ஸ்ரீலங்கா: அமைதிப் பேச்சுவார்த்தைகளை 
              தொடரவேண்டும்!
              
               பழைய 
              குருடி கதவைத் திறடி என்றாளாம். அது மாதிரித்தான் இருக்கிறது 
              ஸ்ரீலங்காவின் நிலைமை. அண்மைய சம்பூர்த் தாக்குதலின் சாதகமான 
              முடிவால் ஸ்ரீலங்கா அரசு சர்வதேச சமூகத்திற்கு அமைதி முகத்தைக் 
              காட்டிக் கொண்டே இலங்கைத் தமிழ்ப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வினைக் 
              கண்டு விடலாமென்று எண்ணிச் செயற்படுவதாகத் தெரிகிறது. தமது 
              படைபலத்தின் எண்ணிக்கையை வைத்து வழக்கமாக அடக்குமுறை ஆட்சியாளர்கள் 
              போடும் தப்புக் கணக்கை அது போடுவதாகவும் தெரிகிறது. ஒருமுறை 
              வரலாற்றினைத் திரும்பிப் பார்த்து நிதானமாகச் சிந்தித்தால் இலங்கைத் 
              தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வாக ஒருபோதுமே இராணுவத் தீர்வு 
              இருக்க முடியாதென்பதை அது புரிந்து கொள்ள முடியும். தற்போதுள்ள 
              சர்வதேசச் சூழல், தமிழகச் சூழல் ஆகிய புறக்காரணிகளை ஒதுக்கி விட்டு 
              ஒருபோதுமே ஸ்ரீலங்கா அரசு தன்னிசையாகச் செயற்பட முடியாதென்பதுதான் 
              யதார்த்தம். அதற்கொரு சிறு உதாரணமே போதும்.  இலங்கை அரசுக்கும், 
              விடுதலைப் புலிகளுக்குமிடையிலான சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் 
              நோர்வேயையும், குறிப்பாக எரிக்சொல்கைமையும் அப்புறப்படுத்த மகிந்த ராஜபக்ச அரசும், 'ஜனதா 
              விமுக்திப் பெரமுனை'யினரும் எவ்வளவு முயன்றார்கள். முடிந்ததா?  
              அண்மையில் கூட அமெரிக்காவின் உள்துறைச் செயலர் 'கொண்டலீசா ரைஸ்' 
              நோரேயின் தலைமையில் முன்னெடுக்கப்படும் அமைதி முயற்சிகளை அமெரிக்கா 
              உறுதியாக ஆதரிக்குமென்று ஸ்ரீலங்காவின் வெளியுறவுத் துறை 
              அமைச்சருக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
              மேற்கு நாடுகளைப் பொறுத்தவரையில் ஒருபோதுமே முதலில் தம்மவரைத்தான் 
              நம்புவார்கள். தங்களுக்குள் எத்தனை பிரச்சனைகளிருந்தாலும் பொதுவான 
              விடயங்களில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதனால்தான் இன்று அவர்கள் 
              ஆதிக்கத்தில் உலகமிருக்கிறது.

              இன்னுமொரு விடயத்தினையும் ஸ்ரீலங்கா அரசு இத்தனைவருட அரசியல் 
              அனுபவங்களிலிருந்தும் புரிந்து கொள்ளாமல் சர்வதேச 
              சமூகத்தினையும் பகைத்துக் கொண்டு போர் முகத்தைக் காட்டி நிற்பது 
              அரசியல் அறியாமையைத்தான் காட்டி நிற்கிறது. எண்ணிக்கையும் ஆயுத 
              பலமும் மட்டுமே ஒருபோதுமே முடிவில் போராட்டங்களின் வெற்றிகளைத் 
              தீர்மானிப்பதில்லை அப்படியிருந்திருந்தால் இன்று வியட்நாம் என்றொரு 
              நாடு பிறந்திருக்க முடியாது. இத்தனை வருடங்களாகப் பாலஸ்தீனத்து 
              மக்கள் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து 
              விட்டிருந்த இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளினால் இருந்த இடமில்லாமல் 
              போய் 
              விட்டிருப்பார்கள். இலங்கையில் கூட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா 
              குமாரதுங்கவின் இராணுவ நடவடிக்கைகள் விடுதலைப் புலிகளை வன்னிக் 
              காட்டிற்கு அனுப்பியது. பின்னர் நடந்ததென்ன? அதே விடுதலைப் புலிகள் 
              பின்னர் ஆனையிறவுவரை அடித்துப் 
              பிடிக்கவில்லையா? இந்திய அமைதிப் படையினர் காலத்தில் மூலைக்கு மூலை 
              தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, வட கிழக்கில் மட்டும் சுமார் 
              நூறாயிரம் படையினர்வரையில் குவிக்கப்பட்டு தொடர்ந்த போராட்டத்தால் 
              விடுதலைப் புலிகளை நிர்மூலமாக்க முடிந்ததா? மக்கள் மத்தியிலுள்ள 
              ஆதரவும், மனோபலமும்தான் நீதியான போராட்டங்களின் இறுதி வெற்றிகளைத் 
              தீர்மானிக்கும் காரணிகளாகயிருந்திருக்கின்றன என்பதைத்தான் 
              இதுவரையிலான வரலாறு தெரிவித்து நிற்கிறது. இலங்கை அரசு 
              வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு செயற்படாவிட்டால் சர்வதேச 
              சமூகமும் இறுதியில் பொறுமை இழக்கும். அதனைத்தான் அண்மையில் 
              ஸ்ரீலங்காவின் போர் நிறுத்தக் கண்கானிப்புக் குழுவின் புதிய தலைவரான 
              மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொகான் சோல்வ்பேர்க்கின் கூற்று 
              புலப்படுத்துகின்றது. இரு பகுதியினருமே போர் நிறுத்த உடன்படிக்கையினை 
              மீறியிருப்பதாகக் கண்டனமும், அதிருப்தியும், கவலையும் தெரிவித்துள்ள 
              அவர் அண்மையில் பிரெஞ்சு தன்னார்வ நிறுவன ஊழியர்கள் படுகொலையில் 
              குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா அரசு விசாரணை நடவடிக்கைகளை சரியாக 
              முன்னெடுக்காமலும், தடுத்தும் வருவதாலும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் 
              மீது சர்வதேசச் சமூகத்தின் நன்மதிப்பும் பொறுமையும் குறைவடைந்து 
              வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார். நிலைமை இவ்விதமே தொடர்ந்தால் 
              சர்வதேச சமூகம் எதிர்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 
              அமைதிப்படையின் பிரசன்னத்துடன் கூடியதொரு தீர்வினை ஏனைய இடங்களில் 
              கொண்டுவந்ததுபோல் முனையலாம். நாடு இருபகுதிகளாகப் பிரியலாம்.
              
              எனவே தற்போதுள்ள சூழலில் இலங்கையில் அமைதி நிலவ வேண்டுமானால், சகஜ 
              நிலை திரும்பவேண்டுமானால் விடுதலைப் 
              புலிகளும், ஸ்ரீலங்கா அரசும் மீண்டும் இதய சுத்தியுடன் (?) ஏற்கனவே 
              ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தலைமையிலான அமைதிப் 
              பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடரவேண்டும். இத்தகைய சமாதான 
              முயற்சிகளுக்கு இந்தியாவின் குறிப்பாகத் தமிழக மக்களின் ஆதரவு மிக 
              மிக முக்கியம். தமிழ் மக்கள் அடைந்துவரும் துயரங்களுக்கும், 
              அழிவுகளுக்கும் இதுதான் தற்போதுள்ள நிலையில் ஒரே வழி.
              
              - நந்திவர்மன் -

 Pathivugal  ISSN 1481-2991
            
Pathivugal  ISSN 1481-2991