இஸ்ரேல்-லெபனான்-கே எஸ் சிவகுமரன்
சுப்ரபாரதிமணியன்
இந்தியாவில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் காணப்படுபவர் இலங்கையைச் சார்ந்த எழுத்தாளர் கே எஸ் சிவகுமரன்.சமீபத்திய தில்லி "கதா" திரைப்பட விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது. இத்திரைப்பட விழாவில் இரண்டு இலங்கைப் படங்களும் இடம் பெற்றன. பல ஆண்டுகளாக சிவகுமரன் திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளை ழுதி வருபவர். ரொஜர் மன்வலின் திறனாய்வு அணுகுகுமுறை அவருக்குப் பிடித்திருக்கிறது. ரொஜர் மன்வல் ஆங்கிலேயர். பல பல்கழைக்கழகங்களில் விரிவுரையாளராக இருந்தவர். திரைப்படத்தை எளிய வாசகனுக்கு அறிமுகப்படுத்துவதே விமர்சகனின் மிகப்பெரிய பணி என்கிறார். மன்வலின் திறனாய்வுப்பணியைப் பின்பற்றி திரைப்படத்தை அணுகும் வழிக¨ளைப் பற்றின் கட்டுரைகளை அவர் ' அசையும் படிமங்கள் ' என்ற நூலில் தொகுத்திருக்கிறார்.கொழும்பைச் சார்ந்த் மீரா பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கிறது.
இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருக்கும் ரஜ்சன் குமாரின் குறிப்பிடத்தகக் எழுத்தாளர். அவர் தமிழ் திரைப்பட உலகம் பற்றின கருத்துக்களை கவனத்தில் கொள்ளும்படு சொல்லியிருக்கிறார். தமிழ்த்திரைப்பட உலகம் பரிகசிக்கப்படும் நிலையில் இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்கிறார். இதற்கான அடிப்படைக்காரணங்களைப்பற்றியும் பேசுகிறார். " சென்ற நூற்றாண்டின் வாழ்வியல் நோக்காடுகளை தமிழ் சரியாக உள் வாங்கவில்லை.இக்கால கட்டத்தின் அரசியல், சமூகக் கொந்தளிப்புகள் தகுந்த முறையில் ஆற்றுப்படுத்தப்பட்டு அடிப்படையான ஒரு சமூகவியல் மாற்றத்தை நோக்கி நெறிப்படுத்தப்படாதது மற்றொன்று. தமிழ்நாட்டில் கழகங்களின் தோற்றமும் செயல்பாடுகளும் போன்ற இதர காரணிகளும் உள்ளனவாயினும் அவை இரண்டாம் நிலைப்பட்டனவையே."
சிவக்குமாரனின் விமர்சன முறைகளும் நோக்கங்களும் எளிமையானவை. கல்வித்துறை சார்ந்த அணுகுமுறையற்று வாசர்களுக்கு நல்லத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தும் நோக்கம் கொண்டவை.எந்தத் தத்துவார்த்தக் கோட்பாட்டையும் அவர் கைக்கொள்வதில்லை. விரிவானதாக இல்லாமல் சுருக்கமானவை. திருக்குறள் கூட சுருக்கமானதுதான் என்கிறார். அவை கல்வித்துறை சார்ந்த கட்டுரைகள் அல்ல. அனுபவங்களின் சிதறல்கள். சாதாரண வாசகனுக்கு சில விபரங்களைச் சொல்வது. கோட்பாடோ, மேற்கோள்களோ அல்ல என்கிறார். ரொஜர் மன்வலின் திறனாய்வு அணுகுமுறையை அவர் கைக்கொள்கிறார். ரொஜரர் மன்வெல் ஆங்கிலேயர். பல்கலக் கழக இலக்கிய விரிவுரையாளராக இருந்தவர். பிரிட்டிஸ் திரைப்பட அகாடமியின் முன்னாள் தலைவர்.திரைபடத்தின் நோக்கத்தையும் அது சொல்லப்பட்டிருக்கும் விதத்தையும் அவரின் திரைப்பட மொழி ஆதாரமாகக் கொண்டது. இவருடன் நான் பார்த்த லெபனான் படமொன்று இலங்கை சூழலை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
1975 ஆண்டை ஒட்டிய காலத்தை இப்படம் கொண்டிருக்கிறது.உள்நாட்டு கலவரச்சூழல் மக்களின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. தாரீக்கின் அப்பா வேலையை இழந்தவர். படிப்பதும் இயந்திர, போர்ச்சூழல் வாழ்க்கையை வெறுப்பதும் வாழ்க்கையின் பல்வேறு விடங்களை அசை போட்டுக் கொள்வதும் அவரின் தினப்படியாகி விட்டது. அம்மா வக்கீலாக பணிபுரிந்து வருபவர். முஸ்லீம் சமூக வாழ்க்கையை தட்டுத் தடுமாறி கைக்கொண்டு வருபவர்கள். மேரி என்ற கிறிஸ்துவ பெண்ணுடன் தாரிக்கிற்குநட்பு ஏற்படுகிறது. போர் சூழலால் கல்லூரிக்கு போகாமல் பொழுதைப் போக்குகிறான். நண்பர்கள் மற்றும் பாலியல் அக்கறை சுவராஸ்யங்களால் அலைகழிக்கப்படுகிறான் கிழக்கு பெய்ரூட் கிறிஸ்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ள இடம். மேற்கு பெய்ரூட் மூஸ்லீம் சமூகத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி. அப்பகுதிகளூக்கு மேரியுடன் செல்கிற போது ராணுவத்தினரின் மிரட்டலுக்கு ஆளாகிறார்கள். மதம் அரசியலால் பிளவுபடுத்தப்பட்டிருப்பதை உணரும் சந்தர்ப்பங்கள் நிறைய ஏற்படுகின்றன. இப்படத்தின் மூஸ்லீம், கிறிஸ்துவ சமூகங்களின் சூழலும், உள் நாட்டு கலவரச் சூழலும் இலங்கையோடு வெகுவாகப் பொருத்திப் பார்க்கச் செய்கின்றன.
கடந்த ஒரு மாதமாய் லெபனானில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல் இப்படத்தின் தாக்கத்தை இன்னும் ஆழமாய் உணரச் செய்திருக்கிறது.

srimukhi@sancharnet.in