நேருக்கு நேர்!
- சுப்ரபாரதிமணியன் -
உலகப்புகழ்
பெற்ற இயக்குனர் பெர்க்மென் தன் "நேருக்கு நேர்" படத் தயாரிப்பிற்கு முன் தன் சக
நடிக, நடிகைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் எழுதிய கடிதம்: அன்புள்ள சக தொழிலாளிகளே!
இப்போது நாம் எடுக்கப்போகும் படம் ஒரு வகையில் ஒரு தற்கொலை முயற்சி பற்றியது.
வழக்கமாக நான் சொல்வதுபோல், இது வாழ்க்கை, காதல், சாவு பற்றி பேசுகிறது. காரணம்
உண்மையில் எதுவுமே முக்கியமில்லை. கவலைப்பட, மகிழ்ச்சி கொள்ள என்று மட்டும்.
ஒருவர் நான் இந்த படக்கதையை ஏன் எழுதினேன் என்று நேர்மையுடன் கேட்டால் என்னால்
மிகச்சரியான பதிலை சொல்ல முடியாது. தற்சமயம் கொஞ்ச காலமாக ஒருவகையான கண்ணுக்குப்
புலனாகாத எதிர்பாராத் தன்மையான ஆவலுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பல்வலி
கொண்டிருக்கிற ஒருவனின் பல்லிலோ, அவனிலோ எந்த விவரமான குறையைக் காண இயலாத டாக்டரின்
செயல் போலத்தான். என் ஆவலுக்கு பல பெயர்களைக் கொடுத்து நான் அவை பற்றி நிதானமான
ஆய்விற்குட்படுத்தவேண்டிய ஆரம்பத்தை முடிவு செய்துள்ளேன்.
இன்னொரு மனிதனின் அரிதான மாற்றங்கள் எனக்கு உதவியாக வந்துள்ளன.அவனுடைய
அனுபவங்களும், எனது அனுபவங்களிலும் சில ஒற்றுமையைப் பார்க்கிறேன், அவனின் சூழ்நிலை
வெளிப்படையான தெளிவாகவும், இன்னும் வேதனையைத் தருவதாகவும் இருப்பதுவித்தியாசமாக
இருக்கிறது.
இந்தவகையில்
இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு வடிவம் எடுத்துக் கொள்ள முனைகிறது.
திறமையான, சகஜமான ஒரு சுய கட்டுப்பாடு கொண்ட நன்குபடித்தபெண் சகதொழிலாளி டாக்டர்
ஒருவரை மணந்து கொள்கிறாள்.(அவளைச் சுற்றி நன்மைகளே சூழ்ந்திருக்க) இந்தப்
பாத்திரத்தின் அதிர்ச்சியான நிலை தடுமாற்றத்தையும், வேதனையான மறுபிறப்பையும் நான்
சொல்ல முயற்சித்திருக்கிறேன். எனக்கு தெரிந்த வரையிலான வகையில் இந்தச் žரழிவு
நிலையின் காரணங்களையும், பின்னால் கிடைக்கக்கூடிய சாத்தியங்களை எதிர்கால நிலையிலும்
காட்டி இருக்கிறேன்.
என் பங்கில் இந்த மாற்றத்தினால் நான் பெரிதும் பயன்பட்டிருக்கிறேன். இந்த அவஸ்த்தை
ஆரம்பத்தில் பரவி, பின் குறைந்த ஒரு பெயரையும், விலாசத்தையும் ஏற்படுத்திக்
கொள்கிறது. ஆகவே அதன் உன்னதங்களையும், உள்ளங்களையும் இழக்கிறது.
இந்த அரிய முயற்சி வேறொருவருக்கு இதேவகையான பயன்பாடாக இருந்தால் விளைவு
பிரயோஜனமில்லாமல் இருக்கும்.
இறுக்கமன புன்னகையுடனோ, விஷமமான புன்னகையுடனோ தூர அல்லது நெருங்கிய பரிச்சயத்தை
அங்கீகரிப்பது எந்த வகையிலும் மோசமானதல்ல, என்பதும் அது ஒப்பீட்டளவில் பலத்தைத்
தரும் வகையில் ஒருவனின் சிறப்பியல்புகள் மற்றவனின் துரதிஷ்டத்துடன்
அளவிட முடியும்.
அல்லது உண்மையில் சில மணிநேரங்களுக்கு ஒருவனைச் சந்தோஷப்படுத்துவது என்பது எந்த
வகையில் தீங்கானது? சோகத்தையும், நாடத் தன்மையையும், கேளிக்கைச் சம்பவங்களையும்
வெளிப்படுத்தும் அழகான, திறமையான நடிகர்கள் எப்படிச் சிரமங்களை சந்தித்தாலும், வலி
எப்படியாயினும் எப்போதும் கேளிக்கை மூலம் சந்தோஷப்படுதுகிறார்கள். இன்னொரு
விதத்தில் அலுப்போ,
மாறுபடுத்தலோ மோசமான வகையில் திரைப்பட முயற்சியாளரைப் பாதிக்கிறது. பொது மக்களிடம்
கேலியாக்கப்படுவதும் அவமானத்திற்கு உள்ளாவதும் பொருளாதாரச் சிரமங்களுக்கு
உள்ளாவதும் இந்த வகையில் சரியானதே.
இதற்கு மேல் நான் என்ன சொல்ல?
இந்தப் புத்தகத்தின் கனத்தைக் காண்கையில் இது ஒரு நீளமான சினிமாவாக இருக்கக்கூடும்.
இது முடிவடையும் போது பல
கிலோமீட்டர்கள் நீளம் இருக்கும். இதைச் சுருக்க முயன்று தோல்வி அடைந்தேன். ஒவ்வொரு
விஷயத்திற்கும் அதன் அளவென்று உண்டு. என் கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலும்,
பேச்சிலும், அவற்றின் இயக்கத்திலும் நான் எச்சரிக்கையாக
இருக்கக்கற்றுக்கொண்டுவிட்டேன் ஒத்திகையின் போது தெளிவற்ற தேவையற்றதான விஷயங்களைக்
குறிப்பாக எப்போதும் கண்டு பிடிக்கிறோம்.
இரண்டாவது பாகம் காட்சித் தன்மையின் சிறப்புடனும், கனவுகள் யதார்தத்தைவிட
நிஜமாகவும் இருக்கிறது. எனக்குக் கனவுகள்,
தோற்றங்கள், பார்வை வெளிப்பாடுகள் பற்றின வெகு சந்தேகங்கள் இலக்கியத்திலும்,
சினிமாவிலும், நாடகங்களிலும் இருக்கின்றன. இந்த வகையான மன அதீதங்கள் கிளப்பும்
அதிகப்படியான திட்டமிடல் காரணமாக இருக்கலாம்.
ஆகவே, விருப்பமின்மை, சந்தேகங்கள் மூலம் நான் தொடர்ச்சியான கனவுகளை முன்
வைக்கிறேன். அவை எனக்குச் சொந்தமானவை அல்ல. என்றாலும் இந்தக் கனவுகளை
யதார்த்தத்தின் நீட்சியாக நினைப்பதை விரும்புகிறேன். எனவே இந்தத் தொடர்ச்சியான
உண்மை நிகழ்வுகள் முக்கிய கதாபாத்திரத்தினை அவள் வாழ்வின் முக்கிய கட்டங்களில்
பாதிக்கின்றன. குறிப்பிடத்தக்கவையாயும் நிகழ்கின்றன.
ஜென்னி ஒரு மனோதத்துவ நிபுணனாக இருந்தாலும் அவள் இந்த நீட்சியான யதார்த்தத்தில்
அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.
அவளின் விரிந்த அறிவிற்கு அப்பாலும் அவளும் மன ரீதியான குறைபாடு உடையவளாக
இருக்கிறாள். மனோதத்துவ நிபுணர்களுக்கு இது ஒரு பொதுவான இம்சை. இதைத் தொழில்
வழியில் வந்து சேரும் வியாதி என்றும் சொல்லலாம்.
ஜென்னி எப்போதும் வெண்ணைக் கட்டியை வெண்ணைக்கட்டி என்றும், மேஜையை மேஜை என்றும்
தீர்மானமாக நம்புகிறவள். ஆனால் மனிதனை மனிதன் என்பதை மட்டும் அல்லாமல் மற்ற
தீர்ப்பான இந்தக் கடைசியான விஷயத்தை வேதனைவழியில் அவளின் கருத்தை திருத்திக் கொள்ள
நிர்பந்திக்கப்படுகிறாள். ஒரு கணத்தில் சட்டென அவள் மற்றவர்களுடன் இருந்து விலகின
இறுக்க உலகத்திலிருந்து விலகி இருக்கும் இறுக்கத்தைக் கண்டு கொள்கிறாள்.
வெளிப்படையாகச் சொல்லப் போனால் அவள் இந்த உணர்தலை தாங்கிக் கொள்வாளா என்பது
தெரியவில்லை.
இந்த வகையில் ஒரே ஒரு சுமாரான எளிய மாற்று இருக்கிறது. அவளின் எளிமைக்கும்
தற்காப்பிற்குமென்றாகிறது. தன்னை அந்த
நிலையிலிருந்து தாழ்த்தி ஜென்னி, ஜென்னி _சக்ஸன் ஆவது (-சக்ஸன் அவள் கணவன்)
குறிப்பிட்ட குணாம்சங்களும் ஒழுங்கான
நடவடிக்கைகளுமாக உறுதியான இணைந்த தன்மையாகிறது.
இன்னொரு வகையில், அவள்புதிய அனுபவ அறிவை ஏற்றுக்கொள்ளக் கூடியவளாக இருந்தாள்.
அவளுடைய பிரபஞ்சத்தில் மையத்திற்கு தன்னை உள் இழுத்துக்கொள்கிறாள். உள்ளுணர்வு ஒளி
தரும் வழிகாட்டலில், தேடலில், தன்னை எல்லையில்லாத வகையில் பிறரிடம் தன்னை
வெளிப்படுத்திக் கொள்கிறாள். ஒரு மாற்றமான விளைவு இருக்கிறது. முடிவின்மை தாங்க
முடியாததாகிவிடுகிறது. பயணத்தின் சிரமங்கள் நுட்பத்தைத் துண்டாக்கி விடுகிறது.
அவள் விரிவடையும் உள்ளுணர்வினால் களைப்படையவும் செய்கிறாள். அந்த உள்ளுணர்வின்
வெளிப்பாடு அலுப்படையவும்
வைக்கிறது. அவள் களைப்படைகிறாள். விளக்கை அணைக்கிறாள். மரியாதைக்குரிய
நித்தியங்களின் எந்த நிலையிலும் விளக்கை
அணைக்கையில் இருட்டாகிறது.அமதியாய் இவற்றைச் சொல்வது மிக முக்கியம் என
நினைக்கிறேன்.மனிதாபிமான முறையிலும், கலை ரீதியாகவும் நமது இந்தப் படத்தின்
செயல்முறைக்கு இவை முக்கியமானவை எனக் கருதுகிறேன்.
பொருத்தமான தந்திரோபாயமானதாக அமைந்துவிடுவதும் உண்டு. இந்த முயற்சி எந்த
வகையினாலும் இதன் விளைவு கவனிக்கத்
தக்கதல்ல. எல்லாம் இயற்கையானவை என்ற படிமத்தைத் தர வேண்டும். நமக்குக் கிடைக்கிற
சாதகமான விஷயங்களை
வைத்துக்கொண்டு இவற்றைப் படைக்கவும் சாத்தியமாகும்.
எனவே புதிய சாகசத்திற்குத் தயாராவோம். (மொழிபெயர்ப்பு)
- தாமரை 1968.
srimukhi@sancharnet.in |