| 
ஜூலை 20: உலக அகதிகள் தினம்!
 
  ஜூன் 
20, 2007 ஐந்தாவது உலக அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. அன்றைய தினம் உலகின் 
பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் பல்வேறு போர்களால் அரசியல், சமூகச் சூழல்களால் 
அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், 
கருத்தரங்குகள், இசை நிகழ்ச்சிகள், நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் 
நடைபெறவுள்ளன. மிக அதிக அளவில் ஆபிரிக்கக் கண்டத்திலேயே அகதிகள் 
அதிகமாகவிருக்கிறார்கள். இதன் காரணமாக ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் 
தினமாகத்தான் நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் 
சிறப்புத் தீர்மானமொன்றின்படி , ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை 
வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு 
மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள், பிற நாடுகளிலென 
இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய 
விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதெ இத்தினத்தின் முக்கியமான 
நோக்கமாகும். 
 
  அண்மைக் 
காலமாக இலங்கையிலும் இன்றைய மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் இராணுவத்தீர்வினை 
அணுகுமுறைகளால் பல்லாயிரக்கணக்கில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் 
சொந்தமண்ணிலேயே அகதிகளாக அல்லலுற்று வாழ்ந்து வருகின்றார்கள். பலர் 
உயிரிழந்துள்ளனர்; காணாமல் போயுள்ளனர். ஏற்கனவே இலங்கையில் நிலவும் யுத்தச் சூழல் 
காரணமாக இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் பூமிப்பந்தெங்கும் அகதிகளாக 
இடம்பெயர்ந்துள்ளனர். மீண்டும் அணமையில் பாலஸ்த்தீனத்து விடுதலை அமைப்புகள் 
மத்தியில் ஏற்பட்டுள்ள மோதல்களினால் மீண்டும் பாலஸ்த்தீன மக்கள் பலர் 
அகதிகளாகியுள்ளனர். தொடரும் ஈராக், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் இராணுவ 
அணுகுமுறையினால் இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாகியுள்ளனர். மேலும் பல 
இலட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான், சோமாலியாவெனத் தொடரும் 
மோதல்களால் ஆபிரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்தும் அகதிகள் பல்வேறு 
துன்பங்களூக்கு ஆளாகி வருகின்றனர். 
 
  அழகான 
இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து, உலகமெங்கனும் 
சமாதானமும், அமைதியும் , இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் 
நல்லதோர் இன்பகரமான எதிர்காலம் பிறக்க இத்தினத்தில் வேண்டிக் கொள்வோம். 
 
 
ஏனைய இணைப்புகள் சில:Refugees by Numbers 2006 edition..Read 
More
 World Refugee Day: Challenges of the 21st 
Century..Read 
More
 |