யேர்மனியில்
புறநாநூற்றுக்
கலை
நிகழ்வு!
-
சங்கர்
-
தமிழர்தாயகத்தில்
போரினால்
அவயவங்களை
இழந்தவர்களுக்கும்,
பார்வையை
இழந்த
மாற்றுத்திறனற்றோருக்கும்
உதவும்
முகமாக
பட்ச்
வோர்க்
(Patch Work)
நிறுவனத்துக்கு
வலு
சேர்ப்பதற்கு
யேர்மனியில்
இரண்டாவது
இடமாக
பெர்லின்
நகரில்
25.10.2010
அன்று
புறநாநூற்றுக்
கலை
நிகழ்வு
நடைபெற்றது.
இந்
நிகழ்வில்
அவுஸ்திரேலியாவில்
இருந்து
வருகை
தந்த
சேரன்
சிறிபாலனின்
நெறியாள்கையில்
புதிய
வரலாற்று
புறநாநூற்றுக்
கலை
நாட்டிய
நிகழ்வு
மண்டபம்
நிறைந்த
மக்களை
மெய்சிலிர்க்க
வைத்தது
,தமிழ்நாட்டில்
புகழ்பெற்ற
தனஞ்செயன்
தம்பதிகளின்
கற்கை
நெறியில்
உருவான
சேரன்
சிறிபாலனின்
நெறியாள்கையில்
யேர்மனியின்
நாட்டிய
நடனக்
கலைஞர்களும் பங்குபெற்றனர். அத்தோடு
நடன
ஆசிரியர்
திருமதி
டயானா
மிகொலை
அவர்களின்
மாணவர்களின்
நடனங்களும்
மக்களின்
மனங்களைக்
கவர்ந்தன
.
சிறப்பாக
யேர்மனியில்
நடைபெற்ற
இரண்டு
நிகழ்வுக்கும்
தமது
அனுசரணையை
வழங்கி
நிகழ்ச்சியைத்
தமது
இசை
மழையால்
மிகவும்
சிறப்பித்த
செந்தளிர்
இசை
குழுவின்
இளம்
கலைஞர்களும்
மக்களால்
மிகவும்
பாராட்டப்பட்டார்கள்
.
இந்த
வகையில்
யூலை
மாதம்
இறுதி
முதல்
ஓகஸ்ற்
மாதம்
வரை
அவுஸ்திரேலியாவில்
இருந்து
ஐரோப்பிய
நாடுகளுக்கு
வந்து
புதிய
வரலாற்று
புறநாநூற்று
கலை
நாட்டிய
நிகழ்வை
நடாத்தி
அதில்
பெறப்படும்
சிறிய
பொருளாதாரத்தில் ‘‘மாற்றுத்திறனற்றோருக்கு’’
உதவும்
புனிதப்பணியை
மேற்கொள்ளும்
இக்
கலைக்குழுவினர்
தொடர்ந்து
எதிர்வரும் 31:07:10
சனிக்கிழமை
சுவிசுநாட்டில்
தமது
கலைநிகழ்வை
முடித்து
கொண்டு
01:08:10
ஞாயிற்றுக்கிழமை
பிரான்சிலும்
அதைத்
தொடர்ந்து
நோர்வேயிலும்
தமது
நிகழ்வை
நாடாத்தவுள்ளனர்
என்பதை
அறியத்தருகின்றோம்.
தன்
இரண்டு
கண்களையும்
இழந்த
போதும்
தனது
மண்ணையும்,
மக்களையும்
நேசித்து
தன்னை
அர்பணிக்கும்
எமது
சகோதர
உறவுக்கும்
அவரின்
குழுவுக்கும்
அனைத்து
மக்களும்
தம்
ஆதரவை
கொடுக்கும்
படி
தயவுடன்
கேட்டுக்கொள்கிறோம்