இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
அக்டோபர் 2007 இதழ் 94  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
தினக்குரல்.காம்!
அநுராதபுர விமானப் படைத்தள தாக்குதலும் தெற்கு அரசியலும்!

அண்மைய அநுராதபுர விமானப்படைத்தாக்குதலில் பங்கு பற்றிய கரும்புலிகள் 21 பேருடன் விடுதலைப் புலிகளின் தலைவர்.

போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது இரத்தம் சிந்தாத போர். போரையும் அரசியலையும் பற்றிய மாஓ சேதுங்கின் கூற்று இது. தென்னிலங்கை அரசியல்வாதிகள் காலஞ்சென்ற சீனத் தலைவரின் இந்தக் கூற்றை எவ்வாறு விளங்கிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், போரைப் பயன்படுத்தி அரசியலைச் செய்துகொண்டே போருக்குள் அரசியலைக் கொண்டுவரக்கூடாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கும் விசித்திரத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை அநுராதபுரம் விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் ஆகாயமார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் மேற்கொண்ட தாக்குதல் தென்னிலங்கையில் கடுமையான அரசியல் அதிர்வலைகளைத் தோற்றுவித்திருக்கிறது. போரை எதிர்க்காத அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் போரை முன்னெடுக்கின்ற முறையைக் குற்றஞ்சாட்டுகின்ற பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகள் எப்போது இத்தகைய பாரிய தாக்குதலொன்றை தொடுப்பார்கள் என்று காத்திருந்ததைப் போன்று அரசாங்கத்தைக் கடுமையாகச் சாட ஆரம்பித்திருக்கிறது. கடந்த இரு தினங்களாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள் அரசாங்கத்தின் போர்த் தந்திரோபாயங்கள் தோல்வி கண்டுவிட்டன என்று பேசினார்கள். கிழக்கில் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளினால் விடுதலைப் புலிகள் கடுமையாகப் பலவீனமடைந்து விட்டதாக கூறிவந்த அரசாங்கம், வன்னிப் பிராந்தியம் மீதும் பாரிய தாக்குதல்களை முன்னெடுக்க படைகளைத் தயார்படுத்திவருவதாக அறிவித்தது. விடுதலைப் புலிகள் பலவீனமடையவில்லை என்பதும் வன்னி மீதான தாக்குதலுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் பின்னடைவைக் கண்டுவிட்டன என்பதுமே அநுராதபுரம் விமானப்படைத்தளத்தில் இடம் பெற்ற தாக்குதலையடுத்து ஐ.தே.க.வினர் நாட்டுமக்களுக்கு கூறவருகின்ற செய்தியாகும். முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலகவும் இராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர் இரத்னசிறி விக்கிரம நாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த அரசாங்கத்தின் விளக்கத்தை முன்வைத்தார். 18 விமானங்கள் நிர்மூலஞ்செய்யப்பட்டதாக ஐ.தே.க.வினர் கூறுவதை மறுதலித்த பிரதமர், 8 விமானங்கள் நிர்மூலமானதை ஒத்துக்கொண்டிருக்கிறார். விடுதலைபுலிகளுக்கு அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தோல்விகளின் விளைவாக இயக்க உறுப்பினர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்திருப்பதால் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக விரக்தியின் விளிம்பில் இத்தகையதொரு தாக்குதலை அவர்கள் நடத்த வேண்டியிருந்தது என்று குறிப்பிட்ட பிரதமர் விக்கிரமநாயக்க, விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் இராணுவத்தினருக்கு ஒரு தோல்வியேயல்ல என்றும் பிரகடனம் செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்தச் சம்பவத்தினால் அரசாங்கப் படைகளின் மனவலிமை குன்றிவிடவில்லையென்றும் எதிர்காலப் போர்த் தயாரிப்புக்கான பாடங்களை திங்கட்கிழமைய சம்பவங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியுமென்றும் குறிப்பிட்ட பிரதமர், விடுதலைபுலிகளை எதிர்த்துப் போராட சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

அரசாங்கமும் பிரதான எதிரணியும் தங்களது அரசியல் வியூகங்களுக்கு இசைவாக அமையக்கூடிய வகையிலேயே விமானப்படைத்தளம் மீதான தாக்குதலையும் அதன் பின்னரான நிலைவரங்களையும் வியாக்கியானம் செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. இருதரப்பினரதும் வாக்குவாதங்கள் போரின் பயனற்றதன்மை குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை மேலும் தவறாக வழி நடத்தும் நோக்கம் கொண்டவை. அரசாங்கம் கூறிவருவதைப் போன்று விடுதலைப் புலிகள் பலவீனமடையவில்லை என்று காட்டுவதற்கு ஐ.தே.க.வினர் முயற்சித்துக் கொண்டிருக்கும் அதேவேளை, சர்வதேச சமூகத்தின் வற்புறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற போரில் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகக் காண்பிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத் தரப்பினருக்கு இருக்கிறது. விமானப்படைத் தளத் தாக்குதல் சம்பவம் எதிர்கால போர் வியூகங்களுக்கு நல்ல பாடமாக அமைந்திருப்பதாகக் கூறும் பிரதமர், கால் நூற்றாண்டு காலமாகத் தொடருகின்ற போரில் இதுகால வரை பெற்ற அனுபவங்களில் இருந்து பெற்ற படிப்பினைகள் எவை என்பதை சிந்தித்துப்பார்க்கத் தவறிவிட்டார். இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதில் அக்கறை காட்டிவரும் அரசாங்கம், உலக ஒப்பாசாரத்துக்காக அண்மைக்காலமாக மேற்கொண்டுவந்த சர்வகட்சி மாநாட்டு செயன்முறைகளை மேலும் இழுத்தடிப்பதற்கு தற்போதைய சூழ்நிலையை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதிலும் சந்தேகமில்லை.

இதுவரை அதிகாரத்தில் இருந்த அரசாங்கங்கள் இராணுவ தீர்வை நோக்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமாக பெறமுடியாத வெற்றியை தங்களால் பெற்றுக்காட்ட முடியுமென்று சிங்கள மக்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் நம்பிக்கையூட்டிக் கொண்டிருக்கிறது. பொருளாதார நிலைவரம் உட்பட சகல முனைகளிலும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கம், அந்த நெருக்கடிகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்கு போர் ஒன்றை மாத்திரமே தற்போது நம்பி செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த போர் நடவடிக்கைகளில் காணப்படக்கூடிய எந்தவொரு பாரிய பின்னடைவும் அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக் குறியாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி: தினக்குரல்.காம்

Related Links: Tamilnet: Tributes to Black Tigers draw parallels between Anuradhapura mission and IPKF times ... Read More
Sri Lanka parades fallen Tigers’ naked bodies..Read More


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner