இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரில் 2009 இதழ் 112  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
அரசியல!

புதினம்.காம் ஏப்ரில் 26, 2009
தனி ஈழம் தான் ஒரே தீர்வு! அதை அமைக்கும் நடவடிக்கையை நான் நிச்சயமாகச் செய்வேன்!!": ஜெயலலிதா பரபரப்பான வாக்குறுதி

தனி ஈழம் தான் ஒரே தீர்வு! அதை அமைக்கும் நடவடிக்கையை நான் நிச்சயமாகச் செய்வேன்!!": ஜெயலலிதா பரபரப்பான வாக்குறுதி இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால் - எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால் - தனி ஈழம் அமைக்க தேவையான நடவடிக்கையை நான் எடுப்பேன். அதை நான் நிச்சயம் செய்வேன் என்று ஒரு பரபரப்பான வாக்குறுதியை அதிமுக தலைவர் செல்வி ஜெயலலிதா வழங்கியிருக்கின்றார். இது தொடர்பாக தமிழ்நாடு, ஈரோட்டில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜெயலலிதா மேலும் தெரிவித்துள்ளதாவது:

வாழும் கலை, அமைப்பின் நிறுவனர், சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி தலைமையில், அவரது அமைப்பைச் சேர்ந்த குழுவினர், அண்மையில், சில நாட்களுக்கு முன்பு, இலங்கை சென்று, அங்குள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழர்களோடு, உரையாடிவிட்டு வந்திருக்கின்றனர்.

இதுவரை, யாரும் செல்லாத பகுதிகளான, வவுனியா, முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளுக்கு எல்லாம், அவர்கள் சென்று வந்து இருக்கின்றனர்.

எனது தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு இடையில், 23 ஆம் நாள் நான் சென்னை வந்த போது, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீ சிறீ ரவிசங்கர் குருஜி அவர்கள் என்னை சந்தித்தார்.

அப்போது அங்கே இலங்கை தமிழர்கள் படும் வேதனைகளை, இன்னல்களை, அவலங்களை எனக்கு எடுத்துரைத்தார். அதுமட்டும் அல்லாமல், அங்கே அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட காணொலிக் [Video] காட்சிகளை இலத்திரனியல் காணொலித் தட்டில் [DVD] எனக்கு திரையிட்டு காண்பித்தார்.

அந்த காட்சிகளை பார்த்து நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் மன வேதனை அடைந்தேன்.

இதுவரை தெரியாத பல உண்மைகளை, காணொலி காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டேன். இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெறும் போரைக் காரணமாக கொண்டு, இலங்கை தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு மழை பெய்து, அவர்களை அழித்து வருகிறது என்பது மட்டும் தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால், தொடர்ந்து போர் நிறுத்தம் தேவை என்பதை மனிதாபிமானம் மிக்க நாம் அனைவரும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆனால், இந்த காணொலி காட்சிகளை பார்த்த பிறகு தான், இலங்கை தமிழர்கள் அங்கே கைதிகளை போல், அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள் என்பது தெரிகிறது.

இப்படி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு மோசமான நிலையில் இலங்கை தமிழர்கள் உள்ளனர். அந்த அளவுக்கு அவர்களை இலங்கை அரசு மிகவும் கேவலமாக, கொடூரமாக நடத்தி வருகிறது.

அப்படி என்ன கொடுமைக்கு இலங்கை தமிழர்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கை தமிழர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசால் சொல்லப்படுவது எல்லாம் பொய், பித்தலாட்டம், கபட நாடகம் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன்.

உண்மை நிலை என்னவென்றால், இலங்கை தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் எல்லாம் அவர்களை வெளியேறச் சொல்லி இலங்கை இராணுவம் உத்தரவிடுகிறது.

வீட்டில் உள்ள பொருட்களை, துணிமணிகளை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, கட்டிய துணியோடு, மாற்று துணிக்கு வழியில்லாமல் வெளியேற வேண்டிய அவல நிலைக்கு இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

இப்படி வெளியேறுகின்ற இலங்கை தமிழர்களை, இலங்கை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கிறது.

நிழலுக்கு மரங்கள் கூட இல்லாத இடத்தில், பாலைவனத்தில், கட்டாந் தரையில் இவர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். புல்பூண்டு கூட அந்த இடங்களில் கிடையாது. அனைத்தும் தகர கொட்டகை போட்ட முகாம்கள்.

இந்த முகாம்களை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. அதற்குள்தான் இவர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் முகாம்களை விட்டு வெளியே செல்ல இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வேறு இடங்களில் உள்ள இவர்களுடைய உறவினர்கள், இவர்களை பார்க்கச்சென்றால் கூட, முகாம்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. முள்வேலிக்கு வெளியில் இருந்து தான் அவர்கள் பேசிக்கொள்ள வேண்டும். அவர்களது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்டுவிட்டன.

கைதிகளைப் போல் அர்கள் அங்கே வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?... அவர்கள் என்ன குற்றவாளிகளா?... இதுபோன்று, அவர்களை நடத்துவதற்கு, இலங்கை அரசுக்கு, என்ன அதிகாரம் இருக்கிறது?...

குற்றம் புரிந்து, தண்டனை பெற்ற கைதிகளைக் கூட, அவர்களது உறவினர்கள், சிறைச்சாலைக்கு உள்ளே சென்று, பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒரு குற்றமும் புரியாத இலங்கை தமிழர்களை, அவர்களது உறவினர்கள் யாரும், உள்ளே சென்று, பார்க்கக் கூடாது என்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்?

இதையெல்லாம் பார்க்கின்ற போது, ஜெர்மனியில் நடந்த ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி தான் - தடுப்பு வதை முகாம்களை [Concentration Camps] நடத்தி, யூதர்களைக் கொடுமைப்படுத்தி அழித்த - ஹிட்லர் ஆட்சி தான், நினைவிற்கு வருகிறது.

இலங்கைத் தலைநகரமான கொழும்பில், 50-க்கும் மேற்பட்ட நல்ல நிலைமையில் இருந்த தமிழர்களை - மருத்துவர்களை, வியாபாரம் செய்பவர்களை - இரவோடு இரவாக, இலங்கை இராணுவத்தினர், வெளியேற்றி உள்ளனர். வீடு, வாசல், சொத்துக்கள், பொருட்கள் என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கட்டிய துணியுடன், மாற்று துணிக்குக் கூட வழியில்லாமல் பிச்சைக்காரர்களைப் போல், வவுனியா முகாம்களில், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு எல்லாம், குருஜி அவர்கள், துணிமணிகளை கொடுத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் குருஜியிடம், என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றால், "எங்களுக்கு எதுவும் வேண்டாம். எங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். நாங்கள் எங்கு தங்கி இருந்தோமோ, அங்கு எங்களை அனுப்பிவிடுங்கள்'' என்று மன்றாடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் எல்லாம், அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டு, அந்த இடங்களில் எல்லாம், சிங்கள மக்களை, இலங்கை அரசு தங்க வைக்கிறது, சிங்கள மக்களை குடும்பம் குடும்பமாக குடி அமர்த்துகிறது.

இலங்கையில் உள்ள தமிழினத்தை அழிக்க, இலங்கை அரசால் தீட்டப்பட்டு இருக்கும் மிக கொடுமையான திட்டம் இது. "முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள், பிச்சைக்காரர்களைப் போல் நடத்தப்படுகிறார்களே; அவர்களை, அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த இடங்களுக்கே அனுப்பி வையுங்கள்,'' என்று இலங்கை அதிபரிடம் குருஜி அவர்கள் கேட்டதற்கு, "இப்போதைக்கு அது முடியாது'' என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.

"இரண்டு மாதங்கள் கழித்தாவது அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டதற்கு, "அவர்கள் வசிக்கும் இடங்களில் எல்லாம், கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், "அதை சரி செய்வதற்கு, நான்கு வருடங்கள் ஆகும்'' என்றும், "எனவே, அதற்கு பிறகு தான் அங்கு அவர்களை அனுப்ப முடியும்'' என்றும், இலங்கை அதிபர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், அந்த இடங்களில் எல்லாம், புதிதாக குடியமர்த்தப்பட்ட சிங்களர்கள் வசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இலங்கை அதிபர் சொல்வது போல் கண்ணிவெடிகள் அங்கே இருந்தால், சிங்களவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?... அந்த கண்ணிவெடிகள், இலங்கை தமிழர்கள் அவற்றின் மீது நடந்தால் தான் வெடிக்குமா?... சிங்களர்கள் நடந்தால் வெடிக்காதா?...

இலங்கை இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் போக, எஞ்சி உயிரோடு இருக்கின்ற இலங்கைத் தமிழர்களை, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் எண்ணமே இலங்கை அரசுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எஞ்சியுள்ள இலங்கைத் தமிழர்களை அரசு நடத்தும் முகாம்களிலேயே கைதிகளைப் போல் - அடிமைகளைப் போல் - அடைத்து வைத்து, எல்லா உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில், நாளடைவில் அவர்களையும் அழித்துவிடுவதே இலங்கை அரசின் பயங்கரமான திட்டமாகத் தெரிகிறது.

உண்மை நிலை இப்படி இருக்க, இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியிலான தீர்வு காண்பது, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது, என்று பேசுவதெல்லாம் வீண் வேலை; அது வெறும் கண்துடைப்பு என்பது தெரிகிறது.

இலங்கை தமிழர்களுக்கு, சிங்களர்களோடு சம உரிமை வழங்கும் எண்ணமே, இலங்கை அரசுக்கு கிடையாது. ஒரே அடியாக, இலங்கையில் தமிழ் இனத்தையே அழித்துவிட வேண்டும் என்பது தான் இலங்கை அரசின் ஒரே செயல் திட்டமாக உள்ளது.

இலங்கையில் தமிழினம் அழிவதற்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசும், தி.மு.க. அரசும் தான் காரணம். இவர்கள் நடத்தும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலை நிறுத்தம் அனைத்தும் கண்துடைப்பு நாடகங்கள் தான். தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற இதுபோன்ற அறிவிப்புகளை செய்கிறார்கள்.

இந்திய அரசின் இரு தூதுவர்களும் இலங்கை அதிபரை தற்போது சந்தித்துவிட்டு திரும்பியுள்ளனர். என்ன சாதித்தார்கள்?... இதனால் என்ன பலன் ஏற்பட போகிறது?... எதுவுமே இல்லை. இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று நாம் கேட்கிறோம். இது மட்டும் போதாது; இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்கள் சகஜ வாழ்வு வாழ வேண்டும். சிங்கள மக்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளையும் அவர்கள் பெற வேண்டும்.

இதற்கு ஒரே வழி தனி ஈழம் அமைப்பது தான். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கூடிய புதிய மத்திய அரசு அமைந்தால், எங்கள் சொல்படி கேட்கும் மத்திய அரசு அமைந்தால், தனி ஈழம் அமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நான் அதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

இலங்கைப் பிரச்சினைக்கு, நிரந்தரத் தீர்வு காண, தனி ஈழம் தான் ஒரே வழி. அதை நான் நிச்சயம் செய்வேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கையில் தனி ஈழம் அமைக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களியுங்கள் என்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்

உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
[புதினம்.காம் ஏப்ரில் 26, 2009]
உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடரும் போரில் அகப்பட்டுள்ள தமிழ் மக்களுடைய அவல நிலை தொடர்பாகவும், கொல்லப்படுபவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதையிட்டும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்கா, இரு தரப்பினரும் உடனடியாக போரை நிறுத்திக்கொண்டு போர்ப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக்கோரியுள்ளது. இது தொடர்பாக வாசிங்ரன் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம். "

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்: ஜி-8 நாடுகள் அவசர கோரிக்கை
[புதினம்.காம் ஏப்ரில் 26, 2009]
வன்னிப் பிராந்தியத்தில் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள 'ஜி-8' எனப்படும் உலகில் முன்னணியில் உள்ள எட்டு செல்வந்த நாடுகளின் அமைப்பு, போர்ப் பகுதிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கும் தனது ஆதரவைத் தெரியப்படுத்தியிருக்கின்றது. "போர் நடைபெறும் பகுதியில் தற்போதும் சிக்கியுள்ள மக்களுடைய அவல நிலை மற்றும் போரால் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் தொடர்பாகவுமே நாம் எமது கவனத்தைச் செலுத்த வேண்டியவர்களாகவுள்ளோம்" என இது தொடர்பாக 'ஜி-8' நாடுகள் அமைப்பின் தலைவரால் இன்று சனிக்கிழமை ரோம் நகரத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகுந்த செல்வந்த நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரித்தானியா, இத்தாலி, ரஷ்யா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த 'ஜி-8' நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ள இந்த அறிக்கையில், பொதுமக்களின் உயிரிழப்புக்களை மேலும் தவிர்க்கும் வகையில் அவசியமான நடவடிக்கைகளை இருதரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்தவர்களுக்கான கூடாரங்கள் யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பினால் வானூர்தி மூலம் அனுப்பிவைக்க திட்டம்
[புதினம்.காம் ஏப்ரில் 26, 2009]
இடம்பெயர்ந்தவர்களுக்கான கூடாரங்கள் யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பினால் வானூர்தி மூலம் அனுப்பிவைக்க திட்டம்போர்ப் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ள மக்களுக்கு அவசர வதிவிட வசதிகளைச் செய்துகொடுப்பதற்காக பெருமளவு கூடாரங்கள் மற்றும் பொருட்களை வானூர்தி மூலமாக அனுப்பிவைக்கும் பணியைத் தொடங்கியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனம் அறிவித்திருக்கின்றது. இந்த வார தொடக்கம் முதல் அனுப்பிவைக்கப்படும் இந்த நிவாரணப் பொருட்களில் குடும்பங்களுக்குப் பொருத்தமானதாக 5 ஆயிரம் கூடாரங்களும் ஏனைய பொருட்களும் உள்ளடங்கியுள்ளன. இவை துபாயில் இருந்து கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

போர் நிலைமைகள் மோசமடைந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறியிருக்கும் நிலையிலேயே இந்தப் பொருட்களை அவசரகால உதவியாக அனுப்பிவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதுகாப்பு வலயம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் கடந்த திங்கட்கிழமை தாக்குதலை தொடங்கிய பின்னர் அங்கிருந்து 1,08,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வந்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் இடம்பெயர்ந்து வந்த மக்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் உள்ள குடும்பங்களுக்கு இந்தக் கூடாரங்கள் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜோன் ஹோம்ஸ் இன்று கொழும்பு செல்கின்றார்: இடம்பெயர்ந்தோர் விவகாரம் தொடர்பாக ஆராய்வார்
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்கின்றார். போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாகவே கொழும்புப் பயணத்தின் போது அவர் முக்கிய கவனத்தைச் செலுத்துவார் என ஐ.நா.வின் பேச்சாளர் மரி ஒக்காபே தெரிவித்தார்.

"போர்ப் பகுதிக்கு மனிதாபிமானக் குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல், இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி மற்றும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விடுதலை உட்பட முக்கியமான பல விடயங்களையிட்டும் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்துவார்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான சிறிலங்காவுக்கான பொறுப்பு அதிகாரி நில் புனே யாழ்ப்பாணத்துக்கான பயணம் ஒன்றைத் தற்போது மேற்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன்னியில் இருந்து யாழ். குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளவர்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் குடாநாட்டுக்குச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி: http://www.puthinam.com

Crouching Tiger - Prabhakaran still has enough grit to continue the fight By Anita Pratap [http://week.manoramaonline.com/]
LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint. I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of Tamil Eelam, he displays an unwavering attachment.

I doubt whether these military setbacks will discourage, undermine or erode his confidence or commitment to his goal. He is very clear in his mind-he is fighting to liberate his people. For that principle he lives. For that principle he fights. And for that principle he is willing to die. Victories and defeats come and go. Territories are lost and won. Cadres die, comrades betray. But to his dying breath, he will remain true to Eelam. In the 30 years that I have written about this conflict, never has the LTTE been so alone and friendless in its struggle. Prabhakaran is a victim of a combination of his actions and international circumstances. By assassinating Rajiv Gandhi, he made an implacable foe of India. And after 9/11, George Bush's war on terror created zero tolerance for terrorism around the world. It also blurred distinctions between terrorist organisations and national liberation groups.

Crouching Tiger - Prabhakaran still has enough grit to continue the fight By Anita Pratap

There is no liberation army in the world that has not faced state terror and in turn used terror as a tactic to pursue its nationalist goals. Netaji Subhas Chandra Bose and Bhagat Singh-Prabhakaran considers them heroes-were designated terrorists by the British rulers of India. Until recently, Nelson Mandela was on the list of terrorists.

The LTTE is banned as a terrorist organisation in some 30 countries. That has given the Sri Lankan government global sanction to destroy the LTTE. But in doing so, the international community has allowed a disaster of epic proportion to unfold. This is not an LTTE, but a Tamil tragedy. Nowhere in the world has a government been continuously bombing its own civilians for over a year. This is a crime Israeli, American and NATO forces are not guilty of.

A designated No Fire Zone has turned into a vast death chamber for Tamil civilians, trapped between the LTTE and the attacking army. Nowhere else in the world is a war being waged without outsiders and independent witnesses, not in Iraq, not in Afghanistan, not in Gaza. But in Sri Lanka, the media and NGOs have been banned from the war zone, and the International Committee of the Red Cross, among the lone relief workers there, has described the civilian situation as catastrophic. A quarter of a million Tamils uprooted. Tens of thousands imprisoned in refugee camps. Thousands killed and maimed.

Those who say the Tamils deserve this fate because they supported Prabhakaran are heartless and blind. There are many who support him and many who don't. Either way, they don't have the power to influence him. Is it then justifiable to punish ordinary civilians? Is it fair to kill Americans for the sin that Bush committed in Iraq, even though they not only elected, but re-elected him? The Sri Lankan army cannot be faulted for trying to destroy the LTTE. But the Sri Lankan government cannot condone or justify destroying Tamils and their homeland in the process.

But this only strengthens Prabhakaran. Politicians and bureaucrats don't realise that the LTTE welcomes war. It swells its ranks, reaffirms its raison d'étre, it produces more emotional support for a separate state. From the previous wars that I have witnessed (journalists could manage to get in then), LTTE cadres love fighting. During peacetime, LTTE guerrillas are disciplined and restrained. In battle, there is a complete makeover. They are highly excitable, almost gleeful.

The LTTE has been written off many times before. Prabhakaran has been 'killed' or 'nearly killed' many times in the past. If the army ever reaches his bunker, he will swallow his cyanide and the legend of Prabhakaran will probably attain mythical proportions. Lacking independent assessments, journalists repeat Sri Lankan claims that this is the end game, this is Prabhakaran's last stand.

Judging from the past, I doubt it. Sure, the Sri Lankan army will wrest the last piece of land from Prabhakaran's grip. But that doesn't mean the end of the LTTE. They will revert to what they are best at-guerrilla warfare, striking when least expected. As armies before have realised, conquering territory is one thing, holding onto it opens a Pandora's box of problems.

Prabhakaran has lost wars before. He had created a de facto Tamil Eelam with its own army, police, courts and taxation system not once, but several times in the past-only to have it all smashed and wiped out. And he had to start all over again. At 54, Prabhakaran still has enough grit to start again and continue for another 20 years.

In the meantime, he will be watching the Indian elections closely to see which dispensation takes charge in New Delhi. He will be watching to see if there is a popular upsurge of support in Tamil Nadu for the plight of Tamils across the Palk Strait. He will be watching the disastrous impact of war on Sri Lanka's economy. He will be watching Hillary Clinton who said there should be a 'nuanced' approach to dealing with terrorism. He will be watching President Barack Obama who rightly analysed that conflicts stem from our perception of 'the other'.

Today, Prabhakaran's situation looks dire. But the wheels of fortune are not static. Things change. America has changed. The world is changing. Capitalism is discredited. Socialism sneaks in from the backdoor. Big banks have gone bust. Misery replaces prosperity in headlines. As new winds blow away many certitudes of the recent past, new opportunities, alignments and paradigms take their place on the world stage. And they will inexorably weave their impact in remote corners of faraway Sri Lanka, this beautiful emerald teardrop island that awaits its tryst with peace.

Courtesy: http://week.manoramaonline.com/


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner