பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இணையத்தள அறிமுகம்! |
http://puthiyamaadhavi.blogspot.com/
எழுத்தாளர் புதியமாதவியின் வலைப்பதிவு!
தனது
கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் மூலம் பதிவுகள் வாசகர்களுக்கு நன்கு
அறியப்பட்டவர்தான் புதியமாதவி அவர்கள். அவரும் 'புதியமாதவி' என்னுமொரு வலைப்பதிவினை
ஆரம்பித்துள்ளார். அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அவரது வலைப்பதிவிலிருந்து
அண்மையில் சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஆறு ஆண்டுகள்
கடுங்காவல் தண்டணை விதிக்கப்பட்ட நடிகர் சஞ்சய்தத் பற்றி எழுதப்பட்டிருந்த
'தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும் கேள்விகளும்' என்னும் கட்டுரையினை இங்கு
பிரசுரிப்பதன்மூலம் அவரது வலைப்பதிவினை பதிவுகல் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து
வைக்கின்றோம். தளத்தின் முகவரி:
http://puthiyamaadhavi.blogspot.com/
தீர்ப்புகளும் கேள்விகளும்: தீர்ப்புகளும்
கேள்விகளும்:
சஞ்சுபாபாவுக்கு
தண்டனை இன்று, நாளை. இப்போது அப்போது என்று தினமும் பத்திரிகைகள் செய்திகள்
வெளியிட்ட வண்ணமிருந்த ஒரு மெகா தொடர் ஒரு வழியாக சஸ்பென்ஸ்முடிந்து முடிவுக்கு
வந்துவிட்டது. முன்னாபாயி எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மூலமும் மிகவும் பரவலாக
அறியப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனைஎன்று நேற்று
31/7/07 தீர்ப்பு வழங்கினார் நீதிபதி பிரமோத் தத்தாரா, கோடே.10 ஆண்டுகளுக்கும்
மேலாக சிறப்பு தடா கோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ள நீதிபதி கோடேவுக்கு 54 வயது.
ஒரே கோர்ட்டில் அதிக வருடங்கள் பணிபுரிந்த முதல் நீதிபதி இவர்தான்.
அதுமட்டுமல்ல,ஒரே வழக்கில் (12 பேருக்கு) அதிகப்பட்ச எண்ணிக்கையிலான
குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கியவரும் இவரே., ஜீன் மாதத்தில் கையில் காயமடைந்து
ஓய்வில் இருந்த சில தினங்கள் தவிர ஒரு நாள் கூட நீதிமன்றத்திக்கு வராமல்
இருந்ததில்லை. தாயார் இறந்த போது கூட வழக்குவிசாரனையை முடித்த பின்னரே இறுதிச்
சடங்கில் கலந்து கொள்ள புறப்பட்டார். இந்த வழக்கும் இந்த வழக்கின் முக்கியத்துவமும்
கருத்தில் கொண்டு இவருக்கு ரூ.25 இலட்சத்திற்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஒரு
நீதிபதிக்கு தீர்ப்பு வெளிவரும் முன் பாதுகாப்பு கருதி காப்பீடு செய்திருப்பதுஇதுவே
முதல் தடவையாகும்.
1994 ஆம் ஆண்டு துவங்கிய குண்டுவெடிப்பு வழக்கின் விசாரனை 31-07-2007ல் முடிவுக்கு
வந்துள்ளது. 13000 பக்கங்களில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7000
பக்கங்கள் கொண்ட ஆவண ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கொடுத்த
வாக்குமூலங்கள் 6700 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் வாதிகள், சினிமா
மாயைகள், பிரபலங்களின் மாயத்திரைகள்என்று எதுவும் சட்டத்தை தன் விருப்பப்படி
வளைத்துவிட முடியாது.சதாரண இந்தியக் குடிமகன் சட்டத்தின் மீது வைத்திருக்கும்
நம்பிக்கைவற்றிவிடாது.
சஞ்சய் தத் தற்காப்புக்காகவே ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற வாதத்தைநீதிபதி
நிராகரித்தார். அநேகமாக எல்லா இந்திய மொழி பத்திரிகைகளும்சஞ்சய் தத் பற்றிய
செய்திகளை பக்கம் பக்கமாய் கொடுத்திருப்பார்கள்.சஞ்சய் தத் என்ற நடிகரை நான் உட்பட
பலர் விரும்புகிறொம்.அதுவும் 18 மாத சிறைத்தண்டனைக்குப் பின் அவர் நடிப்பில் ஒரு
தனித்துவம் இருந்தது. சாதனைகள் புரியும் வேகம் இருந்தது. ஒரு மனிதனாக மகனாக அவர்
செய்த தவறுகளுக்கான தண்டனையை அவர் அனுபவித்துவிட்டார். ஆனால் தன் சமூகக்
கடமையிலிருந்து தவறிய குற்றத்திற்கான தண்டனை இது.
வாதப் பிரதிவாதங்களைத் தவிர்த்து சஞ்சய் தத்திற்கு தண்டனை என்றவுடன் சின்னதாக ஒரு
வருத்தம் ஏன் வருகிறது பொதுமக்களுக்கு?
இந்த வழக்கில் தண்டனை அடைந்த பலர் மீது ஏற்படாத அனுதாபம் சஞ்சய் தத் மீது மட்டும்
ஏன்? பல மதத்தவர்களும் அவரவர் கடவுள்களிடம் சஞ்சய் தத்திற்கு தண்டனை இருக்கக்கூடாது
என்று பிரார்தனைகள் செய்தது ஏன்? தண்டிக்கப்பட்டவர்கள் கருவிகள் தானே.!!
உண்மையான குற்றவாளிகள் யார்? நெருப்பின் புகைச்சல் இருக்கிறது என்பதறிந்தும்
நீரூற்றி அணைக்காமல்மண்ணென்ணெய் ஊற்றி வளர்த்தவர்கள் யார்?
இப்படி ..கேள்விகள்??????? ஆயிரம். ஒரு குண்டுவெடிப்பு வழக்கு முடியும் நேரத்தில்
இன்னொரு வழக்கு (தொடர்வண்டியில் குண்டுவெடிப்பு வழக்கு)ஆரம்பமாகும் தொடர்கதையை யார்
எழுதுகிறார்கள்?
http://puthiyamaadhavi.blogspot.com/
puthiyamaadhavi@hotmail.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|