பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சிறுகதை! |
ஒரு புதிய உலகம் அல்லது புதியதோர் உலகம்
ஆங்கிலத்தில் எழுதியவர் : சிவகாமி விஜேந்திரா
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்
[ 'டொரண்டோ ஸ்டார்' நடாத்திய 'ஸ்டார்சிப்' சிறுகதைப் போட்டியில்
பரிசுபெற்ற சிறுகதை (Toronto Star Starship Contest Winner);
தலைப்பு: A NEW WORLD ]
அந்த
வெதுவெதுப்பான புழுக்கமான ஏவுகணைக்கூடு ஆரம்பத்தில் வசதியாகத்
தான் இருந்தது. ஆனால் எட்டுமாதங்களுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகு
அத்தனை சிறிய, உருண்டையான் அமைவிடத்தைக் குறிக்க வசதியானது என்ற
வார்த்தை ஆகச் சிறந்த சொல்லாட்சியாக அமைய வழியில்லை என்பதைக்
கண்டறிந்துகொண்டான். தொடக்கத்தில் அங்கிருந்த சுய-உணவளிப்புக்
கருவி குறித்தும், சிந்தனையும், செயலும் வெகு அபூர்வமாகவே
தேவைப்படுவதான, பெரும்பாலான நேரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டு
இருக்கும்படியான வாழ்முறை குறித்தும் அவனுக்கு மிகுந்த ஆர்வம்
இருந்தது. ஆனால், காலம் செல்லச்செல்ல அந்தக் குறுகலான வெளி
அவனுடைய பொறுமையின் மீது பாரமாக அழுந்தியது. இயல்பிலேயே
சுறுசுறுப்பானவனாக இருந்தவன் என்பதால் அவன் தன்னுடைய இந்த
இயந்திரத்தனமான செயற்பகுதியை பூர்த்தி செய்து முடித்துவிட்டு
ஆய்வலசல்களில் ஈடுபட ஏங்கினான்.
நூற்றாண்டுக்கணக்காய், அவன் உருவானதற்கு முந்தைய காலகட்டங்களில்
மற்றவர்களால் ஆர்வமாக அனுபவங்கொள்ளப்பட்டுவந்த தனது போக்குவரத்து
உபகரணத்தின் விரித்துநீட்டக் கூடிய சுவர்களுக்குள் ஆழ
அமிழ்ந்துகொண்டு அந்தச் சுவர்கள் இப்பொழுதிருப்பதைவிட பன்மடங்கு
பெரியதாகத் தோற்றமளித்த ஒரு காலகட்டத்தை அவன்
நினைவுபடுத்திக்கொண்டான். இப்பொழுது ஏன் அவன் இத்தனை நெரிசலாக,
குறுக்கப்பட்டுத் திணிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தான்? சுவரின்
மீது ஆத்திரமாக எட்டி உதைத்தவன், அது மெதுவே , ஒரு திணறும்
மூச்சொலி எதிர்ப்பாய் கிளம்ப, சற்றே ஒதுங்கிக்கொள்வதைப் போல்
உணர்ந்தான். பின், அவன் சந்திக்கப்போகும் உயிரினங்கள் அவனிடம்
எதிர்பார்க்கும் கண்ணியமும், நற்பண்பும் நினைவுக்கு வந்தவனாய்,
அவன் மீண்டும் தன்னைக் கிடத்திக்கொண்டு சிறு உறக்கத்தில்
குறட்டைவிட முயற்சிசெய்தான்.
அவன் ஒரு முக்கியப் பணியை மேற்கொண்டிருந்தான். அவனுக்கு முன்
எத்தனையோ பேர் மேற்கொண்ட பணித்திட்டம் அது. இந்தக்
கூட்டிலிருந்து அவன் இறுதியாக வெளியேறியதும் புதிய உலகத்தைத்
துருவியாராய்வது அவனுடைய பொறுப்பாகத் தரப்பட்டிருந்தது. மேலும்,
அங்கே இருக்கவேண்டிய காலம் முடியுமட்டும் அவன் அந்தப் புதிய
உலகத்தில் ஆகச்சிறந்த வாழ்வு வாழ வேண்டும். ஒரு புதிய மொழியைக்
கற்றுக்கொள்வதற்கும், ஒரு புதிய கோணத்தில், வழியில் சிந்திக்கக்
கற்றுக்கொள்ளவும் அவன் தயாராயிருந்தான்; வினோதமான
உணவுப்பண்டங்களைச் சாப்பிடவும், புதிய வெளிகளில் நடக்கவும் அவன்
சித்தமாயிருந்தான். இந்தப் பணித்திட்டத்தில் அவன்
எதிர்பார்த்திராத ஒன்று, தனது இலக்காக அமைந்த இடத்தைச்
சென்றடைவதற்கு முன்பாக அவன் கடக்கவேண்டியதாக இருக்கும்
சூழ்நிலைமைகள் தான் அவனைச் சுற்றியிருந்த சுவர்கள் திடுமென
தாமாகவே நகர்ந்தன. நீள்-நெடுங்காலமாய் ஆவலோடு எதிர்பார்த்துக்
காத்திருந்த அந்தத் தருணம் வந்துவிட்டதோ? அந்த ஏவுகணைக்கூட்டின்
முனகல்களும், அசைவுகளும்மெதுவாக அவனை நோக்கிப் பெயரத்
தொடங்கியவுடன் “ஆமாம்”, என்று பரவசத்தோடு தீர்மானித்துக்கொண்டான்
அவன். ஒருவழியாக, ’பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. அவன் ஒரு
புதிய உலகத்தை அனுபவங்கொள்ளப்போகிறான். நீண்ட காலம் அசைவற்று
இருந்துவிட்ட காரணத்தால் மிகுந்த சிரமத்தோடும் கொஞ்சம்
உடல்வலியோடும் அவன் மெதுவே வெளியே வந்து அந்தப் புதிய உலகின்
வினோதச் சூழலை முதன்முறையாக ஆழ்ந்து சுவாசித்தான். தனது
பின்புறத்தில் சுளீரென்ற ஒரு வலி ஏற்பட்டது அவனுக்கு. என்றாலும்,
சில கணங்கள் மட்டுமே வலியில் வீறிட்டவன் அதன்பின் தன்னைச் சுற்றி
ஆர்வதோடு பார்வையை செலுத்தத்தொடங்கினான்.
சுற்றிலுமிருந்த உயிரினங்கள் அவன் கற்பனை செய்திருந்ததைக்
காட்டிலும் பன்மடங்கு வினோதமாக இருந்தன. அவனோடு ஒப்புநோக்க, அவை
பிரம்மாண்டமாக இருந்தன. பச்சை, நீலம் அல்லது வெள்ளை நிறத்தில்
இருந்தன. அவை அவன் மேல் கவிந்தபோது, அவற்றின் முக நிறம் உடலின்
நிறத்தைவிட வேறாக அமைந்திருந்ததை அவனால் பார்க்க முடிந்தது.
அவனுடைய பின்பக்கத்தின் அருகில் ஒரு வயதான தம்பதியர்
வட்டமிட்டுக்கொண்டிருக்க, இளந்தம்பதியர் இன்னும் அருகில்
இருந்தனர். அவர்கள் ஆர்வக்குறுகுறுப்போடு அவனைக் கவனித்துக்
கொண்டிருக்க, அவன் அவர்களைக் கண்டதில் தனக்கு ஏற்பட்டிருக்கும்
மட்டற்ற மகிழ்ச்சியையும், தன்னுடைய பணித்திட்டம்
இருதரப்பினருக்கும் வெற்றிகரமாக அமையும் என்ற தனது
நம்பிக்கையையும் அவர்களிடம் தெரியப்படுத்த முயன்றான்.
இருந்தபோதிலும், அவனுடைய மொழி அந்தப் புதிய உயிரினங்களைத்
தொந்தரவு செய்வதாய் தோன்றியது, ஏனெனில், அங்கே சூழல் மிகவும்
பரபரப்பாக இருந்தது. தங்களுடைய அந்நியமொழியில் பேசியவாறு அந்த
உயிரிகள் அங்குமிங்கும் மிகவும் பரபரப்பாகப்
போய்வந்துகொண்டிருந்தன. இதில் சில நிமிடங்கள் கழிந்தோடிய
நிலையில் அவனுடைய உணவு செலுத்தப்படும் நீள்-குழாய்கள்
ஏவுகணையிலிருந்து துண்டிக்கப்பட்டு அவன் ஒவ்வொரு உயிரியிடத்தும்
செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தான். இது ஒருக்கால் அவனை மரியாதை
செய்வதற்காக நடத்தப்பட்டதாயிருக்கும், தங்களை அவன் நன்றாகப்
பார்த்துக்கொள்ள அவனுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தர அவை
விரும்பினவாயிருக்கும்.
இறுதியாக, அவன் எந்தப் பகுதியில் வந்திறங்கினானோ அந்தப்
பகுதியில் கொண்டுவந்து இருத்தப்பட்டான். அவன் இறுக்கம்
தளர்ந்தது; இங்கே, இந்தத் திறந்த வெளியில் தனது விசித்திரமான
ரசிகர்களை வெகுதொலைவிலிருந்து அவனால் பார்க்க முடியும். ஆனால்,
வருந்தத்தக்க வகையில், தன்னால் அசையவே முடியவில்லை என்பது
அவனுக்குத் தெரியவந்தது. ஆனால், பிரயாணத்தின் இறுக்கம்
விலகியவுடன் அதுவும் மாறிவிடலாம் அந்த வயதான தம்பதியர்
தயக்கத்தோடு முன்னோக்கி அடியெடுத்து வைத்தனர், அவனுடைய
போக்குவரத்து வாகனம் திடுமென நகர ஆரம்பித்து, ஒரு ஆச்சரியகரமான
அளவு இதமான சைகையொன்றால் அவனையும் தன்னுள் இழுத்துக்கொண்டது.
அவனைச் சுற்றியிருந்த அந்த உயிரினங்களின் மர்மப்புதிரான
மொழியிலிருந்த்து குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்ட ஒலிகளை
எழுப்பியவாறே , அது தன்னை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வயதான
தம்பதியினரிடம் கூறியது: அம்மா...அப்பா... உங்களுடைய புதிய
பேரப்பிள்ளையை சந்தியுங்கள்
அனுப்பியவர்: ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா
sri.vije@gmail.com
|
|
|
|
©>©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|