| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| இலக்கியம்! |  
| சுஜாதாவோடு.., 
 - சுப்ரபாரதிமணியன் -
 
 
   இலக்கியமும், 
  வாசிப்பும் வாழ்க்கையில் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்கி விடுவதை 
  உணர்ந்திருக்கிறேன்.பெங்களூர் பனசங்கரி பகுதியில் சுஜாதா அவர்களை அலுவலக வேலை 
  முடிந்து களைத்துப் போய் வருகிற மனிதரிடம் எதையும் உரையாடலாகப் பெற்று விட 
  முடியாது என்று நினைக்கிற மாலை வேளைகளில் சந்தித்தபோதெல்லாம்து இலக்கியம் குறித்த 
  உரையாடல் சோர்வை அர்த்தமில்லாமல் ஆக்குவதை அறிந்து கொண்டேன். எண்பதுகளின் மத்தியில் அந்தச் 
  சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. அலுவலகத்தில்
 அவர் ரங்கராஜந்ன்தான் என்பதை வேணுகோபால், மார்சல் போன்ற அங்கு பணி புரியும் 
  நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.அவரின்
 குடியிருப்பு பெங்களூரிலிருந்து ஒதுங்கின அத்துவான் வெளி போன்றிருந்தது. 
  அப்போதெல்லாம் அவரை சந்திக்க வருகிறவர்களை
 உற்சாகமாகவே எதிர் கொண்ட மனிதர் அவர்.
 
 ஆரம்ப சந்திப்புகளில் அவரின் பேச்சு பெரும்பாலும் கவிதை குறித்துதான் அதிகம் 
  இருந்திருக்கிறது. கலாப்பிர்யா, கல்யாண்ஜி,
 பூமாஈஸ்வரமூர்த்தி என்று பேச்சு அலையும். ( எழுதறப்போ வுழுற நிழல் எழுதறதெத் 
  தடுக்குதுன்னு பூமா சொல்றார் பாருங்கோ அது
 வாழ்க்கையோட படிமம்-சுஜாதா ) சுஜாதாவுடனான சந்திப்புகளை வண்ணாதாசனிடம் 
  கடிதங்களில் பரிமாறும்போது " எனக்காக அவ்ர்
 ஒரு campaign தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது" 
  என்று குறிப்பிட்டிருக்கிறார்.கவிதை, கவிதை,
 நவீன கவிதை .. சுலபமாக மனதிலிருந்து பிரவகிக்கும் நவீன கவிதையின் வெளிக்கோடுகளை 
  காட்டிக் கொண்டே இருப்பார்.
 
 
  முதுகலை 
  முடித்து வேலையில்லாமல் இருந்த ஒரு நாளில் கோவையில் விஜயா பதிப்பகம் வேலயுதம் 
  அண்ணாச்சி நடத்திய புத்தகத் திருவிழாவில் அவருக்கு திரைப்பட நடிகர் மாதிரி 
  நட்சத்திர அந்தஸ்து. ஆட்டோகிராப் வாங்க பெரும் கூட்டம். ஏதாவது புத்தகத்தில்தன் 
  கையெழுத்திடுவேன் என்ற அவரின் கட்டாயம். நான் வண்ணநிலவனின் " கம்பாநதி " 
  வாங்கினேன். கையெழுத்திட்டு கொடுத்தார்." படிச்சிட்டேன். நல்ல நாவல். வண்ண நிலவன் 
  தேர்ந்த எழுத்தாளர். " என்றார். அரசு கலைகல்லூரிக்கிகு பின்னாலான முருகன் 
  லாட்ஜில் சந்தித்தேன். வானம்பாடிக்கவிஞர்களுடன் அவருக்கு நல்ல நட்பு இருந்தது. 
  மேத்தா, சிற்பி, புவியரசு, சி ஆர் ரவீந்திரன் என்ற அவருடன் அளாவளாவ ஒரு கூட்டம் இருந்தது. அவர்களைப்பற்றியெல்லாம் 
  கணையாளியின் கடைசிப்பக்கங்களில்
 எழுதிக்கொண்டே இருந்தார்.பலருக்கு அறிமுகப்படுத்தின'ர். அவரின் தொடர்கதைகளில் 
  எங்காவது புவியரசின் " காற்றூ" இதழ் பர்றி
 எழுதுவார். சிற்பியின் சிறுவர் கவிதைகள் பற்றி எழுதுவார். சி ஆர் ரவீந்திரனின் 
  கொங்குக் கதைகள் பற்றி எழுதுவார்.
 
 " நாலு பேரும் பதினைந்து கதைகளும் " என்றொரு தொகுப்பினை கவிஞர் மீரா அன்னம் 
  பதிப்பாகக் கொண்டு வந்திருந்தார்.எனது ,
 நந்தலாலா, கார்த்திகா ராஜ்குமார், பிரியதர்சன் ஆகிய நண்பர்களின் பதினைந்து 
  கதைகளுடன் அதிலிருந்தன. ஆதிமூமூலத்தின்
 மாகாராஜா அட்டைப்படம்-ஸ்கிரீன் பிரிண்டிங் - அவரை மிகவும் பாதித்தது. அதைப்பற்றி 
  சிலாகித்துக் கொண்டே இருப்பார். அத்தொகுப்பு
 வெளிவந்த காலத்தில் கணையாழில் எழுதுவதை அவர் நிறுத்தியிருந்தார்.ஹைதராபாத் DRDL 
  க்கு அலுவலகப் பணிக்காக வந்தவரை விடுதியில் காலை நேரத்தில் சந்தித்தேன். 
  கணையாழியில் அசோகமித்திரன் எழுதிய குறிப்பொன்று அவரைக் காயப்படுத்தியதால்
 கணையாழியின் கடைசிப்பக்கங்களில் எழுதுவதை நிறுத்தியிருந்தார். " இத்தொகுப்பு 
  பற்றி கணையாழியின் கடைசிப்பக்கங்களில் நான்
 எழுத முடியாமைக்கு வருத்தம்." என்றார். " இதில் உங்க கவுண்டர் கிளப் மாஸ்டர் பீஸ் 
  "" என்றார்.
 
 செகந்திராபாத் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்தபோது உடனே ஒத்துக் கொண்டார். 
  இரண்டாம் வகுப்பு டிக்கட் தான் எடுக்க
 முடியும். பரவாயில்லை என்றார் குடும்பத்தோடு வந்தார். செகந்திராபாத் சரோஜினி தேவி 
  சாலையில் ஒரு சுமாரான விடுதி. முகம் சுளிக்கவில்லை. மகன்களுடன் சார்மினார், 
  கோல்கொண்டா என்று அலைந்தார். ஒரு நாள் இரவு பெல் தொழிற்பேட்டை கூட்டத்தில் பேசி 
  விட்டு திரும்பினோம். இரவு பதினோரு மணி . சாப்பாடு கிடைக்கவில்லை. மகன்கள் 
  பானிபூரி, பேல்பூரி என்று சாப்பிட்டார்கள். முகம் சுளித்தார்கள். சுஜாதா சாப்பாடு 
  கிடைக்காதது பற்றி முகம் சுளிக்கவேயில்லை. சாதாரண விடுதி. இரண்டாம் வகுப்பு 
  டிக்கட் என்னை உறுத்திக்கொண்டே இருந்த்து. அவர் வெளிக்காட்டவே இல்லை.
 
 " வர்ரப்போ ரயில்லே ஏறி படுத்து நல்லா தூங்கினேன். லாட்ஜ்லே அப்படித்தா தூக்கம். 
  நல்ல ரெஸ்ட் " என்று சொல்லிக் கொண்டே
 இருந்தார். புகை வண்டியை விட்டு இறங்கியதும் அன்றைய உலகக் கிரிக்கெட்டு 
  பந்தயத்தின் ஸ்கோர் கேட்டார். எனக்கு கிரிக்கெட்டில்
 ஆர்வமில்லை. வருத்தமாக உணர்ந்தேன். பல வருடங்களாய் பர்ஸ் வைத்துக் கொள்கிற 
  பழ்க்கம் எனக்கில்லாமல் இருந்தது.
 செகந்திராபாத்தில் நான் பேண்ட் பாக்கெட்டில் இருந்து பணம் எடுத்ததை கவனித்த ஒரு 
  முறை
 
 " உங்களுக்கு மொதல்லே ஒரு பர்ஸ் வாங்கித் தரணும்' என்றார். அப்போது " அன்னம் விடு 
  தூது முதல் இதழ் வெளிவந்திருந்தது."
 மீராவிடம் ரொம்பவும் எதிர்பார்த்தேன். ஏமாற்றம் என்றார். ( ஆனால் பின்னால் வந்த 
  இதழ்கள் ஒரு வகையில் அவருக்கு
 ஏமாற்றத்தைத் தவித்திருக்கலாம்.. அதில் வந்த எனது " ஒவ்வொரு 
  ராஜகுமாரிகளுக்குள்ளும் " கதை பற்றி பின்னொரு சமயத்தில்
 வெகுவாகப் பாராட்டினார்.) செகந்திராபாத் வீதிகளில் செல்கிறபோது அசோகமித்திரனின் 
  படைப்புகளைப்பற்றி விரிவாகப் பேசினார்.
 எனது முதல் சிறுகதித் தொகுப்பு " அப்பா " விற்கு அவரிடம் முன்னுரை கேட்டேன். 
  நர்மதா வெளியீடு. சற்று தாமதம்
 என்றாலும் நீண்ட முன்னுரை . கணிணியில் அடித்து அனுப்பியிருந்தார். கணிணி பிரதியை 
  ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். 25 பக்க நீண்ட முன்னுரை. அந்த கால 
  கட்டத்தில் அவர் எழுதிய நீண்ட முன்னுரை .Narrative பற்றின நீண்ட விரிவு கொண்ட 
  முன்னுரை. தொகுப்பின் சிறப்பம்சமாக அந்த முன்னுரை இருந்தது. நவீன கவிதை பற்றி 
  பேசிக்கொண்டேயிருப்பார். அவை வெறும் விபரச் செய்திகளாகப் போய்விடக்கூடாது என்பது 
  சங்கடமாக இருக்கும். " on poetry பற்றிஎழுதுங்கள் என்றேன்.திருப்பூரிலிருந்து
 நண்பர்கள் இருவருடன் ஆரம்பித்த ஆல்பா பதிப்பக " 12 நெடுங்கவிதைகள் " தொகுப்பை 
  அவரிடம் கொடுத்து அந்த வேண்டுகோளை வைத்தேன். " ஆல்பாவில்" வெளியிடக் கேட்டேன்..
 
 குமூதம் ஆசிரியராக அவர் இருந்த போது, குமுதம் ஏர் இண்டியா நடத்திய இலக்கியப் 
  போட்டியில் எனது குறுநாவல் " நகரம் 90 "
 ஹைதாராபாத் பற்றினது பரிசு பெற்றது. வண்ணநிலவன் நடுவராக இருந்தார் எனக் 
  கேள்விப்பப்ட்டேன்.பரிசாக 45 நாட்கள்
 இங்கிலாந்து,அய்ரோப்பியா பயணம் சென்று வந்த பின் அந்த அனுபவத்தினை கட்டுரையாக 
  எழுதிய போது குமுதம் ஆசிரியராக அவர் இல்லை.மாலன் அமர்த்தப்பட்டிருந்தார். குமுதம் 
  ஏர்இண்டியா பரிசளிப்பு மேடையில் உற்சாகமாகப் பேசினார்.
 
 " கவண்டர் கிளப் குறுநாவலுக்குப் பிறகு உங்களதிலே நகரம் 90 புடிச்சிருந்துச்சு"
 
 இன்னொருமுறை சென்னையில் பார்த்தபோது பெங்களூர் எழுத்தாளர் ரவிச்சந்திரனைப் பற்றி 
  வெகுவாகப் பேசினோம். " கடைசியா
 நீங்கதா செகந்திராபாத்திலெ பாத்ததா சொல்றங்க. CBI கார்த்திகேயன் நண்பர். 
  அவர்கிட்ட சொல்லி புலனாய்வூ பண்ண முடியுமான்னு
 பார்க்க்றேன். " ரவிச்சந்திரன் மறைந்தே போய் விட்டார். பரபரப்பான மனிதர். 
  சுவடற்றுப் போய்விட்டா.சுஜாதாவின் எழுத்து நடை
 வžகரிப்பால் அதையே தனது நடையாக்கிக் கொண்ட கோவையைச் சார்ந்ந்தவர். " காற்றில் 
  அலையும் சிறகு "என்ற எனது சிறுகதை
 அவர் பற்றியது உறுத்திக் கொண்டே இருக்கிறது.
 
 காவ்யா பதிப்பகம் " நானும் எழுத்தும் " என்ற தலைப்பில் பல முக்கிய எழுத்தாளர்களை 
  வைத்து கூட்டங்களை நடழ்த்தியது. (
 சுஜாதாவின் முக்கியமான சில பேட்டிகள் , கட்டுரைகளைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க 
  புத்தகத்தை காவியா சண்முக சுந்தரம் கொண்டு
 வந்திருந்தார்) சுஜாதா காவ்யாவின் அண்ணாசாலைக் கூட்டமொன்றில் " நானும் என் 
  எழுத்தும் " என்ற தலைப்பில் ஒரு
 சுவாரஸ்யமான கட்டுரை படித்தார். அது தமிழின் பெரும்பான்மையான்ன வெகுஜன இதழ்களில் 
  விரிவாக இடம் பெற்றது. அக்கூட்டத்திலிருந்து அவர் கிளம்பும்போது வணக்கம் சொல்லி 
  விடைபெற்றேன். " பிறகு பார்க்கலாம்" என்றார். பத்திற்க்கும் மேற்பட்ட அவரின் 
  சந்திப்புகளில் அவ்வார்த்தைகளை அவர் அதற்கு முன் சொன்னதில்லை என்றுதான் எனக்குள் 
  சொல்லிக்
 கொண்டிருக்கிறேன். அது கடை சந்திப்பு.
 
 அதன் பின்னான ஒரு கணிணி உரையாடலில் மரணம் பற்றித்தான் அவரிடம் கேட்டேன். ( on 
  chat ) கவிஞர் மகுடேஸ்வரன்
 அவருடன் கணிணிஉரையாடலில் வாரந்தோறும் கலந்து கொள்வார்." மரணம் உங்களைத் 
  துரத்தியிருக்கிறது, மரணம் பற்றி எழுத
 வேண்டும் என்று நினைக்கிறிர்களா"
 
 பதில்: " அப்படித் தோன்றவில்லை. மரண்ம் இயல்பானது. "
 
 தொண்ணூறுகளில் அவர் இதய நோயால் அவதிப்பட்டார். பெங்களூரில் இருந்த சமயம். 
  ரவிச்சந்திரனின் தொடர்ச்சியானக்
 கடிதங்கள் அவரின் உடல் நிலை பற்றி இருக்கும். " தயவு செய்து தொலைபேசியலோ, 
  கடிதத்திலோ அவரின் உடல் நிலை பற்ரி கேட்டு
 விடாதீர்கள். சுய அனுதாபம், விசாரிப்பு இதையெல்லாம் அவர் வெறுப்பவர். "
 
 அப்போது வைத்திய சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல் நிலை தேறி வருவதைப் பற்றி 
  இப்படி குறிப்பிட்ட்டிருந்தார். "
 ரொம்பவும் பிரகாசமாக இருக்கீங்க சார் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் : அணையப் 
  போற விளக்குடா. அது அப்படித்தாண்டா
 பிரகாசமா இருக்கும். " என்னை அக்கடிதம் மிகவும் பாதித்தது. தமிழ் உரைநடையில் 
  பிரகாசமாய் புதுப்பாதையை அமைத்த சுஜாதா
 இந்தத் தலைமுறை எழுத்தின் புதுத் தடமாக இருப்பவர். கணிணியும், விஞ்ஞானமும், 
  நவகவிதையுமாக புதுத்தலைமுறை
 இளைஞர்களுக்கு புது வெளிச்சம் தான் அவர் .
 
 subrabharathi@gmail.com
 |  
| 
 |  
| ©   
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |