குகன்
சூரியனை
நோக்கி ஒரு படகு செல்வதுப் போல் காட்சி.தமிழக எல்லையை நுழைந்து தமிழகத்தை நோக்கி
வந்துக் கொண்டு இருக்கிறது. ரம்யா தன் சிறு பொம்மை வைத்துக் கொண்டு தன்னை சுற்றி
என்ன நடக்கிறது என்று தெரியாமல் வருகிறாள்.
" தாத்தா... நாம்ம எங்க போரோம்...! அம்மா, அப்பா எப்போ வருவாங்க்"
ரம்யாவின் மழலைக் கேள்விக்கு அவள் தாத்தா சங்கரன் கண்ணீரில் பதில்ளித்தான்.
" நாம்ம வேற ஊருக்கு போறோம்...நாம்ம போனதும் அவங்க வருவாங்க"
இலங்கை ராணுவ தாக்குதலில் ரம்யாவின் அப்பா,அம்மா இருவரும் கொல்லப் பட்டனர்.தன்
பேத்தி ரம்யாவின் உயிரையாவது காப்பாற்ற தமிழகத்தில் அகதிகளாக் சங்கரன் வருகிறான்.
மழலைப் பேச்சு துடுக்கெனும் குணம் ரம்யாவுக்கு.... று வயது தான் இருக்கும்.
இலங்கையில் என்ன நடக்கிறது என்றுக் கூட தெரியாது.புது ஊருக்கு போகும்
மகிழ்ச்சியில் இருக்கிறாள்.
"தாத்தா. ஊருக்கு போனதும் ஹேமாவுக்கு ஒரு அழகான பொம்மை வாங்கனும். அவளுக்கு
அடுத்த வாரம் பிறந்த நாள் வருது"
பாவம் ஹேமாவும் அவள் பற்றோரும் ராணுவ தாக்குதலில் இறந்ததை அந்த பிஞ்சுக்
குழந்தைக்கு எப்படி சொல்லி புரிய் வைப்பது.
இலங்கை அகதிகள் எல்லோரும் ரமணாதப்புரத்தில் வந்தடைந்தனர். ஒவ்வொருவரின் மனதில்
தாய் நாட்டை இழந்த சோகம், உறவுகளை இழந்த தூக்கம். னால் ரம்யாவுக்கு மட்டும் புது
ஊருக்கு வந்த மகிழ்ச்சி.
அரசாங்க அதிகாரி ஒவ்வொருவரின் பெயரை எழுதிக் கொண்டு இருந்தார்.ரம்யா சையாக
மேஜையில் இருக்கும் அதிகாரியின் பேனாவை எடுத்தாள்.
"ஏய் யார் நீ !... போய் உன் இடத்துல
உக்காரு..." மிரட்டலாக பேசினார்.ரம்யா பயந்து தன் தாத்தாவிடம் ஒடி வந்தாள்.
"ஏன் தாத்தா எல்லோரும் இங்க வந்தோம்.எல்லோரும் ஏன் அலுவுறாங்க !. அம்மா, அப்பா
எப்போ வருவாங்க ?"
"வருங்வாங்கம்மா ......"
"இங்க இருக்குறவங்கள பார்த்தா பயமா இருக்கு. நம்ம ஊருக்கே போலாம் தாத்தா.."
"முடியாதும்மா... அங்க சண்டை நடக்குது. நாம போகக் கூடாது !"
"ஏன் சண்டை நடக்குது ?"
ரம்யாவின்
கேள்விக்கு சங்கரனால் பதில் சொல்ல முடியவில்லை. இருந்தும் சங்கரன் பதில்
அளித்தான்.
" சண்டைப் போட்டு யாரு ஜெய்கிறாங்களோ அந்த இடம் அவங்களுக்கு சொந்தம். சண்டை
முடிஞ்சதும் நாம போலாம்"
"தாத்தா ! அங்க சண்டை எப்போ முடியும்... நாம ஏப்போ திரும்பி அங்க போவோம்"
இதற்கு பதில் ??????
ஒவ்வொரு இலங்கை தமிழர்களுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். காலமே
உன்னிடமாவது பதில் உண்டா......
jbkannan@rediffmail.com