இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!
எதிர்வினை: தசாவதாரம்!

- புதியமாதவி (மும்பை) -


இலண்டன் அக்கா ராஜேஸ்வரியின் தசாவதாரம் திரை விமர்சனம் வாசித்தேன். முதல் வாரம் மும்பையிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனத்தை தோலுரித்துக் காட்டியதற்காக அக்காவுடன் சேர்ந்து நாமும் கமலுக்கு ஜே போடலாம்தான்! ஆனா திரையில் எதற்காக தமிழக இன்றைய முதல்வர் கலைஞர் அவர்களையும் சுனாமி பேரழிவைப் பார்வையிடும் காட்சியில் அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களையும் காட்டி தமிழக அரசியல் வாதிகளிடம் ரொம்பவும் முன்னெச்சரிக்கையாக இரண்டு பக்கமும் கைகுலுக்கிக் கொண்டிருக்கும் காட்சியை எதில் சேர்ப்பது?

இதை அவருடைய வியாபாரதந்திரம், பிழைக்கும் வழித் தெரிந்தவர் என்று ஒரு சராசரி நிலையில் வைத்துப் பார்க்காமல் எப்படி பார்ப்பது?

இதுதவிர, அது என்ன சுனாமியின் பேரழிவுக்கும் பெருமாளுக்கும் அவர் போட்டிருக்கும் முடிச்சு? சுனாமி வந்து வைரஸ் கிருமியை அடிச்சிட்டு போனதாலே சுனாமியைவிட ஆபத்தான பேரழிவிலிருந்து பெருமாள் நம்மை எல்லாம் காப்பாத்தினாராம்! 12ஆம் நூற்றாண்டில் கடலுக்குள் மூழ்கிய பெருமாள் சிலை சுனாமி அடித்து வந்து கரையில் சேர்த்திருப்பது மாதிரி காட்டுவதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார்? அது எப்படி முடிகிறது இந்தக் கமலுக்கு.. சுற்றிலும் சுனாமியின் கோர அழிவும் சகமனிதனின் பிணங்களும். அந்தப் பின்புலத்தில் தான் கதாநாயகி தன் காதலை கமலிடம் சொல்வதும் கமல் அசடு வழிய ஏற்பதுமான காட்சி!

புத்தி சுவாதினமில்லாத வயதான பாட்டி சாதியை பார்க்காமல் பூவாரகனின் உயிரில்லாத உடலை எடுத்துவைத்துக் கொண்டு தன் மகன் என்று அழுகிறாளாம்.

கிருஷ்னவேணிப்பாட்டியார், மனநிலை தடுமாறினாலும் மனிதநேயத்தைக் காட்டிவிடுகிறார். அன்புக்குச் சாதி கிடையாது, நிறம் கிடையாது என்பதை இறந்து விட்ட கீழ்சாதி பூவராகனைத்தன் மேல்சாதி மகனாக நினைத்துத் தூக்கிவைத்தழும் காட்சி பிரமாதம். என்று அக்கா ரொம்பவே கமலைத் தூக்கி வைத்திருக்கிறார்.!! அது ஏன் மனநிலைத் தடுமாறினாதான் மனிதநேயமும் கீழ்ச்சாதி பூவராகனைத் தன் மகனாக நினைக்கும் மனித நேயமும் சாத்தியமா? ஏனேனில் மனநிலைத் தடுமாறாத கதாநாயகியும் அவாள்களும் அப்படி இல்லை என்றும் அதே கமல் காட்டியிருப்பது எதற்காக?

பெருமாள் சிலைக்குள் வைக்கப்பட்டிருக்கும் வைரஸ் டப்பாவை கையில் சிலை வந்தவுடன் டாண் என்று எடுத்தோமா என்றில்லாமல் சிலையை வைத்துக் கொண்டு கதாநாயகியுடன் ஓடிப்பிடித்து விளையாடுவது ரொம்பவும் சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எங்க ஊரு இளசுகள் விமர்சனம் செய்ததை அலட்சியப்படுத்த முடியாதுதான்.

நாத்திகம், சாதியம், அரசியலில் எவரையும் அடையாளம் காட்டாத மணல் லாரிக்கொள்ளை, கொஞ்சமாக சரித்திரம், சுனாமியைத் தத்ரூபமாகக் காட்டும் கிராபிக்ஸ் வித்தை என்று அளவாக கலந்து தமிழ்ப் படத்தை ஆங்கிலப் படம் சாயலில் எடுத்திருக்கிறார் கமல். 10 வேடங்களில் கமல் நடித்துவிட்டார் என்று தலையில் வைத்து ஆடுவதை விட அந்தப் பத்து வேடங்களை மிகவும் தத்ரூபமாக்கிய அழகியல் நிபுணர்களைப் பாராட்ட வேண்டும்.என்ன மேக்கப் போட்டுக்கொண்ட கமலின் பொறுமையைப் பாராட்டலாம்.!

எயிட்ஸ் கிருமி இராசயண ஆய்வு கூடத்தில் வல்லரசு உருவாக்கியது என்றெல்லாம் சொல்லத் தெரிந்திருந்தாலும் பெருமாளின் சிலையுடன் கதையை ஓடவிட்டு தமிழ்ப்பட பார்மூலாவை கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் கமல்.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை என்பது எங்க ஊரு சொலவடை. இதைப் புரிய வைத்த கமலுக்கு நன்றி.

puthiyamaadhavi@hotmail.com

© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner