| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| கவிதை! |  
| ஆகஸ்டு - 15 (மொழிச் சித்திரம்) 
 - தாஜ் -
 
 
  
இன்றைக்கு மிட்டாய் கிடைக்கும் நாள்!
 பள்ளிக் கூடமும் இல்லை!
 கொடி மட்டும்தான் ஏத்துவாங்க
 பத்து மணிக்கு...
 போனா போதும்
 சின்னச் சின்ன
 மிட்டாய்தான் தருவாங்க
 அதுவும் கொஞ்சமா.
 
 காமராஜ் கடை வீதி..
 தியாகி கொடி மேடையெ
 கலர் தாளெல்லாம் ஒட்டி
 ராவோடு ராவா
 ஜோடனை செய்துட்டாங்க
 பார்க்க அழகா இருக்கு
 இன்னெக்கி அங்கே
 கொடியேதுவாங்க
 நிறைய மிட்டாய் தருவாங்க!
 
 நான்...
 காலெயிலெயே வந்துட்டேன்
 எம்பி.... இப்பத்தான் வந்தார்
 கொடியேற்றினார்
 பூ கொட்டியது
 தாயின் மணிக்கொடி பாடினோம்
 காத்து இல்ல
 கொடிப் பறக்கல!
 
 எம்பி பேசுறார்...
 கர கரன்னு
 ஏப்பம் விடுற மாதிரி.
 காந்தி.....
 வெள்ளைக்காரன்... என்கிறார்
 சொதந்திரம்...
 அம்பது வருசம்... என்கிறார்.
 நேற்று பள்ளிக் கூடத்திலெ
 என்னெ அடிச்ச
 அந்த தடியன் பெயரும்
 சொதந்திரம்தான்.
 அவர் பேசி முடித்ததும்தான்
 மிட்டாய்....
 புளிப்பு மிட்டாய்....
 இனிக்கும்.
 
 சின்னக் கடைவீதி
 மூத்திர சந்து...
 பஜனை மடத்திலும்
 கொடி ஏற்றுவாங்க.
 மண் மேலே
 வெள்ளையா ஒண்ணெ
 அங்கே இங்கே தூவி
 நாத்தத்தை மூடி மறைச்சிருப்பாங்க
 வீச்சம் தாங்காது.
 ஆனா அங்கே லட்டு!
 போன வருஷம் சாப்பிட்டது
 இன்னும் இனிக்குது.
 சீக்கிரம்....
 போனாதான் கிடைக்கும்.
 
 சத்தியா கெரகமெல்லாம் செஞ்சி
 பரங்கியனெ........
 விரட்டினோம்கிறார் எம்பி
 அதென்ன பரங்கியன்?
 தாத்தாவைத்தான் கேட்கணும்
 அவர் சொன்னாக்கூட புரியாது
 பல்லெல்லாம் விழுந்திடுச்சி
 அவர்தான் தெனைக்கும்
 பாரதமாதா...
 அலெகெ... பாடுவார்
 பூனெ கத்துர மாதிரி!
 மாசா மாசாம் அவருக்கு
 தியாகி பிஞ்சன் வருது.
 
 இன்னும் பேசுறார்.... எம்பி.....
 தேசியம்... மக்கள்...
 ஒத்துமைன்னு....
 ஒரு வருஷத்திலே
 மேலுக்குத் தேர்தல் வருதான்!
 எல்லோரும் பேசிகிறாங்க.
 மிட்டாயிலெ....
 ஈ மொய்ப்பது தெரியுது
 கொஞ்சமா
 கறுப்பா வேறே இருக்கு
 சக்கரை வெல ஏறியிருக்கும்.
 
 போன வருஷம்
 கொடி ஏற்றியவர்
 நல்லவர்
 சீக்கிரம் பேசி முடிச்சிட்டார்.
 கை நிறைய
 மிட்டாய் தந்தாங்க
 கண்ணாடிப் பேப்பரிலெ சுற்றிய
 பளபளப்பு மிட்டாய்.
 தம்பிகளுக்கும்
 தங்கச்சிப் பாப்பாவுக்கும்
 கொண்டுபோய் கொடுத்தேன்.
 இப்போ....
 ஜனகனமன அதிநாயக ஜயஹே....
 பாரத பாக்ய விதாதா...... ...
 
 satajdeen@gmail.com
 www.tamilpukkal.blogspot.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |