 - இம்முறை எழுத்தாளர் தாஜ் அவர்களின் 
      'தமிழ்ப்பூக்கள்' வலைத்தளத்தினைப் பதிவுகள் வாசகர்களுக்காக அவர் மூலமாகவே 
      அறிமுகம் செய்து வைக்கின்றோம். தமிழ்நாடு சீர்காழியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் 
      தாஜ்.   தாஜ் அவர்களின் கவிதைளை அவ்வப்போது 'காலச்சுவடு' சஞ்சிகையில் 
      நீங்கள் வாசித்திருக்கலாம். ஆனந்தவிகடன் நடாத்திய பவளவிழாக் கவிதைப் 
      போட்டியிலும் முத்திரைக் கவிதையாக அவரது கவிதையொன்று, 'அம்மா' பற்றி, பிரசுரமாகி சிறந்த கவிதைகளிலொன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஞாபகம். 
      எழுத்தாளர் தாஜ்ஜின் 'தமிழ் பூக்கள்' பற்றிய அறிமுகக் கடிதம் கிடைத்ததும் 
      சென்று பார்த்தோம். வாழ்த்துக்கள். இப்பொழுதுதானே 
      ஆரம்பித்திருக்கின்றார்.அவரது எழுத்தாற்றலும், அர்ப்பணிப்பும், ஆர்வமும் 
      இத்தளத்தினை நிச்சயம் வெற்றியடைய வைத்திடுமென்பதை ஆரம்பமே 
      உணர்த்துகின்றது. தாஜ் அவர்களே! அர்ப்பணிப்புடன், அலுக்காமல், சலிக்காமல் 
      உங்கள் எண்ணங்களை, ஆக்கங்களை, கனவுகளையெல்லாம் இங்கு பதிவு செய்யுங்கள். 
      அவ்விதம் தொடர்ந்து செய்து வருவீர்களானால், நீங்களே எதிர்பார்க்காத அளவுக்கு 
      உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் உங்களை நோக்கி ஆதரவுக் கரங்களை நீட்டும் 
      தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் கண்டு , இணையத்தின் வலிமை கண்டு நீங்களே அசந்து 
      விடுவீர்கள்.

www.tamilpukkal.blogspot.com
       இணையத்தின் பக்கம் தமிழ் வலைத் தளங்கள் அல்லது வலைப் பூக்கள் என்பது இன்றைக்கு 
    சாதாரணம்.
    நித்தம் மலர்கிற சங்கதி.
    கணினி பயன்ற நம் மாணவர்கள் தங்களது தேர்ச்சிக்குப் பிறகு பணிக்குச்செல்ல 
    முயற்சிக்கும் அதே வேளை ஆளாளுக்கு
    ஒரு வலைத்தளத்தை முனைந்து வடிவமைத்துக் கொள்கின்றார்கள். இதை அவர்கள் தங்களது 
    ஆளுமை சார்ந்த செயலாக 
    நினைக்கின்றார்கள்.
    தமிழ்ப் பூக்கள் என்ற இந்த வலைப் பதிவு- வாசிப்பவர்களின் பார்வையில் பத்தோடு 
    பதினொன்றுத்தான். அல்லது இன்னொரு இம்சை.அப்படியெல்லாம் இல்லையென வாசகர்களை நம்ப 
    வைப்பதில்தான் இந்த வலைப் பதிவின் வெற்றி இருக்கிறது.

    80-களின் ஆரம்பத்தில் பஞ்சம் பிழைக்கவென செளதி அரேபியா சென்றிருந்த போது,அதன் 
    மிகப்பெரிய பெட்ரொல்
    சுத்தகரிப்பு நகரான ரஸ்த்தணூராவில் வேலை,அங்கே எண் பணி நேரம் போக கிட்டிய 
    ஒய்வில் நண்பர்களின்
    உறுதுணையோடு முயன்று கையெழுத்து மாத இதழை கொண்டு வந்தேன்.அதன் பெயர் 
    தமிழ்பூக்கள்.ஒன்னறை வருடக்காலத்தில்
    பதினோரு இதழ்கள் மட்டுமே வந்து அது முடங்கிப் போனது.
 
தமிழ் பூக்கள் கையெழத்துப் பிரதிக்கும் இந்த வலைப் பதிவு தமிழ்ப்பூக்களக்குமான ஒரு நீண்ட இடை வெளியில் என்னில் பல
படிமங்களும் சிதைவுகளும் நிகழ்ந்திருக்கிறது. அறுபடாது தொடர்ந்த நவீன இலக்கியப் புழக்கத்தால் பல தெளிவுகள் சாதாரணமாகி இருக்கிறது. எங்கும் எதிலும் நிஜத்தின் நிதர்சணத்தை தொடவும் வேறு பழகி இருக்கிறேன். இவைகள்தான் இனி இங்கே எழதப்போகும்
எவற்றிற்குமான பின் புலன்கள்.
தமிழ்ப் பூக்கள் முகவரி: www.tamilpukkal.blogspot.com
 மேற்படி தளத்தில் தன்னைபற்றிய அறிமுகத்தில் 'நவ கலைகளின் 
      ஈடுபாடு மனிதனகுல மேன்மைக்கு அழகும்-கீர்த்தியும் சேர்க்கும் என்று நம்பும் 
      இன்னொருவன்' எனக் குறிப்பிடும் எழுத்தாளர் தாஜ் தனக்குப் பிடித்த இரு 
      நூல்களாக சு.ரா.வின் 'ஜே.ஜே.சில குறிப்புகள்' மற்றும் தி.ஜா.வின் 
      'உயிர்த்தேன்' ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார். அத்துடன் 'கணினியில் தமிழ் 
      என்று அதன் வல்லுனர்கள் முனைந்தபோது, அவர்களுக்கு மிகவும் லாவகமாக உதவியது 
      தந்தை பெரியார் செய்து வைத்த தமிழ் எழத்துரு சீர்திருத்தம்தான்.
      இங்கே என் முதல் நன்றியை, இன்னும் கூடுதலான அர்த்தம் பொதிவுகளுடன் அந்த 
      பெரியவரின் நினைவுக்கே செய்கிறேன்...சிரம் தாழ்த்தி' என்றும் 'கணியிலும் 
      வலைத்தங்களிலும் எனக்கு ஆர்வமூட்டி அதன்கண் வாசிக்கவும் எழுதிப் புழங்கவும் 
      ஊக்கப்படுத்திய அபிதீனுக்கும், நாகூர் ரூமிக்கும் என் நன்றி ஆகட்டும்' 
      என்றும் நன்றி கூறிக்கொள்கின்றார். மேற்படி தளத்திலிருந்து அதன் ஆரம்பக் 
      கவிதையான 'கதவை மூடு (சுந்தர ராமசாமி நினைவாக..) என்னும் கவிதையினையும் 
      பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்.

      பதிவுகள் வாசகர்களுக்காக இங்கு பிரசுரிக்கின்றோம்.-தாஜ் -

      கதவை மூடு
      காற்று வருகிறது
      குப்பைக் கூளமாக
      சாக்கடை நாற்றமும்
      சுவாசத்தை அறுக்கிறது.
      
      கதவை மூடு
      ஏதேதோ அலைகிறது
      பனிமூட்ட விடியலில்
      குளிர் காயும் வெறியோடு
      ஒழுங்குகளைத் துவைக்கிறது.
      
      கதவை மூடு
      ஊர்வன மேவும் நேரமிது
      விஷக் கொடுக்குகளின்
      வலியற்ற தீண்டலில்
      மெய்யுடல் தடிக்கிறது.
      
      கதவை மூடு
      இரைச்சல் எழுகிறது
      தலையெடுப்பவர்களது
      காலடிப் பதிவின் அதிர்வில்
      நினைவுகளும் சிதைகிறது.
      
      கதவைத் திற
      காற்று வரட்டுமென்ற
      காலம் போய்விட்டது.
      திசைகளற்றப் பேரோசை
      பெரு வெளிக் காட்டி.

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991