பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
அரசியல்! |
மீள்பிரசுரம்: தினக்குரல்.காம்!
போர்முனைப்பும் பௌச்சரின் விஜயமும்
தெற்காசியா
மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றிச்சட் பௌச்சர்
இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் இறுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்
இலங்கையில் நிலவும் கொந்தளிப்பு நிலைமையை அமெரிக்க நிர்வாகம் மிக உன்னிப்பாக
அவதானித்துக் கொண்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்றுவரும், துர்ப்பாக்கியமான
சம்பவங்கள் தமக்கு பெரிதும் கவலையளிப்பதாகவும், தெரிவித்தார். அரசாங்கம் ஆயுதக்
குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும், மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தினைப்
பேணிப்பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
மேலும், அவர் விடுதலைப்புலிகளை வெகுவாகச் சாடியதோடு, இலங்கை அரசாங்கம்
பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு சர்வதேச சமூகம் உதவி வழங்கும் எனவும் அறிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் நம்பகத்தன்மையானதொரு தீர்வுத் திட்டத்தினை
முன்வைக்காமல் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பது, கடினம் என முன்பு
இரண்டொரு தடவைகள் அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் கூறிவைத்தது வாசகர்களுக்கு
ஞாபகமிருக்கும். ஆனால், அரசாங்கமோ, அவ்வாறானதொரு தீர்வுத்திட்டத்தினை மேசையில்
வைக்காமல், இராணுவ முனைப்பையே தீவிரப்படுத்தி வருகிறது இதனை பௌச்சர் சரிவரப்
புரிந்து கொண்டதாக
அறிக்கைகள் புலப்படுத்தவில்லை.
ஏறத்தாழ 25 வருடங்களாக புலிகளைத் தோற்கடிக்கவென நடத்தப்பட்டு வந்துள்ள யுத்தம்
காரணமாக குறிப்பாக தமிழ் மக்கள் தான் தொடர்ச்சியான உயிர், உடைமை அழிப்புகளுக்கும்
அவல வாழ்க்கைக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். உண்மையில் விடுதலைப்புலிகள் இயக்கம்
தோற்றம் பெற்றதற்கே அரசு தமிழரை ஆரம்பகாலம் முதல் அழித்தொழிக்கத் தலைப்பட்டதே
காரணம் என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, பிரச்சினையை
மேலோட்டமாகப் பார்த்து விட்டு, "பட்ட காலிலே படும்" என்ற நிலைக்கு பாதிக்கப்பட்டு
அவதியுறும் மக்களைத் தள்ளிவிடக்கூடாது.
பௌச்சரின் யாழ். விஜயம்:
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பௌச்சர் அங்கே ஏராளமான கொலைகள், ஆட்கடத்தல்கள்
மற்றும் அச்சுறுத்தல்கள்
இடம்பெற்றுவரும் நிலையில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். பரவலாக நொந்து
போயிருக்கின்றனர் என்றெல்லாம் கூறியுள்ளார். 2002 ஆகஸ்ட் மாதம் யாழ்.
குடாநாட்டுக்கு முன்னாள் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் றிச்சட் ஆமிற்றேஜ்
விஜயம்
மேற்கொண்டிருந்தார். தான் உலங்கு வானூர்தியிலிருந்து குடாநாட்டைச் சுற்றிப் பார்த்த
போது, கீழே "இடிந்து போன பூமிப்பரப்பையே" காணக்கூடியதாயிருந்ததென ஆமிற்றேஜ்
அப்போது அறிவித்திருந்தார். அது போலவே பௌச்சர் தனது அண்மைய விஜயத்தின் போது இடிந்து
போனதொரு சமூகத்தையே கண்டதாக அவரின் கூற்று பிரதிபலிக்கிறது.
பிரித்தானிய பாராளுமன்ற விவாதம்:
இலங்கை இனப்பிரச்சினை மீது 02.05.2007 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில்
இடம்பெற்ற விவாதம் இங்கு பெரும்
சர்ச்சையைக் கிளப்பியதும் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளதும்
தெரிந்ததே. பிரித்தானியா புலிகளுக்கு நாட்டைப் பிரிக்க உதவுவதாக ஜே.வி.பி. யும்
அதேபோல், ஜாதிக ஹெல உறுமயவும் (ஜே.எச்.யூ.) குற்றஞ்சுமத்தியுள்ளன. வெளிநாட்டு
பாம்புகளை மடியில் போடும் சூழலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உருவாக்கி வருகின்றார் என
ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் சாடியிருந்தார்.
உண்மையில், ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாட்டுப் பாம்புகளையோ உள்நாட்டுப் பாம்புகளையோ
மடியில் போடத் தேவையில்லை.
அவற்றை எட்ட வைத்துக் கொண்டு நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு
இதய சுத்தியாக நீதியானதொரு தீர்வைக் காண வேண்டியது தான். ஜனாதிபதி சற்றும் காலம்
தாழ்த்தாமல் செய்ய வேண்டிய பணியாகும். 1950 கள் முதல் சிங்கள பேரினவாதம் போன்ற
பாம்புகளை ஆளும் வர்க்கத்தினர் மடியில் போட்டுக் கொண்டு தமிழரை அடக்கி ஒடுக்கி,
அந்நியப்படுத்தி, அழித்து ஒழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வந்ததை யாரும்
மறுத்துவிட முடியாது. ஆகையினாலேயே 3 தசாப்தங்களாக பொறுமை காத்து வேறு வழியின்றியே
தமிழர் ஆயுதம் ஏந்திப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் எனும் வரலாற்றினை எத்தனை
ஆயிரம் தடவைகள் சொல்வது?
ஜே.வி.பி. யின் கிளர்ச்சிகள்:
"கொலம்பட்ட கிரி, அப்பட்ட கயிக்கிரி" (கொழும்புக்கு வாழ்வு, எங்களுக்கு தாழ்வு)
எனும் சுலோகம் சொல்லி ஜே.வி.பி. 1971 இல் கிளர்ச்சி செய்தபோது ஆயிரக்கணக்கான சிங்கள
இளைஞர்களை சிறிமாவோ அரசாங்கம் சுட்டுப் பொசுக்கியது. 1988/89 இல் ஜே.வி.பி.
மீண்டும் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, பிரேமதாச அரசாங்கம் பல்லாயிரம்
இளைஞர்களை கொன்றொழித்தது. அதே ஜே.வி.பி. தான் அதிகாரப் பகிர்வு மூலம்
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதையே கடுமையாக எதிர்த்து நிற்கிறது.
பதுளை மொறத்தொட்டுவ விகாரையில் அமைச்சர் அநுரா பண்டாரநாயக்க அண்மையில் ஆற்றிய
உரையொன்றில் ஜே.வி.பி.யினர் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல முனைகின்றனர்
எனவும் அவர்கள் தேசத்துரோக மற்றும் சமூகத்துரோக நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்
எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜே.வி.பி.யை ஆளும் கூட்டணியோடு இணைப்பதற்கு
அன்று முன்னின்று உழைத்தது தனது பாரிய தவறு எனவும் அவர் குறிப்பிட்டார். உண்மையில்
சந்தர்ப்பவாத அரசியல் வாயிலாக இழைக்கப்படும் இவ்வாறான தவறுகள் கூட தேசத்துரோகச்
செயல் எனலாம்.
பாராளுமன்ற விவாதத்தில் ஷ்ரீ.ல.சு.க., பா.உ. விஜேதாச ராஜபக்ஷவும்
உரையாற்றியிருந்தார். பிரித்தானியா தமிழருக்கு மட்டும் குரல் கொடுப்பதை விடுத்து
இலங்கையில் எல்லா இனமக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்காக இதய சுத்தியான யோசனைகளைக்
கொண்டுவந்தால் நாம் ஏற்றுக் கொள்வோம் என அவர் தனதுரையில் கூறினார். விஜேதாச பொது
நிறுவனங்களுக்கான பாராளுமன்றக் குழு (இ?கஉ) தலைவர் என்ற ரீதியில் நாட்டில் எல்லா
மட்டங்களிலும் மலிந்து காணப்படும் ஊழல்களை அம்பலப்படுத்த பக்கச்சார்பின்றி
உழைப்பவர் என்பதோடு, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும் சற்று நிதானமான
நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பவர் என்பது
வரவேற்கத்தக்கதாகும். எனினும், தான் சார்ந்திருக்கும் சுதந்திரக்கட்சி
வெளிப்படுத்தியுள்ள தீர்வுத் திட்டமானது இதய சுத்தியானதா? நாட்டு நலன் கருதியதா?
சமாதானத்தினைக் கொண்டு வரவல்லதா? என்றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்த்திருக்கலாமே!
இச்சந்தர்ப்பத்தில் சுந்திரக்கட்சியின் தீர்வுத் திட்டம் தொடர்பாக "சமாதான சக
வாழ்வுக்கான முஸ்லிம் - தமிழ் மக்கள் கூட்டமைப்பு" ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு
எழுதியுள்ள திறந்த மடலிலிருந்து சில எண்ணங்களைப் பார்ப்போம்.
அதில் கூறப்பட்டிருப்பவை வருமாறு:"நீங்கள் முழுநாட்டுக்கும் ஜனாதிபதியே ஒழிய
ஒரு சிறு குழுவினரின் அரசியல் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர் அல்ல.
உங்கள் தீர்வுத்திட்டம் நீங்கள் மேற்கொண்டுள்ள ஒரு வீண் முயற்சியாகவே காண
முடிகிறது. அதில் வரலாற்று ரீதியான உணர்வோ நெகிழ்வுப் போக்கோ, ஐக்கிய இலங்கைக்கான
கண்ணோட்டமோ இல்லை. சிறுபான்மை இனங்களின் நலன்கள் அப்பட்டமாகப்
புறந்தள்ளப்பட்டுள்ளன. மிக பாதகமானதாகும். உதட்டளவில் அதிகாரப் பகிர்வும் மத்தியில்
சர்வ பலமுமே உள்ளடக்கப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இன்று பல
எதேச்சாதிகார சக்திகள் செயற்படும் நிலையில் மக்கள் அச்சத்தில்
அமிழ்த்தப்பட்டிருக்கின்றனர். ஜனநாயகமும் சமாதானமும் தான்
எமக்குத் தேவை. மாற்றுக் கருத்துக்களை நசுக்கி, பரந்துபட்ட சமூகங்களின் மீது
அட்டூழியங்கள் புரிந்து கொண்டிருந்தால் இவற்றை எட்டுவது பகற் கனவாகும். நாம் ஏனைய
மக்களுடன் சகோதரத்துவ நட்புணர்வோடு வாழ விரும்புகிறோம். எமக்குத் தேவை ஒரு நீதியான
தீர்வு. சுதந்திரக் கட்சியின் யோசனைகள் எமது நம்பிக்கைகளைச் சிதறடித்து விட்டன.
நீங்கள் குறுகிய கண்ணோட்டத்தினைக் களைந்துவிடுங்கள். நீதி, சமத்துவம் மற்றும்
சமாதானத்தில் பற்றுறுதி கொண்டிருந்தால் அதனைச் செயலில் காட்டுங்கள். எம்மை
மேன்மேலும் இரத்தக்களரிக்கல்லாது, நல்லிணக்கப்பாதைக்கு இட்டுச் செல்லுங்கள்".
இவற்றை ஆத்திரமூட்டும் கருத்துக்களாகக் கொள்ளாது ஆறு தசாப்தங்களாக வேதனைகளைச்
சுமந்து நிற்கும் மக்களின் உள்ளக் குமுறல்கள் என இனங்கண்டு மிக பொறுமையுடன்
பவ்வியமாக ஆராய்ந்து பரிகாரம் காண்பதே நல்லாட்சிக்கு வேண்டிய இலட்சணம் எனலாம்.
சென்றவாரம் அலரி மாளிகையில் புலமைப் பரிசில் வழங்கும் வைபவமொன்றில் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ஷ ஆற்றிய உரையில், பயங்கரவாதம் காரணமாக அதாவது குறிப்பாக விடுதலைப்புலிகளின்
அண்மைய வான் தாக்குதல் மத்தியில், மின்விசிறி, சுற்றும் சத்தம் கேட்கும் போது கூட
பிள்ளைகள் இரவில் வானத்தை பார்க்கின்றனர். பெற்றோர் மனம் வெதும்புகின்றனர்.
இப்பயங்கரவாத பிரச்சினையை
எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடாது. இன்று நாம் பயங்கரவாதத்திற்கு
உரிய மொழியில் பதிலளிப்பதால் மக்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றெல்லாம்
குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக வடக்கு கிழக்கில் "புக்காறா", "சுப்பசொனிக்" மற்றும் "மிக்" விமானங்கள்
தொடர்ச்சியாக குண்டுவீச்சு நடத்தியதால் பல
நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இரு உதாரணங்களை மட்டும்
குறிப்பிடுவோம். (1) நவாலி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சமடைந்திருந்த
போது இடம்பெற்ற குண்டுவீச்சில்
நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ ஆயிரம் பேர் காயப்பட்டனர்.
(2) நாகர்கோவில் பகுதியில் நடத்திய குண்டுவீச்சு அதில் 16 மாணவர்கள் வரை
கொல்லப்பட்டனர். இவை விடுதலைப்புலிகள் வான்படை அமைப்பதற்கு பல காலத்துக்கு முன்பு
இடம்பெற்ற சம்பவங்களாகும்.
யுத்தத்தில் வெற்றியீட்டலாம் என்ற மதிப்பீட்டிலேயே 1980 கள் முதல் குறிப்பாக
முன்னாள் அமைச்சர்கள் லலித் அத்துலத் முதலி, ரஞ்சன் விஜயரத்ன, அனுருத்த ரத்வத்த
ஆகியோர் செயற்பட்டனர். ஏற்கனவே, இராணுவத் தளபதிகளாக பதவி வகித்தவர்களாகிய சிறில்
ரணதுங்க, ஹமில்ற்றன் வனசிங்க ஆகியோர் பாதுகாப்பமைச்சு செயலாளர்களாகவும் பதவி
வகித்தனர். எனினும், யுத்தம் வெல்ல முடியாதது. (?ணி.தீடிண ஙிச்ணூ) என்று தான்
பல்வேறு மட்டங்களில் கருதப்பட்டு வந்தது. மறுபுறத்தில், யுத்தத்தில் வெற்றியீட்ட
முடியும் என இன்று அரச தரப்பில் எண்ணப்படுவதால், அதற்குரிய விலையையும் கடந்தகால
அனுபவங்களையும் சீர்தூக்கிப் பார்க்க
வேண்டிய அவசியத்தினை புறந்தள்ளிவிடுவது நல்லதல்ல.
இறுதியாக தமிழருக்கு நீதி செய்வதே பயங்கரவாதத்திற்கு எதிரான சிறந்த ஆயுதமென்று
ஜனாதிபதி சென்ற சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்ததை மீண்டுமொரு முறை
நினைவூட்டுவது சாலப் பொருத்தமாயிருக்கும் என எண்ணுகிறோம்.
தினக்குரல்:
http://www.thinakkural.com/news/2007/5/15/articles_page26849.htm |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|