| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| அரசியல்! |  
| தினக்குரல்: பயனுள்ள மீள்பிரசுரம்! உதவி வழங்கும் நாடுகள் அழுத்தம் கொடுக்குமா?
 
  சர்வதேச 
சமூகத்தின் அனுசரணையுடனான இன நெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கான அனைத்து சமாதான 
முயற்சிகளையும் ஓரங்கட்டிவிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையொன்றை ஜனாதிபதி 
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் 
இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நாளை திங்கட்கிழமையும் 
செவ்வாய்க்கிழமையும் நடைபெறவுள்ளது. காலியில் இரு தினங்கள் நடைபெறவுள்ள இந்த 
மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ள அதேநேரம், இதனையொட்டி தென் 
பிராந்தியப் பிரதேசங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று 
மாவட்டங்களிலும் அதிகூடிய விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னொருபோதுமில்லாதவாறு 
அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் பொலிஸாரும் முப்படையினரும் 
ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டு, கடல் மற்றும் தரைவழிப் பாதுகாப்புகள் மிகக்கடுமையாக 
அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் படையினர் 24 மணிநேரமும் உஷார் நிலையில் 
வைக்கப்பட்டுள்ளனர்.
 
 அதேநேரம், இந்த மாநாட்டை முன்னிட்டு கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர்ச்சியாக 
மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக இப்பகுதிகளில் 
வசிக்கும் தமிழ் மக்கள் மற்றும் தமிழ் வர்த்தகர்கள் பெரும் 
அசௌகரியங்களுக்குள்ளாகியிருப்பதுடன் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறுவதற்கும் 
அஞ்சுகின்றனர்.
 
 காலி மற்றும் மாத்தறைப் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களை நடாத்தி வரும் 
வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி வைத்திருக்கும் நிலைக்கும் 
தள்ளப்பட்டுள்ளனர்.
 
 அத்துடன், இப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் 
சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் காரணமாக 40 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் 
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
 
 இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாட்டை குழப்புவதற்கு விடுதலைப் புலிகள் 
தாக்குதல் முயற்சிகளை மேற்கொள்ளலாமென்ற அச்சம் காரணமாகவே அதிதீவிர பாதுகாப்பு 
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பினரால் 
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
 தென் பிராந்திய மாவட்டங்களான காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை பிரதேசங்களில் 
மாத்திரமன்றி தலைநகர் கொழும்பிலும் இந்த மாநாட்டை முன்னிட்டு மிகக் கடுமையான 
பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
 
 உதவி வழங்கும் சமூகத்தின் இந்த மாநாட்டில் இலங்கையின் இன நெருக்கடி தீர்வு 
முயற்சிக்கான இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே உட்பட ஐரோப்பிய 
நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இராஜதந்திரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
 முன்னைய காலங்களை விட இம்முறை இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடானது அதி 
முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுவதுடன், பல்வேறு தரப்பினரின் 
எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் தங்கியிருக்கிறது.
 
 இன நெருக்கடித் தீர்வுக்கு சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரத் 
தீர்வொன்றைப் பெறுவதன் மூலமே இலங்கையில் ஸ்திரமான பொருளாதார அடித்தளமொன்றைக் 
கட்டியெழுப்ப முடியும் என்ற சர்வதேச சமூகத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட 
நிலையிலேயே கடந்த காலங்களில் சர்வதேச சமூகத்தின் உதவிகள் பெருமளவில் கிடைத்து 
வந்துள்ளன.
 
 சர்வதேச சமூகத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு பெருமளவிலான நிதி உதவிகளை பெற்றுக் 
கொண்ட கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த தலைமைகள் அந்த நிபந்தனைகளை முழுமையாக மீறி 
இராணுவ செயற்பாடுகளுக்கே பெருமளவு நிதியைப் பயன்படுத்தி வந்தன.
 
 அதுமட்டுமன்றி, போர் நடவடிக்கைகளால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு 
தமிழர் பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகள் புறக்கணிக்கப்பட்டு தென்னிலங்கையில் 
அபிவிருத்திப் பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன.
 
 இவ்வாறானதோர் நிலைமையே கடல்கோள் மீள் கட்டுமானப் பணிகளுக்கு சர்வதேச சமூகத்தினால் 
வழங்கப்பட்ட உதவிகள் மூலமும் வெளிப்பட்டு நிற்கிறது.
 
 கடல்கோளால் மிகப்பெரும் பேரழிவை எதிர்கொண்ட வடக்கு, கிழக்கு கரையோரப் பிரதேசங்கள் 
இன்னமும் இடிபாடுகளுக்கு மத்தியிலேயே காணப்படுவதுடன், பாதிக்கப்பட்ட மக்கள் 
நலன்புரி நிலையங்களில் அரச நிவாரண உதவிகள் படிப்படியாக மறுக்கப்பட்ட நிலையில் அவல 
வாழ்வொன்றை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
 அதேநேரம், சர்வதேச சமூகத்தினால் வழங்கப்பட்ட பெருமளவிலான நிதி உதவிகளும் கடல்கோளால் 
பாதிக்கப்பட்ட தென்னிலங்கை கரையோரப் பிரதேச மக்களின் வாழ்வை மீளவும் கட்டியெழுப்ப 
பயன்படுத்தப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாகவுள்ளது.
 
 இவ்வாறானதோர் நிலைமையை இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்ட 
நிலைமையிலேயே மேலதிகமாக வழங்கப்படவிருந்த கடல்கோள் மீள் கட்டமைப்பு நிவாரண நிதி 
உதவிகள் வழங்க மறுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
 இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளையும் 
பெரும் எதிர்பார்ப்புகளையும் அனைத்துத் தரப்பினராலும் எதிர்கொள்ளப்பட்டுள்ள 
நிலையில் இம்முறை எந்தவொரு உறுதிமொழியையும் சர்வதேச சமூகத்திற்கு 
வழங்கப்போவதில்லையென அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 கடந்த காலங்களில் இன நெருக்கடித் தீர்வுக்கு சமாதான பேச்சுவார்த்தைகள் மூலமே 
தீர்வொன்றைக் காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் இராணுவ 
நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்ட 
நிலையிலேயே சர்வதேச சமூகத்தின் உதவிகள் பெறப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.
 
 உதவி வழங்கும் நாடுகளுக்கு எந்தவொரு உறுதிமொழியும் வழங்கப்படமாட்டாது என்ற அரச 
தரப்பின் செய்தி கடும் போக்கொன்றையே சர்வதேச சமூகத்திற்கு சுட்டிக்காட்டுகின்றது.
 
 இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அது 
தொடர்பிலான நாடுகளின் இலங்கைக்கான இராஜதந்திரிகளை தனித்தனியாக சந்தித்துள்ள தமிழ்த் 
தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பிலான அழுத்தங்களை 
வழங்கியுள்ளனர்.
 
 அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜேர்மன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 
பிரதிநிதிகளை கடந்த சில தினங்களாக தனித்தனியாக சந்தித்துள்ள தமிழ்த் தேசியக் 
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலைவரங்கள் 
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் சமாதான 
முயற்சிகளை ஓரங்கட்டிவிட்டு இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ள 
அரசின் செயற்பாடுகள் என்பன தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
 சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், நோர்வேயின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட 
புரிந்துணர்வு உடன்படிக்கையை முழுமையாக மீறி வருவதுடன் நோர்வே சமாதான 
முயற்சியாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றக் கோரும் சிங்கள கடும் போக்கு அரசியல் 
சக்திகளான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய என்பனவற்றின் 
செயற்பாடுகளுக்கு துணைபோகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனையென்ற 
அரசியல் போக்கு இராணுவ அக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருவதையும் 
தெளிவுபடுத்தியுள்ளனர்.
 
 இலங்கையின் பிரதான பிரச்சினையான இன நெருக்கடித் தீர்வுக்கு இராணுவ 
நடவடிக்கைகளாலன்றி சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகவே நிரந்தரத் தீர்வொன்றைக் காண 
முடியும். இதன் மூலமே சுபிட்சமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற 
யதார்த்தத்தை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு கடுமையாக வலியுறுத்தி அந்த 
அடிப்படையிலேயே உதவி வழங்க முன்வர வேண்டும்.
 
 இலங்கையின் இன்றைய ஆட்சியாளர்களால் காலம் கடந்தும் விளங்கிக் கொள்ள முடியாத இந்த 
யதார்த்தத்தை உதவி வழங்க முன்வந்திருக்கும் சர்வதேச சமூகமாவது உணர்ந்து செயற்படுமா?
 
 - -அஜாதசத்ரு-
 நன்றி: தினக்குரல்-28 - January - 2007
 http://www.thinakkural.com/news/2007/1/28/articles_page20249.htm
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |