இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2008! இதழ் 99!  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!
மீள்பிரசுரம்: தினமணி.காம் http://www.dinamani.com!
எழுத்தாளர் சுஜாதா மறைவு!

எழுத்தாளர் சுஜாதாசென்னை, பிப். 28: தமிழகத்தின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா என்கிற எஸ். ரங்கராஜன், சென்னையில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 73. பொறியியல் பட்டதாரி... பெங்களூரில் உள்ள மத்திய அரசின் பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பொறியாளராகப் பணியாற்றினார். வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கினார். ஸ்ரீரங்கத்தில் பிறந்த அவர், சென்னை எம்.ஐ.டி.யில் பொறியியல் பட்டம் பெற்றவர். தமிழ் உரைநடை வரலாற்றில் பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோரைப் போலவே சுஜாதாவின் உரைநடையும் ஒரு மைல்கல்.

"தினமணி கதிர்', "குமுதம்' ஆகிய வெகுஜன பத்திரிகைகள் மூலம் லட்சக்கணக்கான வாசகர்களை விசிறிகளாக பெற்றவர். அதேசமயம், தீவிரமான சிற்றிதழ்களிலும் தனது படைப்புகளை அளித்து தமிழ் இலக்கியத்துக்கு முக்கிய பங்களித்தவர். குறிப்பாக மூத்த பத்திரிகையாளரும், "தினமணி' முன்னாள் ஆசிரியருமான கஸ்தூரி ரங்கன் நடத்திய கணையாழி சிற்றிதழில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கடைசி பக்கத்தை மிக சுவாரஸ்யமாக எழுதியவர். ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் அப்பகுதியில் அவர் எழுதியவை அன்றைய இளம் தலைமுறையினரை பெரிதும் கவர்ந்தன.

ஜேம்ஸ் ஹார்ட்லி சேஸ், ஹாரால்டு ராபின்ஸ் போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் மயக்கத்தில் கிடந்த இளம் தலைமுறையை தன்
எழுத்தால் தமிழின் பால் ஈர்த்தவர். நவீன தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க பல சிறுகதைகளை எழுதியவர் எழுத்தாளர் சுஜாதா. அவற்றில் குறிப்பிடத்தக்கது, ஸ்ரீரங்கத்து தேவதைகள் தொகுப்பு.

70-களில் சிற்றிலக்கிய இளைஞர்கள் குழு ஒன்று தொகுத்த குருஷேத்ரம் தொகுப்பில் வெளியான "தனிமை கொண்டு' என்ற சிறுகதை பின்னாளில் குமுதத்தில் நைலான் கயிறு நாவலாக விரிந்து, அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது. 70-களில் சிற்றிலக்கிய இளைஞர்கள் குழு ஒன்று தொகுத்த குருஷேத்ரம் தொகுப்பில் வெளியான "தனிமை கொண்டு' என்ற சிறுகதை பின்னாளில் குமுதத்தில் நைலான் கயிறு நாவலாக விரிந்து, அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தது.  தமிழ் உரைநடையில் நகைச்சுவையை அதன் உயர்ந்த எல்லைகளுக்கு கொண்டு சென்றவர் சுஜாதா என்றால் அது மிகையில்லை. (அவரது "மாமா விஜயம்' என்ற சிறுகதையை படித்துப் பாருங்கள்...)  அறிவியல் புனை கதைகள்... அறிவியல் புனை கதைகளை தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஜாதா. கணேஷ்-வசந்த் என்ற கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்த பாத்திரங்களை மையப்படுத்தி கதைகள் எழுதினார்.

அரசர் காலத்தை நவீன காலத்தோடு ஒப்பிட்டு, அவர் எழுதிய சிறுகதைப் தொகுப்பில் நகைச்சுவையும், உண்மைத் தகவல்களும்
இழையோடும்.

திரைப்படத் துறையில்... பொறியாளர், எழுத்தாளர் என தொட்ட துறைகளில் எல்லாம் முத்திரை பதித்தார் சுஜாதா. இதைத் தொடர்ந்து, திரைப்படத் துறையில் கால் பதித்தார். நடிகர் கமலுடன் இணைந்து, விக்ரம் படத்தில் பணியாற்றினார். அந்தப் படத்தில் கதை - வசனம் எழுதினார்.

இதைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். தான் வசனம் எழுதிய
திரைப்படங்களில் தனி பாணியை கையாண்டார் சுஜாதா. நீண்ட வசனம் என்பதை உடைத்து, நறுக்கு தெரித்தாற் போல இரண்டே
வரிகளில் வசனம் எழுதினார். இது, அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

எழுத்தாளர் சுஜாதாஉடல் நலக்குறைவு: பல்வேறு தளங்களிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றிய எழுத்தாளர் சுஜாதா கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. சில நாள்களாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், புதன்கிழமை இரவு உடல் நிலை மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு 9 மணிக்கு காலமானார். அவருக்கு சுஜாதா என்ற மனைவியும், கேசவ பிரசாத், ரங்கா பிரசாத் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர்.

நன்றி: தினமணி.காம்

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner