அன்று
மக்களோடு மஹாத்மா, இன்று மஹாத்மாவின் மக்கள்
-
சந்தியா கிரிதர் (புது தில்லி) -
மனிதனுடைய வாழ்க்கைப் பயணம் குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கி முதுமையில்
முடிவடைகிறது. ஓவ்வொரு மனிதனும் அந்தந்த காலகட்டத்தில் ஒவ்வொரு பருவ வாழ்க்கையை
அனுபவிக்கின்றான். சாதாரண மனிதனும், மாமனிதனும் இந்த இயல்பான வாழ்க்கையின் பாதையை
கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மஹாத்மாவும் இயற்கையான வாழ்க்கையை பரிபூரணமாக
அனுபவித்திருக்கிறார். அன்று மஹாத்மா மனிதனுடைய வாழ்க்கைத் தத்துவத்தை எளிமையான
மொழியில் மக்களுக்கு விளக்கினார். இன்றைய மனிதன் அவருடைய தத்துவத்தை சற்று மசாலா
போட்டு புதுமையான முறையில் எடுத்துரைக்கின்றான்.
இன்றைய மனிதன் உலகத்தை கைக்குள் அடக்கிக் கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறான்.
முன்னேற்றத்தைக் கண்ட தகவல் தொடர்புத்துறை உலகத்தை சுருக்கியது மட்டுமில்லாமல்
பூதிய மாற்றத்தையும் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் புதுமை, விஞ்ஞானம்,
தொழில்துறை, தகவல்-செய்தித்துறை, விவசாயம், போக்குவரத்துத் துறை போன்ற துறைகளில்
மாற்றத்தை கொண்டு வந்தது மட்டுமில்லாமல் மனிதனுடைய சமூக வளர்ச்சியிலும்
மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மாற்றம் கொண்ட சமூகம் தேசத்தினுடைய உருவையும்
மாற்றி அமைக்கிறது. உலகம், தேசம், சமூகம், பல துறைகள் என்று ஒவ்வொன்றாக
மாறியதால், இந்த உலகத்தில் தனியொரு மனிதனின் அடையாளம் என்ன? அவன் யாரென்றும்,
அவனுடைய நிரந்திரமான இருப்பிடத்தை இந்த உலகத்தில் எந்த திசையில்
நிர்ணயிக்கப்படுகிறது? அவனுடைய பிறப்பு சமூகத்தின் பொருட்டு எப்படி
பயன்படப்போகிறது? இந்த முன்னேற்றம் அனைத்திலும் புதிய மாற்றத்தை வெகுவிரைவாக
கொண்டு வந்தாலும், மனிதனுடைய மனதில் ஏதோ ஒரு மூலையில் இப்படிப்பட்ட கேள்விகள்
நெருடிக் கொண்டிருக்கின்றன. ஒருவனுக்கு அவனுடைய அடையாளம் பெரியதாக தோன்றும்,
இன்னொருவனுக்கு அவனுடைய தேவைகள் பெரியதாக தோன்றும், மற்றெhருவனுக்கு அமைதியான
வாழ்க்கை பெரியதாக தோன்றும். ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் யதார்தத்தை வெவ்வேறு
கோணத்தில் பார்க்கின்றான், உணர்கின்றான். பிறப்பில் உண்டான குணத்தோடு கொஞ்சம்
புதுமையும் இணைத்து செயல்படும் மனிதன் புதிய மாற்றத்தை கொண்டுவர முயல்கிறான்.
மஹாத்மாவும் தனக்குரிய இயல்பான குணத்தோடு சற்று புதுமையும் இணைத்து மக்களுடைய
சுதந்திரத்திற்காக மக்களோடு மக்களாக செயல்பட்டார். அன்று மஹாத்மா சொன்ன
அறிவுரைகளை இன்றைய மனிதன் புதிய கோணத்தில் பார்க்கின்றான். மஹாத்மா இந்திய
மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தன்னுடைய திறமையால் செயலாக்கி இந்திய
மக்களுக்கு, சுதந்திரமாக செயல்பட வேண்டுமென்ற வாய்ப்பைப் பெற்றுக்
கொடுத்திருக்கிறார்.
எத்தனையோ நிறங்கள், எத்தனையோ மனங்களைக் கொண்ட இந்த உலகத்து மக்களுடைய பண்பாடும்,
கலாச்சாரமும், கொள்கையும் பல ரகங்களாக இருக்கின்றன. வெவ்வேறு நாட்டு மக்கள்
வெவ்வேறு மொழியைப் பேசுகிறார்கள், வெவ்வேறு ஆடைகளை உடுத்துகிறார்கள், வெவ்வேறு
கலாசாரத்தைப் பின்பற்றுகிறார்கள், வெவ்வேறு உணவுகளை சாப்பிடுகிறார்கள். ஒவ்வொரு
நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள் வேறுபட்டாலும், இன்றைய புதிய உலகம், அவர்களைப்
பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை நமக்குள்ளே துளிர் விடச்
செய்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் குணத்தால் வேறுபட்டாலும் மனித சமுதாயத்திற்கு
ஒரு பிரச்சனை என்று வந்தால், உலக மக்கள் மனதால் இணைந்து, வந்த பிரச்சனைக்கு
தீர்வு காணாமல் ஓய்வு எடுப்பதில்லை. ஒவ்வொரு தேசத்திலும் வெவ்வேறு மதங்கள்,
ஜhதிகள் முளைத்தாலும் முதலில் அவன் மனிதப்பிறவியென்று மஹாத்மா உணர்த்திய
கருத்துள்ள வார்த்தை இன்னும் பேசப்படுகிறது. அன்று மஹாத்மா உணர்த்திய இந்த
கருத்துள்ள வாழ்க்கைத் தத்துவம் இன்றும் நடைமுறை வாழ்க்கைக்கு பயனுள்ளதாக
இருக்கிறது. இந்த கலாசாரம், பண்பாடு ஒவ்வொரு மனிதனை ஒவ்வொரு குடும்பத்தோடு இணைய
வைக்கிறது. ஆனால் சமூகத்திலுள்ள அனைத்து குடும்பங்களும் ஒன்றாக இணைந்து
செயல்பட்டால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, அந்தந்த நாட்டு மக்களுடைய
சிறப்புகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பை உருவாக்குகிறது. இந்த அரிய வாழ்க்கைச்
சாரத்தை மஹாத்மா எளிய வார்த்தைகளால் மக்களுக்கு உணரச் செய்தார்.
'காணி நிலமும், அதனுடைய எல்லையும் ஒரு தேசமாகி விடாது, ஒரு தேசமென்று சொன்னால்
அங்குள்ள மக்களை குறிப்பிடுகிறது. ஒரு தேசம் மக்களை உருவாக்க முடியாது ஆனால்
மக்கள் ஒரு தேசத்தை உருவாக்கலாம்' என்று மஹாத்மா சொன்ன வார்த்தைகள் எத்தனையோ
கருத்துக்களை சொல்லாமலே சொல்லுகின்றன. 'நிலத்தின் மீதும், எல்லையின் மீதும்
ஒவ்வொரு தேசம் காட்டும் பற்றுதலை, தேசப்பற்று என்று சொல்வது தவறு, தேச மக்கள்
ஒவ்வொரு மனிதனின் மீது காட்டும் அன்பையும், பரிவையும், தேசப்பற்று என்று சொல்வது
நு}ற்றுக்கு நு}று சரியென்று தோன்றுகிறது. என்னால் இந்த உயர்வான எண்ணங்களை தான்
மக்களுக்கு கொடுக்க முடிந்தது' என்று மஹாத்மாவின் வாழ்க்கைச் சரித்திரத்தை
இன்றும் மக்கள் கவனத்தோடும், அக்கறையோடும் நினைவு கூர்ந்து செயல்பட்டால்
நிச்சயமாக உலகம் அழிவுப் பாதையில் பயணித்திருக்காது. வேறெhரு நாட்டில் பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்த மஹாத்மாவின் உடமைகளை திரும்பப் பெற்று விட்டோமென்றும், அவருடைய
எளிமையான தோற்றத்தை தேவையில்லாதவற்றில் வரைபடமாக வடித்து மனத்திருப்தி அடைவதைவிட
அவருடைய எண்ணங்களை செயல்படுத்துவதற்கு,
எவ்வாறு மஹாத்மா மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டது போல, செயல்படும் ஒவ்வொரு
மனிதனும் அவர் மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது. அன்று மஹாத்மா
மக்களோடு இணைந்து செயல்பட்டார், இன்று நாம் மஹாத்மாவின் மக்களாக செயல்படுவோமா?
sandhya_giridhar@yahoo.com
|