இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்
ஹெரால்ட் பின்ட்டரின் அமெரிக்கக் கால்பந்து : தொகுப்பும் மொழியாக்கமும் ரா.பாலகிருஷ்ணன் மற்றும் யமுனா ராஜேந்திரன்!

- யமுனா ராஜேந்திரன் -

1.பின்ட்டரின’ படைப்பும் வாழ்வும் குறித்த அறிமுகம.; 2. பின்ட்டரின் மலை மொழி (mountain language)  நாடகம் 3. பின்ட்டரின் ஆறு கவிதைகள். 4.பின்ட்டருடன் ஆனி மேரி கியூஸாக் நிகழ்த்திய உரையாடல் 4. பின்ட்டரின் நோபல் உரை போன்ற ஆககங்கள் அடங்கிய தொகுப்பு.;

88 பக்கங்கள
விலை: 50 இந்திய ரூபாய்கள்

வெளியீடு : நந்தினி பதிப்பகம்;
169-ஏ 6வது வீதி நீட்சி
காந்திபுரம். கோவை : 641012 இந்தியா


பின்ட்டர் குறித்த அறிமுமகத்திலிருந்து சில பகுதிகள் :

ஹெரால்ட் பின்ட்டரின் அமெரிக்கக் கால்பந்து : தொகுப்பும் மொழியாக்கமும் ரா.பாலகிருஷ்ணன் மற்றும் யமுனா ராஜேந்திரன்!வெளியெனும் அளவில் ஒரு தனித்த அறையும் ஒரு தனிமனிதனும் சதா பதட்டத்திலும் பயத்திலும்; பாதுகாப்பின்மையிலும்தான் விட்டுவைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறார் பின்ட்டர். இரண்டு வெளிகளுமே பயங்கரத்தையும் பிறமனிதரின் அத்துமீறலுக்கான சாத்தியத்தையம் கொண்டிருப்பதாகப் பின்ட்டர் கருதுகிறார். அறைக்குள் நுழையும் மனிதனும் இன்னொரு மனிதனின் அகத்துள் நுழையும் மனிதனும் - மொழிவழியிலோ அல்லது சிந்தனை வகையிலோ நுழையும் மனிதன் - எப்போதுமே வன்முறையையே கொண்டு வருகிறான் என்கிறார் பின்ட்ட்டர். ஆண் பெண் பாலுறவு அதிகாரச் சமன்பாடு குறித்த அவரது முன்னைய நாடகங்களிலும், அரசியல் வன்முறையும் மேலாதிக்கமும் குறித்த அவரது பி;ன்னைய நாடகங்களிலும அறையென்பது ஒரு முக்கியமான உயிரியாக இடம் பெறுகிறது. வன்முறையின் சாட்சியமாக, அத்துமீறலின் சாட்சியமாக, அதற்கு எதிராக ஒடுக்கப்படும் மனிதரின் மௌன நம்பிக்கையின் சாட்சியமாக அறை இருக்கிறது.; பின்டரது சிறை எனும் அறை சதா விளையும் பயங்கரத்தை பார்வையாளரின் சிந்தைக்குள் ஆழ்மனதில் இருத்தி விடுகிறது. சுற்றிலும் இருக்கும் அரசு, அமைப்புகள் போன்ற பயங்கரத்தினுள் பார்வையாளன் இதனால ஆழ்த்தப்பட்டு விடுகிறான்.

மனிதர்கள் மீதான அவமானப்படுத்தலுக்கும் ஆதிக்கத்திற்கும்; பாலுறவு அதிகாரம் ஓரு முக்கியமான காரணியாக பின்டரது நாடகங்களில் இயங்குகிறது. பாசிசத்தை நேரடியாகவே சில நாடகங்கள் கதைக் கருவாக எடுத்துக் கொண்ட போதிலும், சமகால அரசியலினதும் பாசிசத் தன்மைகளை, குறிப்பாக பிசாசு என பின்டர் குறிப்பிடும் அமெரிக்க மேலான்மை அரசியல் அமைப்பிலும்;, தேசிய அரசு பிற சிறபாமையினர் மீது திணிக்கும் அதிகார அமைப்பிலும் காண்கிறார் பினட்டர். புpன்டரது நாடகங்களில் அதிகமும் இடம்பெறும் பாலுறவு வசவுகளையும் மட்டுமிறிய சொற்களின் வனமுறையையும், சொற்களின் இடைவெளியில் மௌனம் அழைக்கும் உடலின் அத்துமீறலையும் இந்தப் பிண்ணனியில் ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.;

மொழியாக்கம் பெற்றிருக்கும் அவரது மலை மொழி
(mountain language) நாடகம் முதன்முதலாக 1988 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் புத்தக உருவில் வெளியானது. 1989 ஆம் ஆண்டு அதனது முதல் மேடையேற்றத்தினை ‘ ஜூன் 20’ எனும் இடதுசாரி குர்திஸ் விடுதலை ஆதரவாளர்கள் நிகழத்தினர். பின்ட்டரே இந்த நாடகத்தின் முதல் மேடையேற்றத்தை நெறிப்படுத்தினார.; நாடகத்தின் ஒத்திகை நடந்துகொண்டிருந்த மண்டபத்தைச் சுற்றிலும் பிரித்தானிய அதிரடிப் படையினர் ச+ழ்ந்து கொண்டிருக்க, மேலே ஹெலிகாப்டர்கள் வட்டமிட்ட நிலையில் நாடகத்தின் ஒத்திகை நடந்ததாக அன்று அதனது ஏற்பாட்டளார்கள் தெரிவித்திருந்தமை பிரித்தானிய நாடக வட்டாரங்களில் ஒரு பிரசித்தமான செய்தி. மலை மொழி; எழுதப்பட்ட காலத்தில் பின்ட்டர் குர்திஸ் மக்கிளின்; விடுதலைக்காக மனித உரிமை அரங்குகளில் உரத்துக் குரலெழுப்பிக் கொண்டிருந்தார்.

துருக்கியில் குர்திஸ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாகச் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லைலா ஜானா எனும் இளம் பெண் பாராளுமன்றத்தில் தனது தாய்மொழியான குர்திஸ் மொழியில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். காரணம் அப்போது துருக்கியில் குர்திஸ் மொழி தடை செய்யபட்டிருந்ததுதான். குர்திஸ் பிரதேசங்களில் கூட குர்திஸ் மககள் தமது சொந்த மொழியில் பேசமுடியாத ஒரு சூழல் அன்று நிலவியது. மலை மொழி நாடகம் உடனடியாக குர்திஸ் மக்களின் ஒடுக்குமறை சாரந்ததாகத் தோன்றினாலும், நாடகம் எழுப்பும் அனுபவம் இந்த ஒடுக்குமுறையை இனம், மதம், சாதி என நிகழும் ஒடுக்குமுறையினோடும்;, தமது நம்பி;க்கைகள், கலாச்சாரம் சார்நத ஒடுக்குமுறையினோடும் வைத்து ஒருவர் அனுபவம் கொள்ள முடியும். அடையாளமற்ற நாட்டிலும், குறிப்பான இடமற்ற சிறையிலும், குறிப்பிட்ட காலமற்ற காலத்திலும் நிகழும் இந்த நாடகத்தினை ஒருவர் தத்தமது பிரதேசத்தின் குறிப்பிட்ட ஒடுக்குமுறை சார்நத அனுபவமாக உணரந்துகொள்ள முடியும். இந்த நாடகம் தற்போது குண்டானமோ சிறையிலும் நடந்து கொண்டிருக்கும் நாடகம்தான். எந்தச் சிறுபான்மையினச் சமூகமும் ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட தி;ட்டமுள்ள நாட்டிலும்; எதிர்கொள்ளும் அனுபவம்தான் பின்ட்டரது மலைமொழி எழுப்பும் அனுபவம். இந்த வகையிலேயே பிரபஞ்சத்தன்மையை எய்துகிறது.

மலை மொழி நாடகத்தை அமெரிக்காவில் மீள நிகழ்த்திய இயக்குனரான கேரி பெர்லோபின்
(carey perloff) அனுபவத்தை இங்கு சுட்டுவது பின்ட்டரது நாடகம் பிறி பிரதேசங்களுக்குப் பெயர்க்கப்படும் போது எதிர்கொள்ளும் சிக்கலை விளக்குவதற்கான ஒரு சான்றாக அமையும். பின்ட்டரது மொழி பிரித்தானியவயமான ஆங்கில மொழி. ஆங்கில மொழிக்கே உரிய பல விளையாட்டுக்களை சாதுரியங்களை பின்ட்டர தமது நாடக மொழியில் பிரயோகிக்கிறார். இவ்வகையில் நாடகம் என்பது பிற பிரதேசவயமாக்கபபடும்போதோ அல்லது மொழியில் சொல்லப்படும்போதோ அந்தந்த நாடுகளுக்கு ஒப்ப கால இடக் குழப்பங்களையும், அர்த்த மயக்கங்களையும் உருவாக்கவல்லது. குறிப்பாக பிரதேச ரீதிலான மொழி ஒடுககுமுறை இல்லாத அமெரிக்க சமூகத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தைப் பேசும் நாடகம் எந்த விதமான உணர்வையோ அர்த்தiதையோ பார்வையாளரிடம் எழுப்பாது போகலாம். ஆனால் ஒரு மையப்படுத்தபட்ட அதிகாரம் எனும் அளவில் பிறமக்களின் மீதான ஆதிக்கத்தை அமெரிக்காவும் மேறகத்திய நாடுகளும் மொழியை மையான அதிகாரமாக வைத்து நிகழ்த்தி வருகிறது எனும் பொது உண்மையை குறிப்பிட்ட கால இடத்தில் நிகழாத இந்த நாடகம் உருவாக்க முடியும். ஆகவே நாடகத்தின் மொழியை அமெரிக்கவயப்படுத்துதல் எனும் நிலைபாட்டை பின்ட்டர் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார் கேரி பெர்லோப். ஆனால் மொழிசார்ந்;த ஒடுக்குமுறை நேரடியாக நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு சமூகத்திற்கு கால இடமற்ற வகையில் நிகழும் மலை மொழி நாடகம் புரிதலில் எந்தச் சங்கடததையும் உருவாக்குவதில்லை.

காலச்சாரத்தில் ஓழுக்கவாத மதிப்பீடுகளையும் படைப்பில் சுத்தத்தையும் வலியுறுத்தும் மொழிபெயரப்பாளர்களுக்கு பின்ட்டர் பாரதூரமான சங்கடத்தையே உருவாக்குகிறார். பின்ட்டரது மொழி நிறையப் பாலுறவுக் கொச்சைகளையும் பாலுறவு நிந்தனைகளையும் வன்முறையையும கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் உடலின் மீதான அதிகாரம் செலுத்துவதில் பாலுறவு நிந்தனைகள் முக்கியமான பீதியூட்டும் பாத்திரம் வகிக்கிறது என்பது பின்ட்டரது நிலைபாடு. மனிதரெனும் அளவில் பாலுறவு நிந்தனைகள் மனித ஆன்மாவின் பெருமிதத்தை முற்றிலும் அழித்துவிடுகிறது என்கிறார் பினட்டர். பின்ட்டரது வன்முறையும் பாலுறவுக் கொச்சையும் அடர்நத மொழியை நிராகரித்துவிட்டு அவரை மொழியாக்கம் செய்வது என்பது சாத்தியமில்லை.

வாசகனாக ஹெரால்ட் பின்டரது கவிதைகளையும் அவரது பின்னைய அரசியல் சார்ந்த நாடகங்களையும் இலத்தினமெரிக்க நாவலாசிரியரும் கவிஞருமான ஆரியல் டோப்மெனின் படைப்புபகளுடன் ஒப்பிட முடிகிறது. வன்முறையினிடையில் வாழத்தலைப்பட்டிருக்கம் இரண்டு மனிதர்களின் இடையிலான தொடர்பு மொழி எத்துணை வன்முறையம் வக்கிரமும் பழிவாங்கும் உணர்வம் கொண்டிருக்கும் என்பதற்கான நம் காலத்தின் மொழி சார்நத சாட்சியங்காளக பின்டரின்
one for the road நாடகத்தையம் டாப்மெனின்  death and the maiden நாடகத்தினையும் குறிப்பிட முடியம். அது போலவே காணாமல் போய் கண்டெடுகப்;பட்ட உடல்களை முன்வைத்து தொலைத்தவர்களால் நடத்தபடும் உரையாடல்களாக வெளிப்படும் கவிதைகளை நிறைய ஆரியல் டாபமெனிடம் காணக் கிடைக்கும். பின்டரது போர் பற்றிய கவிதைகளும் அவரது இறுதக்காலக் கவிதைகளும் அதிகமும் மரணித்த உடல்கள் பற்றியதாகவும், மரணத்தின் கோரமுகம்; பற்றியதாகவுமே இருப்பதை அவரது வாசகர்கள் அறிந்து கொள்ள முடியம்

மொழியாக்கம் பெற்றிருக்கும் அவரது நோபல் பரிசு உரை ஒரு நாடகக் கலைஞன் எனும் அளவில் பின்ட்டரின் அனைத்து ஆளுமைக் கூறுகளையும் செரித்துத் கொண்டதாக இருக்கிறது. மிகுந்த நாடகத் தன்மையும், காடசி மாற்றங்களும், இளமையின கோபமும், நிலைத்த மௌனங்கள் எழுப்பும் அர்த்தங்களும், நையாண்டியும், வேஷங்கட்டுதலும் என ஒரு தனித்த காட்சி நடிப்புக்குரிய
(monologue) அத்தனை அம்சங்களையும் இந்த உரை கொண்டிருக்கிறது. பின்னணியில் அவரது இளமைக் காலப்படம்.. சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் பின்ட்டர் தற்போது தளர்ந்து காணப்பட்டாலும், அது அப்படியே மெய்ம்;மை இல்லை என்பதைத்தான் அவரது இளமை தளும்பும் படம் காண்பிக்கிறது. பின்ட்டர் முதலில் ஒரு நடிகர். அவருக்கு ஜோர்ஜ் புஸ்ஸைப் போலவும் மாறிப் பேசமுடியும். நடப்பையும் நடவாமையையும் ஒருவராகவே வேறுபடுத்திக் காட்ட அவரால் முடியும். நக்கலும் iநாயண்டியும் சோகமும் கோபமும் துயரும் நம்பி;ககையும் என அவரது குரல் வேறு வேறு தளங்களில் சஞ்சரிக்கிறது. தன்னளவிலேயே ஒரு கலை அனுபவமாக அமையக் கூடியது அவரது நோபல் பரிசு உரை. ஒரு உக்கிரமான அரசியல் நாடகமாகவே அது அர்த்தம் கொள்கிறது.

கலைஞன் தார்மீக நெறிகளதும், பிரபஞ்ச மதிப்பீடுகளதும், மனித உரிமைகளதும், மனிதனின் பெருமிதத்தினதும் காவலன் எனும் பிம்பம்; சமீப ஆண்டுகளில் தகர்ந்து வருகிறது. இத்தகைய உலகச் சூழுலில், அரசியல் மெய்மைகளை நேர்க்கி;ய நமது தேடலைக் கோரும் பின்ட்டரின் குரல் நம்; காலத்தின் தார்மீகத்தின் குரல். மனித பெருமிதத்தின் அழிவைக் கண்டு கலங்கும் சத்திய ஆவேசத்தின் குரல். அந்தக்குரல அவரது நோபல் பரிசு உரையில் மிகத் தெளிவாகவும்; தீரத்துடனும் கேட்;கிறது :.

“நிலவுகிற பெரூமளவிலான சிரமங்கள் இருந்தபோதிலும் நான் நமபுபகிறேன் : அச்சமற்ற, நெறி திறம்பாத, உக்கிரமான அறிவுசார் கடப்பாடடுடன், ஒரு குடிமகனாக, நமது சமூகங்களிதும் எமது வாழ்வினதும் மெய்ம்மைகளை நாம் வரையறுக்க வேண்டியது நமக்கு ஒப்படைக்கப்படடுள்ள, நமக்கு முன்னுள்ள கடமையாகும். நிஜத்தில்; இது நமக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளையாகும். “


ஆறு கவிதைகளிலிருந்து பின்ட்டரின் ஒரு கவிதை:


அமெரிக்கக் கால்பந்து

அல்லேலுயா

இது சரியாக வேலை செய்கிறது
மலம் வெளியேறும் வரை மிதியுங்கள்

மலம் மறுபடி அவர்களது மலக்குழியில்
திரும்ப ஏறும்வரை உதையுங்கள்
அவர்களது ஓழ்த்த செவிகளிலிருந்து மலம் வெளியாகட்டும்

இது சரியாக வேலை செய்கிறது
மலம் வெளியேறும் வரை மிதியுங்கள்
அவர்களது சொந்த மலத்தில் அவர்களுக்கு மூச்சுமுட்டட்டும்

அல்லேலுயா

எல்லா நல்லனவற்றுக்கும் கர்த்தரை வாழ்த்துங்கள்;

மலத்தில் அவர்களை உதைத்துத் தள்ளியாயிற்று
அவன்கள் சொந்த மலம் தின்கிறான்கள்.

அல்லேலுயா
எல்லா நல்லனவற்றுக்கும் கர்த்தரை வாழ்த்துங்கள்

அவர்களது விரைகளை நார்; நார்நாரறாக் கிழித்து நாம்
புழுதியில் கடாசிவிட்டோம்.;

நாம் செய்து காட்டியிருக்கிறோம்.

என் பக்கம் வந்து
என் உதட்டில் முத்தமிடும்படி
இப்போது
உன்னை நான் அழைக்கிறேன்…

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்

rajrosa@gmail.com

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner