இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2010  இதழ் 127  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!
இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற முடியுமா?

- சந்தியா கிரிதர், புது தில்லி -


இந்த மண்ணுடைய வளத்தை காலம்காலமாக சுரண்டிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் (அதாவது அரசியல்வாதிகள், அரசு உயர்ப் பதவியலிருப்பவர்கள்) முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், சுரண்டல், கொள்ளை ஆகியவைகள் என்றைக்காவது ஒருநாள் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தினால், எவருக்கும் இந்த முகமூடியை திறந்து பார்க்கக்கூட விருப்பமில்லை.நஞ்சை உண்டு, புஞ்சை உண்டு, இப்படி பாரதத்தின் வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கையில், இந்த மண்ணுடைய வளத்தை காலம்காலமாக சுரண்டிக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் (அதாவது அரசியல்வாதிகள், அரசு உயர்ப் பதவியலிருப்பவர்கள்) முகமூடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஊழல், லஞ்சம், சுரண்டல், கொள்ளை ஆகியவைகள் என்றைக்காவது ஒருநாள் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தினால், எவருக்கும் இந்த முகமூடியை திறந்து பார்க்கக்கூட விருப்பமில்லை. இந்தியா மிளிர்கிறது, ( ( India is Shining) வல்லரசு பட்டியலில் இந்தியாவும் ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது என்று கரகோஷம் போடும் இந்த அரசியல்வாதிகள் மீண்டும் ஒருகணம் நெஞ்சைத் தொட்டு இதே வரிகளை உச்சரிக்கும் போது மனதில் ஏதோவொரு நெருடலை உணரலாம், அவர்களுக்கு மனசாட்சி ஒன்றிருந்தால் நிச்சயமாக உறுத்துமல்லவா? நம்முடைய நாட்டில் எத்தனை வளமிருந்தாலும் அதனை சூறையாடுவதற்கென்று கும்பலொன்று எங்கிருந்தோ தலையெடுக்கிறது. பொதுநலத்தை மையமாகக் கொண்ட அரசாங்கமும், திறமையாக சாதிக்கக்கூடிய அரசு ஊழியர்களின் மனோபாவமும் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்ற முடியும், இருக்கிற வளத்தை சரியான வழியில் பிரயோகப்படுத்தினால் நம்முடைய மக்கள் எதற்கும் தட்டுப்பாடின்றி மற்ற நாட்டு மக்களைப் போல வாழ்ந்து காட்டலாம். திறமையான அரசாங்கத்தைப் பொறுத்துதான் ஒரு நாட்டினுடைய வளத்தை அளக்க முடியும். சுரண்டித் தின்னும் கூட்டத்தின் கைகளில் இந்த நாட்டை ஒப்படைத்தால், ஒரு நாள் நாட்டையே மொத்தமாக விழுங்கி விடுமல்லவா?

இந்தியாவை விட அதிகமான ஜனத்தொகையைக் கொண்ட சீனா விவசாயத்துறை, தொழில்துறை, சேவைத்துறை அதாவது ஸர்வீஸ் செக்டர் (service sector) என்று ஒன்றுகூட விடாமல் எல்லாவற்றிலும் முந்திக் கொண்டு வருகிறது. சீன அரசு காட்டும் பொறுப்புணர்ச்சியும், அக்கறையும் தான் இந்த வளர்ச்சிக்கு காரணமாகும். குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் மின்சாரம் வழங்குதல், தேவையான நவீன மெஷின்கள், தேவைப்படுகிற உரம், பூச்சி மருந்து, Nப்பரான சாலைகள், உற்பத்திகளை ஏற்றிக் கொண்டுச் செல்ல வேகமாக பறக்கும் வாகனங்கள், விவசாயிகள் நல்ல லாபம் பெறுவதற்கான அருமையான மார்க்கெட்டென்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொடுக்கும் சீன அரசாங்கத்திடம் நம்நாடு பிச்சை வாங்க வேண்டும். நாட்டை சுவாசமாக எண்ணும் சீனாவும், நாட்டை ஓட்டையாக்கும் இந்தியாவும் ஒன்றாகி விடுமா?

உலகத்தை பிரமிக்க வைக்குமளவு சீனர்கள் தொழில்துறையில் அப்படியொரு முன்னேற்றத்தைப் பெற்றிருக்கிறhர்கள். உலகத்திலுள்ள ஒவ்வொரு மார்கெட்டிலும் சீனர்களின் எலக்டிரிகல், எலக்டிரானிக்ஸ் (electrical & electronics) பொருட்கள் (made in China products) விற்கப்படுகின்றன. தொழில்துறையில் பெரிய நிறுவனமாகட்டும், சிறுதொழிலாகட்டும், சின்ன சின்ன விஷயங்களிலும் அக்கறை காட்டும் சீனர்கள் மற்றவருக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறhர்கள். சீனாவின் ஒதுக்குப்புறத்திலுள்ள கௌங்வாசௌ என்ற இடம் சிறுதொழிலுக்கு பெயர்பெற்ற இடமாகும். தொழிற்சாலைக்கேற்றவாறு அனைத்து சாதனங்களைக் கொண்ட கட்டிடம், நவீனமான மெஷின்கள், மின்சார வசதி, தொழிலாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அவர்கள் அங்கேயே ஐந்து நாட்கள் தகுவதற்காக சின்ன சின்ன வீடுகள், மீதி இரண்டு தினங்கள் குடும்பத்துடனிருக்க ஏற்றிச் செல்வதற்கு புதுமையான வாகங்னகள், 'சூப்பரா'ன சாலைகள் என்று பல சலுகைகளை சீன அரசாங்கம் கொடுத்து உதவியுள்ளது. சின்ன விஷயமானாலும் அதிலும் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற ஆர்வம் சீனர்களின் இரத்தத்தில் ஊறி இருக்கிறது. இத்தகைய முன்னேற்றமடைந்த சீனர்கள் கரகோஷம் போடாமல் நாட்டைச் சுற்றியுள்ள எல்லை பகுதிகளைக்கூட விட்டு வைக்கவில்லை.

இந்தியாவின் வியாபாரக்கூடமென்று அழைக்கப்படும் மும்பையில் இடம்பெற்றிருக்கும் காட்கோபரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சில சிறுதொழிற்சாலைகளைப் பார்க்கலாம். காற்றுகூட நுழைய முடியாத 'டன்ஜனா'ன கட்டிடம், அப்பப்ப பவர்கட், தண்ணீர் தட்டுப்பாடு, கரடுமுரடான மண் படிந்த சாலைகள், லொங்குலொங்கென்று ஆடிக் கொண்டு போகும் வண்டிகள், லோகல் வண்டிக் கும்பலில் சக்கைச்சாறhகும் தொழிலாளிகள், வாரத்துக்கு ஒருமறை விருந்தாளிகளைப் போல கண்ணைமூக்கை காட்டும் இன்ஸ்பெக்டர்கள், அவர்களுக்கு கொடுக்கப்படும் மாமுல், போலீஸ் மாமுல், சுங்கவரி, வருமானவரி, லொட்டுலொசுக்கு என்று இப்படியே சிறுதொழில் முதலாளிகளை மொட்டை அடிக்கும் பொறுப்பில்லாத இந்திய அரசாகத்தின் சிறப்பு அம்சத்தைப் பற்றி பேச வேண்டுமா? குலைக்கிற நாய் கடிக்காது, அதுபோல அரசியல்வாதிகள் வெறும் பேச்சோடு நின்று விடுகிறhர்கள். அதனை மூச்சாக நினைத்துக் கொண்டு செயல்பட்டிருந்தால், இந்தியாவும் சீனாவுக்கு சமமாக ஒரு இடத்தை பிடித்திருக்கலாம். மாமுலில் காலத்தை ஓட்டும் இந்திய அரசாங்கத்திடமிருந்து முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. இது பத்தாதென்று தனிப்பட்ட முறையில் கவனிப்பதற்காக பெரிய அளவில் லஞ்சமும் வாங்குகிறhர்கள். மொத்தத்தில் மற்றவரை சுரண்டிச்சுரண்டியே காலத்தை போக்கும் இந்திய அரசாங்சம் காற்று வெளியேறிய புஸ்ன்னு சுருங்கிப்போன பலு}னைப் போல தோற்றமளிக்கிறது. மொத்தத்தையும் பறித்துக் கொண்டு செல்லும் இந்தப் பகல்கொள்ளையர்; கைகiளில் சிக்கித் தவிப்பதற்கு பதிலாக சிறுதொழில் முதாலாளிகள் தொழிற்சாலைகளை மூடிவிடுகிறhர்கள்.

ஒரு சிறுதொழில் துறையே இத்தகைய அவலத்தில் இருக்கிறதென்றால் மற்ற துறைகளை அலசிப் பார்க்கும் போது எத்தனை பூதங்கள் கிளம்புமோ என்ற பயத்தால் சில விஷயங்களைப் பற்றி அலசாமலிருப்பது நல்லது. எல்லா வளமும் இருந்தும்கூட நம்நாடு எல்லாதுறையிலும் பின்தங்கியே உள்ளது. ஒரு பக்கம் தன்னலத்தை மையமாகக் கொண்டு வாழும் மக்கள், மறுபக்கம் வீண்வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பாத மக்கள் இருப்பதால்தான் அரசியல்வாதிகள், அரசுப் பதவியிலிருப்பவர்கள் இருவரும் தங்களை தட்டிக் கேட்பவர் எவருமில்லை என்கிற பயமில்லாமல் எவ்வளவு சுருட்ட முடியுமோ சுருட்டிக் கொண்டிருக்கிறhர்கள். இந்த அரசியல்வாதிகள் நாட்டை இன்னொருவரிடம் அடமானம் வைக்கும் சமயத்தில் இந்திய ஜனநாயகம் விழித்துக் கொள்வதைவிட, விழித்துக் கொண்டே தூங்குவதைப் போல பாசாங்கு செய்வது சரியாக இருக்குமென்று சொல்லலாம் இதனை தட்டிக் கேட்க விழித்தெழு தோழா, புறப்படு தோழா என்ற வரிகளை நினைவு கூர்ந்து இந்திய குடிமக்கள் தனிப்பட்ட முறையில் செயல்பட வேண்டும்.

sandhya_giridhar@yahoo.com

 
aibanner

 ©>© காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்