. Our quotations database has over 8500 quotes. Read More

Fyodor Dostoevsky

Fyodor Dostoevsky (1821-1881) was a Russian novelist, journalist, short-story writer whose psychological penetration into the human soul had a profound influence on the 20th century novel. Read More

Karl Marx, 1818-1883

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist

The philosopher, social scientist, historian and revolutionary, Karl Marx, is without a doubt the most influential socialist thinker to emerge in the 19th century. Although he was largely ignored by scholars in his own lifetime, his social, economic and political ideas gained rapid acceptance in the socialist movement after his death in 1883. Until quite recently almost half the population of the world lived under regimes that claim to be Marxist....Read More

Einstein Archives Online

The Einstein Archives Online Website provides the first online access to Albert Einstein’s scientific and non-scientific manuscripts held by the Albert Einstein Archives at the Hebrew University of Jerusalem and to an extensive Archival Database, constituting the material record of one of the most influential intellects in the modern era...Read More

Brian Greene

Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist
Brian Greene (born February 9, 1963) is an American theoretical physicist and string theorist. He has been a professor at Columbia University since 1996. Greene has worked on mirror symmetry, relating two different Calabi-Yau manifolds (concretely, relating the conifold to one of its orbifolds). He also described the flop transition, a mild form of topology change, showing that topology in string theory can change at the conifold point... Read More

The Fabric Of The Cosmos By Brian Greene

The Hidden Reality: Parallel Universes and the Deep Laws of the Cosmos By Brian Greene

Hyperspace: A Scientific Odyssey Through Parallel Universes, Time Warps, and the 10th Dimension By Michio Kaku

Das Kapital By Karl Marx

The Brothers Karamazov [Hardcover] By Fyodor Dostoevsky

Penguin Classics Nana By Emile Zola

A Brief History of Time By Stephen Hawking


பதிவுகள்

ISSN  1481 - 2991 
ஆசிரியர்: வ.ந.கிரிதரன்

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One" 

*அறிவித்தல்:  ஏப்ரல் 2011 ( இதழ் 136 ) வரை   மாத இணைய இதழாக வெளிவந்து கொண்டிருந்த 'பதிவுகள்' இணைய இதழ் ஏப்ரல் 2011  இதழிலிருந்து  மாத, வார இதழென்றில்லாமல் ஆக்கங்கள் கிடைக்கும் தோறும் வெளியிடப்படும் இதழாக வெளிவரும்.  'பதிவுகள்' இதழுக்குக் கிடைக்கப் பெறும் ஆக்கங்களை (அறிவித்தல்களுட்பட) கிடைத்ததும் உடனுக்குடன் பிரசுரிப்பதே அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால்தான் இந்த முடிவு.

Canada

The Government of Canada's primary internet site for the international audience. Whether you are travelling or immigrating to Canada, preparing to do business in Canada. more..

Canadian Aboriginals

வ.ந.கிரிதரன் எழுதிய தமிழ் நூல்கள் மின்னூல்களாக விற்பனைக்கு

தமிழியல் (Journal Of Tamil Studies)

தமிழியல் இதழ்

சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பின்னர், ' அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் ' ( International Association of Tamil Research ) என்னும் அமைப்பு தனிநாயகம் அடிகளாரின் இசைவினைப் பெற்று ' Tamil Culture ' இதழை ' Journal of Tamil Studies ' என்னும் மாற்றுப் பெயரில் அரையாண்டு இருமொழி இதழாக 1969 ஆண்டு முதல் நடத்தி வந்தது. பேராசிரியர் எஸ்.தனிநாயகம் அடிகளார் ' Journal of Tamil Studies ' இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும், பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் துணைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் 1969 ஏப்பிரல் முதல் 1970 அக்டோபர் வரை இதழைத் திறம்பட நடத்தி நான்கு இதழ்களை வெளியிட்டனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1970 அக்டோபர் 21 இல் தொடங்கப் பெற்ற நிலையில், IATR அமைப்பு இந்த ஆய்விதழை அதே பெயரில் ( Journal of Tamil Studies ) நடத்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு உரிமையளித்தது. அதனை விளைவாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1972 முதல் இன்றுவரை தொடர்ந்து இந்த இதழை வெளியிட்டு வருகிறது. இன்று வெளிவந்து கொண்டிருக்கும் ' Journal of Tamil Studies ' இதழ் தனிநாயகம் அடிகள் தொடங்கிய ' Tamil Culture ' என்னும் இதழின் மறு அவதாரமே தவிரப் புதியதன்று என்பதையும், ' Tamil Culture ' நின்றுவிடவில்லை என்பதையும் இவ்வரலாறு தெரிவிக்கிறது. இதழினன வாசிக்க ... உள்ளே

Center For Asia Studies

கூகுளில் தேடுங்கள்!

'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள்  ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!

 Welcome to the home page of the Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures project..Read More

நிற்பதுவே! நடப்பதுவே!

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?- பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்
அற்பமாயைகளோ?-... மேலும் கேட்க

Yes We Can

மின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..

 

மங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

Raga Surabhi

Raga Surabhi is a small effort to create more awareness on Carnatic music.  We would like to dedicate this site to those music lovers, who listen to Carnatic music with great interest and enthusiasm, but have not had enough opportunity to learn about identifying and appreciating ragas. Read More

இணையத்தில் வர்த்தகம் செய்ய..

இணையத்தில் நீங்களும் வர்த்தகம் செய்யலாம். பொருட்களை, உங்கள் சேவைகளை விற்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இணையத்தில் நீங்கள் வர்த்தகம் செய்வதை PayPal மிகவும் இலகுவாக்குகின்றது. இப்பொழுதே PayPalஇல் இணைவதன் மூலம் இணையத்தில் நீங்களும் பணம் சம்பாதிக்கலாமே. இணைவதற்கு கீழுள்ள 'பட்டனை' அழுத்துங்கள்

Steve Jobs

The Wealthy Barber Returns

The Ediot By Fyodor Dostoyevsky

Internet Riches: The Simple Money-Making Secrets of Online Millionaires By Scott Fox

Get Rich Click!: The Ultimate Guide to Making Money on the Internet

How I Made My First Million on the Internet and How You Can Too! By Ewen Chia

Canadian Immigration Made Easy - 2nd Edition By Tariq Nadeem

Awaken the Giant Within: How to Take Immediate Control of Your Mental, Emotional, Physical and Financial

The Phantom The Complete Series: The Gold Key Years Volume One [Hardcover]

Sell your books to Powell's

Sell your books to Powell's

SHAADI.COM: Matrimonial Service


வெற்றியின் இரகசியங்கள்

"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும்! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி! இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள்! இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்!" - அறிஞர் அ.ந.கந்தசாமி -