பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
பயனுள்ள மீள்பிரசுரம்!
அகவை 75 கண்ட தாமரைத்தீவான்
- எஸ்.ஆர்.தனபாலசிங்கம் -
சோமநாதர்
இராசேத்திரம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தாமரைத்தீவான் 1932.07.24 இல்
`தாமரைவில்' எனும் ஊரில் பிறந்தவர். இதனால், பிறந்த ஊரின் முற்பாதியினையும் வளர்ந்த
ஊரான ஈச்சந்தீவின் பிற்பாதியினையும் இணைத்து தாமரைத்தீவான் என்ற புனைபெயரை
வரித்துக் கொண்டார்.
மாணவப் பருவத்திலேயே கவிதை எழுதுவதில் வல்லவரான இவர் 1955இல் ஆசிரியரானார். 1956
இல் சுதந்திரன் பத்திரிகையில் முதலாவது கவிதை பிரசுரமானதைத் தொடர்ந்து வீரகேசரி,
தினகரன், சிந்தாமணி முதலிய பத்திரிகைகளிலும் சுடர், தமிழ் உலகம், சர்வதேச தமிழர்
முதலிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.
எழுதியதோடு மட்டுமன்றி, திருமலை மாவட்டத்தில் பல கவியரங்குகளில் கவிதை பாடி சிறந்த
கவியரங்கக் கவிஞராகவும் அறியப்பட்டார். இவரது கவிதைகள் சிறந்த ஓசைநயமும், உணர்ச்சி
வெளிப்பாடும் தமிழ் உணர்வும் சமூக சீர்திருத்தக் கருத்துகளும் கொண்டவையாக
அமைகின்றன. அத்தோடு, தற்காலத்தில் தமிழர் படும் அவலநிலையைச் சித்திரிப்பனவாகவும்
உள்ளன.
"போரின் நிகழ்வுகளும் மக்கள் அனுபவிக்கின்ற இன்ப - துன்பங்களும் மிகச்சிறப்பாக
கவிதைகளில் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. புரட்சிகரச் சிந்தனைகளுடன்
எழுதுவதில் தாமரைத் தீவான் வல்லவர்" என `போரும் பெயர்வும்' எனும் நூலின்
அணிந்துரையில் எஸ்.எதிர்மன்னசிங்கம் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
போரும் பெயர்வும், கீறல்கள், பிள்ளைமொழி, சிறுவிருந்து முதலிய பல கவிதை நூல்களோடு
கட்டுரைப் பத்து, உணர்ந்தேன் உரைத்தேன் போன்ற கட்டுரை நூல்கள், உட்பட இவரது
பதின்மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. வெளிவராது கையெழுத்துப் பிரதிகளாய் இருப்பவை
பல.
`கீறல்கள்' என்ற இவரது கவிதைநூல் வடக்கு,கிழக்கு மாகாண கவிதை இலக்கியத்துக்கான
சாகித்திய மண்டலப் பரிசை 2001இல் பெற்றுக் கொண்டது. மேலும், மணிபல்லவம், கலாபூஷணம்
ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுக் கொண்டார். அத்தோடு, குறளமுதம், தாகம்
சஞ்சிகைகளின் பாராட்டுதல்களையும் பெற்றுக் கொண்டார்.
எவ்வித ஆரவாரமுமின்றி கவிதையினூடாக சமூக சீர்திருத்தக் கருத்துகளை முன்னெடுத்துச்
செல்லும் கவிஞர் தாமரைத்தீவான் அகவை 75இல் காலடி எடுத்து வைத்ததை முன்னிட்டு
இன்னும் பல்லாண்டு வாழ்ந்து அவர்தம் பணி தொடர நாம் அனைவரும் வாழ்த்துவோமாக.
நன்றி: தினக்குரல்.காம்
http://www.thinakkural.com/news/2007/8/1/articles_page32565.htm |
|
©
காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|