சைவ சமயத்தின் முதற்கடவுளான சிவனின் தலம் என்று சொல்லப்படும் நேபாளத்தில் கடந்தமாதம் ( சித்திரை 2006) முழுதும் நேபாளாஅரசருக்கெதிராக ஏழு அரசியற் கட்சிகள் நடத்திய 'மக்கள் போராட்டத்தைத்' தெரிந்திராத அரசியல் அவதானிகள் ஒருசிலர்தானிருப்பார்கள். உலகில் உள்ள ஒரேயொரு இந்து தேசமான நேபாளத்தில் நடக்கும் அரசியல் எழுச்சிக்குப் பின் எத்தனை வல்லரசுகள் தங்கள் சுயநலத்திற்காகப் பாடுபடுகிறார்கள் என்பது பலருக்குத் தெரியாது. இன்று ஈராக் நாட்டிலிருந்து சூடான் நாடுவரையான பல நாடுகளில் வல்லரசுகளும் பணம் படைத்த நாடுகளும் தங்கள் கைவரிசைகளைக்காட்டி வருகின்றன.
தனது நாட்டின் இருபக்கத்திலும் இன்று உலகில் பலம் பொருந்திய நாடுகளாகப் பூதாகார வடிவெடுக்கும் இந்தியாவும் சீனாவும், அத்துடன் எவருடைய நாட்டிலும் தன் மூக்கை நீட்டும் அமெரிக்காவும் (அவர்கள் தூணிலும், துரும்பிலும், உலகில் எந்தமூலையிலும் இருக்கும் அபார வல்லமை படைத்தவர்கள் என்று தங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கும் வல்லரசு!!!) எப்படித் தங்கள் நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கப்போகிறார்கள் என்பது நேபாளாப் புத்தி ஜீவிகளுக்குத் தலையிடியைக்கொடுக்கின்றது.
ஆசியாவின் புராதன சரித்திரத்திரத்தில் நேபாளா நாகரிகத்தின் வளர்ச்சி, கி.மு. 9000 வருடங்களுக்கு மேலிருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சிகள் சொல்கின்றன. மனித நாகரிகத்தின் பல பரிமாணங்களான, கலை, சட்டம், விஞ்ஞானம், தத்தவம், அரசியல், ஜனநயகம் என்று பலதுறைகளின் வளர்ச்சிக்கு அத்திவாரமான கிரேக்க நாகரீகமே கி.மு.8000 என்று அகழ்வாராய்ச்சிகள் சொல்லும்போது நேபாளா மக்களின் நாகரீகம் , அந்தப் பிராந்தியத்திலுள்ள ஆசியா நாடுகளின் ( சீனா, இந்தியா) வளர்ச்சியுடன் தொடர்புள்ளது என்று அகழ்வாராய்ச்சிகள் விளக்குகின்றன.
புத்தரின் காலகட்டத்தில் ( சித்தர்த்த கெளதமர்-563-483) மதம் நேபாளத்திற்கு கி. பி. 4-5ம் நூற்றாண்டுகளில் பரவமுதல் உலகில் பல இடங்களிலுள்ளதுபோல் ஆதிமக்களும் பல விதமான கடவுள்களையும். சமய வழிபாடுகளையும் கொண்டிருந்தார்கள்.
நேபாளத்தின் இந்து சமயத்தின் அதிகாரம், சந்திரகுப்த மௌரியர்களின் ஆதிக்கத்திற்கு 5ம் நூற்றாட்டிற் தொடங்கியது. அந்தக்கால கட்டத்தில் இந்தியா மட்டுமல்லாது அண்டை நாடுகளிலும் புத்தமதம் பரவியது. நேபாளமும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஆனாலும் இந்து இனவழியினரான லிச்செஸ்வி பரம்பரையினர் ஆட்சியில் நேபாளம் இருந்தது. இந்து பிராமணியத்தின் அத்திவாரமான சமஸ்கிருதம் அரச மொழியாகவிருந்தது.
இந்து பிராமணியத் தத்துவங்கள் முன்னெடுக்கப்பட்டன. நேபாளிய மன்னர் பிராமணியக்கடவுள்(வைஷ்ணவர்கள்) விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படவைத்தார்.அவரைக் கேள்வி கேட்க மக்களுக்கு அதிகாரம் கிடையாது. மன்னர் பரம்பரை கடவுள் பரம்பரையாகக் கருதப்பட்டது.14-18ம் ந்நூற்றாண்டுவரை நேபாளம் மூன்று அரசதானிகளாகவிருந்தன. 1768ல் பிரித்திவி நாராயனண் ஷா என்ற இந்து மகராஜாவின் தலைமையில் மூன்று இராஜதானிகளும் ஒன்றாயின. அந்தக்கால கட்டத்தில் இந்தியா முழுவதையும் தனதி பிடிக்குள் கொண்டுவர ஆசைப்பட்ட பிரித்தானிய சாம்ராச்சியத்தினர் நேப்பாளத்திற்கும் படையெடுத்தனர். 1816-1818 வரை நேபாள பிரித்தானிய யுத்தம் நடந்தது கடைசியில் அவர்களைத்திருப்திப்படுத்த நேபாளத்தின் ஒரு பகுதியாப் பிடித்து வைத்திருந்த சிக்கிம் பகுதியைப் பிரித்தானியரிடம் கொடுத்துவிட்டுப் பிரித்தானியர் நேபாளத்தைத் தாக்ககூடாது என்ற ஒப்பந்தத்தை நேபாள அரசர் செய்து கொண்டார்.அன்றிலிருந்து சிக்கிம் இன்றும் இந்தியர் கையிலிருப்பதும் அதை எதிர்த்து சிக்கிம் மக்கள் போராடுவதும் தெரிந்ததே.
1990ம் ஆண்டின் பிற்பகுதியில் அவள் என்னுடன் லண்டனில் பப்ளிக் ஹெல்த் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வந்த போது 'நீ ஒரு இந்துப் பெண்ணா' என்று என்னை கேட்டாள். 'ஏன் அந்தக் கேள்வியைக்கேட்கிறாய்' என்று நான் கேட்டபோது 'மனிதர்களைச் சாதியடிப்படையில் பிரித்து மிருகமாக நடத்தும் இந்து சமயத்தை மனதார வெறுக்கிறேன் ' என்றாள். அவள் எங்கள் 'ஒவ்வீசு'க்கு வந்தகால கட்டத்தில், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழிக்கவேண்டும். நேபாள மக்களுக்குச் சமத்துவம் வரவேண்டும் என்று போராடத்தொடங்கிய மாவோயிஸ்டுகளின் குரல் அகில உலகமயப்பட்டதைப் பார்த்து என் சினேகிதி, 'உலகம் மிகவும் வேகமாக மாறி கொண்டிருக்கிறது. நேபாள மக்களுக்கும் மாற்றம் வரவேண்டும்' என்றாள். வெளிநாட்டார் வெறுக்குமளவுக்கு சாதிப்பிரிவுகள் அமுல் நடத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய வறுமையுடன் வாழும் மக்கள் தொகை அதிகம்.
மக்களின் சிந்தனைச்சுதந்திரதையும் போராட்ட உணர்வையும் கட்டுப்படுத்த சமயத்தைப் பாவிப்பது உலகெங்கும் நடப்பதுபோல் நேபாளத்திலும் நடக்கிறது.
நேப்பாள இராச்சியம் நாற்பது விதமான வித்தியாசமான இனங்களைக்கொண்டது சனத்தொகையில் 26 கோடிமக்களைக்கொண்ட நேபாளம் ஒரு நாளும் இனரீதியான சண்டைக்கோ, பிரிவினைக்கோ போரிட்டது கிடையாது. திபேத்திய-பேர்மிய இனவழி, இந்திய-ஆரிய இனவழி ( பிராமணியா ஆதிக்கம்) என்று இரு பெரும் வித்தியாசமான மக்களையும் முசாலாமன்ஸ் என்ற முஸ்லிம் சிறு பான்மையின மக்களையும்கொண்டது. பலமொழிபேசும் மக்களைக் கொண்டது.இவர்களின் கலாச்சாரம், பண்பாடுகள் புத்த மதம், இந்து மதம் இரண்டோடும் இரண்டறக்கலந்தது.
நேபள இராச்சியம் இரு பெரிய இராஜ குடும்பத்தால் ஆளப்பட்டுக் கொண்டு வருகிறது. ஷா பரம்பரை, ராணா பரம்பரை. இராஜ தந்திரங்களை வலுப்படுத்த ஒருத்தொருக்கொருத்தர் திருமணங்கள் மூலம் உறவுகளை வலுப்படுத்தினாலும் இருவருக்குமிடையில் யார் யாரை முதலில் வீழ்த்துவது என்ற உள் நோக்கம் எப்போதும் இருந்துகொண்டேவந்தது. இவர்களின் பகைமயைப் பாவித்தவர்கள், பாவிப்பவர்கள் நேபாளத்தைச் சீர் குலைக்க விரும்புவர்களாகும். இருபக்கங்களிலும் மிகவும் வலிமைவாய்ந்த இரு நாடுகளான இந்தியா, சீனாவை எல்லை நாடுகளாகக் கொண்டிருப்பதால் நேபாளம் அண்டை நாடுகளின் ஒற்றர்களின் தேவலோகமாகக்கருதப் படுகிறது.
சீனா, நேபாளத்தின் அண்டை நாடுகளில் ஒன்றான திபேத்தை ஆட்கொண்டபின் இந்தியா உடனடியாகத் தன் இராஜதந்திரதைக் காட்டத்தொடங்கியது.
இந்தியாவுக்குச் சினேகிதமான இந்தியாவின் உதவியுடன் அரசர் திருபுவனன் (அதிக வலிமையற்ற அரசராக ) ஆட்சியில் அமர்த்தப்பட்டார். ராணா பரம்பரை ஓரம் கட்டப்பட்டது. இந்தியாவுக்குச் சினேகிதமான நேபாளியக் காங்கிரஸ் கட்சி மக்களின் குரலாக ஒலித்தது.
மன்னர் திருபுவனனின் பின் அவரின் மகன் மகேந்திரா 1960 ஆட்சிக்கு வந்ததும், மக்கள் குரலை அடக்க கொங்கிரஸ் பார்ட்டியையும் தடைசெய்தார். பஞ்சாய்த்து முறையைக் கொண்டு வந்தார்.
அவரின் மகன் பிரேந்திரா 1972ல் பதவிக்கு வந்ததும் மீண்டும் மக்கள் குரலும் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியது.
இந்திய அரசின் ஆசிவாதம் பெற்ற நேபாளிய கொங்கிரஸ்பார்ட்டிக்கு அரசர் அடிபணியவேண்டிவந்தது. பன்முக அரசியலைப்பு நேபாளத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 50 வருடங்களில் முதன்முறையாகத் தேர்தல் வைக்கப்பட்டது. இ¢ந்தியாவின் அடிவருடி என்று இராஜ பரம்பரையின் திட்டுகளுக்கு உள்ளாகும் கிரிஜா பிரசாத் கொய்ராலா ('உயிரே'' முதல்வன்' 'மும்பாய் எக்ஸ்பிரஸ்' போன்ற படங்களில் நடித்த நடிகை மனிஷா கொய்ராலாவின் தாத்தா) பிரதமரானார்.
இந்தியா மாதிரியே, அரசாங்கத்தில் மிகவும் பெரிய ஊழல்கள் நடக்கத்தொடங்கின. அரச அதிகாரிகளின் செல்வம் குவிந்தது, சாதாரண மக்கள் வறுமையில் வாடினார்கள். மன்னரால் அதிகம் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏனென்றால் பதவிகளிலிருந்தோர்பலர் அரச குடும்பதினரும், உறவினர்களும், சினேகிதர்களுமாவர்.
1996ல் நேபாளத்தின் அரசியல் முறைமாறி , மக்கள் அதிகாரம் வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் மாவோயிஸ்டுகள் போராட்டத்தைத் தொடங்கினர்.
ராணா பரம்பரை 1846-1950 வரை பிரித்தனிய சாம்ராச்சியத்தின் உதவியுடன் அரசாண்டவர்கள்.
தங்களின் எதிரிகளான ராணா குடுமத்திலிருந்து மருமகள் வருவதை மகாராணி ஐஸ்வர்யா விரும்பவில்லை. 2001ம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி, விசேட சடங்குக்காக அரச குடும்பம் ஒன்றாய்ச் சேர்ந்திருந்த வேளை, நேபாள இளவரசர் திபேந்திரா, தனது காதலுக்குத் தடையாகவிருந்த தாய், தகப்பன், இளவரசர் நிரான்ஞன்,மன்னரின் தங்கைகளான இளவரசிகள் சாந்தி,சாரதா அவளின் கணவர் குமார், மன்னரின் மகள் இளவரசி ஸ்ருதி, மன்னரின் மைத்துனர் ஜெயந்தி இன்றைய மன்னரின் மனைவி என்று அன்று கூடியிருந்த அத்தனை இராஜ குடும்பத்தினரையும் கொலை செய்து விட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார். இன்று மகாராஜாவாகவிருக்கும் ஜானேந்திரா வெளி விடயமாகப் போயிருந்தால் உயிர் தப்பினார்.
அரச குடும்பத்தில் வெறுப்புள்ளவர்கள், ஜானேந்திராதான், தனக்கு அரச பதவி வேண்டும் என்பதற்காக இந்தக் கொலைகளையெல்லம் செய்தார் என்ற வதந்தியைப் பரப்பினார்கள். இறந்திவிட்ட அரசரின் இன்னொரு தம்பியான தினேந்திரா மிகவும் நீண்ட கலத்திற்கு முதலே தனக்கு எந்த அரச பதவிகளும் பட்டமும் வேண்டாம் என்று விலகிவிட்டார். ஜானேந்திரா சந்தர்ப்பவசமாக அரசராக்கப்பட்டர்.
அரச குடும்பம் ' தெய்வ பரம்பரை, சட்டங்களுக்கு அப்பாற் பட்டவர்கள்' என்பதால் அவனுக்கு எந்தத் தண்டனையும் கிடைக்கவில்லை. மக்கள் கொதிதெழுந்தார்கள்.
இதேகாலகட்டத்தில் அரசியலில் மிகவும் மோசமான ஊழல்களும் நடந்தன. அரசர், தனது ஆணைக்குள் ஆட்சியைக் கொண்டுவந்தார். பாராளுமன்றத்தைக்கலைத்தார். மக்கள் கொதிதார்கள். பல கட்சிகள் தோன்றின. உலகத்திலுள்ள ஒரேயொரு இந்து மன்னரின் ஆட்சியை அழிக்கப் பலசக்திகள் பணத்தைக் கொட்டுகின்றன. அரசாங்கத்திற்கெதிராக ஏழுகட்சிகள் ஊர்வலம் செய்தன. இதில் எந்தக்கட்சிக்கு யார் பணம் கொடுத்தார்கள், ஊர்வலத்திற்கு வருவதற்கு ஒரு நாளைக்கு 15 டொலர்ஸ் என்கிருந்து கொடுக்கப்பட்டது என்பது இராஜ தந்திரமான விடயங்கள். மாவோயிஸ்டுகள் இந்த ஏழு கட்சிகளிலும் மிக முக்கியமானவர்கள். அரச குடும்பத்தை அழித்துவிட்டுக் குடியரசைக் கொண்டுவர நினைப்பவர்கள். (15.3.1919ம் ஆண்டு இரஷ்ய மன்னரும் அவரின் குடும்பம் அத்தனைபேரும் பீட்டர்ஸ்பேர்க்குகு அர்கிலுள்ள கிராமத்தில் வைத்துப் புரட்சிவாதிகளாற் கொலைசெய்யப்பட்டார்கள் அப்படியே நேபாள மன்னர் குடும்பத்திற்கும் நடக்க வேண்டும் என்று நேபாளப் புரட்சிவாதிகளிற் பலர் ஆர்வத்துடன் துடிக்கிறார்கள்)
82 வயதில் சுவாசப்பை வேலைசெய்யாமல் செயற்கைச் சுவாசப்பையின் உதவியுடம் வைத்தியாசாலையிற் படுத்திருக்கும் தங்கள் நண்பர் பிரசாத் கொய்ராலாவைப் பிரதமராக்க வேண்டும் என்று இந்தியா மன்னருக்கு உத்தரவு போட்டுவிட்டது.
அவரின் வாழ்நாள் இனி எண்ணிக் கொண்டிருக்கும் சிலநாட்கள். அவருக்குப் பின் என்ன நடக்கும்?
மன்னர் ஜானேந்திராவுக்கு 58 வயது. கடந்த ஐந்து வருடங்கள் அவர் பட்ட துயரால் மிகவும் வாடிப்போய் வயதுபோன மனிதர் மாதிரித் துவண்டு தெரிகிறார். அவருக்குப்பின் அவரின் பொல்லாத மகன் பாரஸ் அரசனாக் வரப் பொதுமக்கள் விடமாட்டார்கள். அரசருக்கு ஒரு மகனும் ஒரு மகளும்தான் பரம்பரைச் சொத்துக்கள். மகனுக்கு மகுடம் கிடைக்கா விட்டால் அவர் மகளுக்கு மகுடம் கிடைக்குமா?
பிரசாத் கொய்ராலா சகாப்தம் முடிந்தபின் யார் பிரதமராவார்? இந்தியா இப்போதே யாரையும் மனதில் வைத்திருக்கிறார்களா? இந்தியா, தனது பாதுகாப்புக்கருதித் தன் அண்டைநாடுகளில் எப்போதும் ஒரு கண்வைத்திருப்பது அரச இராஜதந்திரம். இந்தியாவின் அண்டைநாடுகளான பூட்டான், நேபாளம் எப்போதும் இந்தியரின் கண்காணிப்பில் இருக்கும். மாபெரும் சக்தியாக வளரும் சீனாவுடன் இந்தியா பலவிதங்களில் போட்டிபோடவேண்டியிருக்கிறது. இதில் ஒரு அம்சம் நேபாளத்தில் இந்திய இராஜ தந்திர ஊடுருவல். அத்துடன் மிக உயர் மைலைப் பிரதேசமான நேபாள நாட்டு நீர்வளத்தில்உண்டாகும் மேலதிகமான எலெற்றிசிட்டியை இந்தியா மிகவும் மலிவான விலையிற் பெற்றுக்கொள்கிறது. நேபாளத்தில் எத்தனையோ விதமான மூலப்பொருட்கள் இன்னும் தொடப்படாமலும் விரிவுபடுத்தப்படாமலும் முடங்கிக்கிடகின்றன. இவற்றில் கைவைக்க இந்திய முதலாளிகள் கழுகுகள்போற் காத்திருக்கிறார்கள். நேபாளத்தின் பொருளாதாரம் வளர்வதற்கு மன்னராட்சிப்பிரச்சினை, அரசியல் கட்சிகளின் ஊழல்கள் என்பன இடையூறாகவிருக்கின்றன.
வறுமை கொந்தளித்தால் புரட்சிவரும் என்பது தத்துவம். அதைத் தடுக்கவும் , தனது அரசியல் இலாபங்களுக்கும் இந்தியா தனது காய்களை நகர்த்துகிறது.
இந்துக்களின் கட்சியான பா.ஜ.க வுக்கு நேபாளத்தில்' இந்து இராஜதானி' என்ற அக்கறையுண்டு. இந்திய கொங்கிரஸ் அரசுக்கு எப்படியும் நேபாளக் கொங்கிரஸைப் பதவியில் வைத்திருக்கத் தேவையிருக்கிறது. இவர்களை விட, நேபாளத்திற் தங்கள் மூக்கை நுளைக்கும் வெளிநாட்டுச் சக்திகள் பலவிதங்களில் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போதைய அரசரின் நிர்வாகத்தில் பல பெரிய ராணாக்கள் முக்கிய பதவிகளிருக்கிறார்கள். அவர்கள் எப்படியும் ஏதோ ஒரு அரச குடும்பம் நேபாளத்தை ஆளவேண்டும் என்று நினைப்பார்கள்