பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
கடன் தருவோம்! |
நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு
இங்கே அழுத்துங்கள்
|
மணமக்கள்! |
|
தமிழர் சரித்திரம்
|
சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |
|
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ்
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |
Download Tamil Font
|
|
|
இலக்கியம்! |
ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- ஹெச்.ஜி.ரசூல் -
தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றம் குமரி மாவட்டக் கிளைன் 11 - 01 - 2009 ஞாயிறு
நாகர்கோவில் அசிசி அரங்கில் ஈழத்து இலக்கியம் வாழ்வும்
வலியும் சிறப்பு ஆய்வரங்கை நடத்தியது. தலித் சிந்தனையாளர் வி.சிவராமன்,கதையாளர்
மீரான்மைதீன், ஆய்வாளர் பிரசாத் நிகழ்வை நெறிப்படுத்த
அண்ணாச்சி கண்ணன் துவக்கவுரை நிகழ்த்தினார். கேரளமாநில மொழியியற்புல ஈழத்து
ஆய்வாளர் கலாநிதி அரங்கராசன் சங்க இலக்கியம் முதல்
ஈழம் பொருளில் ஆய்வுரையை நிகழ்த்தினார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
அகழ்வாராய்ச்சி,சங்க இலக்கியப் புலவர் ஈழத்து பூத்தன் தேவனார் சார்ந்து
ஈழம் கருத்தாக்கத்தை அடையாளப் படுத்தினார். ஆறுமுக நாவலரின் சைவ
மீட்டுருவாக்கத்திற்கு மாற்றமான கனகிபுராணம், கோட்டுப்புராணம், பனையை
மையப் பொருளாக்கிப் பாடப் பட்ட தாலப் புராணம் குரித்தும் விரிவாக உரையாடினார்.
கவிஞர் ஆர்.பிரேம்குமார் இக் கட்டுரைமீது தனது
கருத்துரையைத் தெரிவித்தார்.
முனைவர் செல்வகுமாரன் புலம்பெயர் கதையுலகம் பொருளில்
சோபாசக்தி,சக்ரவர்த்தி,கலாமோகன் படைப்புகளில் வெளிப்படும் வாழ்வியல்
யதார்த்தத்தை விவரித்தார்.[ புலம்பெயர் தமிழ் இலக்கியம் என்று பொதுவில்
கூறும் வழக்கத்தை இனியாவது ஆய்வாளர்கள் தவிர்க்கட்டும். புலம்பெயர் இலக்கியம்
என்பது இன்று பல்வேறு நாடுகளில் பரந்து வளர்ந்து வருமோரிலக்கியம். பிரான்ஸ்,
ஜேர்மன், கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சுவிஸ், நோர்வே, சிங்கப்பூர், மலேசியா,
டென்மார்க்... இவ்விதம் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமிருந்தும்
படைக்கப்படுமொரு இலக்கியம். இவ்விதம் படைக்கப்படும் தமிழ் இலக்கியமானது பொதுவான
புலம்பெயர்ந்த தமிழர்களுக்குரிய இயல்புகளை, வாழ்வினை, வலியினைப் பிரதிபலிக்கும் அதே
சமயம், அவர்கள் வாழும் நாடுகளில் நிலவும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார
நிலைமைகளுக்கேற்ப அவற்றைப் பிரதிபலிக்கவும் செய்யுமோரிலக்கியம். தமிழ் இலக்கிய
ஆய்வாளர்கள் தமக்குக் கிடைக்கும் பிரதிகளின் அடிப்படையில், பொதுவாகப் புலம்பெயர்
இலக்கியமென்னும் பெயரில் ஆய்வுக் கருத்துகளைக் கூறுவது தவிர்க்கப்பட வேண்டும்.
தற்போது நூலகம் போன்ற இணையத்
தளங்களில் பல புலம்பெயர்ந்த தமிழர்களினால் நடத்தப்பட்ட, படுகின்ற சஞ்சிகைகள்,
நூல்கள் ஆகியன கிடைக்கப்பெறுகின்றன. உதாரணமாக, 'தேடல்' , 'சுவடுகள்' , 'தூண்டில்'
போன்ற சஞ்சிகைகள் பலவற்றை இப்பொழுது வாசிக்க முடியும். இதுபோன்ற சஞ்சிகைகள்,
நூல்களை நூலகத் தளத்திற்குப் ப்லவேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் அனுப்பி வைக்க
வேண்டும். எதிர்காலத்திலாவது புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள்,
விமர்சனங்கள், மதிப்புரைகள் போன்றன
வெளிவருவதற்கு நூலகம் போன்ற தளங்களே மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். ஏனெனில்
நூலகம் தளத்தில் எந்தவிதத் தனிப்பட்ட விருப்பு , வெறுப்புமற்ற நிலையில், படைப்புகளை
ஆவணப்படுத்துதல் ஒன்றினையே மையமாக வைத்துப் படைப்புகளைச் சேகரிக்குமொரு போக்கு
தென்படுகிறது. அது ஆரோக்கியமான ஆய்வுகளுக்கும், விமர்சனங்களுக்கும் மிகவும்
அவசியமானதொன்று. இனியும் தமிழ் ஆய்வாளர்கள் தமக்குப் போதிய படைப்புகள்
கிடைக்கவில்லையே என்று கூறித் தப்பிவிட முடியாது. அவர்கள் நேரம் செலவழித்து
உண்மையான ஆய்வுகளைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஆய்வு என்பது வேறு .
விமர்சனமென்பது வேறு. ஆய்வுகளைச் செய்பவர்கள் மேற்படி புலம்பெயர் தமிழர்கள்
படைக்கும் இலக்கியம் பற்றிய போதிய தரவுகளை மையமாக வைத்து அவற்றை வெளிப்படுத்தும்
வகையில் செய்ய வேண்டும். அவ்விதம் செய்வதன் மூலம்தான் புலம்பெயர் தமிழ்
இலக்கியத்தைச் சரியான முறையில் ஆவணப்படுத்த முடியும்; இனங்கண்டிட முடியும்.
இவ்விதம் செய்வதன் மூலம்தான் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய சரியான
விமர்சனங்கள், திறனாய்வுகள் வெளிவர முடியும். இல்லாவிட்டால் ஒரு சில
க(ல்)லாநிதிகளின் விமர்சனங்களென்ற பெயரில் வரும்
கட்டுரைகளைப் போல், இருபது வருடங்களாகவே பெயருக்கு ஓரிரு பெயர்களைக் குறிப்பிட்டு,
வார்த்தை ஜாலங்களைப் பிரதானமாக வைத்து
எழுதப்படும் கட்டுரைகளைகளைப் போல், ஆழமற்ற கட்டுரைகளையே தொடர்ந்து வாசிக்க வேண்டிய
துர்ப்பாக்கிய நிலையேற்படும். - ஆசிரியர்]
கவிஞர் ஜி.எஸ்.தயாளன் கவிதை எதிர்ப்பின் மொழி பொருளில்
வ.அய்.ச. ஜயபாலன், சேரன், சோலைக்கிளி, அனாரின் கவிதைமொழி குறித்து
உரையாடினார். கவிஞர் நட.சிவக்குமார் ஈழ இலக்கியத்தில் தலித்திய வெளி பொருளில்
டேனியலின் பஞ்சமர், கானல், பஞ்சகோணங்கள் நாவல்கலை
முன்வைத்து உரையாற்றினார்.
கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீசான்கட்டைகளில் மீளஎழும் எழுத்துக்கள் பொருளில்
அஸ்ரப்சிகாப்தீன்,ஸதக்கா,நளீம்,றஸ்மி,அலறி கவிதைகளினூடாக
தமிழ்முஸ்லிம்கள்,தமிழ் விடுதலை போராளிகள் உறவுகள்.முரண்கள் வெளிப்படுவதை
முன்வைத்தார். விமர்சகர் அனந்தசுப்பிரமணியன் தற்கால ஈழத்து
குறும்படங்களின் கலைநோக்கு குறித்து பேசினார். நிறைவுரை ஆற்றிய் சுபாஸ்சந்திரபோஸ்
தற்போதைய உடனடித் தேவை இலங்கையில்
போர்நிறுத்தமே இந்திய தமிழ் அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல் லட்சக்கணக்கான
தமிழ்மக்களை கொன்றுகுவிக்கும் சிங்கள பேரினவாதத்திற்கு
ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றார்.
கவிஞர் பூதை செ.கன்ணன் நிகழ்வு குறித்த விமர்சனங்களை முன்வைத்து நன்றி கூறினார்.
mylanchirazool@yahoo.co.in |
|
©
காப்புரிமை 2000-2009 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|