பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
தீபாவளி சிறப்புச் சிறுகதை! |
தினம் தினம் தீபாவளி
- வி.ல.நாராயண சுவாமி ( மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை)
தெருவெங்கும் காகிதக்குப்பைகள் ... சென்னை நகரம் முழுவதுமே புகை மண்டலமாய்க்
காட்சியளித்தது ... அணுகுண்டின் ( ஆடம் பாம் )
ஓசை செவிகளைக் கிழித்துக்கொண்டு மனதுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே
வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சரவெடிகளின்
சத்தம், அந்த வழியாக கடந்து செல்பவர்களின் குலையையே நடுங்கச்
செய்துகொண்டிருந்தது. அங்கிருந்தவர்களுக்கு, தான் ஏதோ இந்திய
நாட்டின் எல்லையில் இருக்கிறோமோ என்பது போல் ஒரு உணர்வு. அந்த அளவுக்கு, தெருவே
வெடிச் சத்தத்தில் அலறிக்கொண்டிருந்தது.
ஆனால் அந்த வானம் மட்டும், பட்டுக் கம்பளம் போர்த்தப்பட்டதுபோல், பூ மத்தாப்புகள்
சிதற சிரித்துக்கொண்டிருந்தது ... வெடியின்
திரியைப் பற்ற வைத்தவுடன் உடனே வெடிக்காமல், சற்று உயரச் சென்று வானத்தைப்
அழகுபடுத்துவதுபோல் அங்கேயே பல
வண்ணங்களுடன் வெடித்துச் சிதறும் வகையிலான வெடிகள் இந்த வருடம் அதிகம்
வந்திறங்கியிருந்தது.
அந்தத் தெருவிலேயே சற்று வசதி படைத்தவன் மகேஷ். மகேஷின் அப்பா ராமலிங்கம் ஒரு
பெரிய தொழிலதிபர். சிறு வயது முதலே,
சகல வசதிகளுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருப்பவன் மகேஷ். ஒரே பிள்ளை என்பதால்,
வீட்டில் இவனை தங்கத் தட்டில்
வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தனர் மகேஷின் பெற்றோர். மகேஷ் இப்போது சென்னையிலுள்ள
பிரபலமான கல்லூரி ஒன்றில்
பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை. சென்னை.
" அம்மா ... ரொம்ப வலிக்குதே ... அம்மா ... அம்மா ... என்னால முடியலங்க ... ரொம்ப
வலிக்குதுங்க ... " - பிரசவ வலியில் துடித்துக்
கொண்டிருந்த செல்வியின் கதறல் அந்த வீட்டையே கலங்கடித்துக்கொண்டிருந்தது.
" கொஞ்சம் பொறுத்துக்கோம்மா ... கணேஷ் ஆட்டோவ கூட்டிட்டு வர போயிருக்கான் ...
இப்ப வந்துடுவான் ... கொஞ்சம் வலிய
தாங்கிக்கோம்மா ... " - செல்வியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள் அவளின்
மாமியார்.
" ரொம்ப வலிக்குதும்மா ... என்னால தாங்கவே முடியலம்மா ... ".
செல்விக்கு, இது முதல் பிரசவம் என்பதால், பயம் கலந்த கண்களுடன் வலியில்
வாடிக்கொண்டிருந்தாள்.
மூச்சிரைக்க ஆட்டோ நிறுத்தத்திற்கு ஓடி வந்த கணேஷுக்கு பேரதிர்ச்சி
காத்திருந்தது. தீபாவளி என்பதால் ஆட்டோ எங்குமே
இல்லாததைப் பார்த்த கணேஷின் மனம் பதறியது. என்ன செய்வதென்றே புரியாமல்
திகைத்துப்போய் நின்றான். அப்போதுதான் தூரத்தில்
ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அந்த ஆட்டோ சவாரியுடன் வந்து
கொண்டிருப்பதை ஓரளவு அருகில் வந்தவுடன்தான்
கணேஷால் உணர முடிந்தது. வேறு வழியே தெரியாமல் இறைவனை வேண்டிக்கொண்டு நடுரோட்டில்
அந்த ஆட்டோவை நோக்கிப்
பாய்ந்து அதை வழிமறித்தான்.
" சார் ... என்னோட மனைவி பிரசவ வலியில துடிக்குறா சார் ... கொஞ்சம் பெரிய மனசு
பண்ணுங்க சார் ... எங்கயுமே ஆட்டோ இல்ல
சார் ... நீங்கதான் சார் உதவி பண்ணனும் ... " - என்று அந்த ஆட்டோ ட்ரைவரிடமும்,
சவாரியாக வந்திருந்த இருவரிடமும், கால்களில்
விழாத குறையாக கெஞ்சினான் கணேஷ்.
அவர்கள் ஆட்டோவை விட்டு இறங்க, கணேஷ் ஆட்டோவில் ஏறி வீட்டை நோக்கி விரைந்தான்.
ஆட்டோ வீட்டின் முன் சென்று நின்றது.
" அம்மா ... நான் இவள ராஜு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் ... நீங்களும்
அப்பாவும் அப்பறமா வாங்க ... " - என்று
சொல்லியவாறே செல்வியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி மடியில் படுக்க வைத்துக்கொண்டான்
கணேஷ்.
" சார் ... ராஜு ஹாஸ்பிடல் போகணும் ... கொஞ்சம் சீக்கிரமா போங்க சார் ... " -
என்றான் ஆட்டோ ட்ரைவரிடம் கணேஷ்.
ஆட்டோ சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது ... சிறிது தூரம் சென்றவுடன் பிரதான சாலையில்
ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், ஆட்டோ
மேற்கொண்டு செல்ல முடியாமல் அந்தக் கூட்டத்திலேயே அகப்பட்டுக் கொண்டுவிட்டது.
" இதோ வந்துடுச்சும்மா ... கொஞ்சம் பொறுத்துக்கோ ... " - என்று செல்வியை தேற்றிக்
கொண்டிருந்தான் கணேஷ்.
" கடவுளே ... இந்த நேரத்துலதானா இப்படி ஃட்ராபிக் ஜாம் ஆகணும் ... " - என்று
பல்லைக் கடித்தபடியே மனதுக்குள் கடவுளைத்
திட்டிக்கொண்டிருந்தான் கணேஷ்.
மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.
வீட்டில் அழைப்பு மணி ஒலித்தது ... எழுந்து போய் கதவைத் திறந்தான் மகேஷ் ...
" ஹாய் மகேஷ் ... தீவாளி விஷஸ் டு யு டா ... ஹவ் ஆர் யு மகேஷ் ... எப்படி
போய்ட்டிருக்கு தீபாவளில்லாம் ... " - மகேஷின்
நண்பன் சுரேஷ்.
" ஹாய் சுரேஷ் ... ஐ அம் ஃபைன் டா ... தீபாவளி நல்லா போய்ட்டிருக்கு ... வாட் எ
சர்ப்ரைஸ் டா ... நீ எப்படி இருக்க ... " - மகேஷ்.
" ஐ அம் டூயிங் குட் டா ... உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு ... அதானலத்தண்டா சும்மா
பாக்கலான்னு வந்தேன் ... " - சுரேஷ்.
வீட்டில் செய்த இனிப்புகளை ஒரு தட்டில் வைத்து மகேஷின் தாய் எடுத்து வந்து
கொடுத்தாள்.
" எப்படிம்மா இருக்கீங்க ... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மா ... " - என்றான்
சுரேஷ்.
" நான் நல்லாயிருக்கேம்பா ... நீ எப்படி இருக்க ... உன்ன பாத்து எவ்வளவு
நாளாச்சுப்பா ... வீட்டுல அம்மா அப்பா எல்லாம் எப்படி
இருக்காங்க ... " - என்றாள் மகேஷின் தாய்.
" நான் நல்லாயிருக்கேம்மா ... வீட்லயும் அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்க
.. " - சுரேஷ்.
மகேஷும் சுரேஷும் பள்ளி நண்பர்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப்
படித்தார்கள். மகேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பன்
என்றால், அது சுரேஷ்தான். சுரேஷ் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்
என்றாலும், இவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு
சமயத்திலும், எந்த ஒரு விஷயத்திலும், ஏழை பணக்காரன் என்ற ஒரு வேறுபாடு இருந்ததே
இல்லை. அந்தப் பள்ளியே இவர்களின்
இணை பிரியா நட்பைப் பார்த்து வியந்து நின்றது. அப்படி இருந்த இவர்களது நட்பு,
கல்லூரியிலும் தொடர முடியாமல் போனதற்கு,
சுரேஷின் குடும்ப வறுமையே காரணம். மகேஷ் வசதி படைத்தவன்தான் என்றாலும் கூட, அவன்
+2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஒரு
நல்ல கல்லூரியில் சேர அவனுக்கு கை கொடுப்பதாக இல்லை. ஆனால் சுரேஷ், தேர்வில் நல்ல
மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கூட,
அவனுடைய ஏழ்மை, அவன் ஒரு நல்ல கல்லூரியில் சேர முட்டுக்கட்டையாக இருந்தது.
மகேஷின் அப்பா சுரேஷுக்கு பணம் கொடுத்து
உதவத் தயாராக இருந்தபோதும் கூட, சுரேஷும் அவனது குடும்பம்பத்தாரும் அதனை ஏற்க
மனமில்லாமல் போக, அரசுக்கல்லூரியில்
வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான் சுரேஷ். அப்போது பிரிந்த
இருவரும் மீண்டும் சந்திக்க இன்றுதான் காலநேரம்
இடம் கொடுத்திருக்கிறது.
தியாகராய சாலை, தியாகராய நகர். சென்னை.
" எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க ... என்னால தாங்கவே முடியலங்க ... அம்மா ...
அம்மா ... " - செல்வி.>
" பயப்படாதம்மா ... நான் இருக்கேன்ல ... ஒன்னும் ஆகாது ... கவலப்படாத ... " என்று
கணேஷ் செல்வியை தேற்றிக்
கொண்டிருக்கும்போதே அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து நீர்த்துளி
கசிந்துகொண்டிருந்தது.
டாக்டர் பிரசவத்திற்கு குறித்துக் கொடுத்த நாளுக்கு இன்னும் சுமாராக இருபது
நாட்கள் இருந்தாலும், செல்விக்கு முன்னதாகவே
திடீரென வலி வந்துவிட்டது. செல்வி பிரசவ வலியில் துடிப்பதைப் பார்த்து கணேஷால்
சகித்துக்கொள்ளமுடியவில்லை. மனதுக்குள்
ஏதேதோ நினைத்துக்கொண்டு புலம்பியவாறே ட்ரைவரை விரட்டினான் கணேஷ்.
" ட்ரைவர் ... வண்டிய கொஞ்சம் வேகமா ஓட்டுங்க ..." என்று உரத்த குரலில் கத்தினான்
கணேஷ்.
அந்த ஓட்டுனர் மட்டும் என்ன செய்வார் பாவம். கணேஷின் நிலையை நன்கு
உணர்ந்திருந்தவர், " சார் ... நான் பாத்து
வேகமாதான் போயிட்டிருக்கேன் ... சாயங்கால நேரங்குறதால, எங்க பாத்தாலும் ஒரே
கூட்டமா இருக்கு சார் ... மெயின் ரோடு வேற ...
பக்கத்துல இருக்குற ஏதாவது தெரு வழியா போனா, கூட்டம் கொஞ்சம் கம்மியா இருக்கும்
சார் ... சீக்கிரம் போயிடலாம் ...
கவலப்படாதீங்க ... " என்றார் மெலிந்த குரலில்.
மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.
" சுரேஷ் ... இந்தாடா, இத புடி ... இந்த வருஷம் பத்தாயிரம் ரூவாய்க்கு பட்டாசு
வெடில்லாம் வாங்கிருக்கோம் ... இன்னிக்கு பூரா ஆச
தீர எல்லாத்தையும் வெடிச்சுடனும் ... வா, போய் வெடிக்கலாம் ... " என்றபடியே ஒரு
பெரிய பையினை சுரேஷின் கையில் திணித்தான்
மகேஷ்.
இவ்வளவு பட்டாசுகளை தன் வாழ்நாளிலேயே பார்த்திராத சுரேஷ், ஆச்சர்யத்தில்
வாய்பிளக்க நின்றான்.
" இல்ல மகேஷ் ... நீ போய் வெடி ... நான் வேண்ணா கூட இருந்து பாக்குறேன் ... "
" காலேல ஆரமிச்சு, நீ வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நான்
வெடி வெடிச்சுட்டுதாண்டா இருந்தேன் ...
மத்யானம் சாப்டதத் தவிர இன்னிக்கு பூரா நான் பண்ண வேல அது ஒண்ணுதான் ... " என்று
சொல்லிக்கொண்டே வலுக்கட்டாயமாக
சுரேஷை வீட்டின் முற்றத்திற்கு இழுத்து வந்தான் மகேஷ்.
வீட்டில் ஒரே பையன் என்றதால், மகேஷ் தன் சிறுவயதில் விரும்பிக்கேட்ட கடலைமிட்டாய்
முதல், இன்று அவன் படித்துக்
கொண்டிருக்கும் கல்லூரி வரை, அவன் கேட்ட எதனையும் மறுக்காமல் கொடுத்த மகேஷின்
அப்பா, இந்த தீபாவளிக்கு அவனுக்காக
வாங்கிக்கொடுத்திருப்பது பதினைந்தாயிரம் ருபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும்
பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வெடிகள்.
மகேஷும் சுரேஷும், வீட்டின் முற்றத்தில் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.
இருவரும் சரவெடி மற்றும் அணுகுண்டுகளை வெடித்து
மகிழ்ந்தனர். அறிவியல் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களைப் போல்
இவர்களும் விண்ணில் ஏவுகணைகளைப் (
ராக்கெட் ) பறக்க விட்டுக்கொண்டிருந்தனர்.
தணிகாசலம் சாலை, தியாகராய நகர். சென்னை.
ஆட்டோ தியாகராய சாலையிலிருந்து தணிகாசலம் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது.
" ஆஸ்பத்திரிக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிடலாம் சார் ... " என்று கணேஷையும்
செல்வியையும் தேற்றிக்கொண்டிருந்தார்
அந்த ஆட்டோ ஓட்டுனர்.
கணேஷுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் எதுவுமே மனதுக்குள் இறங்கவில்லை. கிட்டத்தட்ட
ஒரு நடைபிணம் போலவே அந்த
ஆட்டோவுக்குள் சென்று கொண்டிருந்தான்.
ஆட்டோ தணிகாசலம் சாலையிலிருந்து, மயிலை ரங்கநாதன் தெருவை நோக்கித் திரும்பியது.
அந்தத் தெருவே ஒரே புகை மயமாய்
இருந்தது.
மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.
அப்போது மகேஷ் சற்றும் எதிர்பாராத வகையில், ராக்கெட் வைக்கப்பட்டிருந்த பாட்டில்
கீழே விழ, அதிலிருந்த ராக்கெட் அந்த வழியாக
வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவின் உள்ளே சரசரவெனப் பாய்ந்தது. திடீரென
ஆட்டோவுக்குள் வந்த ராக்கெட்டால் நிலைதடுமாறிய
ஓட்டுனர் எவ்வளவோ முயற்சி செய்தும், தன் கட்டுப்பாட்டினை இழக்க, அந்த ஆட்டோ
கவிழ்ந்தது. தெருவெங்கும் இரத்த வெள்ளம்.
அந்த ஆட்டோவில் இருந்த மூவரும் மயங்கிக் கிடந்தனர். சத்தம் கேட்டுப் பதறியடித்து
வெளியே வந்த ராமலிங்கம், இரத்தம்
பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார். உடனே,
ரத்தத்தில் உறைந்திருந்த மூவரையும் தனது காரில்
ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.
அப்போலோ மருத்துவமனை, சென்னை.
மிகுந்த பதட்டத்துடன் மகேஷின் குடும்பத்தினர் மருத்துவமனையின் மேசையில்
அமர்ந்திருந்தனர். மிகவும் கஷ்டப்பட்டு, கணேஷின்
வீட்டைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, கணேஷின்
குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து
கொண்டிருந்தனர்.
செல்விக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த அறையிலிருந்து டாக்டர் ஒருவர் வெளியே
வந்தார்.
" டாக்டர் ... " - பதட்டத்துடன் ராமலிங்கம்.
" அவங்களுக்கு ஆண் கொழந்த பொறந்திருக்கு ... "
" அந்த அம்மாவுக்கு ஒன்னும் ... " என்று தயங்கியபடியே இழுத்தார் ராமலிங்கம்.
" யாரோட உயிருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல ... இரத்தம் ரொம்ப
வெளியேறியிருக்குறதால மயக்கம் தெளிய இன்னும் கொஞ்ச
நேரமாகும் ... "
இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் ராமலிங்கத்திற்கு உயிரே வந்தது.
" உங்கள சீஃப் டாக்டர் பாக்கனும்னு சொன்னார் ... " என்று சொல்லிவிட்டு கணேஷ்
இருந்த அறைக்கு விரைந்தார் அந்த டாக்டர்.
பேராபத்திலிருந்து காப்பாற்றியதற்காக நன்றி கலந்த அன்புடன், தன் பாலிய
சிநேகிதராகிய சீஃப் டாக்டரைக் காண மெதுவாகக் கதவைத்
தட்டியபடி அறைக்குள் நுழைந்தார் ராமலிங்கம்.
" வாடா ... உக்காரு ... " என்றார் சீஃப் டாக்டர்.
" நீ பாக்கனும்னு சொன்னேன்னு டாக்டர் சொன்னாங்க ... " என்றான் ராமலிங்கம்.
" ஆமாண்டா ... இன்னும் கொஞ்சம் தாமதமாயிருந்தாக்கூட இவங்கள காப்பாத்தியிருக்குறது
ரொம்ப கஷ்டமாகியிருந்திருக்கும். சரியான
நேரத்துல கூட்டிட்டு வந்ததாலதான் எங்களால காப்பாத்த முடிஞ்சுது ... அந்த ட்ரைவரோட
நிலைமைதான் கொஞ்சம் மோசமாயிருக்கு ...
உடல் முழுக்க தீக்காயங்கள் நிறையா இடத்துல பட்டிருக்கு ... "
" உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே ... காப்பாத்திட முடியும்ல ... " என்று
நடுங்கியபடியே கேட்டார் ராமலிங்கம்.
" காப்பாத்திடலாம் ... ஆனா மறுபடியும் பழைய நிலமைக்கு வர்றதுக்கு கொஞ்ச நாளாகும்
... இது தவிர உன் கிட்ட இன்னொரு விஷயம்
பேசணும் ... இது நான் எனக்குள்ள ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்த ஒரு விஷயம் ... "
" எதுன்னாலும் தயங்காம சொல்லுடா ... "
" வருஷா வருஷம் தீபாவளி அப்படிங்குறது எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான நாளாத்தான்
இருக்கும் ... ஆனா அந்த சந்தோஷமான
நாள்ள கூட பல ஆயிரம் பேர் பட்டாசுகலால தீக்காயங்கள் பட்டு சிகிச்சைக்கு வர்றாங்க
... அப்படி வர்றவங்கள்ல சில பேர் உயிருக்காகப்
போராடி இறந்தும் போயிடுறாங்க ... இன்னும் சில பேர் வெடிச்சத்தத்தால
அதிர்ச்சிக்குள்ளாகி தன்னோட உயிரையே விட்டுடறாங்க ...
உண்மைய சொல்லனும்னா நம்மளோட குடும்பத்துல யாராவது நேரடியா பாதிக்கப்படுற
வரைக்கும் இதப்பத்தி எல்லாம் நம்ம யாரும்
கவலப்படுறதில்ல ... பல ஆயிரங்கள் குடுத்து நம்ம வாங்கி வெடிக்கிற வெடிகள் சில
நிமிடங்கள்ல கரியாகிடுது ... கொஞ்சம்
யோசிச்சுப்பாத்தா, நம்ம கரியாக்கினது வெறும் பணத்த மட்டும் இல்ல ... ஒரு வகையில,
பல குழந்தைகளோட படிப்பையும் சேத்துதான்
... ஆமாம் ... பட்டாசுத் தொழிற்சாலைகள்ள வேலைக்குப் போற குழந்தைகள் எல்லாரும்
தன்னோட படிப்ப அடமானம் வச்சிட்டுதான்
பட்டாசு உற்பத்தி பண்றாங்க ... "
" ஒரு வகையில யோசிச்சுப் பாத்தா, அந்த பட்டாசு உற்பத்தி இல்லேன்னா அந்தத்
தொழிற்சாலைகள்ள வேலை பாக்குற குழந்தைகளோட
குடும்பம் என்ன ஆகும் ... அதனாலதானே அவங்களுக்கு வருமானமே கிடைக்குது ... அது
தவிர அந்தக் குடும்பங்களுக்கு தன்னோட
குழந்தைகள படிக்க வைக்கிற வசதியும் இருக்காது ... " என்றார் ராமலிங்கம்.
" வருமானம் வருதுங்குறதுக்காக நம்ம எதிர்கால இந்தியாவோட தூண்களா விளங்கப்போற
குழந்தைகளோட படிப்ப கெடுக்குறதுங்குறது
எந்த விதத்திலும் சரியாகாது ... குழந்தைகளுக்கு இலவசக் கல்வியக் குடுத்து, அந்தக்
குடும்பங்களும் வறுமையின்றி வாழ ஏதாவது
செஞ்சாகனும் ... "
" நீ சொல்றது சரிதான் ... அவங்களோட வாழ்க்கைய சீராக்குறதுக்கு என்ன பன்னலாம்,
நீயே சொல்லேன் ... "
" அதுக்காகத்தான் என்னோட மனசுல ரொம்ப நாளா அசை போட்டுட்டிருந்த ஒரு யோசனை ...
அரசாங்கத்தையே குற்றம் சொல்லிட்டு
முடங்கிப்போய் உட்கார்ந்திருக்காம, நம்மளால முடிஞ்ச எதையாவது செய்யனும்னு
தோனுச்சு ... அத உன்கிட்ட சொல்லனும்னுதான்
உன்ன வர சொன்னேன் ... "
" நல்லதாப்போச்சு ... சொல்லுடா ... நம்மால ஏதாவது நல்ல காரியம் பன்ன முடியும்னா,
நிச்சயமா அத செய்யலாம் ... "
" நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு குடும்பமும் தீபாவளிக்கு பட்டாசுக்காக செலவு
பண்ற பணத்துல ஒரு பங்க, அந்தப் பட்டாசு
தொழிற்சாலைகள்ள வேலை பாக்குற குழந்தைகளுக்கும் அந்தக் குழந்தைகளோட
குடும்பங்களுக்கும் குடுக்க தானே முன் வரணும் ...
அதுக்கு நம்ம ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சு, அது மூலமா நம்மால முடிஞ்சத
செய்யணும் ... மொதல்ல அந்தக் குழந்தைகளுக்குக்
கல்வி, அப்பறம் அந்தக் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு சரியான வேலை வாய்ப்பு ...
இத நம்ம செஞ்சதுக்கப்பறமா நம்மளோட
தொண்டு நிறுவனத்த மக்கள்கிட்ட பிரபலப்படுத்தி அது மூலமா நேரடியா மக்களே அந்தக்
குழந்தைகளுக்கு உதவ வழி வகை செய்யணும்
... இது மட்டும் நடந்துட்டா, அந்தக் குடும்பங்களுக்கு தினம் தினம் தீபாவளிதான்
... மக்கள் பட்டாசுக்காக செலவு செய்யறத
கொறச்சிகிட்டா, அசம்பாவிதங்களும் குறையும், குழந்தைத் தொழிலாளர் முறையும் ஒழியும்
... இதுதாண்டா என் மனசுக்குள்ள இருந்த
விஷயம் ... "
" அருமையான யோசனை ... நல்ல விஷயம் ... இன்னிக்கே அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ண
ஆரம்பிக்கலாம் ... " என்று ராமலிங்கம்
சொல்ல இருவரின் முகத்திலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி துளிர் விட்டிருந்தது.
ஐந்து வருடங்களுக்குப் பின் ...
எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை. சென்னை.
மாலை நேர மஞ்சள் வெயில் பொன்னைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. தேநீர்
அருந்தியவாறே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்
பார்த்துக்கொண்டிருந்தான் கணேஷ்.
" இந்தாங்க ... தீபாவளிப் பலகாரம் சாப்பிடுங்க ... " என்றாள் பாசத்துடன் செல்வி.
குழந்தைக்கும் இனிப்பை ஊட்டிவிட்டு, " நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா ... "
என்று குழந்தைக்குப் பாடம் கற்றுத்தரத்
தொடங்கினாள் செல்வி.
மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.
புத்தாடைகளை உடுத்திக்கொண்டு வெளியே கிளம்பத் தயாரானான் மகேஷ்.
" அம்மா ... நான் எங்க ஃப்ரெண்ட்சோட மெரீனா பீச்சுக்கு போயிட்டு வரேன் ... " -
என்றபடியே விரைந்தான் மகேஷ்.
" பாத்து போயிட்டு வாடா ... " - வழியனுப்பி வைத்தாள் மகேஷின் அம்மா.
பின்னர் பூஜையறைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளை வரிசையாக
வீட்டின் முற்றத்தில் அழகாக அடுக்கி
வைத்து தீபம் ஏற்றினாள்.
தொலைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது.
" ஹாய் ராம் ... எப்படி இருக்க ... " - அப்போலோ மருத்துவமனையிலிருந்து சீஃப்
டாக்டர்.
" ஹாய் டா ... நான் நல்லா இருக்கேன் ... நீ எப்படி இருக்க ... உனக்கு என்னுடைய
தீபாவளி வாழ்த்துக்கள் ... வீட்டுல எல்லாரும் எப்படி
இருக்காங்க ... " - ராமலிங்கம்.
" ரொம்ப நன்றி ... விஷ் யு த சேம் ... வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க ... "
- மறுமுனையில் டாக்டர்.
" நம்மளோட முயற்சிய ஆரம்பிச்சு, இன்னியோட அஞ்சு வருசம் ஆகுது ... " -
பெருமிதத்துடன் ராமலிங்கம்.
" ஆமாம் ... இப்பல்லாம் பட்டாசுகளுக்காக மக்கள் செலவு பன்ற தொகையும், பட்டாசுகளால
நடக்குற விபத்துக்களும் ரொம்பவே
கொறஞ்சிருக்கு ... " - டாக்டரின் குரலில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.
" மக்கள் கிட்ட நிச்சயமா ஒரு விழிப்புணர்வு பொறந்திருக்கு ... அதுக்கு நம்மளும்
ஒரு வகையில காரணமா இருந்துருக்கோம்னு
நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குடா ... " - பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்த
சந்தோஷத்தில் ராமலிங்கம்.
வெளியே ... புகையும், குப்பைகளுமில்லாமல், தெருவே அமைதியாகக் காணப்பட்டது.
சத்தமின்றி, ரத்தமின்றி அழகாய் ஒரு தீபாவளி
நடந்துகொண்டிருந்தது
narayanaswamy.v.l@oracle.com |
|
|
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|