பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
சிறுகதை! |
ராசி பலன்!
குமரவேலன் (சென்னை)
'சந்திரன்'-
ஒரு பிரபல தமிழ் மாதப்பத்திரிகை. அப்பத்திரிகையின் அமோக விற்பனைக்கு முக்கிய காரணமே
வாசகர்களை மிகவும் கவர்ந்த ஜோதிட பலன்கள்பகுதி தான் . ஜோசியத்தில் நம்பிக்கை
இல்லாதவர்கள் கூட ரகசியமாக சந்திரனின் சோதிடப்பகுதியை சுவாரசியத்துடன்
படிப்பதுண்டு. அதை எழுதுபவர் சங்குண்ணி என்னும் மலையாள சோதிடர். சங்குண்ணி
சோதிடபலன்கள் எழுதத் தொடங்கியதிலிருந்து தான் பத்திரிகையின் விற்பனை
அதிகரித்துள்ளது என்று பரவலாகப்
பேசப்பட்டது.
சங்குண்ணிக்கோ அந்தப் பத்திரிகை தன் திறமையை மதித்து அதற்குத் தகுந்த சன்மானம்
தருவதில்லை என்ற வருத்தம் எப்போதுமே உண்டு. . நாளாக ஆக இந்த எண்ணம் வலுத்து அவர்
மனதை உறுத்தத் தொடங்கியது. அவர் தன் சன்மானத்தை உயர்த்துமாறு அடிக்கடி
நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் வேண்டுகோள் மீண்டும் மீண்டும்
நிராகரிக்கப்பட்டதால், சங்குண்ணிக்கு ஏமாற்றமும் அவமானமும் தான் மிஞ்சின. அதனால்
கோபமடைந்த அவர் பத்திரிகை நிர்வாகத்துக்கு ஒரு பாடம் புகட்டி அவரைப் பழிவாங்க
வேண்டும் என்று முடிவு செய்தார். திடீர் என்று ஒரு நாள் முன்னறிவிப்பு ஏதும்
இல்லாமல் வேலையிலிருந்து நின்று
விட்டார்.
பத்திரிகை ஆசிரியருக்கு அப்போதுதான் பிரச்னை விஸ்வ ரூபம் எடுத்துவிட்டது புரிந்தது.
வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றிருந்த சோதிடப் பகுதி இல்லாத சந்திரன், சிலை இல்லாத
கோயிலைப் போல் அதன் பெருமையையும் மதிப்பையும் இழந்து விடும் என்று நம்பினார்கள்.
இதன் விளைவாக பத்திரிகையின் விற்பனையே கூட பெருத்த அளவில் பாதிக்கப் படுமோ என்ற
அச்சமும் தலை எடுத்தது.
அடுத்த சில நாட்கள் ஆசிரியர் ஆனந்தனும் உதவி ஆசிரியர் மணியும் இந்த விஷயத்தைப்
பற்றி அலசி ஆராய்ந்து மண்டையை உடைத்துக்கொண்டார்கள்.
கடைசியில், மணி ஆசிரியரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்: "கவலையை விடுங்க. இந்தப்
பிரச்னையை சமாளிக்க எனக்கு ஒரு குறுக்கு வழி தெரிந்துவிட்ட" என்று உத்திரவாதம்
கொடுத்ததும்தான் ஆனந்தனுக்கு மனசு நிம்மதி அடைந்தது.
அடுத்த மாத இதழ் வெளிவந்தபோது அதில் வழக்கம் போல் ஜோசியப் பகுதி வந்தது. பத்திரிகை
நிர்வாகத்துக்கும் சோதிடப்பகுதி ஆசிரியருக்கும் இடையே எழுந்த பிரச்னை பற்றி
வாசகர்களுக்கு எதுவுமே தெரியாது.
அடுத்த சில நாட்களில் பத்திரிகை ஆபீஸ¤க்கு என்றுமில்லாமல் கட்டுக்கட்டாய்
பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. அத்தனையும் சோசியப் பகுதியைப் புகழ்ந்துதான்!
அதில் கூறப்பட்டிருந்த பலன்கள் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே பலித்ததாக
பெரும்பாலான வாசகர்கள் எழுதியிருந்தார்கள். எதிர்பார்த்ததற்கு மேலாக மணியின்
சாமர்த்திய அதிரடி நடவடிக்கை உடனடியாக பிரமாதமாக பலன்
தந்ததைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆசிரியருக்கு மட்டும் மனதில் ஒரு குறுகுறுப்பு. ஆபத்பாந்தகனாகவும் சமய
சஞ்சீவியாகவும் மணி தலையிட்டு எப்படி நிலைமையை சமாளித்து வெற்றி கண்டான் என்று
அறியத் துடித்தார். ஆவலைப் பொறுக்கமுடியாமல் ஒரு நாள் அவனிடமே தன் சந்தேகத்தைக்
கேட்டு விட்டார்.
"இதிலொண்ணும் பிரமாத விஷயமில்லை! ஜோதிடப்பலன்களை வெளியிடும் சில பத்திரிகைகளின்
பழைய பிரதிகளை
எடுத்துக்கொண்டேன். அவற்றில் ராசிவாரியாகப் போட்டிருந்த பலன்களை என் இஷ்டப்படி
தாறுமாறாக மாற்றி வெவ்வேறு ராசிகளுக்கு எழுதினேன். அதைத்தவிர நானே சொந்தமாக எதுவுமே
செய்யவில்லை. ஆனால் இந்தத் திருட்டு வேலைக்கே இவ்வளவு பலத்த வரவேற்பு இருக்குமென்று
நான் கனவில் கூட எதிர் பார்க்கவில்லை." என்று சொன்னபோது, ஆனந்தனுக்கு தலையே
சுற்றியது. சங்குண்ணியும் சந்திரனின் புது ஜோசியப் பகுதியைப்பார்த்து அசந்து
போனார். அதில் தன் ராசிக்குக் கூறப்பட்டுள்ள பலன்கள் நூற்றுக்கு நூறு பொருத்தமாக
இருந்தது அவரை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. யாரோ பெயர் பெற்ற ஜொதிடரைப் பணிக்கு
அமர்த்தியிருப்பார்களோ
என்றுதான் அவருக்குப் பட்டது.
thambudu@hotmail.com |
|
©
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|