| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை 
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் 
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை 
கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் 
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் 
ngiri2704@rogers.com 
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் 
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு 
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு 
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு 
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் 
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் 
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே 
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் 
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் 
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் 
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது 
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து 
கொள்ளலாம். |  | 
| அரசியல்! |  
| இந்தியா! கிராமத்து பள்ளிகளும், கட்டாயக் கல்விச் சட்டமும்
 
 - சந்தியா கிரிதர், புது தில்லி -
 
 
  ஆறு வயதிலிருந்து பதினான்கு வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் 
            கல்வி கொடுக்க வேண்டுமென்று அசைபோட்டுக் கொண்டிருக்கும் 
            அரசினுடைய எண்ணம் நியாயமானது தான். ஆனால் கட்டாயக் கல்விச் சட்டத்தைக் 
            கொண்டு வருவதில் அரசு காட்டும் தோரணையும், துரிதமும் சற்று 
            சிந்திக்க வேண்டியது. நாட்டினுடைய அமைப்பு, நிலவரம் ஆகியவற்றைக் 
            கருத்தில் வைத்துக்கொண்டு ஒரு சட்டத்தை கொண்டு வரவேண்டும். 
            நாலாபுறமும் இயற்கை அழகோடு பாரம்பரிய கிராமத்து மண்வாசனையில் 
            லயித்திருக்கும் இந்திய நாடும், கிராமிய பண்பாட்டில் ஊறி தன்னையே 
            மறந்திருக்கும் இந்திய மக்களும், பெருமை வாய்ந்த கிராமிய கலாசாரத்தின் 
            நிழலில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் இந்திய அரசும், ஒரு புதிய
            சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு இத்தகைய சிறப்பு அம்சங்களை 
            நினைவுபடுத்திக் கொண்டிருத்தல் ஒரு அரசாங்கத்தின் அத்தியாய
            கடமையாகும். இதையெல்லாம் புறக்கணித்து விட்டு, மக்கள் அவையில் 
            உறுப்பினர்கள் ஏதோ சடசடவென்று காயுருட்டி சொக்கட்டான் ஆடுவது போல 
            அவசரஅவசரமாக ஒரு சட்டத்தை கொண்டு வருவது, ஒரு அரசாங்கத்தின் 
            பொறுப்பில்லாத தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ஆட்டத்தையும் 
            சட்டத்தையும் ஒரே கோணத்தில் பார்க்க முடியுமா? ஒரு தொகுதியிலிருந்து 
            தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள்சபையின் ஏ.சி அறையில் அமர்ந்திருக்கும்
          
            உறுப்பினருக்கு, தன்னுடைய தொகுதியில் எத்தனை கிராமங்கள் இருக்கின்றன 
            என்று தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமா? அவர்களுக்கு 
            கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது, அதன்பிறகு யார் 
            வாழ்ந்தாலென்ன, யார் அழிந்தாலென்ன? 
 கிராமிய சூழலில் திளைத்துக் கொண்டிருக்கும் உத்திரபிரதேச மாநிலம், 
            பாராளுமன்ற மக்கள்அவைக்கு அதிக உறுப்பினரை தேர்ந்தெடுத்து 
            அனுப்புகிறது. 
            உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள பதுவானென்ற (Baduvan) மாவட்டம் 2000 
            கிராமங்களைக் கொண்டது. அந்த மாவட்டத்திலுள்ள பைராவதியென்ற 
            கிராமத்தில் 1418 குழந்தைகள் 6 வயதிலிருந்து 14 வயதுவரையிலுள்ள 
            குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இரண்டு கீழ்நிலைப் 
            பள்ளிகள் (primary level) அதாவது ஐந்தாம் வகுப்புவரையுள்ள பள்ளிகள் 
            மட்டும் தான் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிநிர்வாக ரெஜp
           
            [ஸ்டரில் (Register) 650 குழந்தைகளின் பெயர்கள் பதிவு 
            செய்யப்பட்டிருக்கின்றன. நல்ல கட்டிடம், குழந்தைகள் உட்காருவதற்கு மேஜை 
            
            நாற்காலிகள், கழிப்பறைகள், ஓரளவு ஆசிரியர்கள் போன்ற அடிப்படை 
            தேவைகளில்லாமல், இரண்டு கூடங்கள், மொத்தமாக ஐம்பது குழந்தைகள், 
            இரண்டு ஆசிரியர்களைக் கொண்டு கிராமத்து பள்ளிகள,; வாரத்திற்கு மூன்று 
            நாட்கள் திறக்கின்றன. வீட்டுச் சுமையினால் கூலி வேலைக்கு செல்லும்
            குழந்தைகள் மழைக்குகூட பள்ளி வாசலில் ஒதுங்கியதில்லை. பற்றாக்குறை, 
            வறுமை போன்ற பிரச்சனைகளால் அவதியுறும் பாதிக்குமேலுள்ள 
            கிராமத்து குடும்பங்கள் கல்விக்கு அவ்வளவாக மகத்துவம் கொடுப்பதில்லை. 
            ஒரு கிராமத்துக்கு இரண்டு பள்ளிகள் என்ற கணக்;குப்படி 2000 
            கிராமங்களில் அதாவது 4000 பள்ளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும், 
            ஆனால் 2000 கிராமங்களில் வெறும் 76 பள்ளிகள் தான் இயங்கி 
            வருகின்றன. அதிலும் ஒவ்வொரு பள்ளியிலும் மொத்தமாக 50 குழந்தைகள் தான் 
            படிக்கச் செல்லுகிறார்கள். வயது வித்தியாசமின்றி 50 குழந்தைகளும் 
            ஒரே கூடத்தில் வரிசையில் அமர்ந்த வண்ணம் ஒரே வகுப்பு பாடத்தையே 
            படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையிலுள்ள கிராமத்து
            பள்ளிகளுக்கு கட்டாயக் கல்விச் சட்டம் எந்த வகையில் உதவப் போகிறது? 
            4586 கீழ்நிலைப் பள்ளிகள் அதாவது பிரைமரி லெவல் பள்ளிகள், 2349 
            மேல்நிலைப் பள்ளிகள் அதாவது செகன்டரி லெவல் பள்ளிகள், 67000 நிரந்திரப் 
            பணியிலுள்ள ஆசிரியர்கள் பதுவான் மாவட்டத்துக்கு 
            தேவைப்படுகிறது. இந்தத் தேவைகளை பூர்த்தி செய்த பிறகுதான் கட்டாயக் 
            கல்விச் சட்டத்தைப் பற்றி ஆலோசிக்க முடியும். உத்திரப் பிரதேசத்திலுள்ள
           
            ஒரு மாவட்டத்தின் நிலமையே இப்படியென்றால் இந்தியாவின் மொத்த 
            மாவட்டங்களின் நிலையைப் பற்றி பேச வேண்டுமா? கிராமங்களில் அநேகமாக
            பிரைமரி லெவல் பள்ளிகள்; வரைதான் இருக்கின்றன. அதன்பிறகு குழந்தைகள் 
            படிக்க விரும்பினாலும் படிக்க முடியாது. அதனால் தொடந்து படிக்க 
            விரும்பும் குழந்தைகள் மேல்நிலை பள்ளி அதாவது செகன்டரி லெவல் பள்ளி; 
            வசதியில்லாமல் வஞ்சிக்கப்படுகிறார்கள் அதாவது (they are not drop- 
            outs but push-outs).
 
 உலகமயமாக்குதல், தாராளமயமாக்குதல், தனியார்மயமாக்குதல், நகரமயமாக்குதல் 
            போன்ற பல மயமாக்குதல் பட்டியலைக் குவித்துக் கொண்டுள்ள 
            இந்தியா கல்விமயமாக்குதல் என்ற மயமாக்குதலை இந்தப் பட்டியலில் 
            சேர்த்துக் கொள்ள படுவேகத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 
            இந்தியாவில் இரண்டாதர வெளிநாட்டு பல்கலைகழகங்கள் (tier-II foreign 
            universities) திறக்க வேண்டுமென்று கல்வித்துறை அமைச்சகம் எண்ணத்தை 
            வெளிப்படுத்தியுள்ளது. இந்த எண்ணத்திற்கு வடிகால் கொடுக்க நிதித்துறை, 
            உள்துறை, சட்டத்துறை ஆகிய அமைச்சகங்கள் கல்வித்துறை 
            அமைச்சகத்தோடு இணைந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த புதிய கல்வித் 
            திட்டத்தால் கிராமத்து பள்ளிகள் எந்த வகையில் பயனடைவார்கள்? 
            பணக்காரவீட்டுப் பிள்ளைகள் தேவைப்படுகிற பட்டத்தை பணம்கொடுத்து 
            தனியார்கல்லூரியிலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள். அதனால் வெளிநாட்டு
            பல்கலைக்கழகத்தால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை. 
            கடைசியில் திறமையை நம்பியுள்ள நடுத்தரவர்க்கத்து 
            குழந்தைகள்தான் வெளிநாட்டு பல்கலைகழகத்தால் பாதிக்கப்படுகிறார்கள், 
            ஆனால் அவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மட்டும் 
            தற்சமயம் சொல்ல முடியாது.
 
 ஒரு சட்டத்தை கொண்டு வருவதோடு பொறுப்பு முடிந்து விட்டதென்று 
            நினைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு இனிமேல் தான் பொறுப்புக்கள்
           
            அதிகரிக்கின்றன. ஒரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முன்பு 
            நாட்டினுடைய அமைப்பினையும், அதனுடைய அம்சங்களையும் 
            கருத்தில் வைத்துக்கொண்டு ஒரு சட்டத்தைப் பற்றி ஆலோசிக்க வேண்டும். 
            அந்த சட்டம் நடைமுறைக்கு கொண்டு வந்தபுன்பு அது வெற்றிகரமாக 
            செயல்படுத்தப்படுகிறதா என்று அக்கறையோடு கவனிக்கவேண்டும். அப்படிப்பட்ட 
            சட்டத்தைதான் மக்கள் வரவேற்கிறார்கள். அப்போதுதான் சட்டத்திற்கு 
            ஒரு தனி மரியாதை கிடைக்கிறது.
 
 sandhya_giridhar@yahoo.com
 |  
| 
 |  
|  |  
|   |  
|  © 
      காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: 
      
      
      Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
      Press and Media Council Of
Canada . 
      முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  |