பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
சிறுகதை! |
பள்ளிக் கூடம்!
- மட்டுவில் ஞானக்குமாரன் -
கொழும்பிலுள்ள
அந்த மகளிர் கல்லூரிக்கு முன்னால் நின்று கொணடுË நேரத்தை அடிக்கடி
சரி பார்தÊதுகÊ கொணÊடானÊ வருணனÊ.
அருகிலÊ உலாவும்Ê ராணுவதʧனரினÊ கணÊகளை அவனÊ தåர்கÊக முனைநÊதானÊ. நீணÊட நேரமாகவே
அவனÊ அஙÊகு நிறÊபதை
அவாÊகளுமÊ கலÊÂரிகÊகு வருமÊ பலருமÊ ஒரு மாதரியாகவே பார்தÊதனாÊ. யாருகÊகோ அல்லது
எதுக்கோ வலை æ¤யபடியே
பெண்கள் கல்Âரிக்கு முன்பாகத் தவமிருக்கிறான் என்று தான் அவர்கள் நினைத்திருக்கக்
கூடும். வாáல் கதவை காரணமின்றி இறுகச்
சாத்திக் கொண்டான் காவலாளி.
பதினைந்த வருடங்களுக்குப் பின்பான அவனது கொழும்பு அநுபவம் அது. காரணம் புரியாத
அச்சம் அவன் மனதிலே வந்து குந்தி இருந்து
கொண்டது. சரியாக காலை பத்துமணி என்பதை கடிகாரம் சொல்லியது.நேரம் சரியென நினைத்ததும்
வாáல் காவலனை நோக்கி
நடந்தான். அவனாக எதுவும் பேச முன்னரே |மொக்கத்த …? ஓ இன்னா வேணுமÊ? ஷஎன்று காவலாளி
கேட்டான். எந்தக் கனிவுமில்லாத
ஒரு கேள்வியாகவே அது இருந்தது. அவன் கேட்ட கேள்வியும் பார்வையும் ஒருவித
அதிர்ச்சியையே தந்தது. வருணன்
அதைக்காட்டிக்கொள்ளவில்லை. தமிழ்ப் பள்ளியின் வரவேற்பே தமிழில் இல்லை என்றது மனது
சிங்களம் தெரியாத வருணன் தமிழைக்
காவலாளியிடமிருந்து காப்பதற்காக ஆங்கிலத்திலேயே பேசினான். “பத்துமணிக்கு அதிபர்
சந்திக்கச்சொன்னவர்.” என்றான்.
“புள்ளை எதையும் சேறாக்க முடியாது……!” என்றான் காவலாளி ஷபுதிதாக எந்தப் ßளÊளையையும்
சேர்க்க முடியாது| என்பதையே அவன்
சேறாக்கி தெளிக்கிறான் என்பதை வருணன் புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் எடுத்தது.
“அதிபரை சந்திச்சும் வேலை இல்லை” என்றான் அவன.;
அதிபர் திருத்தி;க் கொடுத்தோ என்னவோ அதை மட்டும் சரியாகவே சொன்னான். காவலாளி தந்த
அந்த அதிர்ச்சி வைத்தியம் பத்துப்
பதினைந்து பேதி மாத்திரைகளை ஒன்றாக விழுங்கியது போல இருந்தது அவனுக்கு.தன்னை
ஒருகணம் ஆசுவாசப்படுத்தியவன்.
“நேர கதைச்சு நிலைமையை விளங்கப் படுத்திப் பார்கிறது நல்லது தானே…? தமிழிலேயே
வருணன் சொன்னான்.அவனை ஒருதரம்
முறைத்துவிட்டு விண்ணப்பப் பத்திரம் ஒன்றை நீட்டினான் காவலாளி.வாழ்கை வரலாறுகளை
அடிமுதல் நுனிவரை ஒட்டுமொத்தமாக
கேட்டது அப்படிவம். பல கேள்விகள் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே என்று அடிகுறிப்பு
ஒன்று கூறியது. யாருக்கான பாதுகாப்புக்கு
என்ற விபரம் எதுவும் அதில் இருக்கவில்லை.அடுத்து என்ன செய்வது என்ற வருணனின்
நினைப்பை கவலாளிக்கு வந்த உள்ளாக
தொலைபேசி தடுத்தது. தொ(ல்)லை பேசியை பேசிய பிறகு ஒருவாறு அவனை உள்ளே செல்ல
அனுமதித்தான் கவலாளி. அதிபரின்
அறைக்குள் நுழைந்தபோது
‘‘மன்னிக்கோணும் அதிபர் முக்கியமான கூட்டத்தில் இருக்கிறார்.’’சுழல் கதிரையை
சுழற்றியபடி அதிபரின் பெண் உதவியாளர் தகவல்
தந்தார்.
“மகளுக்கு பள்ளிக்கூடத்திலை ஒரு இடம் கேட்டிருந்தனான்’’ வார்த்தைகளை ஒவ்வொன்றாக
கழற்றி வைத்தான். தலைக்கு மேலாக
சுழன்று கொண்டிருந்த விசிறியைப் போலவே அவனது நெஞ்சமும் வேகமாக அடித்துக் கொன்டது.
என்ன பதில் வரப்போகின்றது என்று
உன்னிப்பாக உதவியாளரின் வாயைப் பார்த்தான்.
“இதுக்கு முதல் எந்தப் பள்ளிக்கூடத்தில படிச்சவ உங்கட மகள்?”
எதையாவது கேட்டுத் தொலைக்க வேண்டுமே என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி தான் அது என்பதை
அவனால் புரிய முடிந்தது.
அதற்க்கான காரணத்தை அவன் ஏற்க்கனவே அதிபருக்கு சொல்லிவிட்டான்.
“ஒரு சில காரணங்களுக்காக யேர்மனியிலை இருந்து திரும்பி வந்திருக்கிறம். எங்கடை
பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் சொல்லிக்
கொடுக்கிறத்துக்கு இந்த மகளிர் பள்ளிக்கூடம் ஒரு சிறந்த இடமா இருக்கும் என்று தான்
நான் நினைக்கிறன்.”
பதிலுக்கு எதையோ சொல்ல எத்தனிக்கும் போது அவளின் கைத்தொலைபேசி சிணுங்கியது. கத்தும்
என்னை விட சிணுங்கும்
கைத்தொலைபேசிக்கு அதிக கவனம் செலுத்திய உதவியாளர் கைப்பேசியை காதிலே பொருத்தியபடி
யாருடனோ சிரித்துச் சிரித்து
பேசிக்கொன்டாள். தன் சிரித்த முக்தை நான் பார்ப்பதை விரும்பாமலோ அல்லது இரகசியம்
காக்கும் காரணமாகவோ பக்கத்து அறையைத்
திறந்து உள்ளே நுளைந்து கதவை தாளிட்டுக் கொண்டாள். கட்டுக்களை அறுத்துக் கொண்ட பழைய
நினைவுகள் யேர்மனிக்கு ஓடியது.
அவனது மகள் வான்மதியின்; சான்றிதழ்களை எடுத்து வரவேண்டியும் வகுப்பாசிரியரான
திருமதி வலன்ரீனாவுக்கு விடை
சொல்வதற்க்காகவும றோசன் பிளர்ச் பாடசாலைக்கு இறுதியாக ஒரு நாள் அவன் போயிருந்தான்.
அவர்களின் வருகையினை முற்கூட்டியே அறியத் தந்ததினால் பள்ளிக்கூட அதிபர்
டிக்மானையும் வலன்ரீனாiவுயும் இலகுவாக சந்திக்கும்
வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுக்குள் அங்கே நிலவிய மௌhனத்திரையை வலன்ரீனாவே
உடைத்தார்.
“குறை நினைக்கக் கூடாது வருணன். விடுமுறைக்குக் கூட இலங்கைக்குப் போகக் கூடாது
எண்டு தானே யேர்மன் அரசாங்கம் சொல்லுது.
ஏனென்டா அது ஒரு பயங்கரமான நாடு. ஆனா நீங்கள் செய்யிறது ஏன்எண்டு தான் எனக்கு
விளங்கேல்லை…. கொஞ்சம் கூடப் பயம்
இல்லையா ..? ”
கண்ணாடியை தலைக்கு மேலே உயர்த்திவிட்டு வருணனின் கண்களை அவள் நேராக ஊடறுத்தாள்.
“உண்மை தான் திருமதி வலன்ரீனா …ஆனாலும் ஒரு சில தனிப்பட்ட தவிர்க்க முடியாத
காரணங்களுக்காவும் கூடவே வான்மதியின்
தாத்தா பாட்டி எல்லாரும் அதே யுத்த பூமியிலை இருக்கிற தாலையும் மிக முக்கியமா எங்கட
பண்பாடு பழக்க வழக்கங்களை எல்லாம்
என்ர பிள்ளையளுக்கு ஊட்ட வேண்டி இருக்கிறதாலையும் தான் நான் இலங்கைக்கு போறன்.”
“எது எப்பிடியோ ஒரு கெட்டிக்காரப் பிள்ளையை இழக்கிறதிலை எங்களுக்கு கவலை” என்றபடி
அவர் முடிக்கவும், அதுவரை அமைதியாக
இருந்து கேட்டுக்கொண்டிருந்த அதிபர் டிக்மான் “எப்பவும் இந்தப்பள்ளிக்கூடத்திலை
வானதி வந்து படிக்கிறத்துக்கு நாங்கள் ஆர்வமா
இருக்கிறம் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்த டிக்மானின் கண்கள் நீரை உதிர்த்தன. அவர்கள்
இருவரும் வான்மதியை ஆரத்தழுவி முத்தம்
கொடுத்தபடி வழி அனுப்பி வைத்தனர். பாடசாலைக்கல்வி என்பது அங்கே வேறுவிதமானது.
மாணவர்களும் ஆசிரியர்களும் இடையில்
நட்புக்கலந்த உறவிருக்கும். ஆதலால் தான் மாணவர்களின் உளத்தை ஆராய்ந்து தங்களின்
கட்டுப்பாட்டிலே வைத்திருக்கிறார்கள்.குரு
சீடன் எனும் நிலை மாறி நண்பர்கள் என்ற வட்டம் அங்கே கட்டப்படுகிறது.
கதவு திறக்கும் ஓசை கேட்டது. சிரித்த மிச்சம் முகத்தில் இருக்க உள்ளே நுழைந்தார்
கொழும்பு
மகளிர் கல்லூரிáன் உதவியாளர். “வருணன் உங்கட தமிழ்ப் பற்றையும் பண்பாட்டிலை நீங்கள்
கொண்டிருக்கிற ஆர்வத்தையும் நான்
பாராட்டிறன். ஆனாப் பள்ளிக்கூடத்திலை தான் இட நெருக்கடி.” இடம் கிடயாது என்பதற்கான
பீடிகை தான் அதுவென்று வருணனுக்கு
விளங்கியது. ஏதோ கூட்ட்தில் கலந்து கொள்வதாக சொல்லப்பட்ட அதிபரை ஏனோ இன்னும்
காணவேáல்லை.
“ஒரு விசயம் அம்மணி வெளிêரில இல்லாத படிப்போ இல்லாட்டி கொழும்பிலை இருக்கிற
சர்வதேசப்பாடசாலைகளிலை இடம் எடுக்க
முடியேல்லை என்டோ நான் இங்கை வரேல்லை” வார்த்தைகளைக கொஞ்சம் கடுமையாக்கினான்
வருணன்.
“எதுக்கும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ இடம் கிடைச்சா தகவல் தாறம் என்றார்
உதவுயாளர். சரி இப்ப நீங்கள் போறது நல்லது என்பது போன்றிருந்தது அந்த சமாளிப்புக்
கேள்வி . “ அது மட்டும் பிள்ளை பள்ளிக் கூடம் போகாமல் வீட்டிலையோ குந்தி
இருக்கிறது” என்று கேட்டவன் இனியும் இங்கிருப்பதில் பயனில்லை என்பதனால் நன்றி கூறி
வெளியேறினான். இவனுக்காகவே காத்திருந்தவன் போல வாயில் காவலன் இவன் காதருகினில்
வந்து குசுகுசுத்தான். “இரண்டு இலட்சம் தாங்க….. நாளைக்கே இடம் என்றான்;.” நல்ல
காவலாளி நல்ல நிர்வாகம் பாவம் சனம் என்றது மனம்;. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க
நினைத்த பண்பாடுகளில் ஒன்றை கொழும்பின் மகளிர் பாடசாலை ஒன்று அவனுக்கு
சொல்லிக்கொடுத்து விட்டது எனும் நினைப்போடு
ள்வத்தை தெருவிலே வாகன நெரிசலுக்குள் மகளோடு கரைந்து போனான் வருணன். போர் மட்டுமா
எம்மை அழிக்கிறது !!
maduvilan@hotmail.com. |
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|