| 
நாம் கடவுள்!
 - கடல்புத்திரன் -
 
 
  எல்லாருமே 
தெரிந்த முகங்கள் தான்.வந்திருந்த அவர்களில் 2 பேர் வீதியில் துப்பாக்கிகளுடன் நிலை 
எடுத்து நிற்க,செந்தில், 2 பேருடன் சந்திரனின் வீட்டு படலையை திறந்து கொண்டு உள்ளே 
வந்தான். அவன், பலம் வாய்ந்த இயக்கமொன்றின் பிரதேசப் பொறுப்பாளன். கட்டைத் 
தோற்றம்,சிறிய பளிச்சிடும் கண்களை உடைய சிரிச்ச முகம்.சாதாரண தன்மைக் கொண்ட அவன் 
அவ்வியக்கத்திற்கு பொருத்தமற்றவனாக இருந்தான்.
அமைதியான வாழ்வையும்,அகிம்சையான போக்குகளையும் கொண்ட தமிழினத்தை விடுதலைப் 
போராட்டம், ஆயுதங்களை தூக்க வைத்திருக்கிறது, பல்வேறுப்பட்ட கலவைகளிலும்... 
பெடியள்களை அடியோடு மாற்றியும் விட்டிருக்கிறது. 
 செந்தில்,தொளதொளத்த பெரிய சேர்ட்டை அணிந்திருந்தான்.இடுப்புப் பகுதியில் ரிவால்வரை 
மறைத்து வைப்பதற்கு சாதகமானது.
 
 தன்னை கைது செய்யத் தான் வருகிறான் என்பது சந்திரனுக்கு புரிந்தது.இவனுடைய 
இயக்கத்தை, அவர்கள் தடை செய்து 2 கிழமைக்குப் பிறகு தாமமாக....வருகிறான்.
 
 "தோழர்,உங்களை விசாரிக்க அழைத்து வரச் சொல்லி கட்டளை.ஒத்துழைக்க வேண்டும்”என்றான்.
 
 பயபிராந்தியுடன் பார்த்துக் கொண்டிருந்த வசந்தியையும்,ஆசிரியரையும் பார்த்து 
முறுவல் பூத்தான்.
 
 “பயப்பிடாதிங்கோ மாஸ்ரர்! சந்திரனை பின்னேரம் அல்லது நாளைக்கு விட்டு 
விடுவார்கள்.இது வழக்கமாக நடக்கிற விசயம் தான்” 
என்றான்.அவர்களுக்கு சிறிது மூச்சு வந்தது.செந்தில், அவருடைய மாணவன் தான்.ஆனால், 
மாணவர்கள் எல்லோரும் 10-15 
இயக்கங்களில் அல்லவா சிதறுப்பட்டு இருக்கிறார்கள்!,ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி 
செய்ய நினைத்தாலும் பெரியளவில் உதவி செய்ய
 முடியாத நிலை.
 
 “அண்ணா..!” என்று அழத் தொடங்கிய வசந்தியை, “அம்மா படத்தை போய் கும்புடு,ஒரு 
பிரச்சனையும் வராது”என்றான் சந்திரன்.2 
வருசங்களுக்கு முன் ‘சந்திரனைக் காணவில்லை’என்ற ஏக்கத்துடன் தேடி 
அலந்தவர்,இதயநோய்யில் விழுந்து ...தீடிரென இறந்தும் 
போய்யிருந்தார்.சந்திரனுக்கு அம்மா மேல் பாசம் தான். ஆனால்,விடுதலைச் சூழலில் காலை 
வைத்த பிறகு,அது அவனை,எங்கேயோ அல்லவா இழுத்துச் செல்லுகிறது.
 
 கடந்த வருடத்தில் சந்திரனின் இயக்கம் ஓரளவு பலமானதாகவே இருந்தது.ஆயுதங்கள் குறைவாக 
இருந்தாலும் வறுமை என்ற நிலை 
இருக்கவில்லை.மணல்ப் பிரச்சனை ஒன்றில்,ரவி,பாபு� ...ஆகியோரைப் செந்திலின் இயக்கம் 
பலாத்காரமாக விசாரிக்க என பிடித்துக் 
கொண்டு போய் விட்டது.சந்திரன்,சிறு ஆயுதங்களைத் தாங்கிய பரிவாரங்களுடன்,செந்திலின் 
காம்பிற்கே நேர போய், தம் பெடியள்களை விடச் சொல்லிக் கேட்டான்.
 
 “மத்திய பகுதியைச் சேர்ந்தவர்கள் பிடித்திருக்கிறார்கள். கூடுமானவரைக்கும் நீ,இங்கே 
வராதே. உன் பெடியள்களில் ஒருத்தனை அனுப்பி விசாரி, போதும்.தகவல்கள் தெரிந்தால் 
சொல்லி அனுப்புகிறேன்”என்று செந்தில் அவன் வாரதில் உள்ள அபாயத்தையும் உணர்த்தினான். 
2 பேர்களையும் அவர்கள் உடனடியாக விட்டு விடவில்லை.சந்திக்கு,சந்தி இவனுடைய 
ஆட்களும், அவனுடைய ஆட்களும் ஆயுதங்களுடன் நிற்கிற முறுகல் நிலை ஏற்பட்டது.சுடுபட்டு 
விடப்� போகிறார்களோ? என்ற பதட்டம் கூட... அதிகரித்தது.சந்திரன் 
பகுதியில்,இந்தியாவில் பயிற்சி பெற்று வந்திருந்த உடம்பு வைத்திருந்த பல பெடியள்கள் 
இருந்தார்கள்.கையில்,சிறு ஆயுதங்களே இருந்தன.செந்தில் 
பக்கத்தில்,உள்ளூரில் பயிற்சி பெற்றவர்களே,உடல் பொலிவானவர்களாக 
இருக்கவில்லை.ஆனால்,நவின ஆயுதங்கள் வைத்து இருந்தனர்.2 கிழமைக்கு மேலாக இழுபட்ட 
பதட்டம் அவர்களை விடுவித்ததோடு அடங்கியது. 2 பகுதிகளும்,மேற்கொண்டு ஒருத்தரை 
ஒருத்தர் விமர்சிக்காமலும்,பழிவாங்கலில் இறங்காமலும் அமைதியாகி விட்டன.புயல் ஒய்ந்த 
மாதிரி இருந்தது.
 
 ஒவ்வொரு இயக்கங்களும்,புருசன் பொஞ்சாதி போல 2 துருவங்களாகவே எப்பவும் நடத்தைகளைக் 
கொண்டிருந்தன.விடுதலைப் போராட்டம் பொதுவானதாக இருந்தாலும், புருசனின் 
ஆட்கள்,பொஞ்சாதியின் ஆட்கள்..என பிரிபாடுகள்� உள்ளுக்குள்ளே ஆழமாக ஊடுருவினது 
போலவே,உன்னுடைய இயக்கம்,என்னுடைய இயக்கம்...என்ற முட்சட்டைகளை போட்டுக் கொண்டு 
தானிருந்தார்கள். அதனால்,சண்டை பிடித்துக் கொண்டிருக்கும் போது,எதிரியின் 
பக்கத்தில் இருந்து மட்டும் தான் துப்பாக்கிக் குண்டுகள் 
வரும் என்பதில்லை,பின் பக்கமிருந்தும்... வரலாம் என்ற நிலமை இருந்தது.
 
 செந்திலுக்கு,சந்திரன் மேலுள்ள பாசத்தால் பரிதவித்த பார்வதி ரீச்சரின் களைத்த முகம் 
ஞாபகம் வந்தது.ஆசைக்கொன்று,ஆஸ்திக்கு 
ஒன்று..இருந்ததில் சந்திரன் வீட்டை ஓடினால்...அவர்,என்ன தான் செய்வார்?பார்வதி 
ரீச்சரின் தம்பி ஒருவர்,கொழும்பில் மகாராஜாவின் 
கம்பனியில் நல்ல வேலையில் இருந்தார்.A/Lஐ ஒரு தரம் எடுத்தவுடனேயே சந்திரனை,அவர் 
கொழும்பிற்கு கூட்டிச் சென்று 
விட்டார்.அங்கேயே அவனுக்கும் சிறு வேலை கிடைத்தது. அவனை,விடுதலைப் 
போராட்டத்திற்குள் அறுந்த அரசாங்கம் தள்ளி விடாமல் இருந்திருந்தால்... 
ICMA,சார்ட்டட் எக்கவுண்ட் என பரீட்சைகள் எழுதி வசதியான, நிம்மதியான வாழ்வையும் 
பெற்றிருப்பான்.
 
 காலம் கொடியதே!அவன்,83ம் ஆண்டு கலவரத்தோடு பலவித மனப்பதிவுகளுடன், மாமியையும்,அவரது 
2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் கப்பலில் அகதியாக வந்து இறங்கினான்.
 
 மாமா,கொழும்பு வீதியில் காரோடு� எரிக்கப்பட்டு விட்டார்.எந்த அடையாளமும் 
கிடைக்கவில்லை.சொந்த மண்ணிலே எவ்வளவு 
இழிவானதும்,அதுவும் எத்தனை வலியுடன் கூடிய சாவு.
 
 இந்த நாட்டுக்கு தமிழர்கள் வேண்டாமென்றால்,ஒரு காலத்தில் சிங்களவர்களும் வேண்டாம் 
என்றே வரலாறு திருப்பி எழுதும்,ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.நேரம் என்பது 
மாறி, மாறி வருவதொன்றாயிற்றே!ஒரு ஆளுக்கு ஒரு நேரம் என்றால்,மற்றவருக்கு இன்னொரு 
நேரம். அதனாலே, காந்தியடிகள்,புத்தர் போன்றவர்கள் அகிம்சையை பின்பற்றுங்கள் 
என்கிறார்கள். எங்கள் நாடு,எங்கள் தேசம் என 
பிடிவாதம் பிடிக்கிற நாடுகளையும்,தீவுகளையும் இயற்கை,மணலால் மூடியோ,நிலத்தை பிளக்க 
வைத்தோ அல்லது கடல் கொள்ளல் 
மூலமாகவோ அழித்தும் விடுகிறது.’சுனாமி’யும் ஒரு சிவப்பு நிற சைகை தான்.
 
 செந்திலின் வீட்டுக்கு அண்மையில் தான் சந்திரனின் மாமியின் குடும்பம் குடி வந்தது. 
சுந்தரமும்,தில்லையும் சரளமாக ஆங்கிலம் 
பேசுவதைப் பார்க்க அவனுக்குள் பொறாமை எழும்.நல்ல நண்பர்களாகவே பிழங்கினார்கள். 
‘கொழும்பர்’என்ற கர்வம் அவர்களிடம் இருக்கவில்லை.மாமி ,மற்றய சகோதரர்களின் 
உதவிகளுடன் ஒருமாதிரியாக அவர்களை வெளிநாட்டுக்கு... அனுப்பி விட்டார்.அந்த 
நேரத்திலே, சந்திரன் இயக்கத்தில் ...ஓடியிருந்தான்.
 
 தமிழ்க்கட்சிகளின் தலைவர்களின் ‘கொள்கைகள்,இனிமேல் அகிம்சைவழியில் போராடுவது 
பயனற்றது’ என்ற திருப்பப் புள்ளியை 
அடைந்திருந்தது.ஆனால்,அவர்கள் மேற்குலகம்(முதலாளித்துலகம்) பரப்பி விட்ட 
மார்க்சிசம் எதிர்ப்புச் சிந்தனைகளைக் கொண்ட 
பலவீனமானவர்களாக, அதிலிருந்து மீள முடியாதவர்களாகவே இருந்தார்கள்.அவர்களையும் குறை 
கூற முடியாது.ஏனெனில்,நாம் பயின்ற கல்விமுறை,அவர்கள் கொண்டு வந்து புகுத்தியது... 
தானே!சித்தர்களால், பலவித சோதனைகள் செய்து கண்டறிந்த பழைய கல்வி 
முறையையும்,பௌத்தர்களாலும்,சமணர்களாலும் செப்பனிடப்பட்டு மேன்மை பெற்றிருந்த சுய 
கல்விமுறைகளையும் அழித்து தான் பிரித்தானியக் கல்வி முறை, பலவித நாகரீக மயக்கங்களை 
ஏற்படுத்தி, கிருஸ்தவ மதத்தையும்,ஆங்கில மொழியையும் பரப்புவதற்காக நம்நாட்டில் 
புகுத்தப் பட்டது.
 
 கல்விமுறையில், இந்த ஆராய்ச்சி எல்லாம் எதற்கு? ஆனால்,இந்த கல்விமுறையில் 
பெண்னடிமைத்தனங்கள் குறைந்து சம 
அந்தஸ்துகள் பெறுவதாக நம்பெண்களும் நம்புகிறார்கள்.அது தான் பிரச்சனையாக 
இருக்கிறது.இவர்களுக்கு பழைய கல்விமுறைகள் ... 
இருந்தன என்பதே தெரியாது.இந்த முறையில் படித்தவர்கள்,மார்க்சிசம் பற்றிய அரசியலை, 
கல்வியை, வரலாறை... படிப்பதென்றால், அரிச்சுவடிகளிலிருந்து படிக்க வேண்டியவர்களாக 
இருக்கிறார்கள்.அது, முற்றிலும் வித்தியாசமான இன்னொரு கல்விமுறை.விடுதலைப் 
போராட்டத்திற்கு மார்க்சிசமுறைகள்... தான் தேவைப்படுகின்றன.ஆயுத எழுச்சிகளை ஒழுங்கு 
படுத்தி,சரியான வியூகங்களை அமைத்துக் கொள்வார்களானால்,சூரியன் அஸ்தமிக்காத 
சாம்ராச்சியங்களையும்,அசைக்க முடியாத சாம்ராச்சிய பலமுள்ளவர்கள் என கொக்கரிக்கிற 
உலகத்தை அடியோடு புரட்டிப் போடுற வலிமையைப் பெற்று விடுவார்கள்.கல்விமுறையூடாக 
கற்று வருகிற ஒரு பாடமாக மார்க்சிசம் இல்லாததால்,தமிழ் இனப்பற்றுள்ள 
தலைவர்களால்,விடுதலைப் போராட்டத்தை நடத்த முடியவில்லை.
 
 இளைஞர் பிரிவினர்,படித்த ,படியாத கல்வி என்றெல்லாம் பார்க்க விரும்பவில்லை.புதிய 
கல்வியா?தேவையான கல்வியா?,இப்பவே 
தொடங்குவோம்... என்று கர்வமற்றவர்களாக ...தலை,கையை, காலையெல்லாம் நுழைத்துக் 
கொண்டார்கள்.ஆனால்,இவர்களது 
அத்திவாரமும் மேற்குலகம் சார்ந்த கல்விமுறையில் தான் கிடந்தது.அதனால் அடிக்கடி 
குழம்பி,மற்றவர்களையும் குழப்பிக் 
கொண்டார்கள்.கையில் ஆயுதங்கள் இருந்ததால்,புரட்சியின் அவசர போக்குகளால் தம்பக்கத்து 
ஆட்களையே சுட்டுத் 
தள்ளுவதும், புதைப்பதுமான..திகைப்பான ஒரு காட்டினுள் அகப்பட்டிருந்தார்கள்.
 
 திரைமறைவில் இயங்கிய பிரிவுகளாக அந்த இளைஞர்கள் இருந்ததால், அன்று ,சந்திரன் போன 
இயக்கம் பற்றிய விபரம் செந்திலுக்கு உண்மையிலே தெரிந்திருக்கவில்லை.
 
 ரீச்சரின் மகனே,விடுதலைக்காக... போய் விட்டான்!நான், இன்னமும் போகவில்லை’என்ற குரல் 
தான் அவனுள் சதா ஒலித்துக் 
கொண்டிருந்தது. ‘ஒன்றினுள் நுழையாத வரைக்கும்,அதைப் பற்றி தெளிவாக தெரிய 
வராது’என்பதை உணர்ந்த போது, அவனும், களவாக 
ஓடித்திரிகிற ஒரு பெடியள் அணியோடு போய் சேர்ந்து கொண்டான். வீட்டில் இருந்து 
கொண்டே...தான் அவன் திரிந்தான்.
 
 �பார்வதி ரீச்சரின் நம்பிக்கை குறைந்து போய்க் கொண்டிருந்தது.தேடி,தேடி..அலைந்து 
களைத்து அவர் வீடு திரும்புறதைப் பார்க்கிற போது பாவமாக இருக்கும்.அவன் சேர்ந்ததை 
யார் மூலமாகவோ ...அறிந்தவுடன் அதிகாலையிலே, வசந்தியோடும், சினேகிதி ஒருத்தியோடும் 
அவன் வீட்ட வந்து விட்டார்.
 
 “தம்பி,அவனைப் பற்றி சேதி ஏதும் உனக்கு தெரியுமா?தேடிப் பார்க்கிறாயா?”இரந்து 
கேட்டார். “உன்ர இயக்கத்தில் இருந்தால் உனக்கு
 கட்டாயம் தெரிந்திருக்கும்”என்று அவர் அழுகையோடு கேட்டது அவன் மனதை என்னவோ செய்தது.
 
 “கட்டாயம் விசாரிச்சு சொல்கிறேன். ரீச்சர்,மனசை தளர விடாதீங்கோ.நல்லாத்தான் 
இருப்பான்”என்று நம்பிக்கையோடு 
சொன்னான்.செந்திலின் அம்மா, “என்ன ரீச்சர் இந்த காலை நேரத்தில்...!”என்று அவரை 
உள்ளே அழைத்துக் கொண்டு போய், ஆதரவாக கதைத்தார்.ஒரு தாய்யின் தவிப்பு இன்னொரு 
தாய்க்குத் தெரியும் போல இருந்தது.சந்திரன் போன இயக்கம் பற்றிய தகவல்களைத் தெரிந்த 
போது,உடனேயே பார்வதி ரீச்சரை சந்தித்து, “இங்கே,உள்ள பெடியள்களை போய் 
விசாரியுங்கள்.விபரம் சொல்லுவார்கள்.நான் ,சொல்லேலை..அவன் நல்லாய்யிருப்பான்! 
என்று,இந்தியாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறான்”என்று தெரியப் 
படுத்தினான்.அன்று அவர் வீட்ட குடித்த ‘டீ’யின் இனிப்புச் சுவை... இன்னமும் அவன் 
நாவில் இருக்கிறது.
 
 பிறகு,அவர்களிடமிருந்து சந்திரன் எழுதிய கடிதத்தையும் பெற்றார்.அவர் முகத்தில் சிறு 
மலர்ச்சி ஏற்பட்டது.அவர்,எழுதிய கடிதம் அவர்கள் மூலமாக சந்திரனைச் 
சென்றடைந்ததா?என்பதெல்லாம் தெரியாது.கடலில்,சிறிலங்காவின் காவல் நாய்களான கடற்படை 
கொலை வெறியுடன் சதா திரிந்து கொண்டிருந்தன. வள்ளங்கள்,அடிக்கடி சூட்டுக்கிலக்காகி 
கடலில் கவிழ்ந்து, அதிலிருப்பவர்கள் தத்தளித்து� பிணங்களாக மிதப்பது தொடர் சோக 
காவியமாகவே... இருந்தது. இயக்கங்களின் தபால்ச் சேவைகள் அவ்வள்ளங்கள் மூலமாகவே 
நடந்தன.��
 
 சந்திரன் திரும்ப முதலே,ரீச்சருக்கு திடீரென இருதய நோய் ஏற்பட்டு, இறந்து விட்டார். 
“அவன்ர கவலை தான் இவரைக் கொண்டு போய் 
விட்டது”என்று வீட்டிலே எங்கம்மா அடிக்கடி கரைவார்.வாகன குலுக்கலில் செந்தில், பழைய 
நினைவுகளிலிருந்து சுயநினைவுக்கு வந்தான்
 .
 
 “உன்ர இயக்கம் தடை செய்யப்பட்டு 2 கிழமைக்கு மேலாகிறதே,கொழும்புக்காவது போய் 
இருக்கலாமே?”என்று கேட்டான்.
 
 “அங்கே,போகப் பிடிக்கவில்லை”என்றான்.
 
 83 கலவரம், பல பெடியள்களுக்கு கொழும்பை பிடிக்காமல் தான் செய்து விட்டிருக்கிறது.
 
 “இயக்க அரசியல் தெரியும் தானே!,ஏன் அகப்படுற மாதிரி வீட்டிலே இருந்தாய்?”செந்தில்.
 
 “வெளி நாட்டுக்கா! சாவுக்கு பயந்து ஓடச் சொல்கிறாயா?”சந்திரன்.
 
 “ஒவ்வொரு இயக்கமும், மற்ற இயக்கப் பெடியள்களை தம்மை தகர்க்க வைக்கப் பட்ட பெரிய 
குண்டின் எரிந்து வார திரியாகத் தான் 
பார்த்து பயப்பிடுகிறார்கள்.உள்ளுக்க இருக்கிற எம்மையே விசாரிக்கிறது ..என்று 
அழைத்தால் ‘தண்டனை நிச்சியம்’என்று தெரிகிறது.நீ, வெளிய இருந்து வாரவன்,புதைத்தும் 
விடுவார்கள்” செந்தில்.
 
 “அப்படி விசாரிக்கிறதுக்கு என்னிடம் என்ன தான் இருக்கிறது!,தொடர்புகள் எல்லாம் 
அறுந்து அனாதையாய் இருக்கிறேனே”என்றான்
 சந்திரன்.
 
 “நீ,உங்கட ஆயுதங்களை எங்கேயோ நிலத்திற்கு கீழே புதைத்து 
வைத்திருக்கிறீயாம்”செந்தில்.
 
 “மற்ற இயக்கங்களிடம் இரவல் வாங்கி,வாங்கியே... பாவித்தது,உனக்கு தெரியாதா?”கேட்டான் 
சந்திரன்.
 
 செந்திலுக்கு தெரியும்.அந்த இக்கட்டான சம்பவமும் ஞாபகம் வந்தது.கோப்பாய் 
வெளிவீதியில் சந்திரனின் குழு,2 எ.கே 47 உடன்,கொஞ்ச 
ரவைகள்,சில கிரனைற்றுக்கள் கையிருப்பில் ...வாகனத்தில் சென்று கொண்டிருந்தது.உலங்கு 
வானூர்தியில் பறந்த படையினர் 
அவர்களைப் பார்த்து விட்டார்கள்.தனி வாகனம்.எனவே,வாகனத்தை நோக்கி சுட்டுக் கொண்டு 
மள,மளவென கயிற்றின் மூலம் நிலத்தில் 
இறங்கி விட்டார்கள்.இவர்களும் வாகனத்தை விட்டு குதித்து ,நிலை எடுத்து,ஒவ்வொரு 
ரவைகளாக எண்ணி எண்ணி..சுட்டு 
சண்டையிட்டார்கள்.இவர்களின் மாணவப் பிரிவைச் சேர்ந்த தோழன்,கிரனைற்றின் பின்னைக் 
கழற்றி எறியும் போது,படையினரின் 
சூட்டுக்கிலக்காகி இறந்து போனான்.கதிர் வைத்திருந்த எ.கே 47இன் ரவைகள் முடிந்து 
போக, இவர்கள் நிலை சிக்கலானது.பார்த்திபன்,மற்ற 
எ.கே 47ஐ வாங்கிக் கொண்டு “டேய்,நீங்கள் மெல்ல மெல்ல தவழ்ந்து தப்புங்கடா.நான் 
இவங்களை தாக்குப் பிடிக்கிறேன்.என்னைப் பற்றி 
கவலப் படாதீங்கள்”என்று சொல்லி வீரமுடன் சண்டை இட்ட போதும்,தோழனை விட்டு நகர 
அவர்கள் விரும்பவில்லை.அத்தனை பேரும் அகப்பட்டு, சூட்டுக்கிலக்காகும் நிலமை வந்து 
கொண்டிருந்தது. வெளியில், ஓடித் தப்புறதும் முடியாத காரியம்.இந்தச் செய்தி 
மக்களுக்கூடாக பரவி,தினேசின் காதிலே விழுந்தது.அவன்,உடனேயே தன் 2 தோழர்களுடன் 
அவ்விடத்திற்கு விரைந்தான்.தோழர்களிடம் 2 
எ.கே 47உம்,ஒவ்வொருத்தரிடமும் 4-5 ரவைக் கூடுகளும் இருந்தன. “டேய்,ஆமியை 
சுடுங்கடா”என்று கட்டளை இட்டு விட்டு, 
வோக்கியில் செந்திலுடன் கதைத்தான்.அடுத்த 5வது நிமிசம் செந்தில் கொஞ்ச 
பெடியள்களுடன் வாகனத்தில் வந்து இறங்கினான்.இவர்கள் 
பக்கமிருந்து சுட்ட ரவைகள் வானூர்தியை அண்மித்துப் பறந்தன.படையினர்,மள,மளவென 
கயிற்றில் ஏறிக் கொண்டு ...தப்பி 
ஓடினார்கள்.தினேஸ்,சுட்டதில் ஒரு படையினன் கையில் காயப்பட்டிருந்தான்.நிலத்தில் 
அவன் ரத்தம் கொட்டியிருந்தது.
 
 �� பார்த்திபன்,படுகாயம் பட்டிருந்தான்.2 பகுதியும் ஒரு கதையில்லாமல் 
அப்படி,அப்படியியே..பிரிந்து சென்று விட்டார்கள். பார்த்திபன், ஆஸ்பத்திரியில் 
இறந்து விட்டான் ..என கேள்விப்பட்டிருந்தான்.அவனுடைய சவத்தை காவிக் கொண்டு 
செல்லுகையில் சந்திரன் அழுது கொண்டு போனதை, செந்தில், வாகனத்திலிருந்து பார்த்துக் 
கொண்டிருந்தான். ����‘அவர்களிடம் ஆயுதமில்லை’என்பது செந்திலுக்கு நன்கு 
தெரியும்.இருந்தால் ...அன்று, பார்த்திபன் செத்திருக்க மாட்டான்!, இந்த நிலமையில் 
மண்ணுக்குள் மறைத்து வைத்திருப்பதாவது? சந்திரனை,போட்டுத் தள்ளவே முடிவெடுத்து 
விட்டார்கள். அதற்கு ஒரு காரணத்தை ஜோடிக்கிறார்கள். அப்ப, இறந்திருக்க வேண்டியவனை,
 காப்பாற்ற வைத்த விதி, இப்ப கொலைக்களத்திற்கு...  அழைத்துச் செல்கிறது.
 
 “என்னை, உங்கட ஆட்கள் விடப் போவதில்லையா?”சந்திரன் சிறு குழப்பத்துடன் கேட்டான்.
 
 “தெரியாது,விசாரிக்கப் போவது மத்தியக் குழுவிற்கு நெருக்கமாக இருப்பவர்கள்;கொஞ்சம் 
மோசமானவர்கள்”கவலையுடன் சொன்னான்.
 
 “சரி,விடடா! நாம இருந்தும் என்ன சாதிக்கப் போறோம்.நாம்,எப்படி புதிராய் 
பிறந்தோமோ?,அதே போல சாகிறதும்..எம் தலையில் 
ஏற்கனவே, எழுதப்பட்டு விட்டது.அம்மா,சாகலையா!”என்று ரீச்சரையும் ஞாபகப் படுத்தி 
விட்டான்.
 
 “கர்ம வாழ்க்கையை அனுபவித்து,நரை முடி உதிர்ந்து..இயல்பாய் சாகிறது தானே 
நல்லது.வலியுடனும்,வேதனையுடனும் சாகிறதில்.. 
என்ன நியாயம்?”செந்தில்.
 
 சுதாரித்துக் கொண்ட சந்திரன், “மீனை, கோழியை, ஆட்டை, மாட்டை...எல்லாம் உயிரோடு 
அறுத்தே...சாப்பிடுகிறோமே,அதுவும் எங்களைப் போல உயிரினம் தானே!அதில்,எங்களுக்கு 
குற்றவுணர்வு இருக்கிறதா? இல்லையே!வாழ்க்கை வட்டத்தில்,நம்மை சாப்பிடுற மிருகம் 
என்று..,ஒன்று மேலே இருக்குமானால்...நம்மால் இப்படி எல்லாம் பேச முடியுமா?”என்று 
வேதாந்தி போல கேட்டான்.ரீச்சர்ர 
மகனில்லையா,பேசுகிறான்.
 
 “தப்பக் கூடிய வழிகள் இருந்தால்,தப்பித்துக் கொள்வதே அறிவுடமை. ‘எதிரியின் 
வலிமை,எம் வலிமை தெரிந்தவர்களாக தலை நிமிர்ந்து
 வாழ வேண்டும்’என்று வள்ளுவர் சொல்கிறார்”என்றான் செந்தில்.
 
 “என்னை உன்னால் விடவா... முடியும்!,விட்டால்,உன்னை, உயிரோடு விட்டு 
வைப்பார்களா?”கேட்டான் சந்திரன்.
 
 செந்தில் மௌனமானான்.
 
 “விதி வழியே போகிறோம்.என்னத்திற்கு கவலைப் படுகிறாய்? ‘ஒரு பெண்ணோடு வாழவில்லை’என்ற 
குறையா..?” கேட்டவன், நம்பிக்கையற்று சிரித்தான். “வாழா விட்டாலும் அது பெரிய 
விசயமே.. இல்லையடா;எங்களாலேயும், பெண்களை சரிவர 
புரிந்து கொள்ள முடிவதில்லை.அதே போல...அவர்களுக்கும் பெடியள்கள் புரிவதில்லை.2 
துருவங்களாக� பிறிம்பு,பிறிம்பாக 
வளர்கிறோம்;நடத்தைகள் உடையவர்களாக இருக்கிறோம்.படிக்கிறது கூட ஆண்கள் 
கல்லூரி,பெண்கள் கல்லூரி.. என தனித் தனியாகவே 
இருக்கின்றன.20-25 வயசிலே கல்யாணம் நடைபெற்றாலும்... ‘சொல்லித் தெரிவதில்லை என்ற 
பிதற்றல்களால் 2 பகுதிகளும் அதிகம் 
புரிந்து கொண்டு விட முடிவதில்லை.சினிமாவிலே வார காதலோ 
...வன்முறை,கொடூரம்,பேரம்..என காவி இருக்கின்றன.உறவுகள் 
குழம்பிப் போய்யே கிடக்கின்றன. ‘குடும்ப உறவுகளை எல்லாம் அறுத்து எல்லாரையும் 
காயப்படுத்தி வைப்பவள் பெண்’என்ற 
குற்றச்சாட்டு நம்பக்கம் இருக்கிறது.அதே போல ‘பெண்னடிமைத்தனங்கள் செய்பவன் ஆண்’என்ற 
மனோபாவம் அவளுக்கு நெடுகவே இருக்கிறது.ஒருவரை ஒருவர் அறிவியல் ரீதியாக புரிந்து 
கொள்ள வேண்டியது அவசியம்.கல்வியில் ...அதற்கென ஒரு பாடம் தேவைப்படுகிறது.”விட்டால் 
பேசிக் கொண்டே போவான் போல பட்டது.
 
 “அதனால்,பெண்கள் விடுதலைக்கு குறுக்கே தடையாய் இருக்கிறார்கள்’என்பதை 
ஒப்புக்கொள்கிறேன்.அறிவியல் சமூகமாக இருக்க வேண்டும் என்பது சரிதான்.ஆனால்,இவற்றை 
எல்லாம் யார் சிந்திப்பது?செய்வது??போராளிகளால், போராட்டத்தை மட்டும் தான் கவனிக்க 
முடியும்”கேட்டான் செந்தில்.
 
 “சமூகப் பிரச்சனைகளை அலசுவதற்கு பல்கலைக்கழக மட்டத்தில் நிபுணர்க்குழுக்கள்,சனசமூக 
நிலையங்களுக்கு பதிலாக
தொழிற்சங்கள்,தொழிற்கல்வியைப் படிப்பதற்கு கல்லூரிகள்.ஒரு சாதி,தொழிலைக் கற்கலாம் 
என்பதை விட பெடியள்கள் எல்லாத் 
தொழில்களையும் கற்கலாம் என்பதற்குத் தான் கல்லூரி வழியால் தகுதி பெறல்கள்,வெறும் 
இயந்திர,இரசாயன...தொழிற்சாலைகளுக்கு
ஆட்களை தயார் படுத்துற பிரித்தானியக் கல்வியை மாற்றத்திற்குட்படுத்தி எல்லாப் 
பிரச்சனைகளையும் கற்ககக் கூடுயதான பாடங்களை தெரிந்து சேர்க்கப்பட 
வேண்டும்.”சந்திரன்.
 
 “நீ,எனக்கு அரசியல் வகுப்பு எடுக்கிறாயா?”செந்தில் சிரித்தான்.வாகனம், குலுங்கிச் 
செல்லும் நீண்ட ஓட்டத்தில்,அப்படி கதைத்துக் கொண்டு போவது வேடிக்கையாக இருந்தது.
 
 அவர்களுடைய இயக்கமும் லேசுபட்ட இயக்கமில்லை தான்! ‘சிங்கள புரட்சி இளைஞர்களைப் 
போல... அவர்களும், ஒரே 
நேரத்தில்,பரவலாக தாக்குதல்களைச் செய்ய வேண்டும்’என்ற கொள்கையை வைத்திருந்தார்கள். 
‘1-2 நகரங்களை கைப்பற்றிக் கொண்டு போராட்டத்தை தொடர வேண்டும்.ப்பதான்,விடுதலையைப் 
பெற முடியும்’என்று நம்பினார்கள்.தோல்வியடைந்த சிங்கள 
இளைஞர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளவும் முயன்றார்கள்.’அவர்களுடைய 
அனுபவங்கள் எங்களுக்கு பிரயோசனப்படும்’என்ற கணிப்பில் தான்..! உண்மையான 
புரட்சிக்காரர்கள்,எப்பொழுதும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு மதம்,மொழி கடந்து 
ஆதரவாகவே இருப்பார்கள்.அதை சரிவரக் கட்டி விட வேண்டும் என்று 
முயன்றார்கள்.யாழ்ப்பாணக் காம்களில் பல தடவைகள் பல சிங்கள இளைஞர்கள் வந்து மாசக் 
கணக்கில் அங்கேயே தங்கியிருந்தது ..எல்லாம்�� செந்திலுக்கு தெரியும்.சந்திரனின் 
தோழர்கள் அவர்களோடு, 
மற்ற இயக்க ஆட்களும் கதைப்பதற்கும் பல சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
 
 தளத்தில் இப்படி நடக்க..,பின்தளத்தில்(இந்தியாவில்),நிறைய 
பெடியள்களுக்கு(வள்ளத்தில் ஏற்றிக் கொண்டு சென்று)பயிற்சி அளிப்பதிலும் 
ஈடுபட்டார்கள்.தாக்குதல் அணிகளை நடத்த தளபதிகள் வேண்டும்.அனுபவமும்,ஆற்றலும் 
மிக்கவர்களாகவும் தகுதி உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.அதற்காகவே ‘தேர்வுகள் 
செய்து தெரிந்தவர்களை’ லெபனானில் இயங்குற பாலாஸ்தீனவிடுதலைக் குழுக்களில் ஒன்றிடம் 
தொடர்பு ஏற்படுத்தி..., அனுப்பி 6-12  மாசம் என... பயிற்சி 
பெறவும்...வைத்தார்கள்.சிக்கலான போராட்டத்தைக் கொண்டிருந்த அவர்களிடம், வன்முறை 
கலந்த குழம்பிய போக்குகள் கணிசமாக காணப்பட்டன.வந்தவர்களிடம்,பக்க விளைவாக ...அந்தப் 
போக்குகளும் காணப்படத் தொடங்கின.அதனால், அதன் அரசியல் பிரிவில் குழப்பங்கள் 
ஏற்பட்டு, ஸ்டாலின் பிரிவினர்,லெனின் பிரிவினர்...என அதிருப்தி அலைகள் இயக்கத்தில் 
அதிகரித்தன.அவசரப்பட்டு ஸ்டாலின் பிரிவினர்,லெலின் பிரிவினில் 1-2 பேர்களைப் 
‘போட்டுத் தள்ளியும்’ விட்டார்கள்.விளைவாக...அரசியல் பிரிவில், 2-3� �சிதறல்கள் 
ஏற்பட்டன. ராணுவவிதி போலவே, இயக்கத்திலும் �� ‘சேர்ந்தவர்களுக்கு...வெளியேற 
உரிமை... இல்லை!’எனவே,வெளியேறியவர்களை துரத்தும் நடவடிக்கைகளும் ஏற்பட்டன.
 
 பயிற்சியை முடித்தவர்களுக்கு கணிசமான ஆயுதங்களும் அளிக்கப்பட வேண்டும். ‘அதிக 
பயிற்சி முகாமை’ நடத்துற செலவுகளும் அவர்கள் மென்னியை பிடித்தாட்டுவதாட்டியது. 
எம்.ஜி.ஆர், கருணாநிதி...என்ற அரசியலால் ...அவர்களுக்கு தரப்படுகிற பணமும்...  
கூடிக், குறைந்து வந்தது. அதிக சிக்கலுக்குள்ளாகியதானதால் ...செலவுகளை 
சமாளிக்க,திரை மறைவில் சிறிது ‘போதைக் கடத்தலைச்’ செய்யவும் மத்திய குழு 
�திர்மானித்தது. எல்லா இயக்கங்களிலும் இந்த தொய்வுகள் ஏற்பட்டன தான்.
 
 பிரச்சனைகள் தான் என்றும் ஒய்யப் போவதில்லையே!எனவே,இலங்கையிலுள்ள தமிழ் 
மக்களிடமிருந்து� நிதிகள் 
வசூலிக்கப்பட்டும்,பல்லைக் கடித்து கொண்டு காம் செலவுகளில் சிக்கனப்படுத்தியும் 
சந்திரனின் இயக்கம், பெருமளவு ஆயுதங்களை 
வேறொரு நாட்டிலிருந்து வாங்கியது. பல்வேறு விமர்சனக்களுக்குள்ளாகினாலும் 
விடுதலையைப் பொறுத்த வரையில் அவர்கள் ஓரளவு நேர்மையாகத் தான் இருந்தார்கள். 
தற்போதையச் சூழலில், இந்தியா, ‘ஈழத்தமிழர் சார்ப்பாகவே இருப்பார்கள்’என்று 
நம்பினார்கள்.நம்புறதுக்கு காரணங்களும் இருந்தன.ஆனால்,இந்தியா,அத்தனை ஆயுதங்களையும் 
கடலில் வைத்து பறிமுதல் செய்து விட்டது.அது, ‘சார்பு நிலை எடுக்க மாட்டாது’என்றே 
நிருபித்திருந்தது.
 
 ஏற்கனவே,பிரச்சனைகள்,செலவுகள்,ஆயுதப் பற்றாக்குறைகள் என மாட்டுப்பட்டுக் கிடந்த 
இயக்கம்,இந்த பறிமுதலோட... எதிர்காலமற்றுப் 
போய் விட்டது.இருந்த மத்தியக் குழுத் தலவர்கள்,ஆளுக்காள் கொஞ்சப் 
பெடியள்களுடனும்,ஆயுதங்களுடனும் சிதறுப்படத் தொடங்கி விட்டார்கள்.பல அணிகளில் 
தளத்தில் இருப்பவர்களுக்கு, எந்த அணியோட சேர்வதெனத் தெரியவில்லை.போர்முரசைக் கொட்ட 
முதலே அவர்களின் ‘புரட்சி’ தோல்வியடைந்து� விட்டது. !விடியும் வரை காத்திருந்த 
இயக்கத்திற்கு விடியாமலே போய் விட்டது துர்பாக்கியம் தான்.
 
 வெளியாரால்,அங்கொன்றும்,இங்கொன்றுமாக இரு பகுதிகளிலும் தலைவர்கள் 
வேட்டையாடப்பட்டு..சாவைத் தழுவத்
தொடங்கினார்கள்.கடைசியில், தளத்தில் செந்திலின் இயக்கம் அவ்வியக்கத்தையும் தடை 
செய்து விட்டது. ஆனால், அவ்வியக்கத்திற்கு ஆயுதங்களை, ‘நிலத்திற்கு கீழே தாட்டு 
வைச்சு விட்டு,பிறகு எடுத்து பயன்படுத்துறவர்கள்’என்ற பெயர் முந்தி 
...காணப்பட்டது.ஆனால், அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை என்பதை செந்திலின் தலைமைப் பகுதி 
நம்பத் தயாராகவில்லை. தம்மிடமிருந்த, சொற்ப ஆயுதங்களையும் உதவிய இயக்கங்களிடம் 
கையளித்து விட்டார்கள்;இருந்த சொத்துக்களையும்,மக்களிடமே அவசரமாக திருப்பி 
அளித்தும் விட்டார்கள் . ‘சிறு துரும்பு கூட இவர்களுக்கு கிடைக்கக் கூடாது’ என 
வைராக்கியமாக சந்திரன் செயல்பட்டது,இவர்களுக்கு கொதிப்பை வேறு ஏற்படுத்தி இருந்தது.
 
 அவனுக்கு ‘ரீச்சரின் சோக முகம்’ ..திரும்பவும் ஞாபகம் வந்தது.அவன் பேச்சை நம்பின 
வசந்தி, ‘தன்ர மாணவன் பொய் சொல்ல மாட்டான்’நம்பிக்கை கொண்டிருக்கிற ஆசிரியர்..என 
தொடர்ந்தாற்ப் போல ஞாபகம் வந்து அவனை சித்திரவதை செய்தன.சாவிற்கு பயமில்லை என 
நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நிற்பதாக கூறி,வலையில் இலகுவாக விழுந்து விட்ட சந்திரன் 
மேல் கோபமும் வந்தது.விடுதலைக்குப் போராடுறவன் தன்னை உச்சப் பட்சமாகவும் 
காப்பாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க 
வேண்டும்!அது,தெரியாதவனாக இருந்திருக்கிறானே!
 
 சந்திரனை அழைத்துப் போக வேற தோழர்கள் காம்பில் காத்து இருந்தார்கள்.செந்திலுக்கே 
தெரியாதவர்கள். ‘கட்டளை அனுப்புபவர்’ >
அவர்களோடு இருந்தார்.
 
 “எங்கே,இந்த ஆட்டை வெட்டப் போறீர்கள்?”என்று சந்திரன் இகழ்ச்சியாக அவர்களைப் 
பார்த்துக் கேட்டான்.புதியவர்கள்,செந்திலின் 
கண்முன்னாலே,சந்திரனை..அறைந்து,அடித்து விழுத்தினார்கள்.அவன் முகத்தை 
சுளித்தான்.கட்டளைத் தோழரைப் பார்த்து, “அடிக்கத் தான் 
கூட்டி வரச் சொன்னீர்களா?”என்று கேட்டான்.
 
 “நாம்,இதில் தலையிட வேண்டாம்”என்றவர், “இவனை இங்க வைச்சு விசாரிக்க வேண்டாம்.உங்கட 
காம்புக்கு கூட்டிப் போங்கள்” என்றார்.சந்திரனைக் கொண்டு போய் 
விட்டார்கள்.செந்திலின் காம்புக்கு ஆசிரியரும்,வசந்தியும் அடிக்கடி 
எதிர்பார்ப்புடன் வந்து 
விசாரிக்கிறார்கள்.அவனுக்கும் பதில் தெரிந்திருக்கவில்லை.
 
 “மாஸ்டர்,முந்தி ரவி,பாபுவை...ஒரு மாசமாக வைத்திருந்து தான் 
விட்டார்கள்.சந்திரனையும் விட்டு விடுவார்கள்”என்று கூறி அனுப்பி
வைப்பான்.ஆனால்,சுந்தர் கொண்டு வந்த செய்தி,செந்திலை நிலை குலைய வைத்து விட்டது.
 
 “சந்திரனை ‘பார்’த்தடியால் அடித்து கால், கையை உடைத்தவர்கள், அவன் முதுகில் சுடுகிற 
இஸ்திரிப் பெட்டியையும் வைத்து விட்டார்களாம்,அவன் செத்துப் போய் விட்டான்.”
 
 இதை எப்படி..? எந்த மூஞ்சியோடு..? போய் மாஸ்டரிடம் சொல்லுவான்.
 
 “நல்லூருக்கு அண்மையில் தான் அவனுடைய உடம்பையும் ... எங்கையோ போட்டு புதைத்து 
விட்டார்களாம்” சுந்தர் அவனை 
அனுதாபத்துடன் பார்த்தான்.
 
 வேள்விகளையும்,தியாகங்களையும் கண்ட அந்த நல்லூர் மண்,கொடூரங்களையும் காவிக் கொண்டு 
தானிருக்கிறது.
 |