தமிழ் பிரவாகத்தின் இலக்கியப் போட்டிகள் -
2008ன் முடிவுகள்!
மரபுக்
கவிதைப் பிரிவு, புதுக்கவிதைப் பிரிவு., கட்டுரைப் பிரிவு., சிறுகதைப் பிரிவு.,
நகைச் சுவைத் துணுக்கு ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. மரபுக்க்கவிதை பிரிவில்
முதலாம் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை. இப்போட்டிப் பிரிவில் நடுவராக
கடமையாற்றியவர் பெருமதிப்புக்குரிய திருவாளர். வி.சுப்ரமணியம் அவர்கள். முதலாம்
பரிசுக்கு யாரையும் தகுதியூடையவராக நடுவர் தேர்வு செய்யாததால் இரண்டாம் பரிசு
"தசாவதாரம் " என்ற மரபுக் கவிதையை எழுதிய திரு.எஸ்.ராஜரிஷி அவர்களுக்கு 1000.00
ரூபா பணமும், 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி
பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
புதுக்கவிதைப் பிரிவில் நடுவராக கடமையாற்றியவர் பெரு மதிப்புக்குரிய திரு ஆஸிப்
மீரான் அவர்கள். அவருடைய தேர்வின் படி முதலாம் பரிசு - "ஒரு பனைமரத்தின் கீழே "
என்ற கவிதையை அனுப்பிய திரு.ஆர்.நாகப்பன் அவர்களுக்கு.1500.00 ரூபா பணமும்,
1500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச்
சான்றிதழும் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசு - "காத்திருப்பின் வலிகள்" - என்ற
கவிதையை அனுப்பிய திரு கோகுலன். (நமது தமிழ் பிரவாகம் குழுமத்தைச் சேர்ந்தவர்.)
அவர்களுக்கு 1000.00 பணமும் 1000.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி
பதிப்பகத்தாரின் பரிசுச்
சான்றிதழும் வழங்கப்படுகிறது.
அத்துடன் புதுக் கவிதைப் பிரிவில் நடுவரான திரு.ஆஸிப் மீரான் அவர்கள் இரு
சிறப்புப் பரிசுகளை தனது சார்பில் அறிவித்திருக்கிறார்.
திரு ஆஸிப் மீரான் அவர்கள் வழங்கும் இரு சிறப்புப் பரிசுகளுக்கு உரியவர்கள் :
"இங்கு வாழ்கை வாங்க (விற்க)ப்படும்" என்ற புதுக் கவிதையை அனுப்பிய
திரு.சீனிவாசன் ஆளவந்தார் அவர்களுக்கு 500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக்
கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. "உன் கடந்த
காலத்தை உயிர் பெறச் செய்"என்ற புதுக் கவிதையை அனுப்பிய திரு. ரஞ்சித்ப்ரீத்தன்
அவர்களுக்கு பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச்
சான்றிதழும் வழங்கப்படுகிறது.
கட்டுரைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அன்புக்குரிய திருமதி
கீதா சாம்பசிவம் அம்மையாரும்,
மரியாதைக்குரிய பண்டிதர். திரு.வை.சண்முகராஜா அவர்களுமாவர். இப்பிரிவில்
நடுவர்களின் மதிப்பீடுகளின் படி
சிங்கப்பூரைச் சேர்ந்த திரு.ஜோதி பாரதி இராமலிங்கம் அவர்கள் எழுதிய "ஈழத்
தமிழரும் இந்திய அரசியலும்" என்ற கட்டுரை அதிக
மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஜோதி பாரதி இராமலிங்கம்
அவர்களுக்கு 2500.00 பணமும் 2500.00
பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும்
வழங்கப்படுகிறது.
திரு .கோகுலன் அவர்கள் எழுதிய "பெண்ணியம்" கட்டுரையும், திருமதி விசாலம் ராமன்
எழுதிய "இன்றைய சூழ்நிலையில் பணத்தின் ஆதிக்கத்தில் பாசம் மறைந்துவிட்டதா?
இல்லையா?" என்ற இரு கட்டுரைகளும் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருப்பதால் இரண்டாம்
பரிசு இருவருக்கும் உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும்
பகிர்ந்தளிக்கப்படும்.) இவர்கள் இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00
பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும்
வழங்கப்படுகிறது.
சிறுகதைப் போட்டிப் பிரிவில் நடுவர்களாக கடமையாற்றியவர்கள் பிரபல எழுத்தாளாரான
மதிப்புகுரிய திருவாளார். சுப்பிர பாரதி
மணியன் . சிநேகத்துக்குரிய படைப்பாளி திருவாளர் ரசிகவ் ஞானியார், அன்புக்குரிய
ஈழத்துப் படைப்பாளி செல்வி மாதுமை
சிவசுப்ரமணியம் அவர்களுமாவார்கள். நடுவர்கள் மூவரின் மதிப்பீடுகளின்படி திரு ஆதவா
சூர்யா அவர்கள் எழுதிய "ஏனெனத் தெரியாத கணங்கள்" என்ற சிறுகதை அதிக
மதிப்பெண்களைப் பெற்று முதல் பரிசுக்கு தேர்வாகிறது. திரு ஆதவா சூர்யா
அவர்களுக்கு 2500.00 ரூபா பணமும் 2500.00 பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய
பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
திரு .சுப்பு ராஜ் அவர்கள் எழுதிய "அங்கு மட்டுமா அந்த சுவர்? " என்ற
சிறுகதையும், திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள்
எழுதிய "பூத்த கொடி பூக்களின்றி" என்ற சிறுகதையும் சமமான மதிப்பெண்களைப்
பெற்றிருப்பதால் இரண்டாம் பரிசு இருவருக்கும்
உரியதாகின்றது. (பரிசுத் தொகை இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.) ஆகவே
இருவருக்கும் தலா 625.00 ரூபா பணமும் 625.00
பெறுமதியான புத்தகங்கள் வாங்கக் கூடிய பாரதி பதிப்பகத்தாரின் பரிசுச் சான்றிதழும்
வழங்கப்படுகிறது.
Chandra Selvakumaran
chandra1200@gmail.com
Homepage- http://www.selvakumaran.de/
Blog - http://manaosai.blogspot.com/ |