இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2006 இதழ் 78 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கிடைக்கப்பெற்றோம்...!

பிச்சினிக்காடு இளங்கோவின் 'பூமகன்' கவிதை நூலும் ஏனைய நூல்கள் பற்றிய விபரங்களும்!

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ![பதிவுகள் இதழுக்கு நூல் மதிப்புரைக்காகத் தங்களது நூல்களை அனுப்பும் அனைவருக்கும் எமது நன்றிகள். கிடைக்கப்பெறும் நூல்கள் பற்றிய விபரங்கள் உடனடியாக பதிவுகளில் பிரசுரிக்கப்படும். அவை பற்றிய மதிப்புரைகள் காலப்போக்கில் அவ்வப்போது பிரசுரமாகும். பதிவுகள் போன்ற பல்வேறு இணைய இதழ்களில் வெளிவந்த படைப்புகளெல்லாம் நூலுருப் பெறுவதைப் பார்க்கும்போது எமக்குப் பெருமகிழ்ச்சியே. அச்சில் வெளிவரும் ஊடகங்களுக்கு இணையாக இணைய இதழ்களும் படைப்பாளிகளால், வாசகர்களால்,  பதிப்பகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதானது கணித்தமிழுக்குக் கிடைத்த வெற்றியே. கணித்தமிழ் இன்று தமிழ் இலக்கிய உலகிலோரங்கமாகி விட்டது. வழக்கமாக வெளிவரும் சிறு சஞ்சிகைகள் அவை வெளிவரும் இடங்களைப் பொறுத்து எல்லைகளைக் கொண்டவை. ஆயின் கணித்தமிழைப் பொறுத்தவரையில் இணையச் சஞ்சிகைகள் எல்லைகளைக் கடந்தவை; மீறியவை. இது ஓர் முக்கியமானதொரு வரவேற்கத்தக்க பரிணாம வளர்ச்சி. அண்மையில் தமிழகத்திலிருந்து வெளிவரும் 'காலச்சுவடு' சிற்றிதழ் கூடத் தனது ஏப்ரல் இதழினைக் 'கணித்தமிழ்' இதழாக வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கணினித் தொழில் நுட்பம் பற்றிய அறிவும், அர்ப்பணிப்பும், சேவை மனப்பான்மையும், விடாமுயற்சியுமிருந்தால், குறைந்தளவு முதலீட்டுடன் (பெரும்பாலான நாடுகளில்) இணைய சஞ்சிகைகளை உருவாக்கி இணையத்தில் உலாவரச் செய்திட முடியும். இணையச் சஞ்சிகையொன்றினைக் குறைந்தது ஒழுங்காகக் பராமரிக்கும் அறிவாவது இருக்க வேண்டும். இல்லாவிடின் இதற்காக கணினி வல்லுநரொருவரின் துணையினைப் பெறும் நிலையிலிருந்தால் அது பெரும் செலவினைக் கொண்டு வந்து விடும். எனவே படைப்பாளிகள் இணையச் சஞ்சிகை உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பற்றிய தொழில் நுட்பங்களை சிறிது முயன்றால் இலகுவாகக் கற்றுக் கொண்டு விடலாம். அது பல நன்மைகளைக் கொண்டு வரும்.

மேலும் தங்கள் படைப்புகளை நூலுருக் கொண்டுவரும் படைப்பாளிகள் பலரும் தங்கள் படைப்புகள் வெளிவந்த இணைய சஞ்சிகைகளின் பெயர்களை மறக்காமல் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். கணித்தமிழ் வளர்ச்சிக்கு இத்தகைய குறிப்(புகள்)பிடுதல்கள் அவசியமென நாம் கருதுகின்றோம்.]

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் 'பூமகன்' (கவிதைத் தொகுப்பு).அண்மையில் எமக்கு பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) தனது புதிய நூல்களை அனுப்பி வைத்துள்ளார். அவற்றில் 'உயிர்க்குடை',  'பூமகன்' ஆகிய இரண்டும் கவிதைத் தொகுதிகள். 'வீரமும் ஈரமும்' கவிதை நாடகம். 'உயிர்க்குடை' தமிழகத்திலிருந்து 'சந்தியா பதிப்பக'  வெளியீடாக வெளிவந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வேளாண்மைப் பட்டதாரியான பிச்சினிக்காடு இளங்கோ தற்போது வசிப்பது சிங்கப்பூரில். தமிழக அரசு வேளாண்மைத்துறையிலும், திருச்சி அகில இந்திய வானொலியிலும் பின்னர் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும் பணியாற்றியவர். சிங்கப்பூர் தமிழர் பேரவையின் திங்களிதழான 'சிங்கைச் சுடரில்' 'தமிழ்தான் தழரின் முகவரி' என்னும் முழக்க வரியினை உருவாக்கி தனியொரு ஆசிரியராக இதழ் தொடங்கியதிலிருந்து நான்காண்டுகள் பணியாற்றியவர். கம்போங்கிளாம் சமூக மன்றத்தில் இந்திய நற்பணிச் செயற்குழுவின் ஆதரவோடு கடற்கரைச்சாலைக் கவிமாலை என்னும் கவிஞர்கல் சநதிப்பினை 200ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருபவர். இவரது ஏனைய நூல்கள் வருமாறு: 'வியர்வைத் தாவரங்கள்', 'இரவின் நரை' ஆகியன கவிதை நூல்கள். 'பதிவதி ஒரு காதல்', 'விலங்குப் பண்ணை' ஆகியவை இவர் எழுதிய நாடகங்கள். தன் நூல்களுக்கு இவர் எழுதும் சிந்தையைத் தூண்டும் முன்னுரைகள் குறிப்பிடத்தக்கவை.

'பூமகன்' என்னும் தனது கவிதை நூலுக்கான முன்னுரையில் கவிஞனை எதற்காகப் பூமகன் என்று தான் அழைப்பதற்கான காரணத்தை '...அவன் ஓர் உலகக் குடிமகன். அவன் ஒருவனே பூவுலகிற்குப் பொதுவானவன். உலகமயமாதலின் முன்னோடி....  இன்றைய உலக மயமாதலுக்கும் அவனுடைய உலகமயமாதலுக்கும் பெருத்த வேறுபாடு... அவனுடையது பிற உயிர்களின் நலங்களுக்கும் வளங்களுக்குமானது.... ' என்கின்றார். அட்டைப்படக் கவிதையான 'பூமகன்' என்னும் கவிதையில் 'எல்லைகளில்லாமல் /எல்லாத் திசையிலும்/ மனத்தை/ மனமாய்/ அலை எழுப்பு'ம் பூமகனை (கவிஞனை) 'ஆளுக்கு ஆள்/ நிறம் பூசி/ முத்திரை குத்தாதீர்கள்' என்கின்றார். 'கடவுச் சீட்டைக் காட்டச் சொல்லிக்/ கறை படுத்தாதீர்கள்' என்கின்றார். 'குடிநுழைவு எனும் பெயரில்/ அவன் முகத்தில்/
கோடு கிழிக்காதீர்கள்' என்கின்றார். ஏனெனில் அவன் 'பூமிக்காகக் கண்விழித்த/ பூமகன்' என்பதனால்தான் என்கின்றார்.

'பூமகன்' என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை 'நான்..'. தன்னை 'மதுநிரம்பிய கிண்ணமாக', 'கள்ளூறும் மரமா'க, 'கனி வீளையும் பூமி'யாக, ',மகரந்தம் பரப்பும் மலரா'க உருவகிக்கும் கவிஞர் தன்னை 'மனிதம் விளையும்/ மானுட வயல்' என்கின்றார். அதேசமயம் 'என்/ நித்திய தத்துவம்/ மானுடவியல்' என்கின்றார். அத்துடன் 'என் கையும்/ வலை வீசும்/ தண்மீன்களுக்காக அல்ல/ விண்மீன்களுக்காக' என்கின்றார். மேற்படி பூமகன் கவிதைத் தொகுப்பு 'சொல் காதலி', 'சுயதரிசனம்', 'மனம்', 'நிழல் நெசவாளர்கள்', 'கானல் நீர் வேட்டை' , 'என் இன்னொரு சாம்ராஜ்யம்', 'வடம்', 'காத்திருக்கிறேன்', 'சடங்கு' போன்ற சிந்தைக்கு விருந்தாகும், சிந்தையைத் தூண்டும் நல்ல பல கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுதி.

மேற்படி 'சடங்கு' என்னும் கவிதையில் சடங்கும், சம்பிரதாயமுமாகக் கழியும் காலத்தைச் சீண்டிப் பார்க்கின்றார் கவிஞர். 'வணங்கி/ கைகுழுக்கி/ நலம் விசாரித்து/ அழைத்துப் பேசி/ அழைப்புக்குப் பேசிக்/ கிழியும்' காலத்தால் 'சம்பிரதாயமாகவே/ வாழ்க்கை/  சாம்பலாகிறது' என்கின்றார்; 'விளங்காமலும்/ விளங்கிக் கொள்ளாமலும்/ வீணாகும்' வாழ்க்கையில் 'நாக்கிலும்/ வாக்கிலும் மட்டுமே/  ஈரம்' என்கின்றார். 'விதைக்காமலே அறுவடையா!/ விசித்திரமான உலகம்...' என்று வியப்புறுகின்றார்.

தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை 'வசீகரா'. வசீகராவைப் பற்றியும் கவிஞர் விட்டு வைக்கவில்லையே என்று பார்த்தால்...  முப்பாலில் வாழ்வினை வடம்பிடிக்க வைத்து 'ஆண்டுகள்/ ஆயிரமாய்க் கடந்தும்/ சொல்லில்/ வாலிப வனப்புக் குறையா/ வசீகரா'வாக விளங்கும் குறள்மேல் கவிஞர் கொண்ட ஆழ்ந்த காதலுக்கான குரல் அதுவென்று புரிந்து கொண்டு முறுவலித்துக் கொள்கின்றோம்.

மறக்காமல் தன் படைப்புகள் வெளிவரும் இணைய இதழ்களை மற்றும் அச்சூடகங்களைக் குறிப்பிட மறக்காத கவிஞர் 'என் நிலைக்கண்ணாடிகள்' என 'தமிழ்முரசு' (சிங்கப்பூர்), 'தமிழ்நேசன்' (மலேசியா), 'திண்ணை' (இணைய இதழ்), 'பதிவுகள் '(இணைய இதழ்), 'கீற்று' (இணைய இதழ்), '
thatstamil.com'(இணைய இதழ்) ஆகியவற்றை நூலின் முதற்பக்கங்களில் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு நெகிழ்ந்து போகின்றோம். பெருமிதமும் கொள்கின்றோம்.

மேற்படி 'பூமகன்' கவிதைத் தொகுப்பினைப் பெற விரும்பினால் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி வருமாறு:

நூல்: பூமகன் (கவிதைகள்)
ஆசிரியர்: பிச்சினிக்காடு இளங்கோ
வெளியீடு: மக்கள் பதிப்பகம், 146/6, ஜானி ஜான்கான் சாலை, இராயபேட்டை, சென்னை- 600 014. தொலைபேசி இலக்கம்: 9444296985
சிங்கப்பூரில் கிடைக்கும் இடங்கள்:
GGS Book Shop, 48, Serangoon Road, #01-03 Littel Inida Acade, Singapore 217959.
ஆசிரியரின் முகவரி: பிச்சினிக்காடு இளங்கோ,
BLK 7 # 16-4024, North Bridge Road, Singapore 190007; ஆசிரியரின் மின்னஞ்சல் முகவரி: pichinikkaduelango@yahoo.com

பிச்சினிக்காடு இளங்கோவின் ஏனைய நூல்கள்!

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதைத் தொகுப்பு: உயிர்க்குடை.கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதை நாடகம்:  வீரமும், ஈரமும்...
உயிர்குடை (கவிதைகள்)
ஆசிரியர்: பிச்சினிக்காடு இளங்கோ
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம், ப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை -
600 083; தொலைபேசி இலக்கம்: 2489679, 55855704

வீரமும், ஈரமும். (கவிதை நாடகம்).
ஆசிரியர்: பிச்சினிக்காடு இளங்கோ.
வெளியீடு: தோழமை வெளியீடு, பூபதி, 5 டி, பொன்னம்பலம் சாலை, கே,கே,நகர், சென்னை - 78; தொலைபேசி:
91-44-24811189.

- ஊர்க்குருவி-

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner