விலைவாசி உயர்வு
- சந்தியா கிரிதர் -
இந்த விலைவாசி உயர்வை ஜPரணிக்க
முடியுமா? இப்படிப்பட்ட யதார்த்தமான கேள்வி மக்களை ஆட்டிப்படைக்கிறது.
விலைவாசி உயர்வு,[
ஒவ்வொருத்தருடைய மனதிலும், வாழ்க்கையை எப்படி தள்ளுவதென்கிற கவலையை,
ஆழமாக பதித்துவிட்டு வேடிக்கை பார்க்கிறது. பெட்ரோல், டீசல்
போன்றவைகளின் விலைகள் உயர்த்தப்பட்டவுடனே மற்ற பொருட்களின் விலைகளும்
மடமடவென்று ஏற்றம் கண்டு கொள்கின்றன. காய்கறிகளின்
விலைகளை பற்றிச் சொல்லவாவேண்டும், அதிலும் வெங்காயம் கிலோ ரூ80க்கு
மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. ஒரு காலத்தில் கிலோ ரூ20க்கு
விற்றுக் கொண்டிருந்த வெங்காயத்துடைய விலை ஒரேவாரத்தில் நினைத்துப்
பார்க்க முடியாத விலைப்பட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு
உலாவருகிறது. வெங்காயத்தை வழக்கமாக பயன்படுத்துகிற வடஇந்தியர்களின்
பாடு திண்டாட்டம்தான்.
மிகக்கொடிய கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி பிணைக்கைதியாகயிருக்கிற
விவசாயப்பண்ணைக் கொள்கைகள் நகரத்து-நுகர்வோர்களை திருப்திப்படுத்த
முடியவில்லை. உலகமயமாக்குதல், தாராளமயமாக்குதல் போன்ற பொருளாதாரச்
சீர்திருத்தங்களால் இந்தியா, தொழில்மயமாகிய நாடாக, மாற்றம்
கொண்டதே தவிர, இத்தகைய சீர்த்திருத்தங்களால் விவசாயத்துறை எவ்வித
பயனும் பெறவில்லை. விவசாயத்துறை, தொழிற்துறை, சேவைத்துறை
ஆகிய மூன்று துறைகளுக்குள்ளே, விவசாயத்துறை நம்முடைய நாட்டின் ஒரு
முக்கிய அங்கமாக வகிக்கிறது. முக்கால்வாசி இந்திய மக்கள்
விவசாயத்தை நம்பித்தான் வாழ்க்கையை நடத்தி வருகிறhர்கள். விவசாயம்
இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்வதில் தப்பில்லை.
இந்த விவசாயம் கிராமத்து மக்களுக்கு கூழும்கஞ்சியும் தொடர்ந்து
கொடுத்துக் கொண்டு வருகிறது, சொந்த நிலங்களில் தானியங்கள், காய்கறிகள்,
கனிகள் என்று பயிரிட்டு விவசாயிகள் வயித்துப்பிழப்பை
ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். வயல்வரப்போடு பச்சைபசேலென்று அழகாகயிருந்த
இந்த
கிராமப்புறங்களில், இன்று பட்டுபோன வயல்வரப்புகள், முட்செடிகள்
நிரம்பிய புறம்போக்கான நிலங்கள்தான் கண்ணுக்கெட்டிய தூரம்வரை
தெரிகின்றன.
வானம் பார்த்த பூமி என்கிற பழமொழியோடு தொடக்கம் பெறுகிற விவசாயம்,
அளவான மழை வளமான விவசாயம் என்கிற பாணியில்
விவசாயத்துறை செயல்பட்டு வருகின்றது. முந்தைய வருடத்தில்
மழையில்லாததால் அல்லது காலத்தாமதமாக பெய்ததால், வரண்டுபோன நிலங்கள்
பிளவு கொண்டு விவசாயமில்லாமல் இருந்ததுதென்றhல், இந்த வருடத்தில்
தொடர்மழையால் பெருக்கெடுத்துக்கொண்டு ஓடிய வெள்ளம் பயிர்களை
வினாசப்படுத்தியதோடு, விவசாயத்தiயும் ஸ்தம்பிக்க செய்து விட்டது.
புவியின்
சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி வெட்பதட்ப நிலையில்லாததால் அந்தந்த
காலகட்டத்தில் நடக்க வேண்டிய பருவங்கள் நடைபெறhததால்,
நடைபெறுகிற பருவங்களின் தீவிரம் அதிகரிப்பதாலும், இவ்விரு நிலைகளிலும்
பாதிக்கப்படுவது விவசாயத்துறை மட்டும்தான். வரட்சி, வெள்ளம்
இரண்டும் ஒரு சாபக்கேடு, இவைகளின் விளைவுகளை நாம் விவசாயத்துறையில்
கண்கூடாக பார்க்கிறேhம். ஒருவேளை சோற்றுக்குக்கூட
வழியில்லாமல் எண்ணற்ற விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறhர்கள்.
வேறு கைத்தொழில் தெரியாத விவசாயிகளின் முடிவு இதுதானா?
என்ற கேள்வி நம்முடைய மனதை கனக்க வைக்கிறது. நலிந்துபோன
விவசாயத்தினுடைய விளைவுதான் உயரப் பறக்கும் இன்றைய விலைவாசி.
இந்த வருட தேசிய வளர்ச்சி (National
Growth) 9சதவிகிதமென்று
பிளானிங் கமிஷன்(அதாவது திட்டமிடும் குழு) (PlanningCommission)
அறிவித்திருக்கிறது. எதிர்கொள்ளும் பருவக்கோளாறுகளைப் பற்றி
சிந்திக்காமல் மத்திய அரசு உள்நாட்டு மார்க்கெட்டுக்கு தேவையான அளவு
சரக்குகளை வைத்துக்கொண்டு, அதற்குமேல் அதிகப்படியாயுள்ளதை ஏற்றுமதி
செய்தும், தேசிய வருமானத்தைப் (National
Income)பெருக்க
வேண்டுமென்ற நோக்கத்தோடும் செயல்பட்டிருக்கிறது. முன்பின் யோசிக்காமல்
செயல்பட்டதால், காய்கறிகளும், மேலும் மற்ற பொருட்களின்
விலைகளும் இன்று உயரக் கொடிகட்டிப் பறக்கின்றன.
மார்க்கெட்டில் காய்கறிகள் குறைந்து காணப்படுவதாலும், அவைகளுடைய
தேவைகள் அதிகரிப்பதாலும,; இப்படிப்பட்ட Nழ்நிலையால் உருவாகியுள்ள
இடைவெளி காய்கறிகளுடைய விலைகளை, நினைத்துப் பார்க்க முடியாதளவு,
உயர்த்தி விட்டது. மேலும் பருப்பு வகைகளான துவரம், உளுந்து,
பயத்தம் போன்றவைகளுடைய விலைகளும் மடமடவென்று ஏறிவிட்டன. விலைவாசி
உயர்வால் ஏழைமக்கள் காற்றை சுவாசித்து, தண்ணீரைக் குடித்து
வாழ வேண்டியதுதான், நடுத்தரவர்க்க மக்கள் தேவைகளை குறைத்துக் கொண்டு
வாழ வேண்டிய கட்டாயம், வியாபாரிகள் கேட்ட விலையை கொடுத்து
வாங்கும் பணக்காரவர்க்கத்தினர் பாதிக்கப்படப் போவதில்லை.
விலைவாசி உயர்வை அறிந்திருந்தும், முடிவெடுக்க முடியாமல் மெத்தனமாக
செயல்படுகிற மத்திய அரசினுடைய போக்கால் பொதுமக்கள்
ஆத்திரத்துக்குள்ளாகி, அவர்களிடையே உருவாகியுள்ள கொந்தளிப்பு
காட்டுத்தீயைப் போல பரவிக்கொண்டு வருகிறது. உள்நாட்டு தேவைகளை பூர்த்தி
செய்வதுதான் ஒரு அரசாங்கத்துடைய முதன்மையான கடமையாகும். தற்சமயம்
ஆட்சியிலிருக்கும் கட்சி சட்டென்று முடிவெடுத்து மின்னல் போன்ற
வேகத்தோடு செயல்பட வேண்டும். விலைவாசி பிரச்சனைக்கு எவ்வளவு துரிதமாக
தீர்வு காண முடியுமோ அவ்வளவு வேகமாக மத்திய அரசு
செயல்பட வேண்டும், இப்போது கோட்டை விட்டுவிட்டால் இந்தப் பதவியையும்,
அதிகாரத்தையும் எப்போதும் பிடிக்க முடியாது ….. எதையும் காதில்
போட்டுக்;கொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால் மறுபடியும்
கடிவாளத்தைப் பிடிப்பதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்படுமோ ……..
சந்தியா கிரிதர்
sandhya giridhar <sandhya_giridhar@yahoo.com> |