இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
மே 2009 இதழ் 113  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
இலக்கியம்!

எழுத்தாளர் சிவகாமியுடனொரு நேர்காணல்!

- கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர் -


எழுத்தாளர் சிவகாமிசாதீயம் பற்றி எழுதுவதில் எனக்கு எப்பொழுதுமே தயக்கமுண்டு. எவர் மனதையேனும் புண்படுத்திவிடுமோ என்ற பயத்தைவிட, br> ப்ராமணீயம் தவிர்த்து, தமிழில் எது உசந்த சாதி, எது தாழ்ந்த சாதி என்பது பற்றி அரிச்சுவடிகூடத் தெரியாது என்பதாலும், அந்தக் கலன்களைத் தொடுவதேயில்லை. முதன்முதலாக மலையாள மாநாட்டில் கலந்து கொள்ள கேரளம் சென்றபோது, இலக்கிய உலகிலும் சரி, நிதர்சன வாழ்விலும் சரி, இன்றும் நியதி. கோட்பாடு என்ற பெயரில் உள்ள மனச்சாய்வின் பெரிய அடிப்படையே சாதியின் பிண்னனிதான் என்று மலையாள மாநாட்டில், தலீத்திய இளைஞர், கவிஞரொருவர் நம்பூதிரிகளை சாடியபோது வலித்தது. எந்த இலக்குமேயில்லாமல் இவர் ஏன் இந்த போடுபோடுகிறார் என்று திகைத்ததுண்டு. வருந்தியதுண்டு.

சூத்திரர்கள் என்றால் நாங்கள் எதில் குறைந்துபோய்விட்டோம், எங்களால் எழுதமுடிந்த பிரச்சினைகளை மற்றவர்களால் எழுதிவிடமுடியுமா என்ற இன்னொரு எகிறல்,--- அந்த எகிறல் எழுத்தாளரின் எழுத்து இவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் அவரது சீற்றம், எரிச்சல், பிளிறிய வசன மொழி, சே,--- அன்று இவளுக்கு வயது 25, 2 குழந்தைகட்கு அன்னையும் கூட. ஆனாலும் கூட புரியவே இல்லை.

இலக்கிய உலகில் பரஸ்பரம் எழுத்தின் மதிப்பீட்டில்தானே பெருமிதமே, இங்கு எங்கு வந்தது இந்த விதண்டாவாதம்? என்றெல்லாம் நினைத்து, இவளுக்கு கோபம் வந்தது. பிடித்தமான அவரது எழுத்தினை மனதார பாராட்டும் எண்ணம் கூட மடிந்திட இவள் தமையனோடு இல்லம் திரும்பிவிட்டாள். அன்று புரியாத பல விஷயங்கள் சிவகாமியின் எழுத்தில் , சிவகாமியின் நாவலகளைப்படித்தபோது, உள்ளங்கை நெல்லிக்கனியாய் புரிந்தது. படிக்கப்படிக்க , படித்துமுடித்தும் அம்மாடி, அம்மாடி, என்ன சோகமது, என்னதுன்பமது என்று நெஞ்சு விம்முகிறது .பொங்கிபொங்கி அழுகை வருகிறது.

சாதியின் அசுரப்பிடியில் இவர்களைப்போலவே அன்றாடக்கூலிகளாகப்பணிபுரியும் படையாச்சிகள் கேவலம் கூலிக்கு ஏர்பிடிக்க உடையார் பக்கம் சேர்ந்து விடுகிறார்களாம், கோவணத்துக்கு மாற்றுக்கோவணமில்லாதவன், அதே போல் உள்ள கோவணாண்டியை பள்ளன் என்கிறான், பறையன் என்கிறான், பள்ளனோ பறையனை கேவலமாயும்,பறையன் சக்கிலியை கேவலமாயும், இவனெல்லாம் சேர்ந்து பறவண்ணாணை இன்னும் கேவலமாய்-------இப்படி சீறுகிறார் சிவகாமி.

தன்னுடைய சமூகத்தைப்பற்றித்தான் என்ன துல்லியமான கணிப்பு, நுட்பமான சின்ன விஷயங்கள் கூட ஒளிக்கபடவில்லை. இந்த எழுத்துனேர்மை ஒன்றே போதுமே இவரது இலக்கிய யோக்கியதாம்சத்துக்கு, இந்த சிவகாமி சிஙகை வந்தபோது, என் தந்தையின் பெற்றோர் பன்றிமலம் பொறுக்கியவர்கள், தாய்வழிப்பெர்றோர் மாடுமேய்த்தவர்கள் அம்மாவுக்கு படிப்பறிவேயில்லை, அப்பாவுக்கு 2 மனைவியர், 20 குழந்தைகள், இப்படிப்பட்ட சூழலில் பிறந்துவளர்ந்த ஞான் கலவியே குறியாய் படித்து, முன்னேறி, இன்று அகில இந்திய தலீத்து, மாநாட்டின் தலைவியாக யூரோப்பிய நாட்டுக்கு செல்கிறேன், என்றபோது சபாஷ் போடத்தோன்றியது.

என்னை எவனொருவன் தலீத் என்றெண்ணி ஒதுங்கிப்போகிறானோ, அவனைக்கண்டு ஞான் தான் வெட்கப்படுகிறேன், அனுதாபப்படுகிறேன், என்று மேடையில் முழங்கிய , சிவகாமியைப் பார்க்க ஆச்சர்யமாக இருந்தது, கொஞ்சம் பிரமிப்பாய் கூட இருந்தது. சிவகாமியின் எழுத்தைப் படித்து ஓரளவுக்கு எதிர்பார்த்தாற்போலவே தான் தோற்றம். கறுப்புத்தான் என்றாலும் பளீரென்ற சிரிப்பில், ஒட்டவெட்டிய கிராப்புத்தலையும், கட்டுக்குட்டான [சிவகாமியின் பாஷைதான்] உடல்தோற்றமுமாய் அழகிய டிஷ்யூ சுடிதாரில் கவர்ச்சியாகவே தெரிந்தார்.மறுநாள், சிங்கையின் ப்ரதான சைவ உணவகத்தில் இக்குவனம் அய்யா, இவள், சிவகாமி மூவருமாய் மதிய உணவுண்டு கொண்டே, பேசிய விஷயங்களும், மறுநாள் காலை தொலைபேசியில் சம்பாஷித்த தகவல்கலுமாய் தொகுத்துள்ளேன். தமிழில் கேட்ட கேள்விகளுக்கு தமிழிலும், ஆங்கிலத்தில் வந்து விழுந்த கேள்விகட்கு அழகான பிழையில்லாத ஆங்கிலத்திலும் சிவகாமி உரையாடினார்.

தமிழிலக்கியம் மட்டுமல்ல, மலையாள இலக்கியம், முற்போகுவாதம், நவீனக்கவிதை எனபலதுறை பற்றியும் பேசினோம். சிரிக்கசிசிரிக்க, பொறுமையாக, தெளிவாக தன் கருத்துக்களை சிவகாமி எடுத்தியம்பினார், சிவகாமி, நாவலாசிரியை மட்டுமல்ல, ஊடாடி எனும் குறும்படமெடுத்து தமிழக விருதும்கூட பெற்றவர்.

கே---காத்தமுத்து, பெரியண்ணன், நலமா அம்மா?

சிவ----[பளிச்சென்று சிரிக்கிறார்,,] அவர்கள் நலமாக உள்ளதால் தானே ஆனந்தாயியும், கனகு நாகமணி, போன்றோர் உருவானார்கள்.

கே---சமகால இலக்கியம் இன்று தமிழ் நாட்டில் எப்படியுள்ளது?

சிவ--- ஆரோக்கியமாகவே உளளதாகவே நம்புகிறேன்.

கே--பழையன கழிதலும் நாவலின் பிறபகுதி இன்னும்கூட கொஞ்சம் செப்பனிட்டிருக்கலாமோ எனும் குறையை ஆனந்தாயி நாவல் பூர்த்தியாக்கியுள்ளது. என்றாலும் ப்ராமணீயத்தை தாக்குவதென்பதும், நையாண்டியாக எதிர்ப்பதும், இன்றைய முற்போக்குவாதமாக பல இடங்களில் காணப்படுகிறதே, இது சரியா?

சிவ--- அது அவரவர் பார்வையை பொறுத்த விஷயம். இலக்கியத்தில் எதுவுமே நையாண்டியில்லை.அவரவர் அனுபவத்தை அவரவர் எழுதுகிறார்கள்.

கே--- தலீத்திய இலக்கியம் ஒரு தலீத்தால் மட்டுமே எழுதமுடியும் அப்படிப்பட்ட எழுத்து மட்டுமே வெற்றிபெறும் என்ற கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.ஏன் மற்றவர்களால் அவர்கள் வேதனையை உள்வாங்கி எழுதமுடியாதா?

சிவ---- சேச்சி, கிராமம் என்றால்கூட என்னவென்று தெரியாத உங்களுக்கு சேரியைப்பற்றி என்ன தெரியும்?. காயம் பட்டவர்களுக்கு மட்டுமே ரணத்தின் வலி புரியும்.பள்ளிச்சிறுமியாக உள்ளபோது, வயசுக்குவந்த தோழியின் வீட்டுக்குச் சென்றபோது மொட்டைப்பாட்டி ஒருத்தி அத்தனை பேரையும் உள்ளேவிட்டு , என்னை மட்டும் வெளியே சாக்குப்போட்டு அமர்த்தி, தனி லோட்டாவிலும் அலுமினிய வட்டிலிலும் சாப்பாடு போட்டதை மறக்கமுடியுமா? படித்து பட்டம்பெற்றும், ஐ. ஏ. எஸ். பயிற்சியின்போதும் கூட என்ன்னிடம் முக்கியப் பொறுப்பு ஒப்ப்டைக்கப்பட்டபோது, தாங்கமாட்டாத , அந்த உயர்சாதிப்பெண் ஒருத்தி, ஷெட்யூல் காஸ்ட் பிட்ச்' என காதுபடவே திட்டினாளே, கற்றறிந்தும் கூட நாகரீகம் கற்காத இவர்கள் எங்கே முன்னேறியிருக்கிறார்கள்? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதெல்லாம் வெறும் வாய்ப்பந்தலே ஒழிய, நடைமுறையில் பக்கா பச்சோந்திகளாக வாழ்பவர்களைப்பற்றி எழுதினால் என்ன தப்பு?

கே-- எழுத்தில் ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒன்றுதான், எங்களைப்பாகுபடுத்தி அல்லது பிரித்துப்பார்க்காதீர்கள் என்று சில பெண் எழுத்தாளினிகள் கோஷம் போடுகிறார்களே? இது ஏற்புடையதுதானா?

சிவ-----சேச்சி, நீங்களே, எழுத்தாள்ர்தானே உங்கள் அபிப்ராயமென்ன?? ??????????????????????????

எண்டெ பதில்------- நிச்சயமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது, ஏன் நினைத்துப்பார்க்ககூட முடியாது. ஒரு ஆடவ எழுத்தாளரின் எழுத்துக்கும் ,எண்டெ எழுத்துக்கும் நூறு நூறு வித்தியசங்களை என்னால் காட்டமுடியும்,பெண்மையின் உளவியல்சிறப்பினை ஆண்களோடு ஒப்பீடு செய்வதே தப்பு,

சுட்டுப்போட்டாலும் வயிற்றுக்குள் குழந்தை புரளும் அனுபவத்தை ஒரு ஆடவ எழுத்தாளரால் உணர்ந்து எழுத முடியுமா? பிரசவவலியை அனுமானித்து எழுதிடல் முடியுமா அம்மா?

சிவ----சபாஷ், சேச்சி, இதுவே தான் எந்தன் கருத்தும் கூட, பெண்மையின் தனித்துவத்தை தூர நின்று பார்ப்பதுபோலல்ல, அனுபவித்தெழுதுவது-------தாய்மை என்று, மட்டுமல்ல, பெண்ணின் அனைத்துக்கூறுகளுமே ---அடடா இப்பொழுது புரிகிறதா?


இதுபோலவேதான் தலீத்திய எழுத்தும் ஒரு தலீத்தால் எழுதினால் மட்டுமே சிறப்புறும் என்று உடனே என்னை மடக்கினார். ஒரு நாவலோ அல்லது சிறுகதையோ எழுதுவதற்கு, வெறும் கற்பனைவளமும் மொழிவளமும் மட்டுமே தெரிந்தால் போதும், இதோ ஞானும் கதை எழுதுகிறேன் பேர்வழி என்று மார்தட்டும் செப்புடு வித்தை தான் இலக்கியம் என்றோ, அல்லது கம்பிமேல் நடக்கும் திக்திக் சாதனையாக்கும் என்று மட்டும் யாரேனும் என்னிடம் அளந்தால் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன்.

இருட்டுக்கட்டிய கருவறையில் கண்களை இடுக்கிக்கொண்டு நோக்குங்கால், ஒரு நிமிஷம் ஒரே ஒரு நிமிஷம் ஈஷ்வர தரிஷனம் கிட்டியதும் பக்தன் சிலிர்த்து நிற்பானே, அந்த ஒரு நிமிஷம் போல் தரமான வாசகனும் நல்ல ஒரு கதையை படித்தது முடித்ததும் விக்கித்துப்போய் நிற்கவேண்டும். அதுதான் தரமான எழுத்து,கதை சொல்லும் உத்தியில் வாசகர்களிடையே ஒரு நெருக்கம் வேண்டும்.

அதற்கு இலக்கியத்தின்பால் மனித மனதிற்கு, மங்காத ஆவல், காதல் வேண்டும்.அந்த அதீத தாகத்தோடு, மனித அனுபவத்தின் நாடித்துடிப்பை தேடிப்போய் ஒரு விஷயத்தை, மிகைப் படுத்தாமல் அதன் இயல்புக்கேற்ற உணர்வோடு எளிமையாக சொல்லத்தெரிந்தால் மட்டுமே போதும் அந்தக்கதைக்கு அபார வெற்றியே. என்னைக்கேட்டால் எழுத்தாளனும் அடிப்படையில் ஒரு கலைஞனே என்பேன். எண்டெ எழுத்தில் இன்னும் தேடுதல் அடிநாதமாக ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது என்கிறார் ஆசிரியர், ந.முத்துசாமி.

ஆனால் கலைத்தன்மையையும் இயல்பான நடப்புக்களும் சூழ நிஜத்தன்மையின் நுணுக்கமான விவரங்களுடன் தர்க்கம், விவாதம் என்பதை வேகம் நிறைந்த உணர்ச்சிப்பெருக்குடன் எழுதும் படைப்புக்கள் என்னை பெரிதும் ஆகர்ஷித்துள்ளது, அப்படிப் படித்த கதைகளுள் ஆங்கிலேய நண்பனொருவனின் அனுபவத்தை தன்னுடைய எழுத்தில் கொண்டுவந்த இலக்கியவாதியின் கதையொன்று எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்து.

இந்த வகையில் பெண்களில் ப்ரதிபாராய், அனிதா நாயர், மார்கரெட் டீக், விஜயம் அந்தர்ஜனம் ,ராஜம் க்ரிஷ்ணன், ரேகாக்ரிஷ்னன்குட்டி, அருந்ததிராய், சிவகாமி போன்றோர் இன்றியமையாதவர்கள். சிரியன் க்ரிஸ்டியன்களிடையே நிகழும் அவலம், தார்மீக அனுபவங்களை அருந்ததி எழுதியுள்ள விதரணை, இலக்கிய ஆளுமையில் உச்சம் என்பதை மனதார பாராட்ட வேண்டும்.

நம் சிவகாமியின் எழுத்தும் , உறுத்தல் இல்லாத பாசாங்கற்ற, நடையால் பளபளவென்று துலங்கினாலும், நெருடும் ஒரே சமாச்சாரம் இவரது பச்சை, கொச்சையான வசனங்கள். சவடால் பேர்வழி காத்தமுத்துவுக்கு முதலில் வரும் ஒரே வசவு, தலைமுடி பாஷைதான்,

நீயெல்லாம் எப்படிரா பெண்டாட்டியோடு -----என்று காதுபொத்தும் வசனங்களை தவிர்த்திருக்கலாம்.

ஆனாலும் சுவாரஸ்யமான விஷயங்களும் உண்டு. இவரது நாவலில் கணவர் மனைவியை எப்படி அழைக்கிறார் தெரியுமா? 'ஏம்பேசலை, ஏம்பேசலை' என்று?----

மனைவியோ, கணவரை, 'எக்கலை, எக்கலை' , என்பாராம் ? இப்படிக்கூட தமிழில் விளியுண்டா?

அடுத்து சிறுவழிபாட்டு தெய்வங்கள் என்றாலே, முனியாண்டி, முனீஸ்வரன் காளி,சூலி இப்படித்தானே படித்திருக்கிறோம்? ஆனால் சிவகாமியின் சாமி,' பொன்னுசாமி, எமபாரி,. இப்படி, இன்னும் திருமணம் நடத்திவைக்க வரும் அய்யரைப்பார்த்து கெளரி 'இவரு நிசமாலுமே அயிருதானாம்மா?

என்றுகேட்க, 'அக்காம், வள்ளுவரு, கோமேதகம் அயிரு,,என்பதும் அந்த வள்ளுவப்பண்டாரத்திடம் நிற்கப்போன அழுக்குச்சிறுமியை,

போ அந்தாலே , அயிருகிட்டே தீட்டாக்கிடாதே, என்று விரட்டுவதுமாக, என பல புதுபுதுத் தகவல்களாய்,சிவகாமி அசத்துகிறார்.

பழையன கழிதலும், ஆனந்தாயி, குறுக்குவெட்டு, நாளும் தொடரும், என சிவகாமியின் எல்லா நூல்களையுமே படிக்கும்போது, தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் ப்ரச்சினைகளை, பெண்மையின் அருமை, அநியாயமாக சுரண்டுப்படும் அவலத்தை, எந்த எழுத்து ஜாலமுமேயின்றி, இவ்வளவு இயல்பாக எழுதிய பாங்கே தமிழ் நாவல் உலகுக்கு புதிய பரிமாணம் என்று அறுதியிட்டுக்கூறலாம், இனி சிவகாமியின் பேட்டியை தொடருங்கள்.


கேள்வி------பெண்ணீயம் என்பது பற்றி தெரிந்தால் மட்டுமே ஒரு பெண்ணின் எழுத்து நிலைக்குமா ?

சிவ-- அப்படி ஒரேயடியாகக் கூறிவிடமுடியாது. சுயசிந்தனை, தெளிவான பார்வை இருக்கவேண்டுமென்று வேண்டுமானால் சொல்வேன்.

கேள்வி--சிறுகதை, நாவலில் மட்டுமல்ல, கலைத்துறையிலும் ஈடுபட்டுள்ளீர்கள். நாடகத்துறையில் வணக்கத்திற்குரிய எண்டெ ஆசிரியர் prof.ராமானுஜம், ந.முத்துசாமி, போன்றோரை போய் பார்ப்பதுண்டா?

சிவ----பண்டிதர்களின் பார்வையில் நாங்கள் நாடகம் போடுவதில்லை, கொட்டும் மோளமும் எங்கள் இனத்திலிருந்த தான் போனதே, அதை எங்கள் பார்வையில் எங்கள் பாணியில் , நாங்கள் தயாரித்துவருகிறோம்,அதனால்,கொட்டு, பறை, மோளம், இதெல்லாமே எங்களிலிருந்துதான் பிறந்ததால்,பண்டிதர்களின் பார்வை தேவையில்லை, என்றாலும் நீங்கள் இவ்வளவு
அருமையாக அவர்களைப்பற்றி கூறுவதால் உங்கள் ஆசிரியர்களை பார்க்க நேர்ந்தால் நிச்சயம் பேசுவேன். எங்கள் குழுவுக்கென்ரு பார்வையுண்டு. அந்த நாடககுழுவோடு இதே சிங்கையில் நிகழ்ச்சி நடத்த விரைவிலேயே வரலாம்.

ஞான் - ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது அம்மா,ஆமாம், இடதுசாரி இலக்கியம் என்றால் என்ன? அதுவும் தலீத் இலக்கியம் தானா?

சிவ-----தலீத்தின் ப்ரச்சினைகளும் போராட்டங்களும், தலீத்திய விடுதலைக்கான கருவும் சார்ந்து வந்தால் நிச்சயமாக
அப்படிக்கொள்ளலாம்.

ஞான் ----இன்று மலையாள இலக்கிய உலகில் கடம்பனிட்ட ராமக்ரிஷ்ணன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போன்ரோரின் கவிதைகள் மக்களோடு iக்கியமாயுள்ளது. தமிழில் பாரதிக்குப்பிறகு, நவகவிதைகளின் உள்ளடக்கம் பரந்த அளவில் சென்றடையவில்லை,, அறிவுஜீவித்தனமான கவிதைகள் என்றாலே ஒரு மாதிரி அதிர்ச்சியின் வெளிப்பாடே தவிர, அதில் creative என்பதே இல்லை எனும் குற்றச்சாட்டு உண்மையா?

சிவ---புதுமை என்பதாலேயே அது உயர்வு அல்ல. creativity என்பது
கூர்மையாகவும் அதே சமயத்தில் மிக இயல்பாக உணர்வைக் கிளறும் படிமங்களை க்கொண்ட எழுத்துக்களாலும் கொண்டு வரமுடியும்.

ஞான் --பெண்களின் எழுத்தில் அன்றைய லக்ஷ்மியின் பாதிப்பில்தான் உழன்றுகொண்டிருக்கிறோமாம். அல்ல்து சிவசங்கரித்தனமான எழுத்தில் கரைந்து கொண்டிருக்கிறார்களாம், சமூகககதைகள் என்றாலே வெறும் துணுக்குத்தோரணமே. பரிசோதனை உத்திகளில் எழுதுபவர்களின் எழுத்து மட்டுமே கவனிக்கப்படுகிறது, என்ற கருத்தை எப்படி தவறு என்று நிரூபிப்பது?

சிவ-----முதலில் அவர்கள் நம்மை முழுமையாக படிக்கவில்லையென்றே சொல்லமுடியும், ஆமாம், இது பற்றி, உங்கள் கருத்தென்ன?

?ஞான் --லக்ஷ்மியின் தங்கமாம்பழம் என்ற நூலை படிக்கும்போது எனக்கு 11 அல்லது 12 வயதிருக்கும் அப்பொழுது சிறுவர் அரங்கில் எழுதிக்கொண்டிருந்த காலகட்டம், ரெ.கா. சாரின் சுழல்பந்து சிறுகதை அபாரமாய் மனதைக்கவர்ந்தது . ஊஹூம், தப்பு, அது கவர்ந்தது அல்ல. மனதில் அப்படியே அந்த நடை, கதைக்கரு, கதை, சொல்லியவிதம் , மிகவும் பிடித்துப்போயிற்று. உடனே மாணவர் அரங்கில் கதைகள் எழுத ஆசை வந்தது. ஆனால் தி.ஜா, லசரா என்ற இரு சிகரங்களை படித்தபோது பரவசத்தில் விம்மிவிம்மி அழுதிருக்கிறேன். எண்டெ உள்ளம் கொள்ளை கொண்ட எழுத்துக்கள் அம்மா, நெஞ்சை அள்ளிய தமிழ் , அவர்கள் எழுத்தில் எந்த பொய்மையும், அதிரடி உத்திகளும் ஞான் காண்வேயில்லை.இவர்கள் எழுத்தில் மனிதனின் அசலான வாழ்க்கையை மெய்ப்பாடுகள் நிறைந்த கருவூலம் வழி அதன் இயல்புடனும் அழகுடனும் சொல்லும் ஆற்றலை லசரா போதித்தார், தி ஜா,எனும் சான்றோரின் எழுத்தில் மனிதனேயம் மெல்லிய சரடுபோல் கண்ணுக்குத்தெரியாமலும் அதே நேரத்தில் சமகாலப்ப்ரக்ஞையும் சமுதாய வாழ்க்கையின் நிதர்சனத்தை உயிர்த்துவம்போல் அதன் ஆளுமை கெடாது எழுதுவது எப்படி எனும் அற்புதத்தையும் கற்பித்தார். இதேபோலவே மஹாகவி பாரதி,க்கவிதைகளில்
இதிகாசம் காண்பவள் ஞான்.. எத்தனை முறை படித்தாலும் இன்றும் என்னை ப்ரம்மிக்க வைக்கும் கவிதைகள் பாரதிக்கவிதைகள்.தமிழில் இந்த பிதாமகன்களையெல்லாம் உனர்ந்ததாலேயே சமூக நாவல்களை குறைத்துப்பேசுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

சிவ--- சேச்சி, மலையாள இலக்கிய உலகம் எப்படியிருக்கிறது ?அங்கு உங்களைக்கவர்ந்த எழுத்தாளர்கள் யார்?

ஞான் -- மிகுந்த நம்பிக்கையோடிருக்கிறது. 20 வருடங்களுக்கு
முன்னால்பாரதிக்கீடான கவிஞரே இல்லையென்று ஞான் பேசியபோது கோபப்பட்ட எழுத்தாளர்களின் அலை இப்போது இல்லை, என்னதான் அவரது சிறப்பு என்று எங்களுக்கும் சொல்லுங்களேன் என்று ரசித்துக்கேட்கிறார்கள். தமிழின் அரிய கதைகளை ஞான் மலையாளத்தில் அறிமுகப்படுத்தும்போது ,
திறந்த மனதோடு
ஆர்வத்தோடு ரசிக்கிறார்கள்.தமிழில் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துமாறு எனக்கு கடிதமனுப்புகிறார்கள்.. உன்னுடைய ஆனந்தாயி, நாவலை ஞான் அறிமுகப்படுத்தியபோது கூட புதிய பார்வையோடு ரசித்தார்கள்.

கவர்ந்த எழுத்து என்றால் எம்.டி,யின் ரெண்டாம் முழம், ஆனந்தின் மறுபூமி உண்டாகுன்னு, என்னை மிகவும் கவர்ந்த எழுத்து. இன்னும் ஒ.ன்.வி.குருப்,ஆற்றூர் ரவிவர்மா, கவிதாயினி சுகதகுமாரி, வத்சலா, அந்தர்ஜனம்,போன்றோரை குறிப்பிடலாம்.. கவிதைகளின் மரபுக்குட்பட்டும், மரபுகளை மீறியும் எழுதும் அய்யப்ப பணிக்கரையும் தவிர்க்க இயலாது. modernism என்ற பெயரில் ஆத்மாவின் ஜீவத்துடிப்பையே உலுக்கும் எழுத்துக்களை பட்டியலிடவேண்டுமாயின் இன்னும் பலரையும் கூட எழுதலாம்.

சிவ---- சேச்சி, மலையாள இலக்கிய உலகில் ஜாதீய மனோபவம் உண்டா?

ஞான் -- தர்ம சங்கடமான கேள்வி சிவகாமி, ஞான் மனிதர்களை, மொழிகளை, நேசிப்பவள் அம்மா, தயவுசெய்து இந்த கேள்வியை
தவிர்க்கலாமே.


ஞான் -----தமிழில் மிக உன்னதமான படைப்புக்கள் எல்லாம் வெளிவந்தும் அவை சர்வதேச அங்கீகாரத்தை அடையாததற்கு காரணம்

தரமான மொழிபெயர்ப்பில் அவை பிற மொழிகளில் சென்றடையவில்லை என்று நினைக்கிறேன். என்னம்மா சொல்கிறாய்?

சிவ---- உண்மைதான் சேச்சி, தமிழில் அதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட இலக்கிய அமைப்புக்கள் முனைப்போடு
செயல்படவேண்டும்,


இதற்குப்பின்னர் பேசியதெல்லாம் அன்பின் வெளிப்பாட்டில், சக மனுஷியாய் இலக்கியம் குடும்பம் சார்ந்த தகவல்களே.

விடைபெறுமுன் பரஸ்பரம் நன்றி கூறிப்பிரிந்தாலும் , சிவகாமியின்எழுத்தைப்புரட்டும்போதெல்லாம் மனதில் நிற்பது, அழகான அந்த சிரிப்பே, சிவகாமியின் துணிச்சல், சிவகாமியின், அழுத்தம், சிவகாமியின் நிறம், எல்லாமே கவர்கிறது.

பெண்களின் பேனா இதுவரை என்ன சாதித்துள்ளது என்ற கேள்வியை யாரேனும் எழுப்பினால் ,துணிகரமாக சிவகாமியின் நூலை
பரிந்துரை செய்வேன்,????

kamalam.online@yahoo.com


© காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner