இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மார்ச் 2010  இதழ் 123  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
சிறுகதை!
சட்டம் ஒரு இருட்டறை

நடேசன்


நடேசன்காதலுக்கு மரியாதை என்ற தமிழ்த்திரைப்படத்தை பார்த்த பின்பு அந்த படத்தின் கதாநாயகியின் பெயர் மனத்தில் சிலகாலம் தங்கி விட்டது. இந்த காலகட்டத்தில் ஒரு உரிமையாளரால் கைவிடப்பட்ட அழகாக சாம்பல் நிற பூiகை;குட்டி எனது கிளினிக்கு ஒருவரால் கொண்டுவரப்பட்டுது. பாரதி பாடலை நினைவுக்கு கொண்டு வரும் இந்த குட்டிப்பூனைக்கு மினி என்ற பெயர் வைத்தேன். இந்த பூனைக்குட்டியை பூனை இனத்தின்மேல் கடும் பகை பாராட்டி வரும் எனது லபரடோர் நாயின் நிமித்தம் எனது வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை.எனது கிளினிக்கில் வளர்ந்து வந்தது.

மினியால் பல சங்கடங்கள் ஏற்பட்டது. நாய்கள் வைத்தியத்துக்கு வரும் போது எனது அறையில் மினியை அடைத்து பூட்டவேண்டும்.இதைவிட துள்ளிப்பாய்ந்து பல பொருட்களை தட்டி கொட்டிவிடும். பல முறை கம்பியுட்டர் வயர்களை கழட்டிவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக திருடர்களுக்கு அலார்ம் போடுவதற்காக இரவுகளில் கூட்டில் அடைக்கவேண்டும்;. இரவு முழவதும் அடைபட்டு இருப்பதைப் பொறுக்காமல் அக்காலத்தில் எனக்கு நேர்சாக வேலை பார்த்த சமந்தா இரவில் தான் மினியை வீட்டுக்கு கொண்டு சென்று காலையில் திரும்பவும் கொண்டுவருவதாக உறுதியளித்ததையிட்டு அவளிடம் இரவில்கொண்டு செல்லும் பொறுப்பை ஒப்பiடித்தேன்;. ஆறுமாதத்துக்கு மேல் மினி பகலில் கிளினிக்கிலும் இரவில் சமந்தா லீட்டிலும் வளர்ந்தது. இக்காலத்தில் மினிக்கு குட்டி போடாமல் சத்திர சிகிச்சையும் செய்தேன்.

இந்தக்காலத்தில் சமந்தா ஒருநாள் வந்து கர்ப்பினி ஆகிவிட்டதாகச் சொன்னாள்.

அத்துடன் இரண்டாவது மாதம் என நினைக்கிறேன் என்றாள். அவள் சொல்லும் போது ஏதோ ஒரு விடயமாக அவளைக்காண வந்திருந்த போய் பிரண்டும் நின்றிருந்தான்.

கலியாணம் முடிந்த பின் தான் பெண்கள் கரப்பமாகும் கலாச்சாரம் கைவிட்டு போய் பல யுகங்களாகிவிட்டதால் இந்த செய்தி எனக்கு எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.

மேலும் மனித நாகரிகத்தில் இடைக்காலத்தில் வந்த இந்த பழக்கம் பணச்செலவையும் பல அசௌரியங்களையும் உண்டாக்கி கொள்கிறது என இளம் சமுதாயம் மேற்கு நாடுகளில் நினைக்கிறது. இந்த நினைப்;பு வெகு விரைவாக கீழைத்தேய நாடுகளுக்கும் பரவி வருகிறது.

'சமந்தா உனக்கு தெரியும் தானே இங்கு நாங்கள் ஹலத்தேனை சத்திர சிகிச்சைக்கு மயக்கும் மருந்தாக பாவிக்கிறது. இந்த ஹலத்தேன் சிலவேளையில் கருச்சிதைவை கொண்டு வரும். ஆரம்ப கால கர்ப்பமாக இருப்பதால் நீர் இங்கு வேலை செய்வது நல்லது அல்ல. உமது கர்பத்தில் சிதைவு ஏற்படலாம்.”

'என்னிடம் பணம் இல்லை. நான் கடைசிவரையும் வேலை செய்ய விரும்புகிறேன';

'நீர் விரும்புவது நியாயம் ஆனால் உமக்கு ஹலத்தேன் என்ற இந்த மயக்க வாயுவால் கருந்சிதைவு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாகி விடுவேனே. இந்தக் கிளினிக்கல் நாங்கள் இருவர் மட்டுமே வேலை செய்கிறோம். நீர் இல்லாமல் நான் தனியே சத்திர சிகிச்சையில் ஈடுபட முடியாது. உம்மை வைத்துக்கொண்டு வேறு ஓருவரை வைத்து வேலை செய்ய என் பொருளாதாரம் இடம் தராது. அதே வேளையில் ஹலத்தேன் வாயுவாகியபடியால் இந்த கிளினிக் எங்கும் பரவும். இதற்கு அதற்கு நீர் ஒழித்திருக்க முடியாது”.

இவ்வளவு நேரமும் எங்கள் உரையாடலைக் அமைதியாக கேடடுக்கொண்டிருந்த போய் பிரண்ட் 'அப்படி கர்ப்ப சிதைவு ஏற்ப்பட்டால் உமது பேரில் வழக்கு தொடுப்போம்' என்றான்

'சமந்தா இன்றையில் இருந்து வேலக்கு வரவேண்டாம்” என்றேன்

சமந்தாவோ அவளது போய் பிரண்டோ என்னிடம இப்படி வார்த்தையை எதிர்பார்கவில்லை. இருவர் முகமும் சிவந்து விட்டது. போய் பிரண்ட் எனது கிளினிக்கை விட்டு ஆத்திரத்தில் வெளியேறிவிட்டான்.

இதோ போல் திடிரென முடிவுகளை வழக்கமாக எடுப்பது எனது சுபாவமுமில்லை. போய் பிரண்டின் வார்த்தை அப்படி சொல்ல என்னை தூண்டியது. உடனே என்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் சொன்னேன்.

'சமந்தா நீர் வேலை செய்த இந்த இரண்டு வரடங்களும் சுமுகமானவை. ஆனால் இந்த நிலையில் உம்மைக்கொண்டு வேலை செய்விப்பதின் மூலம் நான் உமக்கு தீங்கு செய்கிறேன். நீர் உமது கர்ப்ப காலத்தில் எனது மனைவி வேலைசெய்யும் வைத்திய சாலையில் வரவேற்பாளராக வேலை செய்வதற்கு உதவி செய்கிறேன்;. உமது குழந்தை பிறந்த பின்பு மீண்டும் இங்கு வந்து வேலை செய்யலாம் .இதைவிட எதுவும் செயயமுடியாத நிலையில் நான் இருக்கிறேன்.”

அன்றில் இருந்து சமந்தா வேலைக்கு வரவில்லை. வேறு ஒரு நேர்ஸ்சை வேலைக்கு சேர்க்கப்பட்டாள். தோலைபேசியில் மினியை கொண்டு வந்து தரசொன்னேள். மினி என்னுடையது. நான் தரமாட்டேன் என்றாள்.

மினியை தரவிட்டால் உன்மீது வழக்கு போடுவேன் என கூறிவிட்டு தோலைபேசியியை வைத்தேன்

இரண்டு வாரங்களின் பினபு சகலரையும் சமமாக றடத்தப் படுவதை கவனிக்கும அரச நிறுவனமான ஈகுவல் ஒப்பொசூனிரி போட் நுஙரயட ழிpழசவரnவைல டிழயசன இஇடம் இருந்து அழைப்பு வந்தது. அங்கே சமந்தா சமந்தாவின் போய் பிரண்ட் உடன் அவர்களது வக்கீலும் இருந்தார்

சமந்தாவின வக்கீல் கற்பிணி பெண் என்ற காரணத்தால் சமந்தாவை வேலையில் இருந்து தூக்கியதாக என் மீது குற்றம் சாட்டினார்.

நான் எனது கிளினிக்கில் தொடர்சியாக வேலை செய்தால் முக்கியமாக ஹலத்தேன் மயக்க மருந்தால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை விஞ்ஞான ஆதாரங்களையும் ஆராச்சி முடிவுகளையும காட்டினேன் .இதைவிட சமந்தாவுகு;க வேறு தொழில் வசதி ஏற்படுத்தி கொடுதததையும் கூறினேன்

அவர்களால என்மீது வைத்த குற்றசாட்டை நிருபிக்க முடியவில்லை.

இத்துடன் விடயம் முடியவில்லை.

;மீண்டும் ஒரு அரசாங்க நிறுவனத்தில் (யுவெi னளைஉசiஅiயெழைn டீழயசன)குற்றசாட்டுவைக்கப்பட்டது. இந்த தடவை வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதற்காக மெல்பேனில் உள்ள பெரிய சட்ட நிறுவனத்தை அணுகியபோது ஒரு அழகிய இளம் பெண் வக்கீலை எனக்காக நியமித்தார்கள்.

நடந்த விசாரணையின் போது சமந்தாவின் வைக்கீல் தனது திறமையை காட்டுவதற்கு எனக்கு அவுஸ்திரேலிய சட்டம் தெரியாமல் இருக்கலாம் எனக் கூறியபோது எனது அழகிய வக்கீல் மௌனமாக இருந்தார். அங்கும் நானே எனக்காக வாதாட வேண்டி இருந்தது.

இங்கும் அவர்களின் குற்றசாட்டு நிராகரிக்கப்பட்டது.

இறுதியில் நீதிமன்றத்திற்கு வந்தது.இதில் ஒரு சூட்சுமம். சமந்தாவின் வக்கீல் கேசை வென்றால் மட்டுமே பணம் பெறுவார். இதே வேளையில் எனது வக்கீல் வென்றாலும் தோற்றாதாலும் பணம் பெறுவார்.

வழக்கு நாள்; வந்தது. இரண்டு பகுதியினரும் நீதிமன்றதத்தில் இருக்கும் போது நீதிபதியின் உதவியாளர் வந்து சொன்னார்

'இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்தால் நாலு நாட்கள் செல்லும். கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் டாலர்கள் செலவு ஏற்படும். இதைப்பற்றி கலந்து ஆலோசிக்க அரை மணித்தியாலம் தருகிறோம்” எனக் ஊறிவிட்டு சென்றார்.

இதை அடுத்து எங்கள் வக்கீல் கலந்துரையாடி விட்டு என்னிடம் எனது வக்கீல் “இது கோட்டுக்கு வெளியில் பணத்தை கொடுத்து நீதிபதியின் உதவியாளர் முன்னிலையில் சட்டபூர்வமாக முடித்துக்கொள்ளப்படும் ஒரு முறை” என கூறினார்.

எனக்கும் யார் சரி பிழை என்பதற்கு பதிலாக வேலையை விட்டு விட்டு விட்டு இப்படி அலைவதும் அலுத்து விட்டது. இதேவேளையில் சமந்தா நிறைமாத கர்பியணியாகி விட்டாள். என் மனத்தில் இப்பொழுது அவளுக்கு எதிரான உணர்வு இல்லை. மினியைக் கூட விட்டுக்கொடுத்து விடலாம் என்ற நிலைக்கு வந்து விட்டேன்.

நான் சம்மதித்ததும் நீதிபதியின் உதவியாளர் முன்னனிலையில் சமந்தாவின் வக்கீல் பதினொராயிரத்தில் ஆரம்பித்தார். நாங்கள் இரண்டாயிரம் மட்டும் தருவோம் எனக் கூறி ஒரு ஏலமாக நடத்தப்பட்டது.

கடைசியில் ஐயாயாயிரம் டாலர்கள் சமந்தவுக்கு கொடுத்தால் வழக்கை வாபஸ் வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. சமந்தாவுக்கு மினியை தந்தால் மேலும் ஆயிரம் டாலர் தருவதாக கூறிய போதும் அவள் மறுத்து விட்டாள. நிதிபதியின உதலியாளர்; மினியை இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்க மறுத்துவிட்டார். அதற்கு இன்னெரு வழக்கு தேவைப்படும் என்றார்

கடைசியில் இருபகுதியினரும் ஒப்பந்தமிட்டு சம்மதித்தோம்.

இதன் பின் ஐயாயிரம் டாலர் பணத்தில் அரசாங்க வரியாக தொழாயிரம் டாலர்களை கழித்துக் கொண்டு எனது வக்கீல் மூலம் சமந்தாவின் வக்கீலிடம் கொடுத்தேன்;.இதேவேளையில் அதிகம் பேசாத எனது அழகிய வக்கீலுக்கு கூலியாக ஐய்யாயிரம் கொடுத்தேன். இந்த விடயத்தில் எனக்கு பத்தாயிரம் நட்டமானது.

மினியும் கிடைக்கவில்லை

எனக்கெதிராக வழக்கு தொடுத்த சமந்தாவும் தனது வக்கீலுக்கு பணம் கொடுத்தபின் எவ்வளவு மிச்சம் கிடைத்திருக்கும்? சமந்தாவின் வக்கீல் எனது வக்கீலை விட பலமடங்கு திறமையானவர.;

மிருக வைத்தியரான எனக்கு அப்பொழுதுதான் “சட்டம் ஒரு இருட்டறை” என்ற வார்த்தையின் அர்த்தம் மெதுவாக புரியத் தொடங்கியது.

uthayam@optusnet.com.au

 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்