இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2008 இதழ் 105  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!

வாழ்க்கையில் ஊனம் உற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கானாவின் இராகங்கள்

த.சிவபாலு எம்.ஏ.


த.சிவபாலு எம்.ஏ.ஊனமுற்றவர்கள் எம்மிடையே வாழ்ந்து வருவது எமக்குப் புதியதல்ல. அவர்களையும் எம்மோடு இணைத்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டும் என்னும் நோக்கத்தோடு இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியே ‘சகானாவின் இராகங்கள்’ விழிப்புலன், செவிப்புலன், உடல்வலு குன்றிய வலுவளர் சவால்களை எதிர்கொள்ளும் தமிழ் சமூகத்தினரைக் கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட்ட ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது கடந்து 20. 07. 2008இல் சேர் ஜோன் மக்டொனால்ஸ் கலையரங்கில் இடம்பெற்ற சகானா பத்மநாதனின் கலை நிகழ்ச்சி. திரு, திருமதி பத்மநாதன் யோகமலர் தம்பதியினரின் புதல்வி செல்வி சகானாவின் கர்நாடாக இசை நிகழ்ச்சியும், பரதநாட்டிய நிகழ்;ச்;சியும் இடம்பெற்ற அதே மேடையில் மிகவம் வியக்கத்தகு நிகழ்வுகளாக
மூளை வலுக் குன்றியவரானா செல்விமீரா தர்மலிங்கம் ‘ஓ சம்போ என்னும் பாடலுக்கான நடனமும், வாழ்வில் தாம் பட்ட அல்லல்கள், சமூத்தால் தாம் பழித்து ஒதுக்கப்பட்ட நிலைகளை நினைவிருத்தி எழுதப்பட்ட ‘வாழ்வின் திருப்பம்’ என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றிருந்தமை முக்கியமானதாகும்.

இந்த நிகழ்வில் மூன்று விடயங்கள் அங்கு வந்திருந்த அனைவரதும் கண்களில் நீர் மல்க வைத்தமையைப் பார்க்கமுடிந்தது. ஒன்று செல்வி சகானா தனது தந்தை தனக்காக மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும், அன்பையும், இடர்பாடுகளையும் கருத்தில்கொண்டு பாடிய பாடல். “எப்படிப் பாடுவேனோ என் தந்தையின் உள்ளந்தன்னை” என்னும் பாடலைப் பாடும்போது சகானா தனது தந்தையை அழைத்து முன் ஆசனத்தில் இருக்க வேண்டிப் பாடினார். அவர் பாடும்போது சபையில் இருந்த அனைவருமே கண்ணீர் மல்க அவரது பாட்டைக் கேட்டு மனமுருகினர். இந்தப் பாடலை த.சிவபாலு
அவர்கள் எழுதியிருந்தார். அதற்கான இசையை ஸ்ரீமதி பராசக்தி விநாயதேவராசா அமைத்து நெறிப்படுத்;தியிருந்தார்.

அடுத்த நிகழ்வு ‘வாழ்வின் திருப்பம்’ என்னும் நூல்வெளியீடு சற்று வித்தியாசமாக முறையிலே இடம்பெற்றமை மண்டபத்தில் இருந்தத அனைவரதும் கவனத்தையும் முழுமையாக ஈர்த்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. யாருமே செய்திருக்காத முறையில் நூலில் ஆக்கங்களைப்
படைத்திருந்தவர்கள் அனைவரையும் மேடையில் அமரவைத்து அவர்களை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்த நூலைப்பற்றிய கருத்துக்களைத் தொகுத்துத் தந்ததோடு எழுத்தாளர்கள் அதாவது உடலால் அல்லது உளத்தால் வலுக் குன்றியவர்கள் அதாவது வலுவளர் சவால்களை
எதிர்நோக்குவொரால் அல்லது அவ்வித இழப்புக்களால் பாதிப்புக்கு உள்ளானவர்களின் அனுபவங்களைத் திரட்டித் தந்துள்ளது இந்த நூல். அவர்களில் சிலர் முந்தியே எழுதிப் பரிச்சயம் உள்ளவர்கள். சிலரோ முதன் முதலாகத் தங்கள் அனுபவத்தை அப்படியே வடித்துத் தந்துள்ளனர். அவர்கள் வாழ்வில் பட்ட அனுபவங்களை எல்லாம் நெஞ்சுருகத் தந்துள்ளார்கள். ஆரம்பத்தில் இவற்றை அறிமுகம் செய்துவைத்தவர் சகாப்பதன் என அறியப்பட்ட பிரபல
நாடக இயக்குனரும் எழுத்தாளருமான வேல்ரைதன் ஆவர்.

இந்த நூலையும் அதனை எழுதியவர்களையும் பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் தனக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும் கருத்திற் கொள்ளாமல் பொன்னையா விவேகானந்தன் என்றால் அவரை இந்த நூல் எவ்வளவிற்கு ஆட்கொண்டுள்ளது என்பது வெளிப்படை. “ஊனம் வாழ்வின் முடிவல்ல என்பதனை தமது வாழக்கையின் மூலம் நிரூபித்துச் சாதனை புரிந்தவர்களின் உண்மைக் கதைகள் அடங்கிய நூல்” என்னும் வாசகம் அந்த சிவப்பு வண்ணப் பின் அட்டையை நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றிடையே அலங்கரிக்கின்றது. இந்த நூலைத் தனது மகளை 15மாதங்களில் இழந்த சகானாவின் தாய் யோகா பத்மநாதன் தொகுத்துத் தந்துள்ளார்.

யோகா பத்மநாதன் உரையாற்றும்போது தனக்குத் தனது இளைய மகளின் இழப்பிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினையே நான் இன்று மேற்கொள்ளும் இந்தச் சேவையும் எனது மகள் சகானாவை இதில் ஈடுபட வைத்தமையும் ஆகும் என்ற அவர் ஒரு இழப்பைச் சந்தித்தவர்களுக்குத் தான் அந்த இழப்பின் அல்லது அனுபவிப்பவர்களாற்றான் அதன் தாக்கம், துன்பம், தாற்பரியம் விளங்கிக்கொள்ள முடியும். இந்தச் சமூகத்தால் புறக்கணித்து ஒதுக்கப்படும் வலுவளர் சவால்களை எதிர்கொள்வோரை ஒதுக்கி வைக்காது அவர்களை வாழவைக்கவேண்டும் என்றும் அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். எழுத்தாளர்கள் சார்பில் நளினி கோடீஸின் உரையும் இடம்பெற்றது.
அவர் வலுவளர் சவால்களை எதிர்நோக்குவொருக்கு உதவுவது பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் முன்னாள் தலைவரும் கொம்பறை மலரின் பதிப்பாசிரியர் சபா. இராசேஸ்வரன் சங்கம் மேற்கொள்ளும் வன்னிப்பிரதேச கல்வி நிதிச் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தமையும் அவற்றைக் கேள்;வியுற்றிராத பலரின் கவனத்தை ஈர்ந்;திருந்தது என்பதோடு
பலர் தாம் இதற்கு உதவுகின்றோம் என் முன்வரவும் தூண்டுகோலாக அமைந்திருந்தது.

மூன்றாவதாக எல்லோரது மனதிலும் மறக்கமுடியா நினைவாக இடம்பெற்ற ஒரு நடன நிகழ்ச்சி வலுவளர் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்துவரும் செல்வி மீரா சந்திரலிங்கத்தின் நடனம் அனைவரதும் பாராட்டையும் பெற்றுக்கொண்டது. கருவுற்றிருந்தபோது ஈழத்தில் இராணுவத்தின்
கொடுமைகளுக்கு ஆளான தாயாரின் சோகக் கதையோடு தொடர்புடையவர் இந்த மீரா. அவரது மூளைநரம்புகள் இயல்பு நிலையைக் கொண்டதாக அமையாது பிறப்;பிலேயே பாதிக்கப்பட்டமையால் இயல்பு வளச்சியின்;றி இருந்தவர். அவர் இந்தச் சவால்களை எதிர்த்து தனது மகளை வளர்த்து
வருகின்றார். இன்று மேடையில் நடனமாடி அனைவரதும் கண்களைப் பனிக்கச் செய்தவர் மீரா அவர் மேடையில் நூல் வெளியீட்டைத் தொடர்ந்து ‘ஓ சம்போ . .’ என்னும் பாடலுக்கு நடனமே கற்றுக்கொள்ளாத அவர் நடனம் ஆடினார் என்றால் எப்படி என்பது அனைவரையும் வியக்கவைத்தது.
அதனைத் தொடர்ந்து சகானாவின் பரத நாட்டியம் இடம்பெற்றது. செல்வி சகானா ஆரம்பத்தில் ஸ்ரீமதி சுகந்தி பாலஸ்கந்தாவிடமும் பின்னர் ஸ்ரீமதி பராசக்தி விநாயகதேவராசாவிடம் கர்நாடக இசையையும், ஸ்ரீமதி ரஜனி செல்வப்பிரகாசத்திடம் பரதநாட்டியத்தையும் மிக இளமைக்காலந் தொட்டே
பயின்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இசை நிகழ்ச்சிக்கு செல்வன் ஹரிஸ் மகேஸ்வரன் வயலினிசையையும், சுசீந்தர்; தர்மலிங்கம் மிருதங்கத்தையும் மோர்சிங் இசையைச்; செல்வன் ராதுஷன் இராஜசிங்கமும் தவில் இசையைச் செல்வன் ஜான்சன் ராஜ்மோகனும் இசைத்தனர். இவர்களோடு தம்புரா இசையை செல்வி பிரகா~pனி
பிரதாப்பும் வழங்கினார். நடன நிகழ்வுக்கான மிருதங்க இசையை மிருதங்கஞானவாருதி வாசுதேவன் இராஜலிங்கமும், வாப்பாட்டிசையினைச் செல்வி சிந்து இந்;திரசித்தும் ஸ்ரீமதி பராசக்தி விநாயகதேவராசாவும், வயலினை ஸ்ரீமதி சுபத்திரா விஜய்குமாரும் நல்கினர். நட்டுவாங்கத்தை நடன
ஆசிரியை ஸ்ரீமதி ரஜனி செல்வப்பிரகாசமும் வழஙக்கிச் சிறப்பித்தனர்.

செல்வி கவிதா விவேகானந்தன் தமிழிலும், செல்வன் சுரேந்தர் தர்மலிங்கம் ஆங்கிலத்திலும் மிகத் திறமையாகத் தொகுத்து வழங்கிப் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர். முதன் முதல் மேடையில் தொகுத்து வழங்கிய இவர்களின் திறன் பாராட்டப்படவேண்டி
ஒன்று எனப் பலரும் பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது.

ழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூழூ

ஜானகி காந்தரூபனின் சிறப்புமிகு இசையரங்கம்-
 

த.சிவபாலு எம்.ஏ.

த.சிவபாலு எம்.ஏ.கனடிய மண்ணில் தரம்மிக்க கர்நாடக இசையரங்கங்கள் அண்மைக்காலங்களில் இடம்பெறுவதனைக் காணமுடிகின்றது. செல்வி ஆதிரை சிவபாலனின் சிறப்புமிக்க இசையரங்கத்தைத் தந்திருந்த ஸ்ரீமதி ஜெயராணி சிவபாலனின் ஞானாமிர்த இசைக்கல்லூரி இன்னுமொரு இசைப்பாடகியை உருவாக்கியுள்ளது என்பதனை ஜானகி காந்தரூபனின் இசையரங்கங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ம் திகதி 2008 அன்று சேர் ஜோன் மக்டொனால் கலையரங்கில் இடம்பெற்ற கர்நாடக இசையரங்கேற்ற நிகழ்விலே உலகப் புகழ்பெற்ற மிருதங்க வித்துவான் திருவாரூர் வைத்தியநாதன் அவர்கள் மிருதங்க இசையைத் தந்ததோடு மட்டுமன்றி இந்த அரங்கேற்றத்திற்குச் சிறப்பு விருந்;தினராக உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி கலைமாமணி, சங்கீத சூடாமணி ஸ்ரீமதி அருணா சாய்ராம் பிரதம விருந்தினராக வருகைதந்து அந்த இசையரங்கத்தைப் பாராட்டி உரையாற்றியமை செல்வி ஜானகிக்கும் ஆசிரியை ஜெயராணி சிவபாலனுக்கும்; பெருமை சேர்த்த ஒன்றாக அமைந்திருந்தது.

அரம்பத்தில் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் செல்;வி ஜானகியின் பேரனார் திரு. கார்த்திகேசு அவர்கள். இங்கிலாந்தில் இருந்த தனது பேத்தியின் அரங்கேற்றம் காண வந்த அவர் தனது பிள்ளைகள் தனது சொற்கேட்ட அதன்படி தங்கள் பிள்ளைகளுக்கு இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்பித்து வந்து அரங்கேற்றம் காணவைப்பது பெமை சேர்க்கின்றது என்றார்.

இந்த நிகழ்வில் கனடிய மண்ணிலே சிறந்த கலைஞர்களான கலாபிரதீபா ஜெயதேவன் நாயர் வயலினிசையையும், மிருதங்க ஜோதி சுரேந்தர் தர்மலிங்கம் மோர்சிங்கையும், ஜனகன் காந்தரூபன் கடத்தினையும் இங்கிலாந்தில் தனது இசையரங்கம் செய்து பாராட்டுப்பெற்ற செல்வி பானுஜா பாலகிரு~;ணன் தம்புராவையும் இசைத்து கச்சேரியைக் களைகட்ட வைத்தனர் என்றால் அந்த இசை அரங்கேற்றத்தின் சிறப்பினைச் சொல்லவும்
வேண்டுமோ?

ஜானகி இளையவராக இருந்தபோதும் அவர் மேடைக் கூச்சமின்றி மிகுந்த அனுபவம் கண்ட இசை விற்பன்னர்களைப்போன்று மேடையில் தனது பாடல்களைப் பாடிச் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டார். பைரவி ராகத்திலும் கண்டஜாதி அட தாளத்திலும் அமைந்த விரிபோ
என்னும் வர்ணத்தில் ஆரம்பித்து அடனா இராகத்திலும் ஆதி தாளத்திலுமமைந்த ஸ்ரீமகா கணபதிம், தொடர்ந்து ஸ்ரீராகத்திலமைந்த என்டறோமகானுபவானு வைத்தொடர்ந்து ஹம்சத்துவனியிலமைந்த ஸ்ரீனிவாசா, ஆபெரிராகத்திலமைந்த நகுமோ, மோகனத்திலமைந்த நாராயண, ஹம்சானந்தத்திலமைந்த பண்டிருட்டி, கரகரப்பிரியாவிலமைந்த ராகம், தானம், பல்லவி யோடு பில்லு இராகத்திலமைந்த பஹ~ன் என்னும் ஹிந்திக் கீர்த்தனையோடு ராகமாளிகாவிலமைந்த ஸ்ரீசக்கர ராஜ என்னும் பாடலோடு றேவதியிலமைந்த தில்லானா வோடு சண்முகப்பிரியாவிலமைந்த திருப்புகழ் பாடி நிறைவுசெய்தார் தனது அரங்கேற்றத்தை செல்வி ஜானகி காந்தரூபன்.

ஆவரின் இசை வெள்ளத்தில் அங்கு மண்டபம் நிறைந்திருந்த மக்கள் பாராட்டியமையைக் காணமுடிந்தது. பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஸ்ரீமதி அருண் சாயிராம் உரையாற்றும்போது ஜானகி மிகவம் அனுபவப்பட்ட பாடகர்கள் போன்று எந்தவித மேடைப் பயமும் இன்றி தான் முதன் முதலாக இவ்வளவு பெரியவர்களின் முன் அரங்கேற்றம் செய்கின்றேனே என்ற நினைவின்றி செய்திருந்தமை அவரது எதிர்காலத்தின்
முன்னேற்றத்தைக் காட்டி நிற்கின்றது என்ற அவர். மோகன ராகத்தை இசைப்பது என்பது பெரிய பாடகர்களுக்கே சிரமமானது. அந்த ராகத்தில் அவர் மேலே செல்ல முயற்சி செய்து மிருதங்க விற்பன்னர் திருவாரூர் வைத்தியநாதனையே தனது கண்ஞாடையால் கேட்டு அவரின் சம்மதத்தோடு
தனது இராகத்தை சபையோருக்குத் தெரியாதமாதிரி மாற்றிக் கொண்ட திறமையை நான் அவதானித்தபோது அவரின் திறனைக் கண்டேன். அவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த பாடகராக வரக்கூடிய தன்மையைக் கொண்டுள்ளார் என்ற அவர் ஆசிரியை ஜெயராணியையும் பாராட்டினார். அத்தோடு அவரது சகோதரர் ஜனகன் காந்தரூபன் மிருதங்க வித்துவான் வைத்தியநாதன் அவர்களோடு இணைந்து கடத்தை வாசித்தமை மிகவும் சிறப்பாக
அமைந்திருந்தது என்றும் கூறிய அவர் ஜெயதேவன், சுரேந்தர் இருவரது திறனையும் வாயாரப் புகழ்ந்து பாராட்டினார். முன்னைநாள் அதிபர் திரு. பொ. கனகசபாபதி அவர்கள் உரையாற்றும்போது ஜானகியை நான் மிக நீண்டகாலமாக அறிவேன். அவர் பல மேடைகளில் பாடியுள்ளார் அந்த
அனுபவம் அவரை இந்த மேடையில் துணிவோடு இருக்க வைத்துள்ளது. அவரது சகோதரரும் மிருதங்க அரங்கேற்றம் கண்டவர். மிகச் சிறப்பாகக் கடத்தை வாசித்தார். அவர்களின் பெற்றோர்கள் பாராட்டப்படவேண்டியவர்கள் என்றுரைத்தார்.

ஓன்ராறியோ தமிழ் இசைக்கலாமன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீபதி அவர்கள் உரையாற்றும்போது இசை, நடனம் போன்ற கலைகளைப் பயிலும் மாணவர்கள் நல்லவர்களாக எமது பாரம்பரியத்தைக், பண்பாடடைப் பழக்கவழக்கங்களைப் பேணி அடக்கத்தோடு, பணிவுள்ளவர்களா, கோடு, பொலிஸ் எனப் பெற்றோரை செல்லவைக்காதவர்களாக உள்ளனர் என்ற அவர் இளமை முதலே ஜானகியும், ஜனகனும் எமது நிகழ்வுகளி;ல்
கலந்துகொண்டுள்ளனர். அவர்களின் திறமையை அறிந்து அவர்களின் பெற்றோர் அவர்களை நெறிப்படுத்தி கலைகளில் ஈடுபாடு கொள்ள வைத்துள்ளனர் என்பது பாராட்டத்தக்கது என்றார்.

புhராதி கலாமன்றதின் தலைவர் திரு வெங்கட்டராமன் உரையாற்றும் போது ஜானகியை மூன்று வயது முதலே எனக்குத் தெரியும் என்ற அவர் இசையோடு ஈடுபாடு கொண்ட குடும்பம் அவர்கள் திருவாரூர் வைத்தியநாதனை அழைப்பதற்கும் ஸ்ரீமதி அருண் சாய்ராமை அழைப்பதற்கும் என்னை நாடியபோது அவர்களுக்கு நான் என்னால் செய்யக்கூடியவற்றைச் செய்துதந்தேன் என்றார். தொடர்ந்து காந்தரூபனும் அவரது சகோதரரும் நன்றியுரையாற்றினர்.


ஒரே மேடையில் பிரமிப்பை ஊட்டிய இரு அரங்கேற்றங்கள்

வாசுதேவன் இராஜலிங்கத்தின் மாணவர் வரிசையில் 31வது அரங்கேற்றம் கண்டார் செல்வன் ஜனகாயன் கமலநாதன். சுக்தி சங்கீத அக்கடமி ஆசிரியை பராசக்தி விநாயகதேவராசாவின் இசைக்குயில் இவளளோ என எண்ண வைத்தது செல்வி நிரோஜா தர்மகுலசிங்கத்தின் வாய்ப்பாட்டிசை அரங்கேற்றம்.

த.சிவபாலு எம்.ஏ.அண்மைக் காலமாக எமது பாரம்பரிய இசைத்துறையில் மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் கண்டுவருவதனை அண்மைக்கால இசையரங்குகள் காட்டி நிற்கின்றன. இன்னினை மன்னர் பொன். சுந்தரலிங்கத்தின் மாணவரான செல்வன் கிரு~;ணராஜக் குருக்களின் இசை அரங்கேற்றமும், கலாநிதி தயாபரன் செல்வநாயகத்தின் மாணவன் அகிலின் வேணுகான இசை அரங்கேற்றமும் பலராலும் புகழ்ந்து பேசப்பட்டவை. அந்த வரிசையில் மிருதங்க சே~;த்திரத்தின் அரங்கேற்றங்கள் பேசப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற இளவல் ஜனகாயன் கமலநாதனின் அரங்கேற்றமும், பராசத்தி
விநாயகதேவராசாவின் மாணவியான செல்வி நிரோஜா தர்மகுலசிங்கத்தின் வாய்ப்பாட்டிசை அரங்கேற்றமும் பலராலும் பாராட்டத்தக்கதாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. சந்திர மௌலீஸ்வர பிரதம குருக்கள் கண்ணன் குருக்களின் புசையைத் தொடர்ந்து சக்தி சங்கீத அக்கடமியின் மாணவிகள் கனடிய தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்தினையும் பாடினர். அதனைத் தொடர்ந்து செல்வி மனோகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.

எட்டாம் வகுப்பில் கல்வி பயின்று வரும் திரு, திருமதி கமலநாதன், பிரேமகுமாரி தம்பதியினரின் ஏக புதல்வன் ஜெனகாயன் மிகவும் அமைதியானவர். அவரின் சாதுரியத்தை மிருதங்கத்தில் விரல்கள் நர்த்தனம் புரிந்தவேளை பாராட்டாதவர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கவே முடியாது என்னும் அளவிற்கு மிக லாவகமாக அவரின் ஜதிகள் இடம்பெற்றன. களைப்போ, பயமோ, மனக்கலக்கமோ இன்றி மிக நிதானமாகத் தனது திறனை வெளிக்காட்டினார் ஜனகாயன். இவருக்கு முன்னணி இசை வளங்கியவர் உலகப் புகழ்பெற்ற இசை வித்தகி முன்னைநாள் இராமநாதன் அக்கடமி
விரிவுரையாளர் ஸ்ரீமதி தனதேவி மித்திரதேவா. அவரின் வயலின் இசையரங்கமாக அது பர்ணமித்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. ஒரு பண்பட்ட மூத்த கலைஞருக்கு ஈடுகொடுத்து மிருதங்கத்தை வாசித்து தனது ஆசானுக்கும், பெற்றோருக்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் ஜனகாயன்.
ஆங்கு வருகை தந்திருந்த சங்கீத பூ~ணம் வேலாயுதபிள்ளை, பிரேமா ஸ்ரீஸ்கந்தராசா போன்றோர் ஜனகாயனது வாசிப்புத் திறனைப் பாராட்டினர். அவரது வயதுக்கு மேலாக அவர் வாசி;க்;கின்றார் என்றனர். உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வரும்போதே மிருங்கத்தில் அவரின் விரல்கள் நன்றாகவே செயற்படுகின்றன என்றார். அவ்விதமே கவிநாயகர் வி. கந்தவனம், அதிபர் பொ. கனகசபாபதி அவர்களும் அவரது வாசிப்பில் மெய்மறந்து பாராட்டினைத் தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த த.சிவபாலு அவரகள் உரையாற்றுகையில் ஜனகாயனத மிருதங்கத் திறன் மிருதங்க சே~;த்திரத்தின் இன்னுமொரு வெற்றிப் படைப்பு என்று பாராட்டியதோடு இங்கு நடைபெறுவது வயலின் வித்தகி ஸ்ரீமதி தனதேவி மித்திரதேவாவின் இசை நிகழ்வா அல்லது ஜனகாயனின் மிருதங்க அரங்கேற்றமா? ஏன்ற சந்தேகம் எழுகின்றது என்ற அவர் தொடர்ந்து பேசுகையில் இசைக்கலையின் முக்கியத்துவம் பற்றியும் இசை பயிலும் மாணரவகளுக்கு எமது பாராம்பரியத்தை கற்றுத்தருவதோடு, அவர்களுக்கு பொறுமை, அமைதி, கீழ்படிவு, பெரியோரை
மதித்தல், குருவை வணங்குதல், ஆசி பெற்றுக்கொள்ளுதல் போன்ற நற் பண்புகளை இந்த மண்ணில் இசை
ஆசிரியர்கள்தான் கற்றுத்தருகின்றார்கள். அதனால் இசை கற்கும் மாணவர்கள் தவறான வழியில் செல்லாமல் தடுப்பதோடு தந்தைதாய்க்கு கட்டுப்பட்ட பண்பாளர்களாகவும் வளர்கின்றார்கள் அதற்கு இசையில் ஈடுபாடு கொள்ளவைக்கும் பெற்றோரே காரணம் என்று பெற்றோரையும் பாராட்டினார். இவரது மிருதங்க இசை வசந்தா இராகத்திலும் ஆதி தாளத்திலும் அமைந்த வர்ணத்தில் ஆரம்பித்து சக்கரவாகன இராகத்திலும் ஆதி தாளத்திலும் அமைந்த முத்துசுவாமி தீட்சதரின் ஹஜானனுதம் இசை, தியாகராஜரின் ஸ்ரீராகத்தில் அமைந்த பஞ்சரத்தினம், பட்டணம் சுப்பிரமணிஐயரின் பிலாகரி இராகத்திலும் கண்டசாபு தாளத்திலும் அமைந்த பரித்தனமிசைத்தே கீர்தனதனம், தொடர்ந்து தியாகராஜரின் ஆதி தாளத்திலும் ஹம்~h நடம் இராகத்திலமைந்த பண்டிருட்டி, ரூபக தாளத்திலும் நவரசகன்னடாவில் அமைந்த நின்றுவிநா என்னும் பாடலையும் தொடர்ந்து ராகம், தானம், பல்லவி இடம்பெற்றது.

இராகம் தானம் பல்லவியில் 60, 30, 15, 5 என கண்டக்; குறைப்போடு இடம்பெற்றமை சிறப்பானதாக சபையோரால் பாராட்டப்படும் படியாக நிகழ்ந்தது. கண்டக் குறைப்பு என்பது தாளவேறுபாட்டிற்கேற்ப கணித ரீதியில் இடம்பெறும் தன்மையைக் கொண்டது. இந்தக் கண்டக் குறைப்பு
பொதுவாக கச்சேரிகளில் இடம்பெறுவதில்லை எனிலும் அரங்கேற்றங்களில் குறிப்பாக மிருதங்க அரங்கேற்றத்தில் அல்லது தவிலில் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. அதுவும் மிகவம் அனுபவம் வாய்ந்தவர்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் ஜெனகாயனின் திறனை அறிந்து அவனுக்கு
இதனைக் கற்றுக்கொள்ள வாய்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மிஸ்ர ஹர இராகத்;திலும் ஏகதாளத்திலும் அமைத்து வயலின் இசை நல்லக மிருதங்கத்தை மிகச்சிறப்பாக தந்திருந்தார் இளவல் ஜெனகாயன். ஜெனகாயன் ஆரம்பத்தில் வர்ணராமேஸ்வரனிடம் மிருதங்கத்தைக் கற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இடம்பெற்றது திரு, திருமதி தர்மகுலசிங்கம், நகுலகுமாரி தம்பதியினரின் புதல்வி செல்வி நீரோஜாவின் வாய்ப்பாட்டிசை. அவரது குரல் வளமும், இசைஞானமும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. எடுத்த எடுப்பிலேயே வலச்சி இராகத்திலும் ஆதிதாளத்திலும் அமைந்த
லால்குடி ஜி. ஜெயராமனின் வர்ணத்தை அழகாக இசைத்தார்.

தொடர்ந்து ஹம்சத்வனி இராகத்திலமைந்த புரந்தர தாசரின் கஜவதனா, காம்ப)Pர நாட்டையிலமைந்த ஸ்ரீ ஜெயச்சந்திரராஜ உடையாரின் ஸ்ரீ ஜாலந்தரா, அப்கெரி இராகத்திலமைந்த மைசூர் வாசுதேவாச்சாரியாரின் பகஜார் மனசா, கீரவாணி இராகத்திலமைந்த பாபநாசம் சிவனின் கருணா
கரனே, பிந்து மாலினியில் அமைந்த தியாகராஜாசரின் என்தமுதோவைத் தொடர்ந்து இராகம் தானம் பல்லவி இடம்பெற்றது, கருணாகர தேவகாந்தாரியில் அமைந்த அருளவனின் காணக்கண் ஆயிரம் ஆதி தாளத்திலும் இசைத்ததோடு லால்குடி ஜி. ஜெயராமனின் தில்லானாவோடு
மங்களம் இசை;தார். சோபிதா ஜெயகாந்த குமார், தர்சிகா மனோகுமார் ஆகிய இருவரும் தம்புரா வாசித்தார்.

வாய்ப்பாட்டிசைக்கு மிருதங்க ஞானவாருதி வாசுதேவன் மிருதங்க இசையை நல்கினார். ஆனால் ராகம் தான் பல்லவியைத் தொடர்ந்து சகோதரிக்கு சகோதரன் ஜனகாயன் மிருதங்கம் வாசித்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த இசை நிகழ்வில் சுரேந்தர் சந்திரலிங்கம் முகர்சிங் வாத்தியத்தையும், சஜீவ் விஜயகுமார் கஞ்சிராவையும், ரமணா இந்திரகுமார், ஜகனகன் காந்தரூபன் கடத்தையும் வாசித்துச் சிற்ப்பித்ததோடு, வாய்ப்பாட்டிசைக்கு பிரபல வயலின் வித்தகர் கலைப்பிரதீபா ஜெயதேவன் நாயர் வயலிசையையும் வளங்கிச் சிறப்பித்தனர்.

இந்த அரங்கில் ஜனகன் காந்தரூபன் முதன் முதலாக ஒரு அரங்கேற்றத்திற்கு கடம்வாசிக்க அறிமுகமாகினார். ஆவர் இந்தியா, இங்கிலாந்து எனப் பல மேடைகளில் வாசித்திருந்தாலும் கனடிய மண்ணில் அவரின் மிருதங்க அரங்கேற்றத்திற்குப்பின்னராக முதன் முதல் மேற்கொண்ட முயற்சியைப் பாராட்டி அவருக்கும், ஜெனகாயனுக்கும் மேடையில் சந்தனமாலை அணிவித்தார் அவர்களின் குருவான வாசுதேவன் இராஜலிங்கம். வாசுதேவன் எவ்வளவிற்கு கண்டிப்பான ஆசானாக மாணவர்களோடு உள்ளாரோ அந்தளவிற்கு அவர்களின் பால் அன்பும் பாசமும் கொண்டவர் என்பதனை அவரது இந்தச் செய்கை காட்டி நின்றது எனலாம்.

தொடர்ந்து இசை ஆசிரியையும், கர்நாடக இசை ஆய்வாளருமான ஸ்ரீமதி கௌசல்யா சுப்பிரமணியன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் nஜனகாயனின் விரல்கள் மிகத் திறமையாக ஜதிகளை வாசித்தன என்ற பாராட்டியதோடு அவரின் குரு வாசுதேவன் ராஜலிங்கத்தையும் பெற்றோரையும் பாராட்டினார். தொடர்ந்து வாய்ப்பாட்டிசை வளங்;கிய நிரோஜாவின் குரல் வளம் மிகவும் சிறந்தது எனக்குறிப்பிட்டி அவர் இந்த அரங்கேற்றம் ஒரு ஆரம்பம், அவர் தொடர்ந்து கற்கவேண்டும் என அறிவுரை நல்கியதோடு. இசை கற்பது இலகுவான ஒன்றல்ல என்ற அவர் இசை ஆசிரியை விநாயக தேவராசாவையும், பெற்றோரையும் அமைப்பாளர்களையும் பாராட்டியதோடு. இசையில் சில ஒழுங்குமுறைகளைக் கையாள வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். இராக அமைக்களில் எந்தெந்த இராகங்களுக்குப் பின்னர் என்ன இராகம் அமைதல் வேண்டும் எனபதில் கச்சேரி செய்பவர்கள் கவனம் செலுத்துவார்கள். அது அரங்கேற்றத்திலும் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும்
குறிப்பிட்டார்.

இந்த அரங்கேற்ற நிகழ்வை செல்வி சுபாங்கி கலாநாதன் மிக இனிமையாகவும், இரத்தினச் சுருக்கமாகவும் தொகுத்து வழங்கித் தனது திறனையும் காட்டியதோடு சபையோரின் வரவேற்பையும் பெற்றுக் கொண்டார்.

பொதுவாக அரங்கேற்றங்களில் நேரம் போதாமைகாரணமாக பாட்டுக் குறைப்பு இடம்பெறுவதும் அவதானிக்க முடிகின்றது. அது இந்த நிகழ்விலும் தவிர்க்கமுடியாததாக ஆகிவிட்டிருந்தது.

******

கலாபூஷணம், பண்டிதர் அப்புத்துரை அவர்களின் நூலை வெளியீடு செய்தது கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

த.சிவபாலு


த.சிவபாலு எம்.ஏ.கடந்த திங்கள் மாலை 18.08.2008 சீடாபரே நூல்நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இணைத்தின் தலைவர் த.சிவபாலு அவர்களின் தலைமையில் நடந்தேறியது நூல்வெளியீடு.
நூலாசிரியர் பண்டிதர் அப்புத்துரை தம்பதியினர் மங்களவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்துவைத்தனர். செல்வி ஆதிரை விமலநாதனின் கனடிய தேசியகீதம், தமிழ்த்தாய் வாழ்த்தை; தொடர்ந்து அமைதி வணக்கத்துடன் ஆரம்பமான விழாவில் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார் இணைத்தின் செயலாளர் திருமதி இராஜ்மீரா இராசையா. தொடர்ந்து அறிமுகவுரையை நிகழ்த்தினார் பண்டிதர் அப்புத்துரையின் நண்பரும் கவிநாயகருமான வி. கந்தவனம் அவர்கள். பண்டிதர் அப்புத்துரை அவர்களை அறிமுகம் செய்வது என்பது சூரியனுக்கு முன்னால் நிற்கும் மின்மினிப்பூச்சிபோன்ற நிலையைத்தான் எனக்குத் தரும் என்ற பீடிகையோடு பண்டிதர் அப்புத்துரை அவர்கள் இதுவரை பெருந்தொகையான நூல்களை வெளியீடு செய்துள்ளார். இந்த நூலின் முதலாம்பாகத்தை இந்து சமயப் பேரவையின் மூலம் வெளியீடு செய்துவைத்தோம். அதற்கு சிவ. முத்துலிங்கத்தின் முயற்சியினால் அந்தநூல்வெளியீடு இங்கு செய்யப்பட்டிருந்தது. இன்று பண்டிதர் அவர்களே வந்திருந்து இந்த நூலை வெளியீடு செய்வது அவர்மீது பற்றுள்ளவர்கள் வந்துள்ளமையைக் காணமுடிகிறது. குனடா எழுத்தாளர் இணையத்தை இதனைச் செய்யவேண்டும் என நான் தலைவர் சிவபாலுவிடம் பொறுப்பை ஒப்படைத்தேன் மிகச் சிறப்பாக அவர்கள் செய்துள்ளார்கள் என்றார். தலைமையுரையின் போது பண்டிதர் அவர்களின் அளப்பரும் சேவையை சி.வை.தாமேதரம் பிள்ளையை ஒப்பிட்டு இன்றைய ஈழத்தின் சூழலில் இத்தகையதொரு ஆவணப் படைப்பை வெளிக்கொண்டு வருவது மிகுந்த சிரமம் என்ற கருத்தை முன்வைத்ததோடு இன்று வெளியிடப்படும் இரண்டாம் பாகம் இங்குதான் முதன்முதலாக வெளியீடு செய்யப்படுகின்றது என்ற அவர் தொடர்ந்தும் வாழ்ந்த, வாழ்ந்து வரும் புலவர்களின் சரிதங்கள் பதிவாக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்தை
வெளிக்காட்டி அவர் பண்டிதர் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து தொடர்ந்தும் நூல்களை வெளியிடவேண்டும் என்றார்.

திருவாவடுதுறை ஆதினத்தின் ஆத்மீகப் பேராசிரியர் வித்தியாநிதி சண்முகவேல் அவர்கள் ஆசியுரை வழங்கினார். தமிழ் மொழியின் சிறப்பு, ஈழத்துப் புலவர்களின் பெருமை பற்றிய விளங்கங்களை அளித்த அவர் ஈழத்துப்புலவர்கள் பற்றி நிறைய நான் கேற்விப்பட்டிருக்கின்றேன் சவாதானி கதிரவேற்பிள்ளைதான் முதன் முதலில் ஒரு அகராதியை எமக்கு எழுதித்தந்தவர். அவரை இதனை எழுத நாடியபோது அவர் அதனை எழுத தனக்கு எண்மரைத் தரவேண்டும் நான் சொல்பவற்றைக் குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும் என வேண்டிக்கொண்டு தனது உளத்தில் பதிவாயிருந்தவற்றை எல்லாம் சொல்லிக்கொண்டு போகப் பதிவுசெய்யப்பட்டவை அந்த அகராதி. முன்னர் சொல்லகராதி என்பது பாடலாகவே இருந்தது. இவற்றை அவர் எல்லாம் அறிந்துவைத்திருந்த பெரும் சான்றோன் என்ற அவர். ஈழத்தவர் செய்த தமிழ்த் தொண்டு வெளியே கொண்டுவரப்பட வேண்டும்
என்றார்.

முன்னை மகாஜனக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உரையாற்றும்போது பண்டிதர் அப்புத்துரை அவர்களைப் பற்றி எனக்கு மிக நீண்டகாலமாகவே தெரியும் என்ற அவர் பண்டிதர் அவர்களின் பணி காலத்தினி; தேவை கருதியது. நூம் தெரிந்திராத அறிந்திராத பலரை அவர் வெளியே கொண்டுவந்துள்ளார் என்றார். நான் மகாஜனக்கல்லூரியில் பணியாற்றியவேளை அவர் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தில் பணியாற்றியவர். அந்தப் பாடசாலையில் அவர் செய்த சேவையால் இன்று பெருந்தொகையான மயிலிட்டி ஊரவர்கள் வந்துள்ளமையைக்
காண்கின்றோம். அர்ப்பணிப்போடு அவரும் அவரது துணைவியாரும் செயற்பட்டமையே அதற்குக்காரணம் என்றார். இந்த நூலில் முன்னுரையில் குறிப்பிட்டமைக்கு மாறாக ஒரு கட்டுரை அதிகமாக உள்ளது என்றும் எடுத்துக்காட்டித் தொடர்ந்தது அவரது உரை.

யாழ் பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் ஐயா உரையாற்றும்போது பண்டிதரும் நானும் இணைந்து தெல்லிப்பளை கலை இலக்கிய கழகத்தில் செயற்பட்டோம். பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து என்னோடு உரையாடுவார் என்ற அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் பண்டிதர் அவர்கள் மகாகவி போன்ற கவிஞர்களையும் இந்த நூலில் உள்ளடக்கியுள்ளார். புலவர்கள் என்று நாம் மரபு
வழி செய்யுட்களைச் செய்தவர்களைத்தான் குறிப்பிடுவோம் ஆனால் கவிஞர்களைப் புலவர்கள் என்றுஅவர்களைக் குறிப்பிடுவதில்லை என்றாலும் அவர்கள் கவிதைகளைச் செய்தவர்கள் என்ற அடிப்படையிலே அவர்களை அவர் உள்ளடக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். அவர் சிலரின்
கவிதைகள், செய்யுட்களை எடுத்துக்காட்டி விளக்கம் தந்துள்ளார். இந்த நூலில் ஆதராரங்களை ஒழுங்குமறையில் அடிக்குறிப்பாகத் தந்திருந்தால் இதனை ஒரு ஆய்வு நூலாகக் கொள்ளமுடியும். என்ற அவர் தொடர்ந்தும் இந்த முயற்சியில் பண்டிதர் அவர்கள் ஈடுபடவேண்டும் எனவாழ்தினைத் தெரிவித்துக் கொண்டார்.

யாழ் பல்கலைக்கழக முன்னைநாள் தமிழ்த்துறைப்பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் உரையாற்றும்போது பண்டிதர் அவர்களின் இந்த நூலை நாம் ஒரு ஆராய்ச்சி நூலாகக் கொள்ளத்தேவையில்லை. அவர் ஒரு ஆராச்சியாளர் அல்ல இந்தநூல் ஒரு வரலாற்றுப்பதிவு. ஏம்மிடையே வாழ்ந்த வர்களின்
சரிதம் எழுத்தில் பதியப்படச் செய்யப்பட்ட ஒரு பெரு முயற்சி. எம்மிடையே புலவர்களைப் பற்றி பதிவுள் இல்லை. பேராசிரியர் சதாசிவம் ஒரு சிறந்த கவிதை நூலை எழுதியிருந்தார் ஆனால் அவரின் நூல் மரபுக்கவிதை எனக்கூறப்பட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டது என்ற அவர் பண்டிதர் அப்புத்துரை அவர்களின் முயற்சி பாராட்டப்படவேண்டும் அவர் நீண்டகாலம் வாழ்ந்து தொடர்ந்தும் பல நூல்களை வெளியிடவேண்டும் என்றுரைத்தார்.

உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் ஆசியுரை வழங்கும்போது பண்டிதர் அவர்கள் ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்களைப் பற்றிய இந்த நூல்வெளியீட்டிற்கு திங்கட்கிழமை என்றும் பாராது இவ்வளவு பெருந்தொகையாக மக்கள் வந்திருப்பது அவரின் சேவையையும் பணியையும் மதித்து வந்துள்ளனர் என்பதை நான் பார்க்கின்றேன். எழுத்தாளர் இணையத்தின் நீண்டகால உறுப்பினர் என்ற வகையிலே இந்த அளவிற்கு வெளியே இருந்து வந்த ஒருவரின் நூல்வெளியீட்டிற்கு மக்கள் வந்திருப்பது என்னை வியக்கவைக்கின்றது என்ற அவர் இங்கு பெரும்பாலானவர்கள் கற்றறிந்த பெரியோர்களாக இருப்பதைப்பார்க்கும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தொடர்ந்து நூல்வெளியீடு இடம்பெற்றது. இதில் சைவப் பெரியார்கள் திரு. நா.சிவலிங்கம், திரு. விஸ்வலிங்கம், கலைஞரும், படத்தயாரிப்பாளரும், வர்த்தகருமான திரு, திருமதி பரராசசிங்கம் நிரோதினி தம்பதி;யினர், ஜே.ஜே.பிறின்ரேஸ் உரிமையாளர் ஜெயானந்தசோதி, வல்வை ஆவணக் காப்பக உரிமையாளர் நகுலசிகாமணி உட்படப் பலர் நூலின் விசேட பிரதியைப் பெற்றுக்கொண்டனர். மயிலிட்டி கலைமகள் வித்தியாலயத்தின் பழைய மாணவரான் திரு. சந்திரலிங்கம் “எமது பாடசாலை ஒரு கத்தோலிக்கப்பாடசாலையாக இருந்தது. அதனை தரம்உயர்த்தி எம்மை உயர்த்தி வைத்த பெருமை பண்டிதர் அப்புத்துரை அவர்களையே சாரும். ஆவர் தன்னை அர்ப்பணித்துச் செய்த சேவையை மயிலிட்டி மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்” என்றார்.

திருமதி தங்கம்மா தம்பித்துரை ஆசிரியை திருமதி அப்புத்ரை எமது ஊரான குப்பிளானைச் சேர்ந்தவர். அவரும் பண்டிதை அவர்கள் இருவரதும் சேவை பாராட்டத்தக்க வகையிலே இருந்தமையை நான் நன்கு அறிவேன். சமயம், தமிழ் இரண்டையும் வளர்ப்பதில் அவர் பாடுபட்டு உழைத்தவர்.
இன்று இவ்வளவு பெருந்தொகையான மக்கள், அறிஞர்கள் வந்திருப்பது அவரின் பெருமையை எடுத்துக்காட்டுகின்றது என்றார்.

தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய பண்டிதர் அப்புத்துரை அவர்கள் இந்த நூலை ஆக்குவதற்கு நான் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே
ஆரம்பித்துவிட்டேன். பலரிடம் தொடர்பு கொண்டேன், பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தகவல்களைத் தந்துதவும் வண்ணம் கேட்டிருந்தேன். தனிப்பட்ட சிலரை அணுகினேன் ஆனால் எனக்கு எந்தவித தகவலையும் அனுப்;பிவைக்க யாரும் முன்வரவில்லை. போதிய தகவல்கள் கிடைக்காத
காரண்த்தால் நிறைவான ஆக்கமாகத் தரமுடியவில்லை. கிடைத்தவற்றைக்; கொண்டு இதனைத் தந்துள்ளேன். இங்கே நான்
பேசுவதற்கு எதுவுமே இல்லை. பேராசிரியர்கள் பாலசுந்தரம், சுப்பிரமணிய ஐயா இருவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். அவர்களோடு மிகவும் நெருங்கிப்பழகியவன். ஆதிபர் பொ. கனகசபாபதி மகாஜனக் கல்லூரியில் அதிபராக இருந்தவர். அவரைப்பற்றி அனைவருக்கும் தெரியும். நூன்
எப்படி நன்;றி கூறுவது என்றுதெரியவில்லை என்றார்.

எழுத்தாளர் இணையத்தின் பொருளாளரும் முன்னைநாள் யாழ் மாவட்ட உதவிக்கல்விப்பணிப்பாளருமான திரு. சிவநாயகமூர்த்தி நூலாசிரியரின் பணி சாதாரணமான ஒன்றன்று, மிகவும் சிரமத்தின்மத்தியில் இந்த நூலை அவர் ஆக்கித்தந்தள்ளார் என்பது இன்றைய சூழலை உணரும்போது தெள

ிவாகின்றது. அவரது பணி பாராட்டப்படவேண்டியது என்ற அவர் அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

கனகமனோகரனின் மனோ மணிக்கதைகள் வெளியீடு
- ஒரு நோக்கு

த. சிவபாலு


த.சிவபாலு எம்.ஏ.வல்வை வரலாற்றுக் காப்பகத்தினரால் கடந்த 17.8.2008 பி.ப. கனடா கந்தசுவாமி ஆலயத்தில் வெளியீடு செய்யப்பட்டது மேற்படி நூல். கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. தமிழர் ஐக்கிய அமைப்பின் இயக்குநர்களான திரு, திருமதி குரு யோகராசா தம்பதியினர் குத்துவிளக்கேற்ற செல்வி தாட்~hயினி மணிவாசகன் கனடிய தேசியகீதத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தினையும் பாடிய பின்னர் அமைதி வணக்கத்தோடு
ஆரம்பமானது விழா. ஆசியுரையினைச் செல்லச்சந்நிதி ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் பொன். புவனேந்தின் ஐயர் ஆசியுரை நல்கினார். கனகமனோகரின் தன்னலமற்ற சேவையைப் பாரட்டியதோடு தொடர்ந்தும் நீண்டகாலம் வாழ்ந்து மென்மேலும் எழுத்துத்துறையிலும் ஏனயை துறைகளிலும் பணியாற்றவேண்டும் என இறைவனை வேண்டினார்.

நூல் வெளியீட்டிற்கு முழப்பொறுப்பையும் ஏற்றுச் செயற்பட்ட திரு. நகுலசிகாமணி அவர்கள் மேடையில் அமர்ந்திருந்த பேச்சாளர்களையும், வருகைதந்திருந்த சபையோரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

கனடா எழது;தாளர் இணையத்தின் தலைவர் த. சிவபாலு அவர்கள் கனகமனோகரனின் அரசியல் பேச்சுக்களால் மட்டுமன்றி அவரின்
வளக்காடுந்திறனையும் நேரடியாக இருந்து கேட்டு அவரின் தமிழ்த் ;திறனை மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆப்துல் காதரே பாராட்டியிருந்தார் என்றால் அவரது இலக்கியத் திறன் நயத்தைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என்றுரைத்தார். தொனிபொருட் கேள்வி, தூண்டுதொகை வினா, விடையமை வினா போன்ற மிக அருமையான சொற்களை அவர் கையாண்டமையைக் கண்டு வியந்ததுண்டு என்றும், நீதி
மன்றில் யூரி சபைத்தலைவராகப் பணியாற்றிய வேளை இவரது வாதத்திறமையால் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதனையும் நினைவுகூர்ந்து உரையாற்றியதோடு கனகமனோகரனது பேச்சுக்கள் வெட்டொன்று துண்டொன்றாக இருப்பினும் அவரது உள்ளம் மிகவும் மென்மையானது, கனிவானது இரக்கங்கொண்டது என்பதனை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கவிநாயகர் வி. கந்தவனம் அவர்கள் தனது தலைமையுரையில் கனகமனோகரன் அவர்கள் மிகச் சிறந்த ஒரு இலக்கியவாதி, அவர் அரசியல் மேடைகளில் மட்டுமன்றி, பல வாதப்பிரதவாதங்கள், கவிதா அரங்கங்கள் என அவர் மேற்கொள்ளும் இலக்கியச் சுவைமிக்க நிகழ்வுகளை
நான் தலைமைதாங்கியுள்ளேன். நல்ல ஒரு எழத்தாளர், மக்களை நேசிக்கும் இரு இளகிய மனம்கொண்டவர். அவரின் நூலை வல்வை வரலாற்று ஆவணக்காப்பகத்தின் பொறுப்பாளர்களான திரு, திருமதி நகுலசிகாமணி, உமா தம்பதியினரின் பணி பாராட்டப்படவேண்டியது. அவர்கள் செய்யும்
பணி மகத்தான பணி என்ற அவர் தொடர்ந்து உரையாற்றும்போது கனக மனோகரனின் நூலுக்கு ‘கனகமலர்’ என்று தலைப்பு வைக்கும்படி சொன்னேன். ஆனால் அவர் ஒரு வில்லங்கப் பேர்வழி எதுகை, மோனையைக் தனது எழுத்து நடையில் கையாளுவதில் வல்லவர் எனவே மனோகரனின் மனோ மணிக்கதைகள் என ம. ம. ம என வரத்தக்கதாகத் தலையங்கத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். தமிழையும், தமிழ்
இசையையும் வளர்ப்பதில் கனகமனோகரனுக்குக் கனடாவில் பெரும் பங்கு உண்டு என்றார்.

சட்டத்தரணி தம்பையா ஸ்ரீபதி அவர்கள் உரையாற்றும்போது சட்டக்கல்லூரியில் நாங்கள் இருக்கும்போது பேச்சுப்போட்டிகளில் என்னை எழுந்தமானப் பேச்சுக்களில் வென்றவர். ஆவரத் எனக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தால் நாயே உனக்கு எத்தனை தரம் அழைப்பது என்று ஏசவார். நானோ பரதேசி எனக்கு வேறு வேலை இல்லையோ என்ற மாதிரி எங்கள் உரையாடல் எப்பொழுதுமே இருக்கும். சில வேளைகளில் எனக்கு முன்னால் இருக்கும் வாடிக்கையாளர்கள் என்னடா என்ற தோரணiயில் பார்ப்பார்கள். ஆனால் நான் பேசுவதைக் கேட்டால் அவர்களுக்குப் பின்னர்
நண்பரோடுதான் கதைக்கின்றார் என்பது புரிந்துவிடும். ஒரு முறை எமது தமிழ் மன்றத் தேர்தல் இடம்பெற்றது. எங்களில் 9 உறுப்பினர்கள். இவர் தனது சகோதரியின் திருமணத்திற்குச் சென்றுவிட்டார். 4க்கு 4 என்ற அளவில் போட்டி இருந்தது. நானோ தீவான், என்னோடு போட்டியிட்டவர் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். அவருக்குத்தான் கனகமனோகரன் வாக்களிப்பார் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவரோ எனக்கு வாக்களித்தார். ஏன் என்ற கேட்டதற்கு ஒழுக்கத்திற்கும் திறமைக்கும், நேர்மைக்கும் வாக்களித்தேன் என்றார். அவரின் துணைவி பிறேமி இவரைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கும் கேடயம் என்றார்.

தொடர்ந்து விக்டர் கருணைராஜன் அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். என்னைக் கம்பராமாயணம் படித்தீர்களா என்னைக் கேட்டபோது எனக்குக் கம்பராமாயணத்தைப் பற்றித் தெரியும் என்றேன். நாங்கள் யாரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டுமெயன்றி அவர்களை மட்டந்தட்டக்கூடாது. எங்கள் இலக்கியத்தை எழுதுபவர்களுக்கு நாம் ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தவேண்டும். கனகமனோகரன் மனிதாபிமானமும் இரக்கமும் கொண்டவர். மக்களை நேசிப்பவர். என்ற அவர் தொடர்ந்து அவரின் சிறப்பு, அவரின் செயல்திறன், ஒழுக்கம், தமிழர் கலை கலாச்சாரத்தில் கொண்டுள்ள அக்கறை என்பனவற்றை எடுத்துரைத்துப் பாராட்டினார்.

கலாநிதி வசந்தன் அவர்கள் உரையாற்றும்போது சர்வதேச ரீதியில் பிரபலமான ஒரு பேச்சாளர் நாங்கள் ஒருமுறை ஐரொப்பாவிற்குச் சென்றிருந்தோம். அங்கு கனகமனோகரனைக் கண்டவர்கள் அவரின் பேச்சுத்திறனையும், அறிவாற்றலையும் மெச்சிப்பாராட்டியமையை நேரடியாகக் கண்ணுற்றேன். சுவிஸ்சில் உள்ளமக்கள் நாங்கள் உங்களுடைய பேச்சைக் கேட்க வந்தோம் என்று பகிரங்கமாகவே கூறினர். அந்தக் காலத்தில்
அரசில் மேடைகளில் ஒலித்த குரலைக் கேட்டிருக்கின்றோம் அதனை இன்று கேட்கவந்தோம் என்று அவர்கள் குறிப்பிட்டமை கனகமனோகரின் பேச்சாற்றலைப் பறைசாற்றி நிற்கின்றது என்றார். அவர் வானவில்லில் பல வடிவங்களில் மேடை யேறுவார். நடிகராக, கவிஞராக, பட்டிமன்ற
பேச்சாளராக என்று அவரின் பங்களிப்பு பலவிதம் என்றார்.

தொடர்ந்து வல்வை மக்கள் சார்பில் வாழ்த்துக் கவிதையை வாசித்துக் கையளித்தார் பொன். சிவகுமாரன். ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரி.கே. பரமேஸ்வரன் உரையாற்றும்போது தமிழுக்காக வாழ்ந்த, தமிர்க்காகத் தன்வாழ்கை அர்ப்பணித்துத் தமிழைத் தக்கவைக்கத் தமிழ்
அரசு வேண்டும் என்று போர்க்கொடி ஏந்திய தந்தை செல்வாவைத் தலைமையில் கொண்டு செயற்பட்ட அண்ணன் கனகமனோகரன் அவர்கள் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது பிரதம பேச்சாளராகத் திகழ்ந்தவர். தமிழீழம் மலர வேண்டும் என்று கனவு காண்பவர் அவரின்
கட்டுரைகள் வெளிவருவதையிட்டு மகிழ்வெய்துகின்றேன் என்றார்.

உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் உரையாற்றும்போது அறிஞர்கள் கூடியிருக்கும் இந்த அவையிலே கனகமனோகரனைப் பாராட்டுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன். அவர் எல்லோராலும் கவரப்படும் ஒரு பேச்சாளர், கவிஞர், நடிகர்.
அவரின் பணிகள் தமிழ் இசைக்கல்லூரியில் அவர் செய்யும் சேவைகளை நான் அறிவேன். அவர் எழுதிய கட்டுரைகளை வெளியீடு செய்வதில் முனைப்புக் கொண்டு உழைத்த வல்வை ஆவணக்காப்பகத்தைச் சேர்ந்த நகுலசிகாமணி தம்பதியினரைப் பாராட்டாமல் விடமுடியாது என்றார்.

திருமதி கோதை அமுதன் சட்டத்தரணி கனகமனோகரன் அவர்களின் பேச்சாற்றலை நான் பல மேடைகளில் கண்டு கேட்டு வியந்துள்ளேன். ஆவரைப் பற்றிப் பலவர் பலவிதமாகப் பேசக்கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அவரோடு நெருங்கிப் பழகியபோதுதான் அவர் ஒரு நேர்மை நிறைந்த
கண்ணியமான மனிதர் என்பதனை அறிந்து கொள்ளமுடிந்தது. என்னிடம் பேசும்படி கேட்டபோது அவர் ஒரு உண்மையைச் சொன்னார் யாரையோ ஒரு பெண்பேச்சாளர் பேசுவதற்குச் சம்மதித்திருந்தார் ஆனால் கடைசிநேரத்தில் அவர் காலைவாரிவிட்டார் எனக்குறிப்பிட்டு என்னை
நேற்றுமுன்தினந்தான் கேட்டிருந்தார் அவரது கள்ளங்கபடமற்ற ஒளிவுமறைவற்ற தன்மை என்னைக் கவர்ந்திருந்தது நான் சம்மதித்து அவரைப்பற்றிப் பேசச் சம்மதித்Nதுன் என்றார். தமிழில் பற்றும் ஆழ்ந்த அறிவும் நிறைந்த நினைவாற்றலும் கொண்ட அவரின் அடுக்கு மொழியிலான கவிதைகளும்,
பேச்சும் கேட்கக்கேட்ட இனிமைசுரப்பது. இலக்கிய நயம்மிக்க அவரது உரைகள், கவிதைகள், கட்டுரைகள் எமக்குக்கிடைப்பது நாம் செய்த பாக்கியமே. இந்த நூலை பதிவாக்கி வெளியிடும் வல்வை ஆவணக்காப்பகத்தின் முயற்சி பாராட்டப்படவேண்டி ஒன்று என்றார்.

தொடர்ந்து அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உரையாற்றும்போது கனகமனோகரன் ஒரு சிறந்த சட்டத்தரணி மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் இலக்கிய வாதியும். அவரது இலக்கிய அறிவையும் நயத்தையும் நான் கேட்டு வியந்ததுண்டு. அவர் தமிழக முதல்வர் கருணாதியின் பேச்சினால்
கவரப்பட்டவர். நுடடிகர் இராஜேந்தர் கருணாநிதியின் அடுக்குமொழிகளை உபயோகித்தாலும் வலிந்து சில சொற்களை உபயோகிப்பதால் அவரின் பேச்சில் இயல்புத்தன்மை இருப்பதில்லை ஆனால் கனகமனோகரனின் பேச்சில் அத்தகைய
செயற்கையான வலிந்து திணித்துப் பெசும் தன்மை கிடையாது. ஆவர் இயல்பாக சொற்களைக் கையாளுவதில் வல்லவர். அவரோடு உரையாடுவது ஒரு தனிச்சுவை. தூன் எடுத்துக்கொண்ட விடயத்தை

இறுதி வரை சரியென வாதாடும் திறன் மிக்கவர். அதற்கான ஆதாரங்களோடு அவர் உரையாடுவார். இலக்கியப் பாடல்களை உடனடியாகக் கூறி யார் புலவர் எந்த நூல் என்றெல்லாம் வரிதவறாது எடுத்தக் கூறும் ஞாபக சக்தியும் கொண்டவர். அவரின் கட்டுரைகளைப் பதிவாக்கி வெளியிடும்
நகுலசிகாமிணி குடும்பத்தினர் பாராட்டப்படவேண்டியர்வகள். அவர்கள் யாருக்கும் நேர்ந்திராத இழப்பை பெற்றுக் கொண்டாலும் தங்கள் சேவையைத் தொடர்ந்து செய்வது பாராட்டத்தக்கது என்றார்.

செல்வி உஷாநந்தினி கிருபாகரனின் நடன நிகழ்ச்சி மிகவும் சிறப்புற இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து கனகமனோகரன் கௌரவிக்கப்ட்டார். தோடர்ந்து அவரின் பதிலுரை இடம்பெற்றது. பதிலுரையில் தனது நூலை உருக்க தனது நண்பன் நகுலசிகாமணியையும், துணைவியார் உமாவையும்
வாயாரப்பாராட்டியதோடு அவர்களின் நச்சரிப்பாலும், தூண்டுதலாலுந்தான் இந்த நூலை வெளியீடு செய்யக் கூடியதாக இருந்தது. முழப்பொறுப்பையும் அவர்களே தங்கள் தலையில் சுமந்து செய்தார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பதென்பதே தெதியவில்லை என்ற அவர் அவருக்குக் கிடைத்த அடியை மறந்து சமூகத்தொண்டில் ஈடுபடும் அவர்களின் பணி வல்வை மக்களுக்கு மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்ற அவர். தனக்கு உதவிய, மேடையில் பேசிய ஒவ்வொருவரையும் பாராட்டி, தனது நன்றிகலந்த உரையை நிகழ்த்தினார்.

ஆவரின் பேச்சின் இடையிடையே மேற்கொண்ட கா~;யங்கள் சபையிலே பெருத்த கரவொலியையும் சிரிப்பொலியையும் எழுப்பியது. துணுக்குக்களோடும், சிரிக்கவைக்கும் பாணியிலும் பேசுவதில் வல்லவர் என்பதனைத் தனது நூல்வெளியீட்டிலும் அவர் விட்டுவைக்கவில்லை.

thangarsivapal@yahoo.ca-


© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner