| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அரசியல்! |  
| மாலைமலர்.காம்: 
http://www.maalaimalar.com/ ஈழத்தமிழர்களுக்காகத் திருமாவளவன் உண்ணாவிரதம்!
 
  செங்கல்பட்டு, 
ஜன. 16- இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு 
உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் 
தொல்.திருமாவளவன் காலவரையற்ற உண்ணாவிரதத்தை சென்னையை அடுத்த மறை மலை நகரில் நேற்று 
காலை 9 மணிக்கு தொடங்கினார். அவரை அரசியல் தலை வர்கள் நல்லகண்ணு, கி.வீரமணி, 
பழ.நெடுமாறன், வணிகர் பேரவை தலைவர் த.வெள்ளையன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் 
உள்பட பலர் வாழ்த் தினார்கள். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நீடிக்கிறது. சாகும் 
வரை உண்ணா விரதம் மேற்கொண்டு வரும் திருமாவளவன் தண் ணீரை மட்டுமே குடிக் கிறார். 
அதனால் அவர் இன்று சோர்வுடன் காணப் பட்டார். 
 இரவு மேடையிலேயே படுத்து தூங்கினார்.தொண் டர்கள் விடிய, விடிய விழித்து இருந்தனர். 
தொண்டர் களிடம் அவர் `நீங்கள் யாரும் உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். நான் மட்டும் 
இருக்கிறேன்.' என்று கேட்டுக்கொண்டார். "இந்த போராட்டம் தி.மு.க.வுக்கு எதிராகவோ, 
தமிழக அரசுக்கு எதி ராகவோ கிடையாது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் அதிகாரம் தமிழக 
அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது.
 
 பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறை 
வேற்றப்பட்டது. முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் டெல்லி சென்று 
பிரதமரிடம் வலியுறுத்தினோம். ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் 
மத்திய அரசு எடுக்கவில்லை. வெளியுறவுத்துறை செய லாளர் சிவசங்கர்மேனன் போர் 
நிறுத்தம் பற்றி பேசமாட்டார். சார்க் மாநாடு பற்றி பேசவே இலங்கை வருகிறார் என்று 
இலங்கை மந்திரி சொல்கிறார். இதை மத்திய அரசும் மறுக்கவில்லை.
 
 இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதே நமது நோக்கம். அதனால் என்னை கைது 
செய்ய நடவடிக்கை எடுத்தாலும் உண்ணாவிரத்தை கைவிட மாட்டேன். அப்படி ஒரு வாய்ப்பு 
ஏற்பட்டாலோ, வேறு நெருக்கடி உண்டானாலோ தொண்டர்கள் அமைதி யுடன் கட்டுப்பாடு காக்க 
வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழந்து விடக்கூடாது என்றும் கூறினார்.
 
 பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
 நாளை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும், இலங்கை போர் நிறுத்தத்தை 
வற்புறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும். மகளிர் விடுதலை 
சிறுத்தைகளும் இதில் ஒருங்கிணைந்து பங்கேற்க வேண்டும்.
 
 `காவல் துறையினர் ஒருவேளை என்னை கைது செய்தாலும், இலங்கை போர் நிறுத்தத்தை கைவிட 
கோரி போராட்டம் நடத்த வேண்டும்' என்றும் கூறி இருக்கிறேன். நேற்று என்னை திராவிடர் 
கழக தலைவர் கி.வீரமணி சந்தித்தார். அப்போது உண் ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று 
கேட்டுக் கொண்டார். பா.ம.க. நிறு வனர் டாக்டர் ராமதாஸ் இன்று டெலிபோனில் என் னிடம் 
பேசினார்.
 
 அப்போது, "இலங்கையில் போர் நிறுத்தத்துக்கு வேறு முறையில் முயற்சி செய்வோம். எனவே 
சாகும் வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வேண்டும்'' என்று கூறினார். இதுகுறித்து 
எங்கள் அமைப்புடன் கலந்து பேசி முடிவு செய்வேன்.
 
 இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
 
 இன்று விஜய டி.ராஜேந்தர், டைரக்டர்கள் பாரதிராஜா, செல்வமணி, ம.தி. மு.க. துணை 
பொதுச்செயலாளர் மல்லை சத்யா, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், மூர்த்தி உள்பட 
பலர் வாழ்த்தி பேசினார்கள். உண்ணாவிரத மேடையில் நடிகர் மன்சூர் அலிகான், 
நிர்வாகிகள் கலைக் கோட்டுதயம், சிந்தனை
 
 நன்றி: 
http://www.maalaimalar.com/
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |