பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நினைவு கூர்வோம்! |
எழுதிச்செல்லும் விதியின்
கரங்கள்
எழுதி, எழுதி மேற்செல்லும்...” -
விம்பம் நண்பர்கள்.
அமரர் சிவபாதசுந்தரம்
ராஜ்குமார் (30.03.1960 - 29.09.2008)
வடமராட்சியில்
கரவெட்டியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ராஜ்குமார் தனது 48வது வயதில் லண்டனில்
மரணத்தை தழுவியது மிகப்பெரிய சோகமாகும். திறமைகளும் அன்பும் நேசமும் சமூக உணர்வும்
கொண்ட ராஜ்குமாரின் மறைவு அவரை அறிந்தோர் மத்தியில் பேரதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலையை பயின்ற ராஜ்குமார்
திறமைமிக்க மாணவனாக இருந்தார். கட்டிடக்கலை மீது அவருக்கிருந்த ஆர்வம், விஞ்ஞான
பார்வையோடும் அழகியல் ரசனையோடும் பிணைக்கப்பட்டிருந்தது
.
கொழும்பிலும் லண்டனிலும் மேடையேறிய பல தமிழ் நாடகங்களில் மேடைக்கு பின்னால் உழைத்த
- அறியப்படாத, ஆற்றல்மிகுந்த கலைஞனாக அவர் திகழ்ந்தார். நாடக மேடையைப் பற்றிய அவரது
அழகியல் பார்வையும் நாடக ஆடை அமைப்பில் அவர் காட்டிய நுணுக்கமும், நாடகத் தொனிப்
பொருளுக்கு இயைந்த ஒளிஅமைப்பும் நாடகங்களுக்கு அலாதியான பெருமையை சேர்த்திருந்தன.
கலை ரசனை மிகுந்த ராஜ்குமார் லண்டன் நாடக மேடைகளில் தனது சிற ந்த நடிப்பாற்றலையும்
வெளிப்படுத்தியிருக்கின்றார். பலி, முகமில்லாத மனிதர்கள், யுக தர்மம், கவிதா
நிகழ்வு ஆகிய நாடக நிகழ்வுகளில் அவர் பங்கு கொண்டிருக்கிறார். ராஜ்குமார்
சம்பிரதாயமான வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தவராயினும் சமூகத்தின்
இறுக்கமான அமைப்புக்களுக்கும் கலாச்சார ஒடுக்குமுறைக்கும் எதிரான கலகக்காரனாகவே
இருந்து வந்திருக்கிறார். வடமராட்சியில் விலங்கியல் பாடத்தில் சிறந்த ஆசிரியராக
மாணவர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட அமரர் கனகசபை சிவபாதசுந்தரத்தின் மகனான
ராஜ்குமார் தனது குறுகிய வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைச் சவால்களை எதிர்நோக்கிப்
போராடிய மனிதனாகவே வாழ்ந்தார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலையின்
இறுதிப்பாட பரீட்சையை எடுப்பதற்கு முதல்நாள் பொலீசாரால் அடித்து துன்புறுத்தப்பட்ட
ராஜ்குமார் இலங்கையை விட்டு 1983இல் இடம்பெயர நேர்ந்தது.
இந்த புலப்பெயர்வு ராஜ்குமாரின் தனிமனித வாழ்க்கையில், பாரதூரமான பாதிப்பை
ஏற்படுத்தியது. லண்டனுக்கு வந்து சேர்ந்த ராஜ்குமார் சாதாரண இளைஞனாக, காசு சேர்த்து
வீடு வாங்கி, ஊரில் பெண்பார்த்து, திருமணம்செய்து, குடும்பம் நடாத்தும் சாமானியனாக
வாழ முற்படவில்லை. பேக்கரி தொழிலில் இருந்து மீன் வியாபாரம் இறைச்சி வியாபாரம்
என்று பல்வேறு தொழில்களில் இறங்கி செயற்பட்ட ஒருவராகவே ராஜ்குமாரை நாம்
காணுகின்றோம். லண்டனில் மிகப்பெரிய பேக்கரி நிறுவனத்தில் வேலைபார்த்த ராஜ்குமார்,
அந்த நிறுவனத்திற்கு எதிரான தொழிற்சங்க அமைப்பை கட்டியமைத்து, வேலைத்தளத்திலேயே
போர்க்குணத்தைக் காண்பித்த கிளர்ச்சிக்காரனாக காணப்பட்டார். அந்த நிறுவனத்தில்
ஆபத்தான பேர்வழியாக இவரைக்கண்ட தலைமைப்பீடம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. அதன்
பின்னர் தனக்கு அவ்வளவு தூரம் பரீட்சயம் இல்லாத, வியாபார நுணுக்கம் தெரியாத
நிலையிலும் அவர் தொடர்ச்சியாக நடத்திவந்த வியாபாரங்கள் கடுமையான நஷ்டத்திலேயே
முடிந்துபோயிற்று. வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த தோல்விகளில் விரக்திகொண்டு வாழ
நேர்வது புலம்பெயர் வாழ்வில் ஒரு துன்பியல் நிகழ்வாகும்.
அவர் தனக்கு துணையாக சாரதாவை தேர்ந்தமையும் அவரின் சமூக நியதியை மீறிய ஒரு
கிளர்ச்சி செயலாகவே அமைந்திருந்தது. வியாபார நஷ்டங்கள் அவரை அதீத தனிமைக்கு
இட்டுச்சென்றது. அவரது இறுதிக்காலம் சோகமும் துயரமும் நிறைந்ததாக இருந்தது.
ஏனையோருக்கு உதவுவதிலும் பொதுநலம் கலந்த செயற்பாடுகளுக்காக உழைப்பதிலும் ராஜ்குமார்
எப்பொழுதும் பின்நின்றதில்லை. அவரது வாழ்விலும் தாழ்விலும் அவரை நேசித்த
மிகப்பெரும் நண்பர் குழாத்தினை அவர் சம்பாதித்து வைத்திருந்தார். உயர் இரத்த
அழுத்தம் காரணமாக அவர் பாரிசவாதத்திற்கு உட்பட்ட நிலையில் அவரது துணைவியார்
இளவயதிலேயே மறைந்ததும் அவரது மறைவை பிரக்ஞை ப+ர்வமாக உணர முடியாத நிலையில் அவர்
நினைவிழந்து நின்றமையும் அப+ர்வமான ‘காஃப்கா’ சித்திரமாகும்.
இறுதிக்காலத்தில் அவரது மகன் சாருஜனின் அதியுயர்ந்த பரீட்சை பெறுபேறுகளை கேட்டு
மகிழும் பாக்கியமும் அற்ற, சுயநினைவு இழந்த ஒரு தந்தையாக மருத்துவமனையில்
ராஜ்குமார் இறந்தது மனதை உருக்கும் மிகப்பெரிய சோக சித்திரமாகும்.
சுயநலமும் தற்பெருமைகளும் ஆக்கிரமித்திருக்கும் தமிழர்களின் புலர்பெயர் வாழ்வில்
தன்னலம் கருதாது பாசமும் நேசமும் மிகுந்த ஒரு நண்பனின் மறைவு நம் மத்தியில் என்றும்
நினைவு கூரப்படும்.
தாயையும், இன்று தந்தையையும் இழந்த நிற்கும் அவரது அன்புக்கினிய செல்வங்களான ரம்யா,
சாருஜன் ஆகியோருக்கு ஆறுதல் சொல்ல எங்களிடம் வார்த்தைகள் இல்லை
- விம்பம் நண்பர்கள்.
KKRAJAH2001@aol.com |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|