| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| இலக்கியம்! |  
| சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்- 1! 
 - வெங்கட் சாமிநாதன் -
 
 (1)
 
 
  நவீன 
தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நாம் கொண்டாடும் எந்த மாற்றத்தையும் புதிய 
திருப்பங்களையும் போல, சுதந்திர உணர்வின் கிளர்ச்சியும் அதன் போராட்ட வெளிப்பாடும் 
ஒரு தொடர்ந்த இயக்கமாக வெளிப்படுவதை நாம் சுப்ரமண்ய பாரதியிலிருந்து தான் ஆரம்பம் 
பெறுவதைக் காண்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால், இன்றைய தமிழ் இலக்கியத்தின் 
வரலாறே பாரதியிடமிருந்து தான் தொடங்குகிறது. ஜி.சுப்பிரமணிய ஐயர் என்னும் அந்நாளைய 
அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டக் காரருமான ஜி.சுப்ரமணிய ஐயர் தன் 
ஆசிரியத்வத்தில் நடத்திவந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ் செய்தி நாளிதழுமான 
சுதேசமித்திரனில் 1905-ல் உதவி ஆசிரியராக வேலைக்கமர்வதே அன்றைய தேசிய அரசியல் 
களத்தில் குதிக்கும் காரியம் தான். அந்நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு 
தேசீய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதென்பது எதிர்பார்க்கக்கூடிய 
ஒன்றுதான். ஆனால் பாரதிக்கு விடுதலை என்பது நிறைய அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு 
கருத்து. அவருக்கு விடுதலை என்பது அரசியல் விடுதலையோ பொருளாதார விடுதலை மட்டுமோ 
இல்லை. அவரது சிந்தனையில் விடுதலை என்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுதலை, 
ஜாதி, மத பேதங்களிலிருந்து விடுதலை, வெற்றுச் சடங்குகளிலிருந்தும், காலம் கடந்த பழம் 
மரபுகளிலிருந்தும் விடுதலை, உண்மையில்
 சொல்லப்போனால், இன்று வரை நாம் நமக்குள் வாதிட்டுக் கொண்டிருக்கும் ஆனால் 
அடையமுடியாது கனவு கண்டு கொண்டிருக்கும் லக்ஷ¢யங்கள் கொண்ட கருத்தாக்கங்களுக்கான 
விடுதலை. இவையெல்லாம் பற்றித்தான் அவன் கவிதைகள் பேசுகின்றன. ஒரு ஆவேச நிலையில் 
பாரதி எழுதிக்குவித்துள்ள அத்தனை கதைகள் கட்டுரைகளும் பேசுவதும் இவை பற்றித் தான். 
ருஷ்ய புரட்சி வெற்றியடைந்து, ஜார் அரசன் வீழ்ச்சியுற்றதைக் கொண்டாடி வரவேற்று 
கவிதை எழுதிய முதல் கவிஞன், இந்திய துணைக்கண்டத்திலேயே முதல்
 கவிஞன் பாரதிதான் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் புரட்சிக்குப் பின் வந்த 
லெனினின் கம்யூனிஸ்ட அரசு ருஷ்ய மக்களை அடக்கியாளக் கையாண்ட வன்முறைக் 
கொடுங்கோன்மையையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் இந்தியக் கவிஞனும் பாரதிதான் 
என்றும் நான் நினைக்கிறேன். இதன் பிறகு பாரதி 1921-ல் இறந்த போது அவனுக்கு வயது 39. 
இரண்டு வருடங்களுக்கு முன் 1919-ல் ருஷ்யாவை அரசாள வந்த கம்யூனிஸ்ட் கட்சித் 
தலைமையின் உண்மை குணத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய அறிஞர்களுக்கும் தத்துவ 
மேதைகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் எவ்வளவு காலம் பிடித்தது என்பதை நான் 
சொல்லவேண்டாம். நீங்களே
 கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதையெல்லாம் நான் சொல்ல வந்த காரணம், பாரதியின் 
சிந்தனையில், விடுதலை என்பது ஒரு
 முழுமைபெற்ற கருத்தாக்கம் என்பதை வலியுறுத்தத்தான். பாரதி 
மொழிபெயர்த்தவற்றிலிருந்து இரண்டே இரண்டு படைப்புக்களைப் பற்றி மாத்திரம் குறிப்பாக 
எடுத்துக் காட்டிப் பின் மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறேன். ஒன்று பங்கிம் 
சந்திரரின் வந்தேமாதரம் என்னும் கீதம். இரண்டாவது, ஒரு காவியமாக விரிந்த பாஞ்சாலி 
சபதம்- இது 1912-ல் எழுதப்பட்டது. இது மகாபாரதக் கதை ஒன்றைத் திரும்பச் சொல்வதல்ல. 
பாரதி அதைச் செய்ய வேண்டியதில்லை. இக்காவியத்தில், பாஞ்சாலி, பாரத நாட்டையே, பாரதத் 
தாயை அடையாளப்படுத்துகிறாள். பாஞ்சாலியின் துகிலுரிதல் பாரதம் அடிமைப் 
பட்டுக்கிடக்கும் நிலைக்கான படிமம் ஆகிறது. அவனது காவியம் நாட்டின் பட்டி 
தொட்டிகளில் வாழும் கல்வியறிவற்ற மக்களையெல்லாம் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தில் 
இதை ஒரு நாடக வடிவில், கிராமிய மெட்டுக்களில் எழுதிவைத்தான்.
 
 பாரதியின் பாடல்கள் எல்லாம் கிராமிய மெட்டுக்களிலும், கர்நாடக ராகங்களிலும் 
இசையமைக்கப்பட்டவை. அவை அரசியல்
 பொதுக்கூட்டங்களிலும், பண்டிகைக் கூட்டங்களிலும், விழாக்களிலும், நாட்டுப்புற நாடக 
மேடைகளிலும் பாடுவதற்கென்றே அமைந்தவை. அரசியல் கூட்டங்களிலும் பொது மேடைகளிலும் 
பாரதியே கூட உரத்த குரலில் தன் பாட்டுக்களைப் பாடுவார். பிபின் சந்திர பால் சென்னை 
வந்து மரீனா கடற்கரையில் பேசிய கூட்டத்தில் பாரதி தன் தேசீய கீதங்களைப் பாடினார். 
அவருடைய பாடல்களை சிறு துண்டுப் பிரசுரங்களாக 15,000 பிரதிகள் அச்சிட்டு இலவசமாக 
மக்களுக்கு வழங்கினார் வசதி படைத்த ஒரு பெரிய மனிதர். தான் கைது
 செய்யப்படலாம் என்று தெரிந்ததும், பாரதி புதுச் சேரிக்குத் தப்பிச் சென்றார். 
பின்னர் அங்கு அரவிந்தரும் வந்து சேர்ந்தார். அங்கு
 பாரதிக்குக் கிடைத்த இன்னொரு சகா வ.வே.சு. அய்யர் (1881-1925). இந்தியன் சிவில் 
செர்வீஸில் சேரும் எண்ணத்தோடு லண்டன் சென்ற வ.வே.சு. அய்யர், அங்கு வீர் 
சாவர்க்காருக்கு வலது கையானார். இந்திய விடுதலைக்கான வன்முறைப் புரட்சிக்கு 
இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஹோம் ரூல் லீக்- ஐ உருவாக்கும் முயற்சியில் வீர் 
சவர்கருக்கு அவர் உதவி வந்தார். அங்கும் தான் சிறைபிடிக்கப்படலாம் என்ற நிலை 
வந்ததும், லண்டனிலிருந்து தப்பினார். லண்டனிலிருந்து தப்பி வராகநேரி வேங்கட 
சுப்பிரமணிய அய்யர் என்னும் V.V.S. வீர் விக்ரம் சிங்காகி புதுச் சேரி வந்த கதை ஒரு 
துப்பறியும் கதை சொல்லும் சாகசங்களும், தந்திரங்களும், திகிலும் நிறைந்தது. ஆனால் 
வ.வே.சு. அய்யர் ஒரு இலக்கிய ரசிகர். மற்றும், லத்தீன், ·ப்ரென்ச், சமஸ்கிருதம், 
தமிழ், ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். கம்பனையும், மில்டனையும் ஒப்பிட்டு காவிய 
ஆராய்வு எழுதியவர். தமிழுக்கு சிறுகதை வடிவத்தையும்,
 விமர்சனம் என்ற துறையையும், இலக்கிய ஆராய்வையும் அறிமுகப்படுத்தியவர். கரிபால்டி, 
குரு கோவிந்த் சிங் என விடுதலைக்காக போராடிய வீரர்களின், சரித்திர புருஷர்களின் 
வாழ்க்கைச் சரிதங்களை, இளைஞர் மனதில் விடுதலை உணர்வை எழுப்பும் நோக்கத்தோடு 
எழுதினார். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலையும் மொழிபெயர்த்தார்.
 
 புதுச்சேரியில் பாரதியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர் இன்னும் பலர் இருந்தனர். 
கவிஞர் பாரதி தாசன் (1891-1964) அவர்களில் ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக 
முடிசூட்டப் பெற்றவர். பாரதி தாசன் என்ற அவர் தன்னை அழைத்துக் கொண்டார். கவிஞராக 
மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து 
புதுச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்துள்ள தேசீய வாதிகளின் நடவடிக்கைகளை உளவறிய 
வரும் போலீஸையும் அவர்களுக்கு உள்ளூரில் உளவு சொல்பவர் களையும் கண்காணிப்பதும் 
அவர்கள் ரகசிய திட்டங்களை உளவறிந்து அவர்கள் விரிக்கும் வலையில் விழாது 
எச்சரிக்கையாக இருப்பதுமான பல பொறுப்புகளை
 பாரதி தாசன் தன் மேற்கொண்டிருந்தார்.
 
 வ.ரா (1889-1951) என்று அறியப்பட்ட அவர் காலத்திய இளம் எழுத்தாளர்களுக்கெல்லாம் 
பிதாமகர் போன்றவர். தமிழ் மொழியை, தமிழ் உரைநடையை வரண்ட பண்டிதத்தனத்தின் 
பிடியிலிருந்து மீட்டவர். எளிய சாதாரணத் தமிழே, மிக சக்தி வாய்ந்ததாகவும் அழகாகவும் 
அழுத்தம் கொண்டதாகவும் இருக்கமுடியும் என்பதைத் தன் உரைநடையால் நிரூபித்தவர். எல்லா 
பழமைவாதங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு 
அங்கமாக பிரசுரங்களை வினியோகிப்பதும், பணம் சேர்ப்பதுமான காரியங்களுக்காக அலைந்து 
கொண்டிருந்தவர் பாண்டிச்சேரிக்கும் ஒரு புனித யாத்திரை மேற்கொண்டார். அத்தோடு 
புதுச்சேரியில் இடம் பெயர்ந்து வாழும் தேசீயவாதிகளோடு தொடர்பு கொள்வதும் அவர் 
நோக்கம். பாரதி என்ற மனிதரைப்பற்றியும் கவிஞரைப்பற்றியுமான ஒரு வாழ்க்கைச் சரிதத்தை 
முதலில் எழுதியவரும் வ.ரா. தான். இன்று வரை பாரதியைப் பற்றி அறியக் கிடைக்கும் ஒரு 
முக்கிய புத்தகங்களில் அதுவும் ஒன்று. பின்னர் முப்பதுக்களில், மணிக்கொடி என்னும் 
இலக்கிய பத்திரிகையைச் சுற்றி எழுந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சி 
இயக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கிய புருஷர்களில் ஒருவர் வ.ரா.
 
 பாரதியாலேயே கவிஞர் என்று முடிசூட்டப்பட்டவர் என்ற பெருமைக்கும் கர்வத்துக்கும் 
உரிய மற்றொரு கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 
சென்னை மாகாண காங்கிர அரசால் தமிழ் ஆஸ்தான கவிஞராக பிரகடனப் படுத்தப்பட்டவர். 
வங்காள பிரிவினையின் காரணமாக எழுத்த தேச கொந்தளிப்பில், கல்லூரிப் படிப்பை உதறி 
விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். காங்கிரஸில் 
சேர்ந்தார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கிப் புறப்பட்ட உப்பு 
சத்தியாக்கிரகிகள் தங்கள் நடை பயணத்தில் பாடிச் சென்ற பாட்டு, நாமக்கல் கவிஞர் 
எழுதிய, 'கத்தியின்று ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..' தான். நாமக்கல்லார் ஒரு 
காந்தி பக்தர்.
 
 சுதந்திரப்போராட்டத்தில் காந்தி சகாப்தம் ஆரம்பிக்கும் முன் இருந்த தேசீயவாதிகளைப் 
பற்றி நான் பேசியிருக்கவேண்டும். சுப்ரமண்ய சிவா (1884-1925) வாழ்ந்தது 41 வருட 
காலமே. அதில் 19 வருடங்களை அவர் சுதந்திர போராட்ட வீரராக சிறையில் கழித்தவர். 
மனைவியைத் துறந்து, போராட்ட வாழ்வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அவர், 
நாட்டுக்குழைக்க தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து கொள்ள சன்னியாச வாழ்வை 
மேற்கொண்டவர். ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அவரை 
'அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடும் நீங்கள் எந்த மாதிரி சன்னியாசி?" என்று 
கோர்ட்டில் அவர் கிண்டலாகக் கேள்வி கேட்டனர். "ஆமாம், நான் சன்னியாசி தான். என் 
ஆத்மாவின் சுதந்திரத்திற்காக மட்டுமில்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நான் 
பாடுபடுகிறேன்" என்றாராம் அவர். சுதந்திரப் போராட்டத்தில் தன் கருத்துக்களை 
வெளியிடவும், தமிழ்மொழியின் எழுத்துச் சீர்த்திருத்ததிற்கும், தூய தமிழ்
 இயக்கத்திற்கும், ஞானபானு (1913-16), பிரபஞ்ச மித்திரன் (1916-17) என்னும் இரு 
பத்திரிகைகளை அவர் தன் ஆசிரியத்வத்தில்
 வெளியிட்டார். அவர் காந்தீய வாதி அல்லர். மாறாக காந்தீய வாதமும், காந்தியவாதிகளும் 
அவர் கண்டனத்திற்கும் கேலிக்கும்
 உள்ளானார்கள். மேற்கத்திய நாகரீகத்தினாலும், மேற்கத்திய கல்வி முறையினாலும் 
இந்தியப் பெண்களுக்கு விளைந்து வரும்
 தீமைகளைச் சித்திரிக்கும் முகமாக நளின சுந்தரி என்னும் ஒரு நாவலையும் அவர் 
எழுதியுள்ளார். அவர் ஒரு சுயசரிதமும்
 எழுதியிருக்கிறார். அதில் அவர் பெரும்பாலும் விவரித்திருப்பது அவர் சிறை 
வாழ்க்கையைத் தான். 1908-ம் வருடம் வ.உ. சிதம்பரனாரும் சுப்ரமணிய சிவாவும் சேர்ந்து 
1908-ல் நடத்திய தூத்துக்குடி மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இந்தியாவிலேயே 
நிகழ்ந்த முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமாகும். பின்னர் 1920-ல் மதராஸ் டிராம் 
தொழிலாளர் வேலை நிறுத்தமும் முக்கியமானதாகும். தொழிலாளர்
 இயக்கமாகக் கொள்ளப்படும் கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்று அப்போது இந்தியாவில் 
இருந்திருக்கவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் அவருடன் ஒத்துழைத்த வ.உ.சிதம்பரம் 
பிள்ளை ஒரு வக்கீல், தமிழறிஞர், இலக்கியவாதி. தூத்துக்குடி வாசி. அவரும் ஒரு சுதேசி 
கப்பல் போக்குவரத்துக் கம்பெனியை ஆங்கிலேயருக்குப் போட்டியாகத் துவக்கியவர். 
இப்போட்டியை விரும்பாத ஆங்கிலேயர் தம் பிரயாண, சரக்கு போக்குவரத்துக் கட்டணத்தைக் 
குறைத்து வ.உ.சியின் சுதேசி கப்பல் கம்பெனி நஷ்மடையச் செய்து ஒழித்தனர். 
வ.உ.சிதம்பரம்
 பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் திலகரின் விசுவாசிகள். வ.வு.சி செய்யுள் நடையில் 
எழுதியுள்ள சுய சரிதம் அவரது
 போராட்டங்களை விவரிக்கிறது. சுதந்திர போராட்டத்தில் காந்தி யுகம் ஆரம்பிப்பதற்கு 
முந்திய காலத்தில், தமிழக அரசியல், இலக்கிய அரங்கில் மிக முக்கிய பாத்திரங்கள் 
இவ்விருவரும்.
 
 [தொடரும்]
 vswaminathan.venkat@gmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |