திரை மொழியை உருவாக்கிய இயக்குநர் ஹாங்காங் திரை
உலகின் முடிசூடா மன்னன் தான் Wong Kar Wai.
- சூர்யா (சென்னை) -
ஷாங்காயில்
பிறந்தது 17 ஜீலை 1958 . இவரது பெற்றோர்கள் இவருக்கு 5 வயது இருக்கும் போது
ஹாங்காகிற்கு இடம் பெயர்ந்தனர். ஷாங்காய் மொழியும் மேண்ட்ரின் மொழியும் மட்டுமே பேச
தெரிந்த இவர் காண்டனோசி பேசும் ஹாங்காங்கில் சிறிது சிரம்ப்பட்டார். தனது
ஆர்வத்தாலும் சிறுவயதில் தாயுடன் பல திரைப்ப்டங்களை பார்த்தே காண்டனோசி மொழியை
கற்று கொண்டார். 1980ல் பாலிடெக்னிக்கில் கிராபிக் டிசைனில் டிப்ளமோ முடித்தார்.
பிறகு ஹாங்காங் தொலைகாட்சியில் தயாரிப்பு சம்மந்தபட்ட
வேலைகளுக்கான வேலையில் சேர்ந்தார்ர் 1981ல் கதையாசிரியரானார்.
பேட்ரிக் டாமின் திரைப்படங்களுக்கு கதையாசிரியாக பணியாற்ற துவங்கினார். கடந்த 18
வருடங்களில் தன்க்கென ஒரு திரை
மொழியையே உருவாக்கி விட்டார் என்றால் அது மிகையாகாது..
இவரது திரைப்படங்களில் இசை ஒரு சிறப்பு. திரைப்படங்களுக்காக இசையா அல்லது இசைக்காக
நகரும் காட்சிகளா என்று
பிரித்து அறியாதபடியான ஒரு திரை அனுபவம் அது...
சிறு வயதில் ஹாங்காகின் தெருக்களில் தான் கேட்ட அனைத்து ஒரு வித வினோத இசையே தனது
திரைப்ப்டங்களில்
ஊடுருவி பார்ப்பவரின் உள்ளங்களின் ரீங்காரமிட வேண்டும் என்பதே தனது ஆசை என்கிறார்.
As Tears Go By
என்ற தனது முதல் திரைப்படத்தை 1988ல் இயக்கினார். 1994 ல் இயக்கிய
Chungking Express
திரைப்படத்திற்க்கு பிறகே இவரை திரும்பி பார்க்க ஆரம்பித்தது திரை உலகம். இரண்டு
போலீஸ்காரர்களின் வாழ்க்கை பற்றிய கதை. 223 என்ற எண்ணுள்ள போலீஸ்காரருக்கும் 663
என்ற எண்ணுள்ள போலிஸ்காரருக்கும் ஏற்பட்ட தனித்தனி காதல் அனுபவத்தை இருவரது கதையும்
ஒன்றாக கலந்திருப்பது போன்ற கதை.
இரண்டு காதல் கதைகள் என்ற மெலிதான உணர்வுகளை இந்த இருபதாம் நூற்றாண்டின் அதி வேக
வாழ்க்கை அமைப்பையும்
தன் மீது அன்பு செலுத்த யாராவது கிடைப்பார்களா என்று ஏங்குபவர்களாக இருப்பதை
வெளிப்படுத்துவதாக அமைந்த
திரைப்படம். பல பல புதிய உத்திகளையும் புதுமைகளையும் கையாண்ட விதம் அனைவரையும் அதிர
வைத்தது..
1997ல் எடுக்கப்பட்ட Happy Together
பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்ப்டம்.
இரு ஆண்களின் ஒரின சேர்க்கை பற்றிய காதல் கதையா அல்லது நட்பு பற்றியதா என்பதே
மிகப்பெரிய சர்ச்சை.. அவர்களுக்குள் உடல் ரீதியாகவும் உறவிருக்கிறது. ஆனால் ஒருவரை
ஒருவர் எப்படி புரிந்து கொண்டிருந்தார்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதே
மையம். இத்திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதை தட்டி
சென்றது..
In
the Mood for Love 2000 ஆண்டு வெளிவந்தது..
இவரின் திரைவாழ்வையே புரட்டி போட்டது. இதுவும் ஒரு காதல் கதைதான். சம்பிரதாய காதல்
அல்ல முற்றிலும் வித்தியாசமானது. அடுத்தடுத அடுக்குமாடி வீட்டில் குடியிருக்கும்
திருமணமான ஆனால் அந்நியரிடம் எந்த வகையான உறவு என்று பெயரிடப்படாத இரண்டு இளம்
ஜோடிகளின் காதல் கதை. தனிமையும் வாழ்க்கையின் வெறுமையும் அவர்களுக்குள் காதலை
எப்படி ஏற்படுத்துகிறது என்பதை இசையுடன் சேர்ந்த காவியம் என்று பார்த்தவரெல்லாம்
பாராட்டினார்கள்.
தான் எப்போதோ கேட்ட ஒரு பாடலின் முதல் வரிதான் இத்திரைப்ப்ட தலைப்பு என்கிறார்.
மற்க்க முடியாத இசையுடன் கூடிய அதன் அந்த பாடலையே ஒரு இசைக்காவியமாக படைத்துள்ளார்.
இசையும் ஒளிப்பதிவும் இத்திரைப்படத்திற்கு இரு கண்கள் போன்றது. திரைக்கதையே உயிர்.
ஒளிப்பதிவு கிறிஸ்டோபர் டாயல். இவரே இவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளர். ஆனால் இசை உலக
புகழ் பெற்ற மைக்கேல்
கலேசோ{ Michael Galasso }
இப்படத்த்தின் பின்னணி இசைக்கோர்வை மட்டும் தனியாக வெளியாகி அதுவே விற்பனையில் பல
ரெக்கார்டுகளை
ஏற்படுத்தியது..
காட்சியமைப்புகள் உடையமைப்பு மற்றும் கலை இயக்கம் எல்லாமே அற்புதம். உலக திரைப்படம்
வரலாற்றில் நீங்கா இடம்
பெற்றுவிட்ட ஒரு உன்னத படைப்பு.. இதுவும் உலகமெங்கும் பல விருதுகளை வாரி எடுத்து
வந்தது..
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகர், இயக்குநர் என்ற முக்கிய விருதுகளும்
ஹாங்காங் திரப்ப்ட விழாவில் ஏழு
விருதுகளும் கிடைத்தது..
My Blueberry Nights
இவரது மற்றுமொறு உன்னத படைப்பு.
இதுவும் எலிசபெத் என்ற பெண்ணின் வாழ்வில் புதைந்த காதல் கதைதான். இவரது முதல்
ஆங்கில திரைப்படம். பிரபல
ஆங்கில பாடகரும் பாடலாசிரியருமான Norah Jones நடித்தது. இத்திரைப்படமும் இவருக்கு
மிகப்பெரிய பெருமையை
தேடித்தந்தது. பல உலக திரைபட விழாக்களில் பங்கு பெற்றதுடன் விருதுகளையும் வென்றது.
இவரை பற்றிய மிகப்பெரிய ஆச்சரியம், இவர் தனது திரைப்ப்டங்களுக்கு கதையை யாரிடமும்
விவாதிக்கமாட்டாரம். அதிவிட ஆச்சரிய்ம திரைக்கதையை எழுதி கொள்ள்வே மாட்டாராம்.
அவ்வப்போது உருவாக்குவதுடன் நடிகர்களிடம் சிறு
அறிமுகத்தோடு நடிக்க வேண்டிய காட்சிகளை பற்றி மட்டுமே கூறுவாராம்.
எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுப்போது போன்றே இருக்கும் என்று நடிகர்கள்
குழம்புவதுடன் இவரை கேலி
பேசியவர்களும் உண்டு. ஆனால் திரைப்ப்டம் முடிந்ததும் ஒரு கவிதையாக
சித்தரிக்கப்ப்ட்டுள்ளதை பார்த்து அவர்களே வியந்து
போனார்களாம்.
இவரது வித்தியாசமான இய்க்கம் புரிந்தவர்கள் என்பதால் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட
நடிகர்களையே தனது அனைத்து
திரைப்ப்டத்திலும் பயன்படுத்துகிறார். மீண்டும் மீண்டும் பார்த்த முகங்களானாலும்
தனது வித்தியாசமான கதையானாலும்
காட்சியமைப்பாலும் வியந்து பாராட்டும் அளவிற்கு மாற்றியமைத்து விடுகிறார்.
இவர், நேரடியகாக கதை சொல்வதைவிட கதைக்கான மனநிலையை ஒளிப்பதிவும் இசையும் கலந்த
லயத்தோடு கவிதை போல பதிவு செய்வதாலேயே மற்ற திரைப்ப்டங்களிலிருந்து எப்போதும் தன்னை
நிலை நாட்டுகிறார்.
ஒவ்வொரு திரைக்கதைக்கும் முன்னும் மனித உறவுகள் குறித்த ஆழ்ந்த பரிசோதனையை
மேற்கொண்டு குறிப்பாக இந்த
பரபரப்பான அதிவேக உலகின் மக்கள் எப்படி அன்புக்காக ஏங்குகிறார்கள் என்பதை தனக்கே
உரிய பாணியில் பதிவு செய்கிறார்.
தனிமையும் வெறுமையும் எப்படி எதிர்பாலரிடம் நட்பாக ஆரம்பித்து தொடரவும் முடியாமல்
விடுபடவும் இயலாமல் சிக்கி
தவிக்கின்றனர் என்பதை இசையுடன் படைக்கும் போது அனைவரின் உள்ள்த்தில் எங்கோ
ஒட்டியிருக்கும் தன் பழைய அதீத நட்பையோ காதலையோ கிளறச்செய்து விடுகிறது.
நுகர்வோர் கலாச்சாரமும் உலகமயமாக்கலும் குடும்ப அமைப்புகளை சிறுக சிறுக மெல்ல
சிதைந்து வருவதையும்
இளைஞர்களும் யுவதிகளும் சதா கேளிக்கைகளிலும் பால் உணர்வு சார்ந்த நாட்டங்களிலும்
ஈடுபடுவதையும் அதுவும் ஒருவித பழக்கமாகவும் மாறி வருவதை துல்லியமாக
சித்தரிக்கிறார்.
ஹாங்காங்கில் மட்டுமல்ல எத்தனையோ புராதன அழிக்க முடியாது என்று நாமெல்லாம் நம்பி
கொண்டிருக்கிற
மிகப்பழ்மையான இந்திய கலாச்சாரத்திற்கும் இவரது படைப்புகள் பொருந்துவதென்றால் இவரை
தன்க்கென தனி மொழியை
உருவாக்கிய உலக இயக்குநர் என்றும் கூறுவதும் சாலவும் பொருந்தும்.
butterflysurya@gmail.com |