பிணம் தின்னும் கழுகுகள் பாகம் 4
- சந்தியா கிரிதர் (புது தில்லி) -
நக்ஸலைட்டுகள், மதவாத அடிப்படைவாதிகள் இவை இரண்டும் வெவ்வேறு அமைப்புகளாக
இருந்தாலும், இந்த இரண்டு அமைப்புகளும்
வன்முறையை கையாளுவதில் ஒற்றுமையுணர்வைக் காட்டியிருக்கின்றன. 1980 ஆம் ஆண்டில்
இடதுசாரி அமைப்புகள்
ஏழை-பணக்காரனிடையே நிலவி வரும் இடைவெளியை குறைப்பதற்காக செயல்பட்டான. நாளடைவில்
இந்த இயக்கங்கள்
நக்ஸலைட்டுகளாக மாறி ஒரு சில மாநிலங்களில் ஓயாத கலவரங்களை உருவாக்கி இதனால்
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை
பாதிக்கபட்டிருக்கிறது. இந்த நக்ஸலைட்டுகள் ஒரிஸா, சத்திஸ்கர், ஜார்கண்ட் போன்ற
மாநிலங்களில் தொடர்ந்து கலவரங்களை
உருவாக்கி ஏதாவது ஒரு வன்முறையை கையாண்டு வருகின்றார்கள். இந்தப் பிரச்சனைக்கு
முடிவேயில்லாமல் இந்த மாநிலங்கள்
நக்ஸலைட்டுகளின் கைகளில் சிக்கித் தவிக்கின்றன. நக்ஸலைட்டுகள் அடித்த கொள்ளைப்
பணத்தில் ஒரு சின்ன பங்கை ஏழைகளுக்கு
கொடுத்து, வெகு தந்திரமாக ஏழை மக்களுடைய ஒத்துழப்பை தங்கள் இயக்கத்திற்கு
சாதகமாக்கிக் கொள்கிறார்கள். நாய்களுக்கு ரொட்டித்
துண்டு போடுவது போல ஏழைகளுக்கு தாங்கள் அடித்த மாபெரும் கொள்ளைப் பணத்திலிருந்து
ஒரு சின்ன துண்டை ஒதுக்குகிறார்கள்.
வறுமையில் வாடித் தவிக்கும் ஏழைகளின் கண்களுக்கு இந்தச் சிறிய துண்டு ஏதோ சொத்து
கிடைத்து விட்டது போல தோன்றியதால்,
அவர்களுடைய இந்த பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அந்தக்
குடும்பங்களிலிருக்கும் இளைஞர்களின்
மனதை மாற்றி படைபலத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். பல பதவிகள் வகிக்கும் இராணுவ
வீரர்களைப் போல இந்த இளைஞர்கள்
நக்ஸலைட் இயக்கத்தில் வெவ்வேறு பதவிகள் வகிக்கிறார்கள். இந்த இளைஞர்களின்
ஆட்பலத்தால் பணக்காரர்களிடமிருந்து
கொள்ளையடித்து பணத்தை திரட்டிக் கொள்கிறார்கள். நக்ஸலைட்டுகள் அடித்த
சொத்திலிருந்து 2 சதவிகிதம் ஏழைகளுக்கு ஒதுக்கிவிட்டு,
98 சதவிகிதத்திலிருந்து 30 சதவிகிதம் தங்கள் இயக்கதிற்காக பாடுபடும் இளைஞர்களுக்கு
கொடுத்துவிட்டு, மீதியுள்ள பணத்தை
ஆயுதங்கள், குண்டுகள் வாகுவதற்கும், மேலும் கேளிக்கையான வாழ்க்கை வாழ்வதற்கும்
உண்மையான நக்ஸலைட்டுகள் பயன்படுத்திக்
கொள்கிறார்கள். இந்த இளைஞர்களும் கிடைத்த பணத்திலிருந்து ஒரு சில காலத்திற்கு
சுகமான வாழ்க்கையை அனுபவித்து மீண்டும்
நக்ஸலைட்டுகளால் விதிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் இயக்கத்தோடு இணைந்து
கொள்கிறார்கள். காலம்காலமாக நக்ஸலைட்டுகள்
தங்களுடைய செயல்களில் எந்தவித மாற்றமுமில்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
எந்த கொள்கைக்காக நக்ஸலைட்டுகள்
பாடுபட வேண்டுமோ அதற்காக பாடுபடாமல் தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு, சுகமான
வாழ்க்கையை அனுபவித்து
கொண்டிருக்கிறார்கள். நக்ஸலைட்டுகள் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார்களா?,
அவர்கள் கொடுக்கும் நிதி உதவியால்
ஏழைகளின் வறுமை குறைந்ததா?, நக்ஸலைட்டுகள் ஏழை-பணக்காரன் இடைவெளியை குறைக்க
முடிந்ததா? இப்படிப்பட்ட
கேள்விகளுக்கு நக்ஸலைட்டுகளிடமிருந்து பதில் எதிர்பார்ப்பது முட்டாள்தனம், இதை அந்த
இயக்கத்திற்காக செயல்படும் இளைஞர்களும்,
ஏழை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நக்ஸலைட்டுகள் அதிகமாக செயல்படும்
மாநிலங்களில் ஏழைகளின் ஜனத்தொகை அதிகரித்து
கொண்டு வருகிறது. ஏழைகளின் ஜனத்தொகை அதிகரித்தால் தான் நக்ஸலைட்டுகள் இயக்கிவரும்
செயல்களை நீடித்துக்
கொண்டிருப்பார்கள். தங்களுடைய பலவீனத்தை சாதகமாக்கிக் கொண்டு செயல்படும்
நக்ஸலைட்டுகளைப் பற்றி ஏழைகள் எப்பொழுது
புரிந்து கொள்கிறார்களோ அன்று அவர்களுடைய குடும்பங்கள் மாபெரும் தண்டனையிலிருந்து
விடுதலைப் பெற்றது என்று சொல்லலாம்.
அந்தக் காலமும் கூடிய விரைவில் நம்முடைய சமுதாயம் பார்க்க நேரிடலாம்.
அண்மையில் ஒரு சில மாநிலங்களில் மதவாத அடிப்படையில் வளரும் அமைப்புகள் வன்முறையை
கையாண்டு வருகிறார்கள். தீராத
கலவரத்தை உருவாக்கி மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து
அவர்;களிடையே பகைமையும்,வெறுப்பையும்
உருவாக்குகிறார்கள்;. 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த கோத்ரா
சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் அந்த
சம்பவத்தை மறக்க முடியாமல் கண்ணீர் வடிக்கின்றனர். எத்தனையோ பொதுமக்கள் இந்த
சம்பவத்தால் உயிர் இழந்திருக்கின்றார்கள் .
உற்றார் உறவினர்களை இழந்த குடும்பங்கள் இன்று அவலமான நிலமைக்கு
தள்ளப்பட்டிருக்கிறது. ஒரு குற்றமும் செய்யாத அப்பாவி
மக்களின் உயிர்களோடு விளையாடும் இந்த மதவாத இயக்கங்கள் அவர்களுடைய கொள்கையை
முன்னிட்டு என்ன சாதனையை
படைத்திருக்கிறார்கள்? அவர்களுடைய மதக் கொள்கை யாரை காப்பாற்றுகிறது? எவருக்காக
பாடுபடுகிறது? மதவாத அமைப்புகளான
பஜரங்தல், ஆர்.எஸ்எஸ் போன்றவைகள் பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து கொள்ளாமல்,
மக்களுடைய பலவீனத்தை
தங்களுடைய கொள்கைக்கு அடிக்கல்லாக பயன்படுத்தி இன்று அந்த இயக்கங்கள் இன்னொரு
நக்ஸலைட்டுகளாக தோன்றுகின்றனர்.
கோத்ரா சம்பவம் நடந்ததற்கு இன்று வரை இந்து மதத்தை சார்ந்த பொதுமக்களென்று எண்ணிக்
கொண்டிருந்த சமூகம,; கொலை
வெறியோடு இஸ்லாமியர்களை சூறையாடிய உண்மையான இந்து அடிப்படைவாதிகளின் முகங்களை
ஆராய்ந்து தெரிந்து கொண்டது.
அதுபோல கநத்மாலில் நடந்த சம்பவத்தால் இன்றும் அங்கு வாழும் மக்கள் பயத்தோடும்
பீதியோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தோழர்களாக பழகிக் கொண்டிருந்த
இந்து-இஸ்லாமிய குடும்பங்கள் இந்த மதவாத
அமைப்புகளால் ஒருவரையொருவர் பகைவர்களாக பார்த்துக் கொள்கின்றார்கள். ஆரம்ப
காலத்தில் இந்த மதவாத இயக்கங்கள் இரு மதத்தினர்களிடையே கள்ளிச் செடியை விதைத்துவிட்டது. நம்மை போன்ற பொதுமக்கள் இந்த
கள்ளிச் செடியை முளையிலே கிள்ளி
எறியாமல் தெரியாத்தனமாக வளர விட்டிருக்கிறார்கள். இன்று இந்த கள்ளிச் செடி
கருநாகமாக உருவெடுத்து சுவாசிக்க முடியாத
விஷத்தை கக்குகிறது. இப்படிபட்ட கள்ளிச்செடி வளரவிட்டதற்கு பொதுமக்களின்
அக்கறையில்லாமை காரணமா? அல்லது நோக்கத்தை
ஈடேற்ற மத அடிபடைவாதிகள் எடுத்துக் கொண்ட விடாமுயற்சி காரணமா? இந்த நிலையில் எவர்
மீது பழியை சுமத்துவது? பஜரங்தல்
உதவியால் குஜராத், ஒரிஸா மாநிலங்களில் சூறாவளி அடிக்கடி அடிக்க தொடங்கியிருக்கிறது.
ஒரு கணத்தில் இந்த அமைப்புகள் இந்த
மாநிலங்களை சவக்கிடங்காக மாற்றியிருக்கிறது. யாருடைய நலனிற்காக இந்த இயக்கங்கள்
செயல்படுகிறது? இதனால் சமூகம்
முன்னேற்றம் கண்டுள்ளதா?, நாடு வளர்ச்சி அடைந்ததா? ஒரு வேளை அப்பாவி மக்கள்
விழித்துக் கொண்டு கேட்கும் அடுக்கடுக்கான
கேள்விகளுக்கு இந்த இயக்கங்கள் பதில் தர இயலுமா? நமக்காக பாடுபடுகின்றேhமென்று
சொல்லிக் கொண்டு திரியும் இந்த அமைப்புகள்
உண்மையிலே நம்முடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளதா? நம்முடைய வறுமை நிலமை
குறைந்திருக்கிறதா? ஒவ்வொரு ஜாதி
மக்களும் மனவேற்றுமையின்றி தோழமையோடு வாழ்கிறேhமா? சமுதாயம் இதனை காலம்
தாமதிக்காமல் சிந்திக்க முயல வேண்டும்,
சரியான முடிவோடு சவுக்கடி கொடுக்க வேண்டும். நிச்சயம் இந்த நிலையிலிருந்து
புதியதொரு மாற்றத்தை காணலாம்.
sandhya_giridhar@yahoo.com\
ஏபரல் 27, 2009 |