இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி  2008 இதழ் 97  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!

தென்றல் சுடும் நேரம் ....

- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) -


அங்கிருந்து கொண்ட அந்த ஒரு வாரத்திலே அகல்யா எனும் சமூகப் பறைவை சிறகை விரித்து வானத்திலே எழுதிய கவிதை வரிகளை கையிலே இருந்த கடைசி யூரோவும் முடிந்து விட்ட நிலையிலே இனி என்ன செய்வது என்ற கேள்வியே அவனைக் குடைந்து கொண்டிருந்தது.கோப்பையிலே இருந்த தேனீரை உறிஞ்சிக் கொண்டான். உடலை நடுங்க வைத்த குளிருக்கு அந்த சுடு நீர் இதமாகவே இருந்தது. தங்கியிருந்த வீட்டுக்கு இன்னும் பணம் கொடுக்கவில்லை. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் எனும் தொடருக்குரிய அர்த்தம் இப்போது தான் விளங்கியது.
முதலாம் திகதியாகியும் கூட வீட்டு வாடகையை கட்ட முடியாமல் அகல்யா சிரமப்படுவது தெரிந்தது. அரச உதவிப் பணத்திலே சீவியம்
நடாத்தும் அகல்யாவுக்கு இவர்கள் அங்கிருப்பது கடினமானதே. வருணனும் இதை உணராமல் இல்லை. நெருப்புச் சுடும் என்பதை தீயின் விரல்கள் வந்து சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லையே.

'அப்பா தீபனுக்கு பசிக்குதாம்." மூத்தவன் வந்து காதிலே இரகசியமாகச் சொன்னான்.

"இஞ்சை வாங்கோ தீபன்..... இன்னும் கொஞ்ச நேரத்திலை சமைச்சு முடிஞ்சிடும் தீத்தி விடுறன்"

'அப்ப கேக் தாங்கோ அப்பா"

'ம் கும் ....கேக் சாப்பிட்டா மத்தியானம் வடிவா சாப்பிட மாட்டியள். சரி இருங்கோ போட்டுக் கொண்டு வாறன்." என்றபடி சமையலறைப்
பக்கம் எழுந்து போனான்.

வருணனும் நான்கு பிள்ளைகளும் பிரான்சுக்கு வந்து ஒரு வாரத்திற்க்கு மேலாகி விட்டிருந்தது. ஒற்றைச் சக்கரத்திலோடும் ஒரு
வண்டிலாகவே இவனது இப்போதைய வாழ்க்கை இருக்கிறது. இதற்குக் காரணம் அவனது மனைவியை யேர்மன் அரசானது
மனிதாபிமானம் அற்ற முறையிலே திருப்பி அனுப்பி விட்டிருந்தது.

குடும்பத் தோடு அனைவரையும் திருப்பி அனுப்புவதே யேர்மனியக் காவல்த்துறையினரின் திட்டமான போதிலும் காவலர்கள்
வீட்டுக்குவந்த வேளையிலே அவன் மனைவி மட்டுமே அங்கிருந்ததால் அவளைத் தனியாகப் பிடித்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பி விட்டார்கள். வானம் பிளந்து இவனது தலைக்கு மேலே பெரும் இடியொன்றை இறக்கிக்கொண்டது போல உணரடந்தான். அவ்வளவு தூரத்துக்கு பெரும் இடைஞ்சலை எதிர் கொண்டான். அதனாலே தான் வருணனும் பிள்ளைகளும் நாடு நாடாக அலைய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது.

தனி ஒருவனாக நின்று இத்தனை சுமைகளையும் எவ்வாறு தாங்கிக் கொள்ளப் போகிறான. கடும் தவம் புரியும் இந்தச் சிறு படகு கடலை
எதிர்த்தபடி எப்படி கரை சேரப் போகிறது. இந்த வினாவே எல்லாரிடமும் துளிர் விட்டது. அவற்றை எல்லாம் முறியடித்தபடி ஒரு வருடமாக பயணிக்கிறது பேரலையை எதிர்த்தபடி இந்தப் படகு.

அங்கிருந்து கொண்ட அந்த ஒரு வாரத்திலே அகல்யா எனும் சமூகப் பறைவை சிறகை விரித்து வானத்திலே எழுதிய கவிதை வரிகளை
வாசிக்கவும் அவளின் மனத்திலே இருந்து தெறித்த நெருப்பை தகிக்கவும் அவனாலே முடிந்தது.

இப்போதைய இவளது வாழ்க்கை என்பது பாழடைந்த இராஐ மாளிகையிலே பூத்த ரோசா போன்றதே. முன்னை நாளிலே முளை விட்ட வாழ்வும் சரி பின்னை நாளிலே கிளையாக ஒட்டிய வாழ்வும் சரி அகல்யாவுக்கு பொருத்தமாக அமையவில்லை.அவளது சந்தோசக்
கனவுகள் மீது ஒருவன் வந்து கல்லெறிந்து போய்விட்டான்.

வழுக்கும் பாறை மீது நிற்க்கும் போதே கூறை சூடிய மணப்பெண் ஆனவள். பதினெட்டு வயதிலேயே ஆண்பிள்ளைகள் இரண்டுக்குத்
தாயாகிப் போனவள்.

கணவன் என்று வந்த அந்தத் தென்றலோ அம் மூவரையும் தவிக்க விட்டு வேறொரு பூவுக்கு மகுடம் சூட்டிக் கொண்டதால் தாய்
தகப்பன் உட்ப்பட அவளைச் சுற்றியிருக்கின்ற சமூகம் அதை ஒரு இழிவாகவே எண்ணி இன்றுவரை மறக்கவில்லை அதைப் போல
அவளும் அந்தத் தழும்பை யாருக்கும் மறைக்கவுமில்லை. நியாயமான இவளது கருத்தெல்லாம் கூட கூடி இருந்தவர்களால்
புறக்கணிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டன. உச்சிக்கு வரமுன் உதிர்ந்து போன சூரியன் போல ஆகியது இவள் ஆசைப்பட்ட வாழ்க்கை.

பிரான்சின் புற நகர்ப் பகுதியிலே கடந்த நான்கு வருடங்களாக இந்தத் தனித்த வாழ்க்கை. தனது இரண்டு குழந்தைகளுடாகவே இழந்து
போன சொர்க்கத்தை தரிசிக்க முயன்று கொண்டிருந்தாள்.

"நாளைக்கு ஒருக்கா பாரிசுக்குப் போகவேண்டி இருக்கு" கழிவறையைக் கழுவியபடியே அகல்யா கேட்டாள்.

"உடனை திரும்பிடுவிங்களோ ? சங்கடத்துடனான வர்ணனின் வினா

"ஓம் ஓம் உடனை வந்திடுவன்.சமைச்சு வச்சிட்டுப் போனா நாளைக்கு மட்டும் ஒருக்கா சமாளிப்பிங்களோ."

'உங்களுக்கு எதுக்கு சிரமம் நாளைக்கு வேணுமெண்டா இரகு வீட்டை போய் நிண்டிட்டு வாறம்.?"

இதிலை என்ன சிரமம் இருக்கு உதை மாதிரிப்பிரச்சனை நாளைக்கு எங்களுக்கும் வரலாம் தானே வருணன்.

சின்னவன் சிணுங்கிக் கொண்டே தகப்பனிடம் ஓடிவந்தான். "என்ன ஐயா" என்று தலையை கோதிவிட்டான்.

'என்டை விளையாட்டுச் சாமானை அண்ணா எடுத்திட்டான்....." சிணுங்கலை நிறுத்தாமலே தொடர்ந்தான் தீபன் 'அம்மாட்டை எப்பப்பா போறம்"

சமாதானம் செய்யவதற்க்காக வாயைத்திறந்தவன் மகனிடம் இருந்து அடுத்த வந்த கேள்விக்கு விடை தெரியாததால் பொங்கி வரும்
கணைகளைக் கண்டஞ்சிய ஒரு போர்வீரனைப் போல பின்வாங்கினான்.

வருணனைப் பொறுத்த வரை இலங்கைத் தமிழினம் என்பது சபிக்கப்பட்ட ஒரு இனமாகவே தோன்றியது. இல்லாவிடில் நாளொரு நாடும் பொழுதொரு கண்டமுமாக ஓடிக்கொண்டிருப்பானா தவறின் சிவப்புக்கடலிலே நாள் தோறும் நீந்திக் கொண்டிருப்பானா. பல்லாண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த குடும்பங்களை தனித்தனியாக உடைத்தும் வேறு வேறாக முகாம்களிலே அடைத்தும் முரட்டுத்தனமாக நடந்திருக்கிறது யேர்மனிய அரசு. அப்படியான இக்கட்டான சூழ்நிலை ஒன்றிலே தான் வருணனின் மனைவியும் யேர்மனியை விட்டு வெளியேறியிருந்தாள். கடந்த ஒராண்டு காலமாக தாயில்லாத குறையை பிள்ளைகளுக்குத் தீர்த்து வைத்திருக்கிறான் இந்தத் தாயுமானவன். முதுகிலே வீட்டைக் காவித் திரியும் நத்தை போல நெஞ்சக் கூட்டுக்குள்ளே கனவுக் கோட்டைகளோடு அலைந்து
கொண்டிருக்கும் இவன் எல்லாச் சுமைகளையும் சுகமாகவே ஏற்றிருக்கிறான்.

**** **** ****

ஏதோ அலுவல் நிமித்தம் வெளியே போனவன் குளிருக்காக அணிந்திருந்த தடித்த மேலாடைகளை கழற்றி சுவரிலே கொழுவினான்.  அறை முழுவதையும் சூடேற்றிக் கொண்டிருந்த சூடேற்றிக்கு அருகிலே கதிரையை இழுத்துப் போட்டபடி கூதல் காய்ந்து கொண்டான். இரவுச் சாப்பாட்டை தயாரித்துக் கொண்டிருந்த அகல்யா ஒரு அடுப்பிலே நாகிட்சை போட்டு பொரித்துக் கொண்டு மற்றைய அடுப்பிலே வருணனுக்கு தேனீர் தயாரித்துக் கொண்டாள். வரவேற்ப்பறையிலே இருந்து கொண்டே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.  'பிள்ளைகளோடை நான் இலங்கைக்குப் போகலாம் எண்டு யோசிக்கிறன் அகல்யா.? "

"எதுக்கு அவசரப்படூறியள். சண்டை நடக்கிற இடத்திலை சின்னப்பிள்ளையளோடை போய் எப்படிச் சமாளிப்பியள்.அதை விட அங்க விலை வாசியள் எண்டது சித்தெறும்பின்ரை தலையிலை இமய மலைய வைச்சமாதிரி முட்டை பதினெட்டு ரூபா பாண் நாற்ப்பது மீன் முன்நூறு .... இப்பிடி இருக்கேக்க எப்பிடி வாழுப் பேறியள் ..? அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.

குட்டிகளைக் காவித் திரியும் கங்காருவைப் போல எத்தினை நாளைக்குத் தன் பிள்ளையளோடை அலையிறது. உள் நாட்டுப் பிரiஐயாக ஊர் சுற்றித் திரிந்திருந்தால் மகிழ்வாக இருந்திருக்கும் ஒரு அகதியாக அல்லவா இவன் திரிகிறான். யாத்திரை எனில் கௌரவம்
கிடைத்திருக்கும் நாடுகடத்தல் எனில் எப்படி அது சாத்தியமாகும்.

விண் மீன்களை எல்லாம் மண்ணிலே விதைத்தது போல இரவுகளுக்கு அழகு தரும் யேர்மனி. நிலாவுக்கு தூண்டில் போடும் பாரிசின் ஈபிள் கோபுரம்.

அகன்ற சாம்ராஐ;யத்தை இழந்திருந்தாலும் இன்று வரை அதற்க்கு சாட்சிகளாக விளங்கும் விளையாட்டு அரங்குகளையும் அரச
மாளிகைகளையும் வைத்திருக்கும் ரோம் நகரம். இருந்தும் என்ன செய்வது? கட்டிக்காத்த பண்பாடானது ஐரோப்பிய அமிலத்திலே
கரையாமல் காப்பதென்பதே கடினமாக இருக்கிறது. இங்கே வாழ்க்கை என்பது வித்தியாசமானது ஆயிரம் பேர் குடி இருக்கும் அடுக்கு
மாடியில் கூட அடுத்த வீட்டில் குடியிருப்பவர் யாரெண்டு தெரியாத வாழ்க்கை சில வேளைகளில் ஒரு வீட்டுக்குள்ளேயே அன்னியர்
போல வாழ்கிறார்கள். நம்மூர்க் கிராமங்களில் இப்படியா இருந்தோம். தூரத்தே வாழ்ந்தாலும் கண்ணியமான அன்னியோன்னியத்தை
அல்லவா கடைப்பிடித்தோம்.

அழகைத் தரிசிக்கும் விழிகளுக்கு அய்ரோப்பிய நாடுகளிலே விருந்து கிடைக்கும். ஆடம்பரத்தை விரும்பும் மனிதர்கள் பறப்பதற்க்கு
இங்கே இறகுகள் பொருத்தப்படும். இருந்தும் இவனுக்கு இதிலே உடன் பாடில்லை

**** **** ****

லிடிலுக்கு(கடை) முன்பாக சனக் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பொருட்களை வாங்கிக் கெண்டு போவோரும் வருவோரும்
வாகனங்களை நிறுத்துவதற்க்கு தருப்பிடம் தேடுவேருமென பரபரப்பாக கடை இயங்கியது. உள்ளே அகல்யாவும் வருணனும்
பிள்ளைகளோடு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சனிக் கிழமைகளில் மட்டும் இக்கடையானது நிறை மாதக் கர்ப்பிணியாக
வாசல் வரை நிறைந்து வழியும். இது ஒரு மலிவு விலைக் கடை மட்டுமல்ல ஐரோப்பா எங்கும் கிளைகளோடு தரமான பொருட்களை
வினியோகம் செய்கின்ற ஒரு நிறுவனமுமாகும்.

"அப்பா சுவிங்கம் எடுக்கட்டா" மூத்தவளின் கோரிக்கை

"அக்கா சுவிங்கம் எடுத்தா நான் வந்து சொக்குலேட் எடுப்பன்." இது இளையவனின் பிடிவாதம்.

"ஓம்"; இரண்டுக்குமான ஒப்புதல் வாக்குமூலம் இது.

மற்றவர்களுக்கு முன்னால் அப்பா பேசவோ அடிக்கவோ மாட்டார் என அவனது பிள்ளையளுக்கு நன்றாகவே தெரியும் . வாங்கிய
சாமன்களுக்கான பணத்தைக் கொடுத்த போது, காசாளர் பகுதியிலே இருந்த இளம் பெண் சிரித்துக் கொண்டே தீபனுக்கு பலூன் ஒன்றை
நீட்டினாள்.

சாமான்களை தூக்கிக் கொண்டு போனவர்கள் பாதையைக் கடப்பதற்க்காக நடை பாதையிலே பொருத்தப் பட்டிருந்த சமிக்கை விளக்கிலே காத்திருந்த போது தான் அந்த சம்பவம் நடந்தது. எதிர்ப்பக்கமாக வந்த ஒரு வெள்ளைக்காரன் படு மோசமான வார்த்தைகளால் இவர்களைத் திட்டினான். தங்களுடைய நாடு சீரழிந்து போனதற்க்கு வெளியூர் காரர்களே காரணம் என்றும் இவர்கள் பன்றிக்குப் பிறந்தவர்கள் என்றும் ஆங்கிலத்திலே திட்டிக் கொண்டான். வருணனும் பதிலுக்கு அவனைத் திட்டிக் கொண்டான்.

'ஏன் அகல்யா நீங்கள் இருக்கிற நாட்டிலை இனத் துவேசம் அதிகமோ .?" ஆவேசமாகவே அவன் கேட்டான்.

"ஒரு சில பேர் அங்கங்கை இப்பிடி இருக்கினம் தான் அதுக்காக எல்லாரையும் நாங்கள் அப்பிடி நினைக்க ஏலாதே வருணன்."
அகல்யாவின் பதிலிலே திருப்தி இல்லாவிடினும் விக்கிரமாதித்தனின் மௌனத்தை அவன் இரவல் வாங்கிக் கொண்டான். வீட்டுக்குப்
போகும் பாதையானது வெண்பனிப் புதையல்களால் மூடிக் கிடந்தது. பாதை ஓரங்களிலே நின்று பனியை வழித்து வீதியை செப்பனிட்டுக்
கொண்டிருந்தனர் சில தொழிலாளர்கள். சிலரது விரல் இடுக்குகளுக்கிடையே புகுந்து ஆறாம் விரலாக மின்னிக் கொண்டது வெண்சுருட்டு.  தனது அற்ப ஆயுளை எண்ணியதாலோ என்னவோ உள்ளேயும் வெளியேயும் புகைந்தபடியே இருந்தது.

'நாளைக்கு இன்னேரம் நாங்கள் கொழும்புக்குப் போயிடுவம்." விறைத்து நடுங்கும் வாய்வழியே வந்த வார்த்தைகளும் விறைத்தபடியே
வந்தன.

'அதுக்குப்பிறகு"

'ஐரோப்பியாவுக்கு ஒரு கும்பிடு"

'அப்ப எங்களுக்கு"

'நன்றி மட்டும் சொல்லிட்டுப் போக மாட்டன்."

'அப்ப"

'அதுக்கு மேலை ஏதாவது இருக்கோண்டு தேடுறன். திக்குத் தெரியாது நானும் பிள்ளையளும் அலைஞ்சு திரியேக்கை அடைக்கலம் தந்த
கூட்டுக்கு கைமாறா ஏதும் செய்ய நினைக்கிறன்"

பதிலேதும் அவள் சொல்லவில்லை. ஒரு கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து வெளிவரத் துடிக்கும் சிசுவைப் போல தொண்டைக்குள்ளே இருந்து எட்டிப் பார்த்துக் கொண்ட வினாக்களை எப்படிக் கேட்ப்பது .......?எப்படியாவது கேட்டுவிடுவதென்றே நினைத்துக் கொண்டான்.

'அகல்யா உங்களிட்டை ஒன்றை கேக்க விரும்புறன். இதை நீங்கள் எப்பிடி எடுப்பியளோ தெரியாது. ஒரு சகோதரனா நினைக்கிறியளோ
அல்லாட்டி சக தோழனாக நினைக்கிறியளோ தெரியாது..."

'பரவாயில்லை சொல்லுங்கோ" சுழுக்கிக் கொண்டே வாயிலிருந்த வார்தைகள் வழுக்கி விழுந்தன.

'என்னுடைய பிள்ளையளை பராமரிக்கவும் சேர்ந்து தோள் கொடுக்கவும் எனக்கொரு துணை இருக்கு ஆனா உங்களுக்கு ..? தனி ஆள் எண்டா தனிச்சு வாழலாம். இரண்டு பிள்ளையளோடை சிரமம் தானே. ஏன் நீங்கள் இன்னொரு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கக் கூடாது.?"

'பராயம் அறியா வயசிலை ஒருத்தன் வந்து என்னை ஏமாத்திட்டுப் போயிட்டான். இனிவாறவனும் இந்தப் பிள்ளையளை தன்ரை
பிள்ளையளா பாப்பானோ எண்டு என்ன நிச்சயம்." வெறுப்பாகப் பேசினாள்

'இப்ப கொஞ்சம் முதல் தானே சொன்னீங்கள் ஒரு வெள்ளைக்காரன் எங்களை இழிவாப் பேசிறான் எண்டதுக்காக எல்லாரையும் அப்பிடிப்
பார்க்க ஏலாதெண்டு. அதை மாதிரித் தானே இதுகும். ஒருத்தன் ஏமாத்திட்டான் எண்டதுக்காக எல்லாருமே அப்பிடியா ?"

'பல புரட்சிகரமான சித்தாந்தங்கள் பேச்சளவிலையும் ஏட்டளவிலையும் மட்டும் தானே இருக்கு வர்ணன் ?."

'இல்லை அகல்யா பெரியாரும் பாரதியும் வெறும் வெட்டிப் பேச்சை மட்டும் இங்கை விட்டிட்டுப் போகேல்லை. சமுதாயப் பூந்
தோட்டத்துக்கை இறங்கி வாங்கோ விளக்கேத்திறதுக்கு மின் மினியள் இங்கை நிறையவே இருக்கு."

அகல்யா மௌனத்தை கவசமாக்கிக் கொண்டபோது வார்தைகள் அவளிடமிருந்து பின்வாங்கிக் கொண்டன.

maduvilan@hotmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner