பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
நிகழ்வுகள்! |
இணுவை மு.கிருபாகரனின் நீறுக்குள் நெருப்பு
சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா!
- த. சிவபாலு -
“சமூகப்
பிரச்சினையைப் படைப்பாளி தனது உணர்வில் பதித்துக் கொள்கின்றான் என்னும் உண்மையை
நான் கிருபாவின் கதைகளினூடே காண்கின்றேன்” - த. சிவபாலு கடந்த ஞாயிறு (6.5.2007)
பி.ப. 6.0 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் ஆசிரியர் சிவசுப்பிரமணியம் அவர்களின்
தலைமையில் மேற்படி சிறுகதைத் தொகுதி வெளியீட்டு வைபவம் இடம்பெற்றது. தேவாரப்
பண்ணோடு தமிழ் இசையும், கனடிய இசையும் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து இணுவை திருவாரூர்
மன்றத்தின் சார்பில் பிரபல இசை ஆசிரியர் அருட்சோதியின் அறிமுக உரையோடு மேற்படி விழா
ஆரம்பித்தது. அருட்சோதி தனது அழகு தமிழில் மேடையில் அமர்ந்திருந்தவர்களை அறிமுகம்
செய்து வைத்து உரையாற்றினார். கிருபாகரன் இளமைக் காலந்தொட்டே மண்பற்றும்
தமிழ்ப்பற்றும் மிக்கவராக இருந்தார். பண்டிதர் சா.வை. பஞ்சாட்சரம் அவர்களால்
ஆரம்பிக்கப்பட்ட இணுவில் தமிழ் இலக்;கியக்கழகத்தில் இணைந்து பணியாற்றியதோடு அந்த
நிகழ்வுகளில் கலந்துகொண்டவர். கனடிய மண்ணில் கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் இணுவில்
திருவூர் ஒன்றியத்தின் செயலாளராகப் பணியாற்றி வருகின்றார் என்றால் அவரின்
சமூகப்பற்றினைப்பற்றிக் குறிப்பிடவேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தலைவர் சிவசுப்பரமணியம் அவர்கள் மிக இரத்தினச் சுருக்கமாக தலைமையுரை
நிகழ்த்தினார். ஆவர் தனது தலைமையுரையில் நூலாசிரியர் முருகேசு கிருபாகரன்
எழுத்தாளர் டானியல், ஆனந்தன், அகஸ்தியர், இலங்கையர்கோன், தெணியான் அறிஞர் அண்ணா,
கலைஞர் கருணாநிதி, கவிஞர் கண்ணதாசன் போன்றோரின் படைப்புக்களால் கவரப்பட்டவர்.
அவர்களைப் போன்று கிருபாகரனும் மிக நீண்ட நாட்களாகச் சிறுகதைகளை எழுதி வருகின்றார்.
அவரது படைப்புக்களை ஒன்று சேர்த்து நீறுக்குள் நெருப்பு எனும் சிறுகதைத் தொகுதியாக
இன்று வெளியிடுவது பாராட்டத்தக்கது என்றும் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து சிந்தனைப் பூக்கள் சி.பத்மநாதன் வெளியீட்டுரை நிகழ்த்தினார்.
வெளியீட்டுரையின் போது இதில் மொத்தமாக 10அபத்திரிகைகளில் வெளியீடு செய்யத 20
சிறுகதைகளை ஒன்று சேர்;த்து நூலாகப் படைத்துள்ளார். அவரின் கதைகள் ஒவ்வொன்றுமே
ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டனவாக சமூக நிலைமைகளைக் கொண்டனவாக அமைந்துள்ளன. தற்கால
சமூக நிலைமைகள் கதைகளிலே பின்னப்பட்டுள்ளன. கதை எழுதுவதற்கு பெருந்தொகையான கதைகளை
வாசித்திருக்கவேண்டும். கிருபா அவர்கள் இந்தியாவில் இருந்தபோது கதைகளை அதிகளவில்
வாசித்ததாகக் குறிப்பிட்டார். ஆவரின் கதைகள் மிகச் சிறந்தனவாக உள்ளன. அவற்றை
வெளியீடு செய்வதில் பெருமைப் படுகின்றேன் என்றார்.
தொடர்ந்து இந் நூலைத் திறனாய்வு செய்தார் சிவபாலு அவர்கள். அவர் உரை நிகழ்த்தும்
போத இந்த நூலுக்குத் திறனாய்வு செய்யப்படவேண்டும் என்பது நூலாசிரியரின் விருப்பு.
இது மிகவும் கடினமான ஒரு பணி. ஓரு நூலுக்குத் திறனாய்வு அல்லது விமர்சனம் அல்லது
விதப்புரை செய்வது எனின் முக்கியமாக இரண்டு அம்சங்களில் கவனம் செலுத்துதல்
இன்றியமையாதது. ஓன்று எழுத்தாளன், இரண்டு அவரது படைப்பு. எனவே படைப்பாளியைப் பற்றி
நோக்கும் போது அவரின் வரலாற்றுப் பின்னணி, அவரின் தனித்துவமான எழுத்து நடை,
இலக்கியத்தில் அவரின் நிலை, பண்பு, தகைமை என்பன பற்றி நன்கு தெரிந்திருத்தல்
அவசியமாகும்.
இரண்டாவதாக அவரது படைப்பினைப் பற்றிநோக்கும்போது அதனைப்பற்றிய வாதப்பிரதவாதங்கள்
அதன் மெய்ப் பொருள், அதன் சிறப்பியல்பு, உள்ளார்ந்த நற்பண்புகள் அல்லது
விழுமியங்கள், குறகிய எடுத்துக்காட்டுக்கள், ஒப்பு நோக்கி நிறை காணுதல் அதாவது வேறு
படைப்புக்களுடன் அல்லது வேறு படைப்பாளிகளின் படைப்புக்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தல்
என்பன கருத்துக்கெடுத்தல் இன்றியமையாததும், சரியானதுமாகும்.
மேனாட்டறிஞர்கள் திறனாய்வை மதிப்பீடு செய்யும்போது அவற்றைக் கொள்கையியல்
(வுhநழசநவiஉயட யுppசழயஉh) தொடர்பியல் வாதம் (சுநடயவiஎளைஅ)இ பல்துறை அணுகல் (
ஆரடவipடந யுppசழயஉh)இ இயங்கியல் நோக்கு னுயைடழபரந உசவைiஉயட யுppசழயஉhஇ என
வேறுபடுத்தி நோக்குவதனைக் காணலாம்.
பொதுவாக இக்கால ஆய்வாளர்கள் இலக்கிய அல்லது வரலாற்றுப் படைப்புக்களை அவயவிக்
கொள்கை, அறவியற் கொள்கை, உணர்ச்சிக் கொள்கை, அழகியற் கொள்கை, சமுதாயக் கொள்கை
என்பனவற்றின் அடிப்படையில் தமது ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.
மானிட நலம் சார்ந்த ஆய்வாளர்கள் மக்களுக்குத் தெளிவான பார்வையை அளிப்பது
முக்கியமாகும். இதனை ஏங்கல்ஸ் அவர்கள் கால்மாக்ஸ் அவர்களுக்கு “முன்னைய உலக
கண்ணோட்டம் மற்றும் முக்கிய வரலாற்றின் தர்க்கரீதியான வரலாற்று ரீதியான அவசியமான
கோட்பாடுகளை வளர்;த்து ஒரு சில படைப்புகளில் வடிக்காதவரை பெரும்பான்மையினர் இருளில்
குழம்பித் திரிவார்கள்|| என மிகத் துல்லிமாகவும், ஆணித்தரமாகவும் கூறியிருப்பது
கருத்திற் கொள்ளற் பாலது.
இணுவையூரைச் சேர்ந்த எழுத்தாளர் கிருபாகரன் அவர்களால் எழுதப்பட்ட இருபது சிறுகதைகளை
உள்ளடக்கியதாக இச் சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 1997 தொடக்கம் 2007 வரை அவர்
எழுதிய சிறு கதைகளை இத்தொகுதியில் உள்ளடக்கி நூலாக்கியுள்ளார். ஆர்.எம். கிருபாகரன்
இலக்கிய ஆர்வமும், சமூக நலனின் அக்கறையும், மண்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்ட ஒரு
எழுத்தாளர். கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என அவர் பல பரிமாணங்களில் எழுதும் ஆற்றல்
கொண்டவர். இளம் வயதிலிருந்தே கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதலில் மிகுந்த ஈடுபாடு
கொண்டவராக அவர் விளங்கியுள்ளார். இணுவில் கலை இலக்கிய மன்றத்தில் பங்கு கொண்டிருந்த
அவர் கனடிய மண்ணிலும் திருவூர் ஒன்றியத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டு அதன்பணிகளை
முன்னெடுத்துச் செல்பவர்களினல் ஒருவராகத் திகழ்கின்றார்.
சிறுகதைக்கான வரைவிலக்கணத்தை எந்தளவிற்கு கிருபாவின் கதைகள் தொட்டுள்ளன என்பதனை
இந்த நூலைப் படிக்கும்போது அறிந்துகொள்ள முடியும்.
இலக்கியம் என்பது கதை, கட்டுரை, கவிதை, நாடகம், உரைச் சித்திரம் போன்ற பல்வேறு
படைப்புக்களையும் உள்ளடக்கியதாகும். கதை என்பது நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம்
என வகைப்படுத்தப் படுகின்றது. நாவல் இலக்கியத்திற்கும் சிறுகதை இலக்கியத்திற்கும்
இடையே அதன் அமைப்பு, கரு, போக்கு என்பவற்றில் வேறுபாடுகள் உண்டு. சிறுகதை இலக்கியம்
என்பது ஒரு மையப்பொருளைக் கருவாகக் கொண்டு மிகச் சுரக்கமாகத் தான் கொண்ட விடயத்தை
இலக்கிய நயத்தோடு படைக்கப்படுவது எனலாம்.
இலக்கியத் திறனாய்வு எனும்போது அதனை நோக்குவதற்கு முதலில் நூலுக்குத் தந்துள்ள
தலைப்புப் பொருத்தமானதா? படைப்பாளியாலோ அன்றி துறை போனவர்களால் தரப்பட்ட
நூன்முகத்தில் உள்ள தகவல்கள் படைப்பாளியின் நோக்கத்தை உள்ளடக்கியுள்ளதா? ஊள்ளடக்கம்
எவ்விதம் நூலின் ஒழுங்கமைப்பைத் தந்துள்ளதா?
அதன் பொதுவான பரப்பு அல்லது வகை என்ன? நூல் எழுதப்பட்டதன் நோக்கம் என்ன?
படைப்பாளியின் எழுத்துத் தன்மை அல்லது நடை எத்தகையது? அது வழமை சார்ந்ததா அல்லது
வழமைக்கு மாறானதா? எவ்விதமாக படைப்பாளியின் எண்ணங்கள் வளர்க்கப்பட்டுள்ளன? இவற்றுள்
என்னென்ன உள்ளடக்கப்பட்டுள்ளன? எவை விர்க்கப்பட்டுள்ளன? இவை இந்த நூலின் தன்மையை
ஆளுமைப்படுத்தி உள்ளனவா? அல்லது படைப்பாளியை ஒரு எழுத்தாளன் என்ற தகுதியை அல்லது
அதிகாரத்தைத் தந்துள்ளனவா? இந்தக் கதைகளின் பின்புலம் என்ன? அதில் வந்துள்ள
பாதிரப்படைப்புக்கள் எப்படியானவை? அவை வழி நடத்தப்பட்டுள்ள வழி வெற்றியாக
அமைந்துள்ளதா? எவ்வித சூழ்நிலைகளில் கதை நகர்;;த்திச் செல்லப்படுகின்றது? இவை
அனைத்தும் படைப்பாளியின் உட்பொருளோடு தொடர்பானவையா? இந்தக் கதைகளில் வந்துள்ள
தகவல்கள் அல்லது சம்பவங்கள் சமூகத்தோடு எவ்வளவிற்கு ஒத்துப்போகின்றன அல்லது
உண்மையானவை?
என்பனவற்றோடு ஒரு நூலின் வடிவமைப்பும் அந்த நூலின் வெற்றிக்கு மிக முக்கியமானவை
ஆகும். நூலின் வடிவமைப்போடு அது அச்சடிக்கப் பட்டுள்ள முறை எத்தகையது?,
புத்தகத்தின் முகப்பு எத்தகையது? அது வடிவமைக்கப்பட்ட தன்மை எப்படியானது?
கட்டப்பட்டுள்ள முறை அழகாக உள்ளதா? இக்கதைகளுக்குப் படங்கள் அல்லது சித்திரங்கள்
இணைக்கப்பட்டுள்ளனவா?
கதை எழுதுதல் என்பது பொழுது போக்கு எனச் சிலர் கொள்ளுகின்றனர். ஆனால், இன்னும்
சிலரோ கதை சமூகத்திற்குப் பயன்படத்தக்கதாக எமது சமூகத்தைச் சிந்திக்க
வைக்கத்தக்கதாக, படிப்பினைகளாக ஆக்கப்படவேண்டும் என்னும் நோக்கத்தைக்
கொண்டவர்களாகவும் உள்ளனர்.
பொழுது போக்குக்காக எழுதப்படும் கதைகள் மனிதனின் ஓய்வுநெரத்தை இன்பமாகக்
கழிக்கத்தக்கதாக அமைகின்றது. வாழ்க்கையில் பல நிலைகளிலும் வாழும் மனிதர்கள்
சற்றுநெரமாவது அமைதியாக இருந்து இன்பம் தரத்தக்க அல்லது மனதிற்கு மகிழ்வைத்
தரத்தக்க கதைகளை வாசிப்பது உளத்திற்குத் தென்பையும் மன அழுத்தத்தைக் குறைக்கவும்
காரணமாக அமைகின்றது என்ற கருத்தினைக் கொள்கின்றார்கள்.
ஆனால், இலக்கியங்கள் அது சிறுகதைகளளோ, கவிதைகளோ அல்லது கட்டுரைகளோ மக்களுக்குப்
பயன்தரத்தக்கதாக, நல்வழிப் படுத்தத்தக்கதாக அமைய வேண்டும் என்ற கருத்தைத்
தரவேண்டும், சமுதாயத்தில் உள்ள வற்றை மக்கள் முன் கொண்டுவருபவiயாக அமைய வேண்டும்.
சமுதாயப் பிரச்சினைகளை மக்கள் முன் வைத்து மக்கள் மனங்களில் சிந்தனையைக்
கிளறவேண்டும், சிந்திக்கத் தூண்ட வேண்டும் என்ற நோக்கமும் முன்வைக்கப்படுகின்றது.
இலக்கியம் பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“இலக்கியம், இலக்கிய ஆக்கம் பற்றிய வரண் முறை விதிகள், மரபுகள் என்பன சமூக
இயக்கத்தின் உயர் தளத்தில் உள்ளவை. நீணடகாலச் சமூக இயக்கம் காரணமாகக் கோட்பாடுகiளாக
நிலை பேறுடைமை பெற்றவை. இந்த இல்கிகய நிலைபேறுடைமை பெயர்க்கப்படும் முறைமை
பற்றியறிவதற்கு இலக்கியம் பற்றிய சில் அடிப்படை உண்மைகளை உணர்ந்து கொள்ளல்
வேண்டும்.
1.சமூகத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளும் இலக்கியத்தில் இடம் பெறுவதில்லை.
2.அன்றாட வாழ்க்iகியலே தொழிற்படும் சமூக சுற்றோட்டத்தை அல்லது நடைமுறையை
இனங்கண்டறிந்து இ;லக்கியத்துட் புகுத்துவது எல்லா இலக்கியகாரராலும் செய்யப்படக்
கூடிய ஒன்றன்று எனவே இதில் வெற்றி கண்ட முன்னோடிகள் பெரும்பாலும் மேதைகளே.
3. இலக்கியம் என்பது வெறும் கருகத்துக் கோவையல்ல அது அழகுணர்ச்சியுடன்
சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்ற ஆனாலர் கiலாயழகுள்ள ஓர் ஆக்கம் இலக்கியமாகக்
கருத்படலாம். ஆனால் கலையழகற்ற ஆனால் கருத்தாழமுள்ள ஆக்கம் இலக்கியமாகாது.
இவற்றைத் தொகுத்து நாம் நோக்கும் போது “இலக்கிய ஆக்கம் என்பது ஒரு சமூக அழகியல்
நிகழ்வு ஆகும்” என்று கூறலாம்.
எழுத்தாளன் தனது அநுபவங்களை, அதாவது தன் கற்றறிவினாலும், பட்டறிவினாலும்
அறிந்துகொண்ட உலக உண்மைகளை இலக்கிய நிலைப்படுத்திக் கொள்வதற்கு அவன் மேற்கொள்ளும்
இலக்கியப் பொருளும், அமைவு நெறியும் உதவுகின்றன. எனவே இந்த இலக்கிய ஆக்கத்தில்
படைப்பாளியின் அநுபவம், உணர்வு ஆகியன சொல்லூடாக பல்வேறு அமைப்புக்களுடன்
வெளிவந்திருப்பதனைக் காணமுடிகின்றது. இங்கே அநுபவம், உணர்வு என்பவை அவனைப் பாதித்த
சமூகப் பிரச்சினைகளின் பாற்பட்டனவே.
“எழுத்தாளனின் சமூகப் பிரச்சினையை அணுகும் முறையிலே, அதனை இலக்கிய மயப்படுத்தும்
முறையிலே இகலக்கியக் கோட்பாட்டின் தன்மைகள் தீர்மானிக்கப்படுகின்றன” என பேராசிரியர்
கைலாசபதி குறிப்பிடுகின்றார். சமூகப் பிரச்சினையினை படைப்பாளி தனது உணர்வில்
பதித்துக் கொள்கின்றான் என்னும் உண்மையை நான் இங்கு கிருபாவின் கதைகளினூடே
காண்கின்றேன்.
பொருளியலாளனோ சமூகவியலாளனோ சமூகப்பிரச்கினையை விளங்கிக்கொள்ளும் முறைக்கும் ஒரு
படைப்பாளி, அதாவது ஒரு இலக்கிய கர்த்தா விளங்கிக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு.
எழுத்தாளர் மனித நேயம் என்னும் பெரு வட்டத்தினுள் நின்று உணர்வுப் பகைப்புலம்
என்னும் வெளிச்சத்தைப் பாச்சி தெளிய வைக்கும் தன்மையைக் கொண்டவன் என்னும் கருத்தினை
மெய்ப்பிக்கும் வகையில் இக்கதைகளில் கிருபா அவற்றை நயம்பட கையாண்டுள்ள விதம் மாற்று
இலக்கியப் படைப்புக்களோடு ஒப்பு நோக்கக் கூடியது.
தான் வாழ்ந்த சமூகப் பிரச்சினையையும் வாழ்ந்து வரும் சமூகப் பிரச்சினையையும் மனித
நேயக் கண்கொண்டு பார்ப்பவர் கிருபா. எனவேதான் அவரின் எழுத்துக்களில் இவை படிந்து
அழகிய படிமங்களாக வாசகர்களுக்கு கிட்டியுள்ளன. வெறுமனே தனது அனுபவங்கள், எண்ணங்கள்,
ஆதங்கங்களை வெறும் தகவல்களாகத் திரட்டித்தராது, அதற்கு அழகிய இலக்கிய வடிவம்
கொடுத்து வாசகர்களைக் கவர்ந்து தன்பக்கம் ஈர்ந்து கொள்ளத்தக்க வகையிலே அவரின்
ஆக்கங்கள் அமைந்துள்ளன. ஆந்த அடிப்படையில் கிருபாவினால் அவ்வப்போது எழுதப்பட்ட
கதைகள் இன்று நூலாக்கம் பெற்றுள்ளன. அனைத்துக் கதைகளும் வாசகர்களிடம் விடப்பட்டவை.
வாசகர்களின் விமர்சனத்திற்கு உள்ளானவை. அவை எழுத்தாளனை அடைந்ததோ இல்லையோ ஒவ்வொரு
வாசகனும் ஒவ்வெர்ரு கோணத்தில் அவற்றைச் சல்லடை போட்டிருப்பான் என்பதில் சந்தேகம்
இல்லை.
இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடி என்பார்கள். அந்த உண்மைக்கு கிருபாவும்
உட்பட்டவர் என்பதனை இந்த கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. இலக்கியப் பரப்பில்
இலங்கையின் இலக்கியத் தடம் 1950க்க முன்னர் இருந்த நிலைமையில் 195க்குப் பின்னரான
நிலை 1964களுக்குப்பின்னர் மாற்றம் கண்டு வந்துள்ளமையை அவதானிக்கலாம் இவை அங்கு
காணப்பட்ட பொரளாதார சமூக மாற்றங்களின் பிரதிபலிப்பைக் காட்டுவனவாக அமைந்தன.அதிலும்
ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியத்தடம் 1980களின் பின்னர் புலம்பெயர் இலக்கியம்
என்னும் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுக்கொள்வதனையும் காணமுடிகின்றது.
இந்தப் புலம்பெயர் இலக்கியப் பரப்;பினுள் கிருபாவும் ஒருவர். 1980 -90களில்
ஈழத்தமிழர்கள் அனுபவதத்த அவலங்களின் வெளிப்பாடகள் சமகால இலக்கியமாக வெளிவரும் அதே
காலகட்டத்தில் புலம்பெயர் இலங்கியங்களில் பெரும் தாக்கத்தைக் கொண்டதாக சற்றுத்
துணிச்சலாக எதனையும் எடுத்துக் கூறுகின்ற ஒரு நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பது
உண்மையே. எனவே இளம் வயதில் தான் பட்ட அவலங்களையும் உணர்வுகளையும் தான்கேட்டு,
அறிந்த விடயங்களையும் உள்ளடக்கி இலக்கியமாகப் படைத்துள்ளார். ஆவர் வெறுமனே
தகவல்களைத் தரும் ஒரு கட்டுரையாளராக அன்றி அழகியலோடு சேர்ந்த இலக்கியமாக, மனித
நேயத்தை அடிப்டையாகவும். தமிழர்களின் விடுதலையை முழுமூச்சாகவும் ஆதிரிக்கின்ற
போக்கை, நோக்கத்தைக் கொண்டுள்ளார் என்பதனை இக்கட்டுரைத் தொகுதியில் வந்துள்ள
கதைகளுள் பெரும் பாலானவை கோடிட்டுக் காட்டுகின்றன. திருமணமான வர்கள் அதுவும் நீண்ட
நாட்கள் காத்திருந்து காலங்கடந்து திருமணமான தம்பதியினரையே அவர் குடும்பத்திற்கு
உழைத்து ஆகிவிட்டது இனி நாட்டுக்கு உழைப்போம் எனப் புறப்பட வைத்திருக்கின்றார்.
இவ்விதமே கணவனை இழந்து, மகளை வீராங்களையாக விடுதலைப் போராளியாகக் கண்டு வந்தவள்
காட்டிக்கொடுக்காது இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மடிந்துபோகும்
வைராக்கியம் ஈகம் இந்த மண்ணுக்காக என்னும் கதையில் வெளிப்படுகின்றது. எந்தத்
தாயிடமும் காணப்படாத் சங்கத் தமிழ்த்தாயாக அவள் காட்டப்படுகின்றாள் கிருபாவின்
பேனாவினால். என்று எடுத்துக் காட்டி அவரின் கதைகளிலே சாதாரண பேச்சு வழக்கு இளையோடி
நிற்பதும் அவரது படைப்புக்கு வெற்;றியைத் தரும் ஒன்றாகும் என்ற அவர் அவரது
படைப்பாற்றல் அவரது கதைசொல்லும் திறனோடு இணைந்தது. ஒரு கதையின் சிறப்பிற்கு அந்த
உரைநடை ஞனரஞ்சகமானதாக இருக்கவேண்டும் என்பதனை நன்கு உணர்ந்து கொண்டுள்ளார் என்பதனை
அவரது உரை நடைமட்டுமல்ல அவர் ஆங்காங்கு கோடிட்டுக்காட்டும் உவமான உவமேயங்கள் சாதாரண
மக்களிடம் அன்றன்றாடம் பாவிக்கப்படுவனவாக உள்ளன. எடுத்துக்காட்டாக “தூங்குபவனை
எழுப்பலாம் தூங்குவது போலப் பாசாங்கு செய்பவனை எழுப்பமுடியாது” “வாடியிருந்த
பயிருக்கு வானம் பொழிந்த மாதிரி அரவிந்தனின் அகமும் முகமும் குளிர்ந்தன.
“உடும்புப்பிடியாய் பிடித்தபோது சிறுவன் என்னை விடுங்கண்ணை’ போன்ற வாக்கியப்
படைப்புக்கள் பழமொழிகளை உள்ளடக்கியனவாக அமைந்துள்ளன. இது சாதாரண ஒரு எழுத்தாளனால்
எழுதப்படமுடியாதவை அது ஒரு அனுபவம், ஆற்றல் மிக்கப் படைப்பாளிக்குரிய சொத்துக்கள்,
திறன்கள் இக்கரை பச்சைக் கதைதான்” அறுந்த பட்டம் போல் அலக்கழிந்தது அவன் மனம்’,
‘யானைப் பசிக்குச் சோழப்பொரி கிடைத்த மாதிரியாய் அவர்களுக்கு நிவாரணங்கள்
போதுமானதாய் இல்லை’ ‘ஒரு பெண்ணீன் கண்ணீரின் அர்த்தம் இன்னொருபெண்ணுக்குத்தான்
தெரியும் பானையில் இருந்தால்தானே அகப்பையில் வரும்’ ‘செவியில் தேள் கொட்டியது போல்
இருந்தது’ ‘கனடிய நீரோட்டத்தில இறங்கினாலும் எங்கடை சாயம் களராமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்’ ‘பழைய குருடி கதவைத் திறவடி’ இவ்விதமாக அவரது எழுத்து சாதாரண
மக்களைச் சென்றடையத்தக்க உரை நடையைக் கொண்டது மட்டுமன்றி எந்தமக்களை அடிப்படையாகக்
கொண்டாரோ அதே உரையாடல் கதையின் சிறப்புக்கு காரணமாகின்றது. இருப்பினும் கதையில்
அவர் கதை கூறும்பாணியில் தன்வினையிலும் பிறவினையிலும் மாறிமாறிச் சிற்சில இடங்களில்
குளம்பியிருப்பது தெளிவாகின்றது. சில கதைகளின் முடிவை வாசகர்களின் ஊகத்திற்கே
விட்டுவிட்டார். ஏன்றும் குறிப்பிட்டு உரையினை நிறைவு செய்துகொண்டார்.
இடையே படைப்பாளர் கிருபாகரனுக்கு பொன்னாடை போர்த்;திக் கௌரவித்தமையைத் தொடர்ந்து
ஆய்வுரையாற்றிய முன்னைநாள் உதவிக்கல்விப் பணிப்பாளர் சிவநாயகமூர்த்தி அவர்கள்
கிருபாவின் கதைகள் காலத்திற்கு ஏற்ற சிறந்த கதைகளாக அமைந்துள்ளன. இக்காலகட்டத்தில்
உள்ள இயல்பான சமூகப் பிரச்சினைகளை அவர் தனது கதையின் கருப்பொருளாக கையாண்டுள்ளார்
என்ற அவர் ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக அதன் கருப்பொரள்பற்றிய விளக்கத்தினைத்
தந்து உரையாற்றினார்.
‘சபலம் சாத்தியமாகாதபோ’ இந்நூலில் உள்ள முதலாவது கதை. கொழும்பில் நல்ல பதவியில்
உள்ள ஒரு இளைஞன் தான் திருமணம் செய்வதற்காக வரைந்து கொண்ட கோடுகளோடு, பெற்றோரின்
கோடுகள் காரணமாக திருமணம் தடைப்படுகின்றது என்பதனை விட தேடி வந்த திருமணங்களைத்
தட்டிக் கழைத்துக் கழைத்துப் போகும் நிலையில் பழைய கிளவி கதவைத் திறவடி என்ற
பாணியில் திருமணத்திற்குச் சம்மதிக்கும் அசல் யாழ்ப்பாணத்தானைக் காட்டுகின்றார்.
உனக்கு நீயே நீதிபதி” என்னும் கதையில் ஜேர்மெனிக்குச் சென்ற விஜயன் அங்கு பௌலா
என்னும் ஜேர்மனியப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கின்றார். அவர்களுக்கு இரு
குழந்தைகள். ஆக்கா கனடாவிற்கு வந்ததும் தொலைபேசி அழைப்பினால் கனடாவுக்கு
அழைக்கின்றாள். முகவர்மூலம் ஒழுங்கு செ;யயப்பட மனைவி பிள்ளைகளைவிட்டு
வந்துவிடுகின்றான். புpன்னர் தொடர்பே கொள்ளாமல் விடுகின்றார். அவருக்கு இரண்டு
வருடங்களின்பின்னர் மனச்சாட்சி குத்துகின்றது திரும்புகின்றார் ஜேர்மெனிக்கு. இங்கு
மனச்சாட்சி புலம்பெயர்ந்தவர்களின் மன நிலையை எடுத்துக்காட்டுகின்றார்.
‘ஊழைப்பவன் அறிவான்’ … தனது ஆடம்பரச்செலவுக்காக சுவிசில் உள்ள மைத்துனர் மாரிடம்
பணம் பெற்றுச் செலவாடுகின்றான். இறுதியில் வேலைசெய்யும் இடத்திலேயே கையாடல் இதனால்
பொலிசார் கைது செய்கின்றனர். பாவம் மனைவி பிள்ளைகள் வீதியில். . இது சமூதாயத்தி;ல்
இன்று இடம்பெறும் ஒரு பிரச்சினையாகவே உள்ளது. மனைவியைக் கொடுமைப்படுத்தும்
கணவன்மார்? . . .
‘நேர்மை’ புங்குடுதீவில் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவள் மாலினி அவளின் நேர்மையை
இக்கதை படம் பிடித்துக் காட்டுகின்;றது. ஏழ்மையிலும் நேர்மை தவறாதவளாக அவள் வாழும்
நிலை.
‘சேவை செய்வதில் ஆனந்தம்’ ஆனந்தி பள்ளிப்படிப்பபை முடித்ததும் வன்னிக்குத் திரும்பி
அங்கு தொண்டர் நிறுவனத்தில் பணியாற்றுகின்றாள். அவளது நண்பியோடு அனைத்தையும்
பகிர்ந்துகொள்ளும் ஆனந்தி அவளுக்கும் வேலைபெற்றுக் கொடுக்கின்றாள் இறுதியில் அவள்
காணாமல் போகின்றாள் என்ன ஆனாள் என்பது தெரியாத அவலம். இராணுவ தர்பார் ஆட்சியின்
அவலத்தைக் கோடிட்டுக்காட்டும் கதை.
“தேவை இதுபொல் தெளிவு” பல ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் குடியேறிய குடும்பம்
இம்மானுவல் மேரி குடும்பம் ஈழத்துஅவலங்களைத் தெரியாமல் வாழும் குடும்பம்.
துந்தையின் மரணத்திற்காகச் சென்றவர்கள் பட்ட அனுபவம் அவர்களைத் திருந்த
வைக்கிள்றது. அவலப்படும் தாயக உறவுகளை நினைக்க வைக்கின்றது கிருபாவின் பேனா.
‘பரீட்சைக்கு நேரம் இல்லை” என்ற கதையில் முல்லைத் தீவில் கடற்கரைக் கிராமத்தில்
வாழும்; குடும்பம் தந்தையை இழந்து விட்டு அரவிந்தன் தூண்டிலிட்டு தாயைக்
காப்பாற்றுகின்றார். படிப்பில் கெட்டிக்காரன். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
யெய்தவேண்டும் என்னும் நோக்கம். ஆனால் இராணுவம் குண்டுபோட்டு பாடசாலையை
அழித்துவீடுகனி;றது. பரீட்சை நடைபெற விலலை தாய் தென்பு கொடுக்கின்றாள் பரீட்சை
எப்பவும் எழுதலாம் என்று. . ‘நம்பிக்கைச் சக்கரம். .” என்ற கதையில் இராணுவத்தால்
கைதுசெய்யப்பட்ட தந்தையை மீட்க தனயன் களவெடுக்கத் திட்டமிட்டதை அறிந்து அவனை
அதிலிருந்து தப்பவைத்து பணம தர முன்வரும் தாராளர் சேகரின் கருணை உள்ளம்.
‘துன்பத்தில் இன்னபம்’ அகதிகளுக்கு முனைப்புடன் உதவிடும் இளைஞர்களின் கதை. ஆவர்கள்
படும் சிரமங்கள் அதனால் வரும் ஆத்ம திருப்தி, ‘திருந்தாத உள்ளம். . .’ என்ற கதையில்
வெளிநாட்டு மைந்தனின் உதவி கிட்டவில்லை. இடம்பெயர்ந்து அவலப்படும் தாய் தந்தையர்.
ஆவர்களின் பரிதாபத்தைப் பார்த்து உதவும் ஆசிரியரின் பெருந்தன்மை
கோடிட்டுக்காட்டுவதோடு வெளிநாட்டு மகனின் ஆடம்பர வாழ்வைச் சித்திரிக்கம் கதை
ஓவியம்.
‘பறக்க இடம் தேடும் அகதிப் பறவைகள்’ அகதிகளாக வந்து தங்கிய இடத்திலிருந்த விடுதலை
பெற்று அமைதிவாழ்வுக்கு ஜேர்மெனியில் இருந்து கனடாவிற்கு வந்து அங்கு அகதி நிலை
நிராகரிக்கப்பட்டு பின்னர்வந்து விண்ணப்பித்து ஏங்கித்தவிக்கும் ஒரு குடும்பத்தின்
கதை. குனடிய மண்ணின் வாழ்வின் எதார்த்தத்தைக் காட்டும் கதை.
‘நீருக்குள் நெருப்பு என்ற கதைதான் இந்த நூலுக்கு இடப்பட்ட பெயர் இந்தக் கதையின்
கருப்பொருள்தான். கிளிநொச்சியில் வாழ்ந்த குடும்பம் யாழ்ப்பாணத்தில் படித்துவந்த
மகள், சிறிய கடை வைத்திருக்கும் அண்ணன். நோய்வாய்ப்பட்டுள்ள வயோதிபத்தாயைப்
பின்னிப் பிணைந்து இராணுவ அட்டூழியத்தை எதிர்த்துப் போராட்டத்திற்கு ஏகும் மகளின்
கதை.
‘இவர்களும் மனிதர்களே” என்பதில் சுப்பையா தோட்டத் தொழிலாளி, மனைவி நோய்வாய்ப்பட்டு
படுக்கை வைத்திய சாலைக்குச் சென்றவளை சத்திரசிகிச்சை உடனடியாகச் செய்யவேண்டுமு;
எனப் பணிப்பு பணம் தேவை. போன் பண்ணியும் அறிவியாத தோட்டத்துரை. தோழிலாளர் ஒற்றுமை
வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம், தோட்டத்துரை என்ன செய்வதுஎன்று விழிப்பு என்பன
கதையின் கருவூலங்கள். வித்தியாசமான பிற்புலம்.
‘புதிதாய் ஒரு உறவு’ என்பதில் பிள்ளைகள் இல்லாதவர் சந்திரசேகர் அவர் வீட்டில்
மூன்று இளைஞர்கள் அவர்களை அன்போடுபார்த்தார். அவருக்கு நோய் வந்தபோது பிள்ளைகள்
போன்று கவனித்தார்கள். பாசம் பெற்றபிள்ளைகளைவிட ஓங்கியது.
‘கர்த்திருக்கும் கடமைகள்’ வெளிநாட்டில் இருந்து வந்தவருக்குத் தந்தையின் சேமிப்பை
என்ன எண்டு தெரியாமல் கொடுக்கிறார் அக்கா. அதில் பணம் கட்டக்கட்டாக இருப்பதைக்
கண்டு ஆச்சிரியம். மனைவியோ கடனை அடைக்கலாம் என்கின்றான். ஆனால் ரமணனோ அப்பாவின்
நோக்கம் நல்லதற்குப் பயன்படவேண்டம் என அத்தொகையை மண் மீட்பு நிதிக்குக்
கொடுக்கப்போகின்றோம் எனக் கூறுவது மண்மீது வைத்துள்ள எழுத்தாளனின் நோக்கத்தை மன
ஓட்டத்தைப்புலப்படுத்துகின்றது.
‘இன்றைய தொழிலாளிகள் நாளைய போராளிகள்” ‘மனங்கள் மாறட்டுமே ..’ ‘அவலங்கள் எதுவரை’
‘இதுதான் எங்கள் வாழ்க்கை’ என்னும் கதைகளின் கருப்பொருட்களைப் பற்றியும் விபரமான
உரையை நிகழ்த்தினார் சிவநாயகமூதர்த்தி. அதனைத் தொடர்ந்து பண்டிதர்
சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் ஆசியுரை நிழ்த்தினார். ஆவர் தனது ஆசியுரையில் கிருபாவின்
விருப்பு, அவரின் இயல்பு சிறுவயதிலிருந்தே அவரின் தமிழ் மீதும் மண்மீதும் கொண்டுள்ள
பற்றுறுதி பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டார்.
thangarsivapal@yahoo.ca |
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|