பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சிறுகதை! |
இன்னும் மலடியா...?
- அனாமிகா பிரித்திமா -
தொலைபேசி
அடித்தது... ஹலோ யார்...? பிரியா உங்க அப்பா, என பிரியாவின் மாமியார் அவளிடம்
கொடுத்தார், எப்படி இருக்கீங்க`பா?... எங்க நலம் இருக்கட்டும் பிரியா, நீ நலமா?
நல்லா இருக்கேன்'பா, அவர்?, நல்லா இருக்கார்'பா, எல்லோரும் நல்ல இருக்காங்களா?,
வீட்டில் எல்லோரும் நலம்'பா. சரி, பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததா?, நீங்க இரண்டு
பேரும் அதைக் குறித்து பேசினீர்களா ?. இல்லப்பா அவர் கோபமாகவே இருக்கிறார். அவங்க
அக்காவிடம் சொல்லியிருப்கோமே, அவங்க இன்னைக்கு பேசுவாங்கன்னு நினைக்கிறேன், ஆனா
சிங்கப்பூருக்கு போக இருபத்திஏழாம் தேதி டிக்கெட் புக் பண்ணியிருக்கார்'பா. அவங்க
அக்கா, பிரச்சனைக்கு ஒரு முடிவு வரும் வரை இங்கேயே இருப்பதாக சொன்னாங்களே?,
நான்`வேணா அவர்கிட்ட பேசவா?, வேண்டாம்`பா கோபமாய் இருக்கார், அவர் அக்காவே
பேசட்டும். சரி கேட்டதாக சொல், வைக்கிறேன். சிறிது நேரத்தில் அண்ணனும் அழைத்தார்,
அதே கேள்விகள் நான்`வேணா நிகிலனிடம் பேசட்டுமா?, வேண்டான்'ணா அவர் மேலும்
கோபப்படுவார், அவர் அக்காவே பேசட்டும். அத்தைகிட்ட கூட சொல்லிருக்கேன் அவங்களும்
பேசறேன்னு சொல்லிருக்காங்க. சரி, கேட்டதாக சொல்.
நிகிலன் சிங்கப்பூரில் கட்டுமான பொறியாளராக வேலை பார்க்கிறார், பிரியா ஒரு
முதுநிலை பட்டதாரி, இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடையப் போகிறது,
குழந்தைகள் இல்லை. சிங்கப்பூரில் இருந்து இருவரும் ஒரு திருமணத்திற்காக இந்தியா
வந்து சில வாரங்கள் ஆகிறது. பிரச்சனைகள் பல இருந்த போதும் பேசி நல்ல முடிவோடு
சிங்கப்பூர் செல்வதென பிரியா
எண்ணியிருந்தாள்.
பிரியா, நிகிலனிடம் பேசலாம் என பார்த்த போதெல்லாம் அவர் வெளியே சென்றுவிடுவார்
நண்பர்களைப் பார்க்க, வீட்டில் இருந்த நேரமெல்லாம் நிகிலன் கோபமாகவே இருந்தார்,
பிரியாவை திட்டிக்கொண்டு. இரவும் பேச முடியவில்லை, ஹாலில் உறங்கினார்கள்
மாமியாருடன். சிங்கப்பூரிலேயே பேசியிருக்கலாம், ஆனால் நிகிலனின் கோபகுணம் அதற்கு
இடம் கொடுக்கவில்லை, அங்கு பேசியிருந்தால் நிலைமை மோசமாகும் என எண்ணிதான் இங்கே
உறவினர்கள் முன்னிலையில் பேச முடிவு செய்தாள். மறுநாள் காலையில் காபி அருந்தி
விட்டு, இட்லி செய்ய தயாராகி கொண்டிருந்தாள் பிரியா. அழைப்புமணி அடித்தது கதவைத்
திறந்தால், ஆச்சரியம் பிரியாவின் அப்பா !. என்னப்பா நீங்க... இங்க?, கூட வந்த
இரண்டு பேரை அடையாளம் தெரியவில்லை, அறிமுகம் செய்யப்பட்டது. அப்பா பிரியாவிடம்
மீண்டும் கேட்டார், அவர் அக்கா இவரிடம் பேசினார்களா? இவர் என்ன சொன்னார்?.
இல்லப்`பா இன்னும் பேசல, அப்ப பிரச்சனை பேசி முடியும் வரை சிங்கப்பூருக்கு எப்படி
செல்ல முடியும் ?, பேசிவிட்டு செல்லலாமே அதுதானே நல்லது உங்க ரெண்டு பேருக்கும், நீ
அதுவரை நம்ம வீட்டில் இருக்கிறாயா என்றார்?. வந்திருந்த இருவரும் அதையே கேட்டனர்,
சரி என்றாள் பிரியா. நிகிலனுக்கும் அவர் அம்மாவுக்கும் மகாகோபம். வாழ்நாளில்
எவரிடமும் பிரியா இதுவரை வாங்காத வசையை அன்று வாங்கினாள் தன் மாமியாரிடமிருந்து,
ஒரு பெண்ணை எவ்வளவு இழிவாய் பேச முடியுமோ அனைத்தும் பிரியாவிற்கு கிடைத்தது,
பிள்ளை பெறாத மலடி என்பது உட்பட. பாவம் அவளின் அப்பாவுக்கும் அதே அர்ச்சனை, அவளால்
அவரும் அவமானத்தின் உச்சத்திற்கு சென்றதுதான் மிச்சம். கூட வந்திருந்தவர், "என்ன
சார் இப்படி பேசுறாங்க நீங்க ஒரு வார்த்தை கூட பதிலுக்கு பேசவில்லையே?, அதைப்
பார்த்தாவது அவங்க உங்க நல்ல குணத்தைப் புரிந்து பேச வேண்டாமா?" என்றார்.
வெளியேறினார்கள், பிரியாவும் அவள் அப்பாவும். வண்டி பட்டுக் கோட்டையிலிருந்து,
மதுரையை நோக்கி பயணித்தது. பிரியா பேசத்தொடங்கினாள், நீங்க வர்றீங்கன்னு ஏம்`பா
எனக்கு முன்னாடியே சொல்லல?, இப்படி திடீர்னு வந்துட்டீங்களே'பா?, கூட
வந்திருந்தவர் வேற, நீங்க வருவது எனக்கு தெரியுனு அவங்க கிட்ட பொய்
சொல்லிட்டாரே'பா?, இப்ப நிகிலன் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?. நான் இதுவரை
அவரிடம் எதையும் மறைத்ததே இல்லையே?, அவருக்கு கோபம் வரும் என்றால் கூட
சொல்லிவிடுவேனே” என்றாள். அதனால் தான் உன்னிடம் நாங்க வர்றோனு சொல்லல`மா, சொன்ன
நீ கண்டிப்பா நிகிலன்கிட்ட சொல்லிடுவ. பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியாம
சிங்கப்பூருக்குப் போனா உங்க ரெண்டு பேருக்கும் அது நல்லதில்லையே?, எங்கள் மனமும்
கேட்காதே? நாங்கள் வருகிறோம் என தெரிந்தால், அவர் கோபம் மேலும் அதிகரிக்குமே, அதை
உன்னிடம் காட்டுவார், அதனால் தான் சொல்லல`மா என்றார். சரி இவங்க...என வந்திருந்த
இரண்டு பேரை காட்டினாள் பிரியா, ஏற்கனவே நிகிலன் குடும்பம் நம்ம வீட்டுக்கு
பேசுவதற்காக வந்தபோது நடந்ததை நினைத்து தான் இவர்களை அழைத்து வரவேண்டியதாகி
விட்டது`மா என்றார். எப்படி'பா வீடு கண்டுபிடிச்சீங்க?, நீங்க இந்த புது வீட்டிற்கு
வந்ததே இல்லையே?, முகவரியும் தெரியாதே?, என பிரியா வினவினாள். நீங்க முன்னாடி
இருந்தீங்களே`மா கனேஷ் நகர், நாலம் வீதி வீடு, அந்த வீட்டுக்கு அடுத்து இருக்கும்
"சுகன்யா வீட்டில்" தான் இந்த வீட்டின் முகவரியைக் கேட்டோம். அவங்களுக்கு என்னை
தெரியுமோ என நினைத்தேன்?, ஆனா நல்லா ஞாபகம் வச்சிருந்தாங்க, நிகிலனோட மாமனார்
தானே நீங்க?, வாங்க காபி குடிச்சிட்டு போகலாம் என்றார்கள். நான் தான் நேரமாகிறது
வேண்டாம் என்று கூறினேன். அவர்களிடம் வேற எதுவும் சொல்லலியே'பா?, இல்லம்மா எதுவும்
சொல்`லல. என்ன`மா நிகிலனோட அண்ணன் உன்னை இவ்வளவு தரக்குறைவா பேசினப்ப கூட, அவர்
பேசாமல் இருந்துட்டாரேம்`மா?, இல்லப்பா அவர் பேசியிருப்பார், ஆனால் சூழ்நிலை அவர்
பேசவில்லை.
மதுரை வந்து இறங்கினார்கள், கார் தயாராக இருந்தது. பிரியா கேட்டாள், என்னப்பா
மறுபடி எங்கே போறோம்?. சென்னைக்குதாம்`மா, என்ன சென்னைக்`கா?, எதுக்கு? கொஞ்ச
நாள் இந்த பிரச்சனையை அப்படியே விடுவோம், மறுபடியும் பூதகரமாக
கிளம்பி நிலமையை மேலும் மோசமாக்க வேண்டாமே, அதுக்குத்தான். கண்டிப்பா
போகனுமா`மா?, கொஞ்ச நாள் ஆகட்டும்`மா நிலமை மாறும் என்றாள் அவள் அம்மா. சென்னை
சென்றார்கள், வீட்டில் எல்லோருக்கும் திரும்ப, திரும்ப ஞாபகத்திற்கு வந்தது பிரியா
வீட்டில் முதலில் நடந்த பேச்சும், சண்டையும், பிரச்சனைகளும், அவள் மாமியார்
வீட்டில் இப்போது நடந்த அவமானமும் தான். பிரியாவால் இந்த நொடி வரை நம்ப முடியாதது
அமைதியாய் பேசிய எல்லோரும் அன்று அவ்வளவு ஆக்ரோஷமாய் மிக மோசமாய் உண்மைக்குப்
புறம்பான வார்த்தைகளைப் பேசியது ஏனென்றுதான்?. தொலைபேசி அடித்தது, நிகிலனின் அக்கா
கணவர் பேசினார், சில நிமிடங்களில் வைக்கப்பட்டது. என்னப்பா என்ன சொன்னார்?, என
பிரியா கேட்டாள். இல்லை, அவர்கள் வழக்கறிஞரைப் பேச சொன்னார்கள், என்னப்பா என்ன
சொல்றீங்க?, இது இவர் சொன்னதா? நிகிலனே சொன்னதா?. அவர் பேசியதிலிருந்து நிகிலன்
சொன்னதாகத்தான் தெரிகிறது`மா,
பிரியாவால் இதை நம்ப முடியவில்லை. மதுரை சென்றனர் பிரியாவின் அப்பாவும், அண்ணாவும்,
பேசுவதற்காக என பிரியா நினைத்தாள். ஆனால், அவர்கள் வந்து நம் வீட்டில் இருந்த
நிகிலனின் சாமான்களை எடுத்து சென்று விட்டனர் என்றார்கள். பிரியா உடனே,
இருக்காதேப்`பா நிகிலனிடம் பேசினீர்களா அவர் என்ன சொன்னார்?, என்னைக் கேட்டாரா?.
ஒன்றும் சொல்லவில்லை அவர்
உன்னைப் பற்றி எதுவும் கேட்கவுமில்லை, பெரிதாக உன் மேல் விருப்பம் இருப்பதாக
தெரியவில்லை என்றார் அப்பா. அலைச்சலின் அசதியா இல்லை மனதின் பாதிப்பா?, என்று
தெரியவில்லை, பிரியாவின் உடம்பு களைப்பாய் இருந்தது வயிறு வேறு சற்றே வலிக்கத்
தொடங்கியது, கூடவே இடுப்பும். மறுபடியும் தொலைபேசியில் தொடர்பு, இம்முறை நிகிலன்
தான் பேசுகிறார் என பிரியா ஆவலாய் இருந்தாள், அவர் இல்லை அவர் அக்கா கணவரே பேசினார்
அவள் அப்பாவிடம், பிரியாவிற்கு இடி ஒன்று காத்திருந்தது. அவர்கள்
விவாகரத்துக்கு தயார்`மா என்றார் பிரியாவின் அப்பா. செய்தி கேட்டதும் பிரியாவின்
உடல்நிலை மேலும் மோசமானது, அதோடு மதுரைக்குப் பயணித்தாள்.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது அங்கும், உன் தாலியைக் கேட்கிறாங்கம்மா
என்றார் பிரியாவின் அப்பா. பிரியா உடனே,” என்னப்பா சொல்றீங்க?, இருக்காது, நிகிலன்
கேட்டிருக்கவே மாட்டார்” என்றாள். தொலைபேசி அடித்தது மறுமுனையில் வழக்கறிஞர்
"சீக்கிரம் வாங்க சார் மணி எட்டு இவங்க இன்று இரவே பட்டுக்கோட்டை போகனுமாம்",
அப்பா வருகிறோம் என்றார். காத்துக்கொண்டு இருக்கிறார்`மா நிகிலன் தாலியை
வாங்கிட்டு போக. இருக்காதேப்பா, அவரா கேட்டார்? ஆமாம்`மா அவர் தான்
காத்துக்கொண்டு
இருக்கிறார் தாலியை வாங்கிட்டு போக. தாலியை அல்ல பிரியா தனது உயிரையே
கழட்டிக்கொடுத்தாள் என்பது மட்டுமே அவள் நினைவில் இருந்தது...விழித்து பார்த்தால்,
மருத்துவமனையில் நர்ஸ் வந்து இரத்தத்தை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றாள்.
பிரியாவின் மனதில் பிரச்சனைகள், அவமானங்களை எல்லாம் முந்திக் கொண்டு நிற்கும்
கேள்வி,” அவரா தாலியைக் கேட்டார்?, அவர் அதை வெறும்
தங்கம் என நினைத்துவிட்டாரா?”. பிரியாவின் அம்மா உடனே "நீ தாம்`மா இப்படிக் கேக்குற
கொண்டுபோய் கொடுத்ததற்கு", நிகிலன், "நாங்க போட்ட மாங்காய்யை காணவில்லை
என்கிறார்" நான் சொன்னேன் “அது நீங்கள் பிரியாவை அடிக்கும்போது தெறித்து
உடைந்துவிட்டது” என்று. அவர் ஒன்றும் பெரிதாக உன்னைப்பற்றி நினைப்பதாகவோ,
கவலைப்படுவதாகவோ தெரியவில்லை என்றாள். டாக்டர் உள்ளே நுழைந்தார், பிரியாவிடம்
கேள்விகள் கேட்க ஆரம்பித்தார், “என்னம்`மா கல்யாணம் ஆகி எவ்வளவு நாள் ஆகிறது?,
நான்கு வருடம் ஒன்பது மாதம் என்றாள். குழந்தை வேண்டும் என்று டிரிட்மெண்ட்
எடுத்துருக்கீங்களா?, ஆம் என்றாள். எவ்வளவு நாளா?, கடந்த ஓர் ஆண்டாக என்றாள்.
டாக்டர் எனக்கு என்ன ஆச்சு? என்றாள் பிரியா. ஒண்ணுமில்லை`மா, பயப்படாத யு ஆர் பைன்,
நோ டென்சன் பிளீஸ், ரிலாக்ஸ் அன்ட் பீ ஹாப்பி, என்றார். "ஹாப்பி" என்று இந்த
வார்த்தையை பிரியா தொலைத்து வருடங்கள் ஆன போதும், கடந்த சில நாட்களாய் அது
முற்றிலும் தொலைந்து போனதை போன்று எண்ணினாள். ஸ்கேன் எடுங்க ரிசல்ட்
பார்த்துட்டு சொல்றேன் என்று கூறி சென்றார். அப்பாவும் அம்மாவும் வெளியே அவருடன்
சென்று பேசிவிட்டு வந்தனர். என்னம்`மா என்னாச்சு எனக்கு? இப்போதைக்கு ஒன்னும்
சொல்ல முடியாது ஸ்கேன் பார்த்துட்டு தான் கூறமுடியும் என்கிறார், என்றார்கள்.
ஸ்கேனுக்கு கொண்டு செல்லப்பட்டாள். சிரித்த முகத்துடன் லேடி டாக்டர் பிரியாவிடம்,
சமீபத்தில் பிரசவம் ஆச்சா, மறுபடியும் குழந்தை...? என்று அவர் முடிக்கும் முன்பே,
பிரியா என்ன கேக்குறீங்க டாக்டர்?, எனக்கு குழந்தைகளே இல்லை என்றாள். டிரிட்மெண்ட
எடுத்தையாமா? ஆமா டாக்டர், கடைசியாய் எப்போது மாதவிலக்கு வந்தது?, இரண்டு
மாதத்திற்கும் மேல் இருக்கும் என்றாள். என்ன ஆச்சு ?, சொல்லுங்களேன் டாக்டர்
என்றாள் பிரியா. ஒண்ணும் இல்லை`மா நல்லாருக்கே டாக்டரே ரிப்போர்ட் பார்த்து
உங்களிடம் சொல்லுவார் என்றார். டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து
நல்லாருக்கம்`மா, அகேன் ஐ ஆம் டெல்லிங் யூ, பீ ஹாப்பி அண்ட் நோ டென்சன், லெட் அஸ்
வெயிட் அண்ட் சீ... என்று சொல்லி சென்றார். அப்பாவும் அம்மாவும் மருத்துவமனையே கதி
என்று இருந்தனர். இடையில் வழக்கறிஞர் மருத்துவமனைக்கே வந்து விட்டார். நிகிலன்
காத்திருக்க முடியாதாம் உடனே விவாகரத்துக்கு பைல் செய்ய வேண்டுமாம், அவர்
சிங்கப்பூருக்கு உடனே போக வேண்டுமாம் என்றார். பிரியாவுக்கு பேசதெம்பில்லை, அழ
திராணியும் இல்லை. பிரியாவின் பெற்றோர் வழக்கறிஞரிடம் பேசினார்கள், அவர்
பிரியாவைப் பார்த்து நான் நிகிலனிடம் இந்த விவரங்களை எல்லாம்
சொல்கிறேன் என்று கூறி சென்றார்.
மருத்துவமனையில் பிரியாவின் ஐந்தாவது நாள், பிரச்சனைகளை நினைத்து நினைத்தே பிரியா
இளைத்தாள். வயிரின் வலியும், இடுப்பின் வலியும் அதிகரித்தது. இரத்தம் கசியத்
தொடங்கியது, மீண்டும் ஸ்கேன். இம்முறை வேறொரு டாக்டர் பார்த்தார், அவரும் அதே
கேள்விகள், குழந்தைக்காக ட்ரிட்மெண்ட்டில் ஆரம்பித்து சமீபத்தில் பிரசவம் ஆச்சா?,
என்ற கேள்வி வரைக் கேட்டார். பிரியாவிற்கு
பொறுக்க முடியவில்லை "என்ன... என்ன நடக்கிறது எனக்கு?, என்னனு சொல்லுங்களேன்
டாக்டர்?" என்றாள். தெரிய வந்தது உண்மை... நடந்து கொண்டிருப்பது இரு உயிர்
காக்க போராட்டம் என்று. நான்கு வருடம், ஒன்பது மாதம் நடக்காத அதிசயம் இப்போது
நடந்துள்ளதா?... சிரிப்பதா?... அழுவதா?....மருத்துவமனையில் இருக்கிறேன் என்று
தெரிந்தும் நிகிலன் வரவில்லையே?, கோபம் என் மேல் தானே?, இந்த பச்சிளம் உயிர் மேல்
என்ன கோபம்?, நம் இரத்தம், நம் சதை, நீங்கள் கொடுத்த உயிர்தானே, நம் குழந்தையை
தானே
சுமக்கிறேன்? என பிரியா அழத்தொடங்கினாள். பிரியாவை விட அவள் பெற்றோருக்குப் பயம்
அதிகமானது. பிரியாவின் சிந்தனை முழுதும் இப்போது நிகிலன் ஏன் தெரிந்தும்
வரவில்லை?, என்பதில் தான் இருந்தது. பெற்றோரிடம் கேட்டாள் நிகிலனுக்குத் தெரியுமா
நான் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று?, அவங்களுக்கு கண்டிப்பா தெரியும்`மா
வழக்கறிஞர் எல்லாத்தையும் சொல்லிட்டாராம். நீ ஏன் டென்ஷன் ஆகுற?, நிகிலனுக்கு உன்
மேல் அன்பிருந்தால் நிச்சயம் வந்து பார்ப்பார். நீ அமைதியாய் ஆண்டவனிடம் பிராத்தனை
மட்டும் செய் என்றார்கள். நிகிலன் ஏன் வரவில்லை என்பதை நினைத்து நினைத்தே சோர்ந்து
போனாள், நாட்கள் செல்ல செல்ல அவள்
வேதனை அதிகரித்தது, நிலை மோசமானது இரத்தக்கசிவு நிற்கவில்லை... கவிதை ஒன்றும்
நிற்காமல் ஓடி வந்தது அவள் மனதில்...
ஒவ்வொரு முறையும்...
அறையின் கதவு...
தட்டபடும் போது...
விழித்து கொள்வோம்...
நானும், அவனு(ளு)ம் ?...
தகப்பன் முகம் பார்க்க...
விழித்திருக்குமோ?...
“அப்பா” என்றழைக்க...
காத்திருக்குமோ?...
காத்திருந்து....
காத்திருந்து....
வரவில்லை என்றதும்...
தங்கள் முகம் பார்க்க...
வெளிநடப்பு செய்ததோ?...
வந்ததா?...
தங்கள் முகம் பார்த்ததா?...
முடிந்துவிட்டது எல்லாமே, பிரியாவின் மனதில் வேதனை, வருத்தம், கோபம் வீட்டிற்குத்
திரும்பினாலும், ஏன் அவர் வரவில்லை?, என்பது தான் தலையாய கேள்வியாக இருந்தது.
வழக்கறிஞர் மீண்டும் அழைத்து, “நிகிலன் சிங்கப்பூருக்குச் செல்ல வேண்டுமாம்
விவாகரத்து பைல் செய்ய உடனே வாருங்கள்” என்றார். கண்டிப்பாக அப்போது பேசுவார்
கேட்போம் என பிரியா காத்திருந்தாள். அவரை விழிகள் தேடியது, அவரோ அவள் பக்கம்
திரும்பவில்லை, வரவுமில்லை, பேசவுமில்லை. அருகில் நிற்க கிடைத்த ஒருசில
நிமிடங்களில் அவர் கண்களை உற்று நோக்கினாள். அவர் நீதிபதியுடன் பேசுவதில்
மும்மரமாக இருந்தார். பிரியாவுடன் பேச மனதில்லை போலும், "என்னைப் பற்றி
நினைக்கவில்லை, பேசவில்லை, பெரிதாக வருத்தப்படவில்லை என பெற்றோர் கூறியது
உண்மையாக இருக்குமோ?" என எண்ணினாள். பிரியாவின் மனதில் கேள்விகளுக்குப் பஞ்சமே
இல்லை, ஏன் தாலியைக் கேட்டார்?, எல்லாம் முடிந்து போனதா?, என்னை (எங்களை)
மருத்துவமனையில் ஏன் வந்து பார்க்கவில்லை?. அவளின் பெற்றோர் அவள் மனதின்
எண்ணங்களைப் புரிந்து கொண்டு பிரியாம்`மா "நாங்கள் உன்னையும் நிகிலனையும் பிரிக்க
வேண்டும் என நினைக்கவில்லை, இப்போதும் கூறுகிறோம் அவர் சமாதானமாக பேசி
பிரச்சனையைத் தீர்த்து, உனக்கு நிம்மதியான, சந்தோஷமான வாழ்கை தருகிறேன் என்றால்,
நீ தாரளமாக அவருடன் போ, எங்களுக்கும் சந்தோஷம் தான்" என்றனர். அவர் பேசவில்லை,
மாறாக அவருடைய சொந்தக்காரர்கள் பலர்
தொடர்பு கொண்டனர், அவர்கள் அழைத்தது உன்மையில் என்ன பிரச்சனை என்று கேட்கவும்,
நிகிலன் பற்றி புறம் கூறுவதிலும் தான் குறியாய் இருந்தனர்.
பிரியாவின் தோழி அனு வீட்டிற்கு வந்தாள். அவளுக்குப் பிரியாவின் கதை முழுதும்
தெரியும். பிரியா உனக்காக கவலைப் படாத நிகிலனை நினைத்து நீ ஏன் கவலை கொள்கிறாய்?.
இல்லை அனு, அவர் இப்பவும் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பார், சரி, உன்னை
நினைத்தால் உன்னுடன் அவர் பேசி பிரச்சனைக்கு ஒரு முடிவு காணலாமே?, தவறு உன் மேல்
இல்லையே?, பிரச்சனைகளுக்கு காரணமே அவர் தானே?, பேசுவார் அனு கண்டிப்பா பேசுவார்.
பிரியா, நீ பட்ட கஷ்டத்திற்கும், வேதனைக்கும் ஒரு முடிவு வந்தது என சந்தோஷப்படு,
நடந்ததை ஒரு கனவாக நினைத்து மறந்துவிடு என்றாள் அனு. முடியாது அனு, நிகிலன் என்
மனதில், ஏன் என்னில், என் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் நுழைந்து நிறைந்துவிட்டார்,
என்னுடன் பேசினாலும் பேசாவிட்டாலும், என்னை உதறிச்
சென்றாலும் அவர்தான் என் கணவர் என்றும், என்றாள் பிரியா. ம்ம்ம்ம்ம்ம்.... எனக்குப்
பொறாமையா இருக்கு பிரியா என்றாள் அனு, ஏன் என்ன ஆச்சு?, என பிரியா வினவினாள். ஒரு
ஆணாக நான் இல்லையே, நிகிலன் உன்னைப் பார்க்கும் முன்பே, நான் உன்னை திருமணம்
செய்திருப்பேனே?, வெகு நாட்கள் கழித்து பிரியா அன்றுதான் லேசாக சிரித்தாள். இவ்வளவு
பிரச்சனைகளிலும் கஷ்டத்திலும்,
ஏமாற்றத்திலும், நீ உன்னை நினைக்காத நிகிலனையே கணவராக நினைக்கிறாயே, அதை
நினைத்துதான் பொறாமைப்படுகிறேன். ஆனால், மறுபக்கம் உன்னை மாதிரி பெண்களை
பார்க்கும் போது கோபம் கோபமாய் வருகிறது, கணவர், கணவர், என்று நீங்கள் தலையில்
தூக்கி வைத்து கொள்வதால் தான் இவர்கள், நல்ல மனைவியை கூட இப்படி.... நிறுத்து அனு
என் நிகிலன் நிச்சயமாக வருவார், என்னை
அவர் நெசிக்கிறார்... சரி`மா உன் நிகிலனை, நான் ஒன்னும் சொல்லல... கிளம்புகிறேன்,
ஆனா அடுத்த ஜென்மத்திலாவது பிரியா, நான் ஆணாய்ப் பிறந்து உன்னை கல்யாணம் பண்ணலாமா?,
என்று பிரியா கன்னத்தில் லேசாகத் தட்டினாள் கேலியாய். அது முடியாது, அனு நான்
என்றும் "திருமதி நிகிலன்” தான் என்றாள் விழிகளைத் துடைத்தபடி.
பிரியாவுக்கே சில நேரங்களில் நிகிலனை அழைத்துப் பேசிவிடுவோமே என்று இருக்கும் நம்
எண்ணைப் பார்த்து இணைப்பைத் துண்டித்துவிட்டால் என்ன செய்வது?. சரி, வெளியில்
இருந்து முயற்சிப்போம் என நிகிலனின் சிங்கப்பூர் செல்லிடை எண்ணை தொடர்பு
கொண்டாள் பலமுறை, ஒலியே அடிக்கவில்லை, எண் இப்போது உபயோகத்தில் இல்லை, எண்ணை சரி
பார்க்கவும் என்ற
குறலைக்கேட்டுக் கேட்டு காது புளித்துப் போனது. அங் மோ கியோ, வீட்டின் எண்ணை
தொடர்பு கொண்டால், அடித்துக்கொண்டே இருக்கும் நள்இரவு மணி பணிரெண்டாக
இருந்தாலும். எண்ணையே மாற்றிவிட்டாரோ? நாம் தொடர்பு கொள்ள வேண்டாம் என நினைத்து
விட்டாரோ? என பிரியா உடைந்து போனாள். பெற்றோரை நிகிலன் வீட்டில் பேச சொல்லலாம்
என பிரியா எண்ணும்
போதெல்லாம் அப்பா மாமியாரிடமும், நிகிலனின் அண்ணனிடமும் வாங்கிய மோசமான திட்டும்,
அவமானமும் தான் மனத்திரையில் ஓடும். இத்தனை வருட காலம், என்னை பூப்போல் வளர்த்த
பெற்றோர், தவறேதும் செய்யாத இவர்கள், மீண்டும் ஒருமுறை என்னால் அவமானத்தை சந்திக்க
வேண்டுமா?. அவர்கள் மறுபடியும் மோசமாய்ப் பேசினால் என்ன செய்வது? என்ற
கேள்விகளுக்கு பதில் காண முடியாமல் திணறினாள்.
நிகிலனின்
அழைப்பின்றி, ஆறு மாதம் நரகமாக பிரியாவிற்கு கழிந்தது. அவரை நான் மனதார
நேசித்தேனே!, அவரை நான் ஆசை ஆசையாய் திருமணம் செய்தேனே!, அவரின் ஒவ்வொரு அசைவையும்
ரசித்தேனே!, கணவரைப் போல் பார்க்காமல், ஒரு குழந்தையைப் போல், என் மழலை மகனைப்
போல் பார்த்தேனே!, அவருக்கு என் மேல் கடுகளவேனும் காதல் இல்லையா? என பிரியாவின்
மனதில், கேள்விகள் பதிலின்றி நிற்பதுதான் மிச்சம். கடைசியாய் நீதிமன்றத்திற்கு
சென்ற போது பிரியாவின் மனதில் ... "இப்ப கூட அவர் மாறிவிட மாட்டாரா?, பிரியா நீ
தான் என் மனைவி, நீ எனக்கு வேண்டும்" என கூற மாட்டாரா?... அப்போது பிரியா தன்
மாமியாரிடம் கூறிய வார்த்தைகள் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது... "என்னை மட்டுமே
நேசித்து, எனக்கு மட்டுமே கணவராக இருந்தால் போதும்...வேறொன்றும் வேண்டாம்...அவர்
கால்களுக்கு நான் செருப்பாய் இருக்கிறேன்... மற்ற எவற்றையும் கூட நான் தாங்கி
கொள்கிறேன்"... இதை விட ஒரு மனைவியாய் எப்படி தாழ்ந்து போவது...புரியவில்லை
பிரியாவுக்கு. ஐந்து லட்ச ரூபாய் செலவில் அமோகமாக நடந்த கல்யாணம், ஐந்து ரூபாய்
ரெவென்யூ ஸ்டாம்ப் காகிதத்தில் முடிந்து போனது. இன்று வரை நிகிலனின்
குடும்பத்தாரும், ஏன் நிகிலன் கூட அனைவரிடமும் விவாகரத்து பெற்றதற்காக கூறும்
காரணம் பிரியா ஒரு மலடி என்பது தான்... உண்மையில் காரணம் என்ன என்று
பிரியாவுக்கும், நிகலனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரியும்...
பிரியா மலடியா? இதற்கான பதில்... இன்றும் என்றும் பிரியாவின் மனதில் கவிதையாக...
நான்கு வருடங்கள்...
நிகழாத அதிசியம்...
நடந்தேறியது !
அதிசியம் என...
எவரும் மகிழும் முன்...
முடிந்தும் போனது
இனிப்புகள்...
பரிமாரப்பட்டீறுக்க வேண்டும்...
விருந்து வைத்திருக்க வேண்டும்...
வானத்திற்கு துள்ளி ...
இருக்க வேண்டும்...
நம் இருவரும்
நமக்கு முதல் வாரிசு...
உங்கள் குடும்பத்திற்கே...
தலைச்சன் வாரிசு...
எழுபது நாளான புது உயிர்
மருத்துவமனையில் ...
இரு உயிர் காக்க...
போராட்டம்...
தகவல் தெரிந்தும்...
எவரும் வரவில்லை ...
அப்போழுதும்...
நான்...
தங்கள் துனைவி தானே?
வரவில்லை என்றதும்...
தங்கள் முகம் பார்க்க...
வெளிநடப்பு செய்ததோ?...
வந்ததா?...
தங்கள் முகம் பார்த்ததா?
நீங்கள் வந்திருந்தால்...
நிலைத்திருக்குமோ ?...
பிறிந்த மாதம்...
பிறந்திருக்கும்...
வயது முன்றாகியிருக்கும்...
நிலைக்கவில்லை...
நீங்களும்...
நம் “குட்டானுவும்”...
காலங்கள் எத்தனை கடந்தாலும் பிரியாவின் ஞாபகம் நிகிலன் வீட்டிலும், அவர் மனதிலும்
மறைந்து போனாலும் என்றும், நிகிலனின் குடும்பத்திற்கே உருவான முதல் உயிர்,
தலைச்சன் வாரிசை சுமந்தவள்... “பிரியா என்கிற இந்த மலடி தான்”...
- அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
|
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|