இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2007 இதழ் 93 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல்!
[அண்மையில் வீரகேசரி, புதினம்.காம் ஆகியவற்றில் இலங்கை நிலைவரம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் சில இங்கு பதிவுகளுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகின்றன.]

நன்றி: வீரகேசரி!
மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

மனித உரிமை மீறல்கள் குறித்து அரசிடம் விளக்கம் கோர வேண்டும் ஐ.நா. சபையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!இலங்கையில் இடம்பெறும் மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கியநாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோர வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழுவை அனுமதிப்பதோடு, பலவந்தமாக காணாமல் போவதிலிருந்து சகலரையும் பாதுகாக்கும் ஐ.நா. சமவõயத்தை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துமாறும் சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா.வை கேட்டுள்ளது.

இலங்கையில் இடம் பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள பகிரங்க அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

நீதிக்கு புறம்பான கொலைகள், கடத்தல்கள், பலவந்தமான காணாமல் போதல்கள் என்பன இலங்கையில் நாளாந்த நிகழ்வாகிவிட்டன. கடத்தல்கள், கொலைகள் தொடர்பான பல முறைப்பாடுகள் ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

2005 ஆம் ஆண்டு மோதல்கள் மீண்டும் ஆரம்பமானதையடுத்து ஆகக்குறைந்தது 4000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வார இறுதியில்

மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை அடுத்து மன்னாரில் 4000 பொது மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

பொது மக்கள் போர் நிறுத்தத்தை காணமுடியாதுள்ளனர். பாதுகாப்பு படைகளாலும் புலிகள் உள்ளிட்ட ஏனைய ஆயுதக் குழுக்களாலும் பொது மக்கள் நேரடியாக இலக்கு வைக்கப்படுகின்றனர்.

விஷேடமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பொது மக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் யாழ்ப்பாணத்தில் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 13 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதõகவும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் விடுகையை அனுமதிக்குமாறு ஐ.நா. இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

ஐ.நா.வின் மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தாமதமின்றி அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை ஐ.நா. கோர வேண்டும். -
நன்றி: வீரகேசரி

புதினம்.காம்!
கிழக்கில் சிங்கள வலயம் அமைக்க மகிந்த அரசாங்கம் சதி: இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு!

கிழக்கில் சிங்கள வலயம் அமைக்க மகிந்த அரசாங்கம் சதி: இரா. சம்பந்தன் குற்றச்சாட்டு! கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் விகிதாசாரத்தை குறைத்து அங்கே சிங்கள வலயம் ஒன்றை உருவாக்க மகிந்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு - கிழக்கு நிலைமைகள் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை அவர் பேசியதாவது:

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. சிறிலங்கா அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. கிழக்கில் தாக்குதல்களை அதிகரித்திருக்கும் அரசாங்கம், தமிழ் மக்களை அங்கே அடக்கி ஒடுக்கி வருகின்றது. கிழக்கில் இருந்த தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதிக்கத்தை இல்லாமல் செய்யவே மகிந்த அரசாங்கம் இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்கிறது.

எனவே உடனடியாக இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கள் எவையும் கிழக்கு மாகாண நடவடிக்கைக்காக பெறப்படுவதில்லை.

கிழக்கு இராணுவ நடவடிக்கையால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகி விட்டனர்.

வாகரைக்கு மகிந்த சென்றார். அங்கே நிகழ்ந்த தாக்குதல்களில் மக்கள் உயிரிழக்கவில்லை என்றார்.

ஆனால் 300-க்கும் அதிகமான தமிழர்கள் அங்கே உயிரிழந்துள்ளனர். இந்த சாபக்கேடான நடவடிக்கை மூலம் அங்கே ஒரு திட்டமிட்ட நடவடிக்கை நிகழ்வது உறுதிப்படுத்தியுள்ளது.

கிழக்கை சிங்கள மயப்படுத்தவே மூதூர் உயர்பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் ஆதரவு தரமாட்டோம். தமிழர்கள், ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதையே அந்த உயர்பாதுகாப்பு வலயம் கூறி நிற்கிறது.

தமிழ் மக்களைப் போன்றே முஸ்லிம் மக்களும் கிழக்கில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகளில் அரச நிர்வாகத்தை சீர்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறுகின்ற போதும் அங்கே அரச நிர்வாகம் நடைபெறவில்லை.

விடுதலைப் புலிகளிடம் இருந்து மக்களை விடுவிப்பதாக கூறி குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் சம்பூரை ஆக்கிரமித்த இராணுவத்தினர் இன்னும் ஏன் அந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்தவில்லை?.

சம்பூரில் மக்களின் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கே வீதிகளுக்கு சிங்களப் பெயர் சூட்டுகிறார்கள். தமிழ்- முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

நூறு வருடங்கள் பழமை வாய்ந்த காணி உறுதிகளை அங்குள்ள மக்கள் வைத்திருக்கின்றனர். ஆனால் அவை தற்போது அரச சொத்தாக்கப்பட்டு வருகின்றன.

பதவியா, புல்மோட்டை, திரியாய், வெலிஓயா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே புதிய சிங்கள வலயத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அவர்.

இரா. சம்பந்தன் உரையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த சிங்களக் கட்சிகள்!

சிறிலங்கா நாடாளுமன்றில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரையை சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க மற்றும் சிங்களக் கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை வடக்கு கிழக்கு நிலைமை குறித்து இரா. சம்பந்தன் உரையாற்றத் தொடங்கியதும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர்.

முதலில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எழுந்து சென்றார்.

அவரைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எழுந்தார்.

அவரைத்தொடர்ந்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனால் வடக்கு கிழக்கு நிலமை குறித்து சிங்கள கட்சிகள் எதுவுமே அக்கறை கொள்ளவில்லை என்பது நிருபணமாகியிருப்பதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வட்டாரங்கள் விசனம் தெரிவித்தன.

வடக்கு கிழக்கு குறித்த முக்கியமான இந்த விவாதத்தில் பிரதான அமைச்சர்கள் எவருமே இல்லை என்பதை தனது உரையில் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், விவாதத்தில் கலந்துகொள்ளவே மனமில்லாதவர்கள் எப்படி தமிழர்களின் இனப்பிரச்சினையை தீர்த்துவைக்கப்போகின்றனர் என்று கேள்வியும் எழுப்பினார்.

இரா.சம்பந்தன் உரையாற்றிய போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர டக்ளஸ் உள்ளிட்ட 3 அமைச்சர்களும்;. ஐக்கிய தேசியக்கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டுமே அங்கு இருந்தனர்.

தமிழர் பிரதேச வளங்களை சூறையாடுகிறது சிறிலங்கா இராணுவம்:  - துரைரட்ணசிங்கம் -

சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமிக்கும் தமிழர் பிரதேசங்களில் உள்ள வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் குற்றம்சாட்டினார். வடக்கு-கிழக்கு நிலமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் சிறப்புரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து துரைரட்ணசிங்கம் பேசியதாவது: சிலாவத்துறையில் வசித்து வந்த 4,500-க்கும் அதிகமான தமிழ்மக்கள் தற்போது அகதிகளாகியுள்ளனர். தமிழ் மக்களின் பகுதிகள் மீது இப்போது சிங்கள இராணுவத்தினருக்கு ஒருவித ஈர்ப்பு வந்திருக்கிறது.

கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மழை காலத்தில் மகாவலி கங்கை பெருக்கெடுத்து ஒடப்போகும் இறால்குழி கங்குவேலி ஆகிய இடங்களில் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மழை காலத்தில் இந்த இடங்களில் சுமார் நான்கு அடிக்கு மேலே நீர் பாயும். அப்போது இந்த மக்களின் நிலை என்னவாகப் போகிறது?.

சிறிலங்கா இராணுவத்தினரைப் பொறுத்தவரை நில ஆக்கிரமிப்புதான் முக்கியமாக இருக்கிறது. அதற்காக பௌத்த மதத்தின் புனித சின்னமான புத்தர்சிலையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

அந்த புத்தர் சிலையையே ஆக்கிரமிக்கபட்ட இடங்களின் எல்லையாக வைத்து வருகின்றனர்.

மீள்குடியேற்றப்படும் இடங்களிலுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆவணங்கள் அனைத்தும் சிறிலங்கா இராணுவத்தினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களை பலவந்தமாகவே எடுத்துச் சென்றுள்ளனர் என்றார் அவர். -
நன்றி: புதினம்.காம்

வங்கக் கடலில் 5 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி: வைகோ, இந்திய இடதுசாரிகள் கண்டனம்

வங்கக் கடலில் 5 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி: வைகோ, இந்திய இடதுசாரிகள் கண்டனம் வங்கக் கடற்பரப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலிய நாடுகள் மேற்கொண்டு வரும் கூட்டு கடற்படை பயிற்சிக்கு இந்திய இடதுசாரிகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவுடன் இணைந்து வங்கக் கடலில் கடற்படை கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து இந்திய இடதுசாரி கட்சிகள் இந்தியா தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கடற்படை கூட்டுப் போர்ப் பயிற்சியை நடத்தி வருகின்றன. இதில், 20-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

பயிற்சி நடக்கும் பகுதி அருகே வர வேண்டாம் என்று வர்த்தக கப்பல்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து போர்ப் பயிற்சியை மேற்கொள்ள இந்திய இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனைக் கண்டித்து சென்னை மற்றும் கோல்கட்டாவில் இருந்து இரண்டு பேரணிகள் விசாகப்பட்டினத்துக்கு புறப்பட்டன.

தமிழ்நாட்டின் விருதுநகரில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இக்கூட்டு கடற்படை பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூறியதாவது:

இந்தியாவில் கூட்டு கடற்படை பயிற்சி என்ற பெயரில் அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய கப்பல்கள் இந்தியா வந்துள்ளன.

பண்டித நேரு பாண்டூங் மாநாட்டில் அறிவித்த அணி சேரா கொள்கைக்கும் 1983 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் இந்தியா தலைமையிலான அணிசேரா நாடுகளில் அந்த கொள்கையை உறுதிபடுத்தியதற்கும் இந்த நடவடிக்கை எதிரானதாகும்.

இது இந்திய இறைமைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை கொடுக்க அனுமதி மறுக்கிறது.

ஆனால் சிங்கள அரசுக்கு ராடார், பீரங்கி போன்ற அணு ஆயுதங்களை சப்ளை செய்கிறது என்றார் வைகோ.

நன்றி: புதினம்.காம்

ஏற்கனவே திட்டமிட்டபடி உணவு, மருந்து பொருட்களுடன் ராமேசுவரத்தில் இருந்து 12-ந் தேதி யாழ்ப்பாணம் செல்வோம்- பழ.நெடுமாறன் பேட்டி!

ஏற்கனவே திட்டமிட்டபடி உணவு, மருந்து பொருட்களுடன் ராமேசுவரத்தில் இருந்து 12-ந் தேதி யாழ்ப்பாணம் செல்வோம்- பழ.நெடுமாறன் பேட்டி மதுரை, செப். 6- ஏற்கனவே திட்டமிட்டபடி, ராமேசுவரத்தில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு செல்வோம் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்து உள்ளார். தமிழர் தேசிய இயக்கத்தலைவரும், தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான பழ.நெடுமாறன் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உணவுப்பொருட்கள்
தமிழின விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் உணவு மற்றும் மருந்துபொருட்களை திரட்ட தொடங்கினோம். 2 மாதங்களில் ரூ.2 கோடி மதிப்புள்ள மருந்து மற்றும் உணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுக்கு அனுப்ப இந்திய தேசிய செஞ்சிலுவை சங்கத்தை கடந்த ஜுலை மாதம் 9-ந் தேதி அணுகினோம். அவர்கள் அதற்கு உடன்பட்டனர்.

மத்திய அரசுக்கு கடிதம்
இதைதொடர்ந்து, இலங்கைக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை கொண்டு செல்ல அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடந்த 9.2.07 அன்று கடிதம் எழுதினோம். மேலும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் ராணுவ மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.

ஆனால் இதற்கு மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த நிலையில் கடந்த மே மாதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான அமைப்புகள் தந்திகள் அனுப்பின. கடந்த ஜுன் மாதம் 5-ந் தேதி சென்னையில் பட்டினி போராட்டமும் நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகத்துக்கு நாங்கள் சென்று கடிதம் கொடுத்தோம். இந்த கடிதம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

படகு மூலம் அனுப்பும் போராட்டம்
நாங்கள் திரட்டி இருக்கும் பொருட்களை மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியும். ஆனால் அரசு இதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் வேறு வழியில்லாமல் ஏற்கனவே திட்டமிட்டபடி உதவி பொருட்களை படகுகள் மூலம் இலங்கைக்கு ஏற்றி செல்லும் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம்.

நாளை(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 12-ந் தேதி வரை 2 பிரிவுகளாக படகு பிரசார பயணம் செய்ய இருக்கிறோம். 7-ந் தேதி (நாளை) மதுரையில் நடைபெறும் பிரசார தொடக்கவிழாவில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் சேதுராமன், ஜனதாதள மாநில பொதுசெயலாளர் ஜான்மோசஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

திருச்சியில்
அன்று திருச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜெகவீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறார்கள். நாங்கள் 11-ந் தேதி நாகப்பட்டினம் சென்று 12-ந் தேதி அங்கிருந்து உணவு மற்றும் பொருட்களை படகுகளில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் போராட்டம் நடத்த இருக்கிறோம்.

இந்த பிரசார பயணங்கள் மதுரை- ராமேசுவரம், திருச்சி-நாகப்பட்டினம் ஆகிய பாதைகள் வழியாக நடக்கிறது.

இவ்வாறு பழ.நெடுமாறன் கூறினார்.

நன்றி: தினத்தந்தி.காம்!


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner