பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
சினிமா! |
இழப்புகளின் தேடல்களாய் –
'பிசாசு மாளிகை' (THE HAUNTED MANSION)
க.ராஜம்ரஞ்சனி (மலேசியா)
தம்பதிகளான ஜிம்மும் சாராவும் இணைந்து நில விற்பனைத்தொழிலில்
வெற்றிகரமாய் செயல்பட்டு வருகின்றனர். ஜிம் தன் தொழிலுக்கே அதிக
பட்ச
நேரத்தைச் செலவிடுகின்றான். இதற்கிடையில் சாராவுக்கு நியூ
ஒர்லியன்ஸ் மாளிகை ஒன்றிலிருந்து தொலைபேசி அழைப்பு வருகின்றது.
விடுமுறைக்குச் செல்லும் வழியில் மாளிகையை பார்த்து வர
ஜிம்முக்கு எண்ணம் பிறக்க மனைவி சாரா, மகன் மைக்கல், மகள் மேகன்
ஆகியோராடு
அங்குச் செல்கின்றான். திடீர் புயல் காற்று வீச அவர்கள்
அம்மாளிகையிலேயே தங்க நேரிடுகின்றது. அந்த இரவின் ஒவ்வொரு
நிமிடத்தையும்
சுவாராஸ்யமாக கடந்து செல்கின்றது 2003ம் வெளியீடான ‘பிசாசு
மாளிகை’ (the haunted mansion) திரைப்படம். மாளிகையில் இருக்கும்
சாராவின் முகச்சாயலை ஒத்த உருவப்படம் மர்மம்தான் மர்ம
முடிச்சுகளை அவிழ்க்கும் தீர்வுக்கான பயணத்தின் தொடக்கமாகின்றது.
உயிருக்குயிராய் நேசிக்கும் காதலி எலிசபெத் விஷமருந்தி தற்கொலை
செய்து கொண்டதாய் கிடைத்த கடிதத்தைப் படித்த மாளிகையின்
உரிமையாளர்
கிரேசியும் தற்கொலை செய்து கொள்கின்றான். இது பத்தொன்பதாம்
நூற்றாண்டில் அம்மாளிகையில் நடந்த சம்பவம். இச்சம்பவ கோர்வை
திரையின்
பங்களிப்பு பாத்திரங்கள் பெயர்களின் பின்னனி சூழலில் சுருக்கமாக
காட்டப்படுகின்றது. தற்சமயம் மாளிகையில் நடமாடும் கிரேசி, மாளிகை
பணியாளர்களான ரேம்ஸ்லி, எஷ்ரா மற்றும் எம்மா யாவரும் மாளிகையில்
உலவும் ஆவிகள். எலிசபெத்தின் முக சாயலைக் கொண்டிருக்கிறாள் சாரா.
எலிசபெத்தின் மரணத்தின் பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம்
தெரியாது உயிர்க்காதலி எலிசபெத் சாராவாக உயிர்த்தெழுந்துள்ளதாய்
எண்ணுகின்றான்
கிரேசி. அவளை மணம்புரிந்தால் மாளிகையின் சாபம் நீங்கி ஆத்மசாந்தி
பெற இயலும் என நம்புகின்றான்.
மனைவி சாராவைக் காப்பாற்ற எலிசபெத் மரணத்தின் மர்மத்தை
வெளிக்கொணர பெரிதும் முயற்சி செய்கின்றான் ஜிம்மி. தவறவிட்ட
குடும்பத்துடனான பொழுதுகள், அன்பான குடும்பத்தை நழுவ செய்த
பொருளியல் சார்ந்த வாழ்க்கை என அவனுடைய பலத்த முயற்சிகளிடையே
உணர்கின்றான். மர்மத்தின் ரகசியத்தைத் தேடும் ஜிம்மியின்
முயற்சிகளின் மீது என் கண்பார்வை நிலைக்குத்தியிருந்தாலும் என்
மனமோ அவன்
இழந்த வாழ்க்கைப்பகுதிகளின் தேடலைக் கவனித்துக் கொண்டிருந்தது.
மெல்ல நாம் தொலைத்துக் கொண்டிருக்கும் உன்னத பொழுதுகளை
திரும்பிப்
பார்க்க வைத்த காட்சிகள் அவை. வாழக்கைப்பயணத்தில் பொருளுக்கும்
அன்புக்கும் பலத்த போட்டி இருப்பது உண்மை. பொருள் பல வேளைகளில்
முந்திச் சென்றாலும் வெற்றி என்பது அன்புக்கு மட்டுமே.
ஜிம்மி ஒரு காட்சியில் மனம் தளர்ந்து கலங்குகின்றான். தான்
எடுத்த ஒவ்வொரு முயற்சியும் தோல்வியானதைப் புலம்புகின்றான்.
‘தோல்வி என்பது
முயற்சி செய்வதை நிறுத்தும்போது மட்டும்தான் ஏற்படுகின்றது’ என
அவனை உற்சாகப்படுத்துகின்றது மேடம் லியோத்தாவின் அர்த்தம்
பொதிந்த
வார்த்தைகள். இப்படத்தில் என்னைக் கவர்ந்த வரிகளுள் இதுவும்
ஒன்று இது. நாம் செய்யும் முயற்சிகள் ஒவ்வொன்றும் தோல்வியைத்
தருவதே
இல்லை. தோல்விகள் என நாம் கருதுபவை யாவும் முயற்சிகள் கற்பித்த
வாழ்க்கைப் பாடங்கள். முயற்சிகள் விட்டுச் செல்லும் காலடி
தடங்கள் நம்
முன்னேற்ற படிகளாகின்றன.
ஜிம்மியாக வரும் எட்டி மர்பியின் நகைச்சுவையான கதாபாத்திரம் மர்ம
கதையிலும் சிறிதும் தளர்ந்து போகவில்லை. இக்கட்டான
சூழ்நிலைகளிலும்
மன அழுத்தமின்றி அலட்டிக்கொள்ளாமல் ஜிம்மி உற்சாகமாய்
செயல்படுவது அருமை. பிரச்சனைகளை உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும்
கையாள்வதை ஜிம்மியிடம் பார்க்க முடிகின்றது. நம் தினசரி
வாழ்க்கைப் பயணங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வேளைகளில் நாம்
மறந்து
போகும் விஷயங்கள் இவை. அதன் பலனாக மன அழுத்தங்கள் நம்மை
முன்னகரவிடாமல் பிரச்சனைகளுக்குள் ஆழ்ந்து அழுத்துகின்றன. சில
பிரச்சனைகள் மன அழுத்தங்களை விட எளிதானவை. எளிய பிரச்சனைகளின்
தீர்வைத் தேடி போகும் வழியில் அழுத்ததின் பிடியில் சிக்குவது
ஆபத்தானது.
ஜிம்மி தன் மகன் மைக்கலின் சிலந்தி பயத்தைப் போக்க ‘நாம்
வாழ்க்கையில் ஏதாவதொரு விஷயத்துக்குப் பயப்படுவதுண்டு. ஆனால்
அந்த
விஷயம்தான் நம்மை பலவீனமாக்கும்’ என அவனுள் இருக்கும் அச்சத்தை
விரட்டுகின்றான். இங்கே சிலந்தி என காட்டப்படும் உயிரினத்தை
நம்மைச்
சுற்றி இருக்கும் சிலந்தியைவிட பல மடங்கு ஆபத்து மிகுந்த பல
விஷயங்களுடன் ஒப்பிட்டு கொண்டது என் மனம். வாழ்க்கைப்பாதையைக்
கடக்க
நாம் பயத்தைத் துறக்க வேண்டும் என்பது உண்மையென்றாலும் அறம்,
தர்மம், நீதி, நியாயம் போன்றவற்றிற்கு கட்டுப்படாமல்
செயல்படுவோர்
வாழ்வும் பலவீனமாகும் என்பதும் நடைமுறை வாழ்க்கையின் கோட்பாடு.
ஜிம்மியின் மகளின் துணிச்சல் கவர்கின்றது. சிறு பெண்ணானவள்
இப்படித்தான் செயல்பட வேண்டும் என பாராட்ட தோன்றுகின்றது.
எலிசபெத் என்றெண்ணிய சாராவுக்கு தன் மீது வராத காதல் உணர்வைக்
கண்டு கிரேசி வருத்தமுறுகின்றான். சாரா எலிசபெத்தல்ல என்ற எண்ணம்
அவனுள் மெல்ல எழுகின்றது. சாராவிடம் காதலை வற்புறுத்தித்
திணிக்காத கிரேசியின் குணம் அவன் மீதான நல்மதிப்பை
உண்டாக்குகின்றது.
இத்தருணம் கிரேசியின் காதலின் தேடலை உணர முடிகின்றது. சாரா
எலிசபெத்தல்ல என்ற உண்மை தெரிந்தபோது தன் எண்ணத்தைத் தூர எரிந்து
தன் காதலி எலிசபெத்துடன் இணை சேர்கின்றான். காதல் என்பது
உடல்,உருவ அமைப்பைப் பார்த்து வருவதல்ல. மாறாக உயிரில் கலக்கும்
ஓர்
உன்னதமான அன்பு என உணர வைக்கும் கதாபாத்திரமாய் கிரேசி.
கதையின் இறுதி ஜிம்மிக்கும் கிரேசிக்கும் தேடலின் வெற்றியாக
அமைகின்றது. ஒவ்வொரு காட்சியமைப்பும் அற்புதமாய் உள்ளது.
மர்மக்கதையாக
தோன்றினாலும் அதில் மர்மமாய் குவிந்து கிடக்கின்றன வாழ்க்கைப்
பகுதிகளின் இழப்புகளும் தேடல்களும்.
rajamranjini@gmail.com
|
|
|
|
©>©
காப்புரிமை 2000-2010 Pathivukal.COM. Maintained By:
Infowhiz Systems Inc.. Pathivukal is a member of
the National Ethnic
Press and Media Council Of
Canada .
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|