பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சினிமா! |
கோல்யா (Kolya)!
- சௌந்தரி (ஆஸ்திரேலியா) -
Kolya
என்னும் இத்திரைப்படம் செக்கோஸ்லாவியா மொழியில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
கதாநாயன் Louka வாக நடிக்கும் Zdenek Sverak என்பவரே இத்திரைப்படத்திற்கான கதை
வசனத்தை எழுதியிருக்கின்றார். அவரது மகன் Jan Sverak திரைப்படத்தை
இயக்கியிருக்கின்றார். 1996 ம் ஆண்டளவில் வேற்று மொழியில் தயாரிக்கப்பட்ட
திரைப்படங்களிற்கான Golden Globe மற்றும் 'ஆஸ்கார்' விருதுகளை பெற்றுக்கொண்ட
இத்திரைப்படத்தை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் எனக்கு இப்போதுதான் கிடைத்தது.
நல்லனவற்றை அறியும் நிலை காலம் தாழ்த்தி கிடைத்தாலும் அதை ஓர் வரமாக
ஏற்றுக்கொள்ளலாம்;.
கோல்யா (Kolya) என்ற திரைப்படம் உறவுகளின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும்
மாற்றத்தையும் சுலபமாக புரியவைக்கின்றது.
கதாநாயகன் Louka வை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கின்றது. 55 வயதுடைய ஓர்
பிரம்மச்சாரி டுழரமய. இவரைப்பற்றி சிறப்பாக
கூறவேண்டும் என்றால் திருமணமான பெண்கள் மீதும் வயலின் இனங்களில் ஒன்றான cellist
என்ற வாத்தியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அரசியல் தலையீடுகளினால்
கலையின்மீதான ஆர்வம் மட்டுப்படுத்தப்பட்டு மரணச்சடங்குகளின்போது மாத்திரம் இசைக்
குழவினருடன் இணைந்து வாசித்துக் கொண்டிருந்தார். தன்னைப்பற்றியோ தனது
எதிர்காலத்தைப் பற்றியோ கiலைப்படாது வேலை முடிந்தால் வீடு, வீட்டுக்கு வந்தவுடன்
திருமணமான பெண்களின் உறவை நாடி தொலைபேசி அழைப்பு என்று அவரது வாழ்க்கை விளையாட்டாக
போகின்றது.
வெறும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றினால் போதும் என்ற கொள்கையுடைய Louka
வாழ்க்கையிலும் விதி விளையாடுகின்றது.
Louka ற்கு ஏற்பட்ட பணநெருக்கடியின் காரணமாக விசா பிரச்சனையிலிருது தப்புவதற்காக
திருமணத்தை நாடும் ஓர் ரஷ்ய நாட்டு பெண்ணை அவளது மகனுடன் சேர்த்து பணத்திற்காக
சட்டவிரோதமாக திருமணம் செய்கின்றார். திருமணம் ஆனதும் அந்தப் பெண் தனது மகனை Louka
வின் பொறுப்பில் விட்டுவிட்டு நாட்டைவிட்டு போய்விடுகின்றாள். அந்தப் பையனின்
பெயர்தான் Kolya
சட்டவிரோத திருமணம், அநாதரவாக நிற்கும் பையன்; Kolya அரசாங்க அதிகாரிகளின் கெடுபிடி
என்று Louka வின் வாழ்க்கை சிக்கல்
நிறைந்ததாக மாறுகின்றது. திடீர்த் தந்தையாக பொறுப்பேற்ற Louka விற்கும் சிறுவன்
Kolya விற்கும் இடையில் வளர்ந்து வரும்
அன்பின் இறுக்கத்தின் விளைவாக பெண்களுக்குப் பின்னால் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த
Loukaன் வாழ்க்கை சிறுவன் Kolya வைச் சுற்றி பின்னப்படுகின்றது. தொடர்ந்து
சிறுவனின் நலன்களை பொறுப்பாக கவனித்து அந்த சிறுவனை அரசாங்க அதிகாரிகளிடம்
சிக்கவிடாது பாதுகாத்து சிறுவனின் தாயிடம் ஒப்படைக்கின்றார். .
இங்கே யார் யாரால் காப்பாற்றப்பட்டார்கள் என்ற கேள்வி எழுகின்றது. கபடமற்ற சிறுவன்
Kolya வா? அல்லது இன்று மட்டும் வாழ்ந்தால் போதும் என்று வாழ்ந்த Louka வா?
5 வயது சிறுவன் Kolya மூலம் 55 வயது Louka வாழ்க்கை என்றால் என்ன என்பதை
உணர்கின்றார். அதன்பின்பு தனது பகுதிநேரக்
காதலியை மனைவியாக்கி அவள் மூலம் தந்தை என்ற ஸ்தானத்தை அடைகின்றார். புதிய வாழ்க்கை
புதிய பொறுப்புகள் என்று Louka
தனது வாழ்க்கையின் அர்த்தத்தை புதிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றார்.
ஒரு மனிதனிடம் உள்ள துன்பங்களும் சிக்கல்களும் சகமனிதர்களது உறவினால்; உண்டாகும்
மகிழ்ச்சியினால் மறைந்து போய்விடுகின்றது என்பதையும் மனிதனது வாழ்தலுக்கு உறவுகளின்
தேவை எவ்வளவு முக்கியம் என்பதையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றது
இத்திரைப்படம். அரசியல் சாயல்கள் கதையுடன் இணைந்து வந்து கொண்டிருப்பினும்
முற்றுமுழுதாக உறவுகளுக்கிடையேயான உணர்வுகளுக்கே இங்கே முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டிருக்கின்றது. கதாநாயகனைச் சுற்றி பலவிதமான சிக்கல்கள் நெருக்கும்
வேளையிலும் இதயத்தின் கட்டளைக்கு செவிமடுக்கும் கதாநாயகனின் இயல்பு மனதில்
பதிந்துவிடுகின்றது. புரியாத
மொழி, வேற்று மதம், தெரியாத இனம், நீண்ட தலைமுறை இடைவெளி இவை எல்லாவற்றையும் தாண்டி
அன்பின் மொழி
எல்லோருக்கும் பொதுவானது என்ற கருத்து ஆழமாக சொல்லப்பட்டிருக்கின்றது.
உங்களில் பலர் இத்திரைப்படத்தை முன்பே பார்த்திருக்கக்கூடும் பார்த்தவர்கள் உங்களது
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பார்க்காதவர்கள் நேரம் கிடைக்கும்போது பார்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
tary22@yahoo.com.au |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|