| 
| பதிவுகள் |  
|   பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் 
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். 
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
 என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
 
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் 
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் 
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை. |  
| கடன் தருவோம்! |  
| 
  நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு 
இங்கே அழுத்துங்கள்
 |  
| 
            மணமக்கள்! |  
|  |  
| தமிழர் சரித்திரம் |  
| 
             சுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்| |  
|   |  
|   |  
| தமிழ் எழுத்தாளர்களே!..
 |  
| அன்பான
இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி
அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில்
இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் 
எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன்
தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல்
முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை
வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு
முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது
அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள்
மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். |  
| Download Tamil Font |  
|   |  | 
| இலக்கியம்! |  
| மவுன தவத்தின் மாயவரம்! - புதியமாதவி., மும்பை -
 
 
  ஜப்பானிய 
மொழி இலக்கியம் உலகத்திற்கு வழங்கிய கொடை ஹைக்கூ என்ற இலக்கிய வடிவம். எல்லா 
மொழிகளிலும் ஹைக்கூ இருந்தது என்று சொல்லிக்கொள்வதெல்லாம் எல்லார் வீடுகளிலும் 
மோனலிசா ஓவியம் இருந்தக் கதையாகத் தானிருக்கும். ஜென் தத்துவங்களை உள்வாங்கிக் 
கொண்டு அனுபவத்தில் உதிர்ந்த ஒரு காட்சிப் படிமமாய் அடையாளப் படுத்தப் பட்டதுதான் 
ஹைக்கூ. ஹைக்கூவை நோக்கிய கவிஞனின் ஒற்றையடிப் பாதைதான் ஹைபுன். 
 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த ஜப்பானிய ஹைக்கூ கவிஞர் பாஷோ பல்வேறு 
இடங்களுக்கு பயணம் செய்த துறவி. தன் பயணங்களின் போது தான் கண்ட காட்சிகள், 
அனுபவங்களை அப்படியே பயணக்குறிப்பு போல அவர் எழுதியிருந்த கவித்துவமான உரைநடை 
வீச்சு தான் ஹைபுன். ஹைபுனுக்கு விளக்கம் சொல்ல வந்த ஜப்பானிய மொழி அகராதியும் 
'ஹைகூவின் சாறு கலந்து பிழிந்த கவித்துவமான உரைநடைதான் ஹைபுன்' (haibun /prose with 
a poetic haiku flavor/) என்று விளக்கம் தருகிறது.
 
 காட்சி அனுபவத்தை அப்படியே புகைப்படம் போல நகல் எடுத்து பதிவு செய்வதல்ல ஹைபுன். 
காட்சி அனுபவத்தில் தோய்ந்து
 எடுக்கப்பட்ட தூரிகையால் வரைந்த ஓவியம் ஹைபுன். அந்த ஒவியத்தின் வண்ணங்களில், 
வளைவுகளில் கவிஞனின்
 அனுபவமும் கற்பனையும் கலந்தே பயணிக்கும். கவிஞனின் பயணத்தில் அவனுடன் சேர்ந்து 
வாசகனும் பயணிக்க வேண்டும். அந்தப் பயணத்திற்கான ஒற்றையடிப் பாதையாக ஹைபுன். 
ஒவ்வொரு ஹைபுனும் இறுதியில் ஒரு ஹைக்கூ முத்திரையுடன் நிறைவு பெறும் .
 
 ஹைபுன் ஹைக்கூவைப் பற்றிய உரைநடை விளக்கமோ/ தெளிவுரையோ/பொழிப்புரையோ அல்ல. இன்னும் 
சொல்லப்போனால் ஹைக்கூவில் இடம் பெற்றிருக்கும் சொற்களைக் கூட ஹைபுன் 
தவிர்த்திருக்கும். இரண்டிலும் வாழ்க்கையின் தத்துவம், இயற்கை காட்சி, அனுபவமாக 
விரியும். ஹைபுன் கவித்துவமான உரைநடைதான் எனினும் இலக்கண விதிகளைப் பற்றிய 
கவலையின்றி சுண்டக்காய்ச்சிய சொற்களால் நிகழ்கால காட்சியாய் பின்னப்பட்டிருக்கும்.
 
 தமிழுக்கு இரண்டாவது ஹைபுன் நூலாக வெளிவந்துள்ளது கவிஞர் அன்பாதவனின் 'மாயவரம்'. 
முதல் தொகுப்பு கூட்டு முயற்சியால் வெளிவந்த தொகுப்பு நூல் என்பதால் தனிப்பட்ட ஒரு 
கவிஞரின் முதல் ஹைபுன் நூல் என்ற சிறப்பு தமிழ் இலக்கிய வரலாற்றில் மாயவரத்திற்கே 
உண்டு.
 
 தத்துவம்:
 
 வாழ்க்கை நிலையானதல்ல. மரணமும் மரணம் தந்த வலியும் கூட அப்படித்தான். காலம் எல்லா 
வலிகளையும் அழுகை ஓலங்களையும் விழுங்கி செரித்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த 
தத்துவத்தையே எல்லா மதங்களும் துறவிகளும் பல்வேறு விதமாக விளக்கம் தருகின்றனர். 
தமிழ் இலக்கியத்தில் சித்தர்களின் வாழ்வியல் பார்வையும் தத்துவமும் அவர்கள் படைத்த 
இலக்கியங்களும் வாழ்வின் நிலையாமையை சொல்லும் மிகச்சிறந்த படைப்பிலக்கியங்கள்.
 
 'நண்பரின் மரணம்
 இடுகாடு வரை செல்ல நேர்ந்தது
 தினமும் போகிற பாதைதான்
 
 பறையதிர.. பூ உதிர..
 மித வேக நடையில்
 பாடைப் பல்லக்கின்
 பின் நடக்கிறது உறவு நட்புக் கூட்டம்
 
 அரிச்சந்திரன் சாட்சியாக
 விறகும் விராட்டியும்
 அடுக்கிய படுக்கையில்
 கிடக்கிறது உடல்.
 
 கதறி அழுகின்றன நெருங்கிய உறவுகள்
 சோகத்தின் சுமை தாளாமல்
 சுருட்டை வாங்கிக் கொண்டு
 எட்ட நடக்கிறேன்"
 
 ** கண்டுபிடிக்க இயலவில்லை
 இடுகாட்டில்
 தந்தையை புதைத்த இடம் **
 
 ஹைபுன் /ஹைக்கூ இரண்டிலும் வெளிப்படுவது வாழ்க்கையைப் பற்றிய நிலையாமைத் தத்துவம். 
ஹைக்கூவிற்கு அழுத்தம் தருகிறது நிகழ்காலத்தில் கவிஞர் கண்ட காட்சி. இந்த 
ஹைக்கூவிற்கு எந்த வழியில் பாதைப் போட்டாலும் வழி என்னவோ சுடுகாட்டிற்குத்தான் 
போயாக வேண்டும். எனவே இக்கவிதையில் ஹைபுன்னும் ஹைக்கூவும் ஒன்றுடன் ஒன்றாய் இணைந்து 
அந்த இரண்டும் சேர்ந்த காட்சியில் ஒன்றின் கருத்திற்கு மற்றொன்று வீரியம் சேர்த்து 
விசையுடன்
 வெளிவருகிறது.
 
 லிமிரிக் ஹைபுன்:
 
 பதினோரம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தோன்றிய இலக்கிய வடிவம் லிமிரிக். எனினும் 
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த எட்வர்ட் லியர் என்பவர்தான் லிமிரிக் வடிவத்தை 
அதிகம் கையாண்டார். 1984ல் வெளிவந்த கவிஞர் மீராவின் ஊசிகளை லிமிரிக் என்கிறார் 
கவிஞர் தமிழ்நாடன். லிமிரிக் அங்கதத்தை வெளிப்படுத்தும். சமுதாயச் சீர்கேடுகளைச் 
சாடும்.
 
 உயிர்ப்பலி கூடாதென சொல்கிறது சட்டம்
 ஆஹா எவ்வளவு நல்ல சட்டம்
 
 இந்த சட்டம் மட்டும் 1967-ல்
 இருந்திருந்தால்
 கீழ்வெண்மணியில் 44 பேர் பலியாகியிருக்க மாட்டார்கள்
 
 1978-லாவது இச்சட்டம் தன் வலிமையைக்
 காட்டியிருக்குமேயானால்
 விழுப்புரத்தில் 12 பேர்
 கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை
 
 அட தொன்னூறுகளிலாவது இந்த சட்டம்
 தன் முகத்தை காட்டியிருக்குமேயானால்
 தாமிரபரணி கொலைகள்
 நிகழ்ந்தே இருக்காது
 மேலவளவு முருகேசன் உயிரோடு இருந்திருப்பார்
 குடும்பத்தோடு சந்தோஷமாக
 
 என்ன செய்வது!
 ஆடு, கோழி, பன்றிகளை விட
 கீழானவர்களாய் தலித் மக்கள்
 கடையரிலும் கடையராய்
 
 அடடே
 வலிமையற்ற இந்த தலித் ஏமாளிகளிடந்தானே
 இருக்கிறது வலிமையான
 வாக்குசீட்டு என்கிற ஆயுதம்!
 
 ** சின்னச்சின்னப் பொறிகளைச்
 சேர்க்க சேர்க்க
 எழுந்தது பெரு நெருப்பு **
 
 ஒரு ஹைக்கூவிற்கு எழுதப்பட்ட ஹைபுன் தன் உள்ளடக்கத்தில் லிமிரிக் தாக்கத்துடன் 
லிமிரிக் ஹைபுன்னாக எழுதப்பட்டுள்ளது.
 ( லிமிரிக் ஹைபுன் உண்டா? யானறியேன்! ஆனால் இந்த ஹைபுன்னை லிமிரிக் ஹைபுன் என்று 
உறுதியாக சொல்ல முடியும்.)
 
 ஹைபுனின் வெற்றி:
 
 மென்மையான உணர்வுகளின் மூலம் உரைநடை போக்கினை அமைத்து திருப்பம் தரும் அல்லது 
அதிர்ச்சி தரும் அல்லது பரிதாபத்தை தரும் உணர்வுடன் ஹைக்கூ இடம்பெறும் போது ஹைபுன் 
வெற்றியடைகிறது - என்கிறார் பல்லவி குமார் ( தமிழ் ஹைக்கூ சமகாலப் பார்வைகள் - 
பக்.27)
 
 பசுமை நினைவுகளுடன்
 பச்சைத் தருவாய்
 இருந்ததொரு காலம்
 
 கிளைபரப்பி பூச்சொரிந்து
 விருட்சமாய் நிழல் படர்ந்து
 நின்றதொரு நேரம்
 
 வேரிலூற்றிய வெந்நீராய்
 மொட்டை மரமாய் பட்டுப்போனது
 இக்காலம்
 
 ஆழ்ந்த மவுனத்தின்
 அழுத்தங்களில் புதைத்திறுகி
 ஆனது கல்மரமாய்...
 
 ** எப்போதும் எருக்கம் பூக்கள்
 எப்போதாவது ரோஜா
 தோட்டம் **
 
 
 ** மருத்துவ மனையிலா
 பதுங்கு குழிகள்
 பார்வையற்ற வான் தாக்குதல்'** என்ற ஹைக்கூவிற்கு பூச்சொரியும் போர் விமானங்களின் 
புதிய முகத்தைக் காட்டும் ஹைபுன் , காட்சிகளிருக்கும் முரண் ரசனைக்குரியது.
 
 'ஹைக்கூ நம்மைத் தட்டி அழைக்கும் கை, பாதி திறந்திருக்கும் கதவு' என்பார் ப்ளித். 
மாயவரமும் வாசகனைத் தட்டி அழைக்கிறது.
 ஹைபுன்கள் பாதி திறந்திருக்கும் கதவுகளைத் திறக்கிறது. படைப்பாளனின் படைப்புலகில் 
வாசகனும் ஒருவனாக பயணிப்பது எளிதாகிறது. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையில் 
ஏற்படும் இடைவெளியைக் குறைக்கிறது மாயவரத்தின் ஹைபுன்கள்.
 
 "ஒவ்வொரு படைப்பாளியின் அல்லது வாசகனின் உள்ளே கனன்று கொண்டிருக்கும் நெருப்புப் 
பொறி. அந்த உள் நெருப்பிம் தீவிரமும் அதன் உக்கிரமும் அவனது மனநிலையுன் 
சூழ்நிலையும் தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு சமூக அக்கறையுள்ள படைப்பாளியும் / மனிதனும் 
தனது நிலைப்பாட்டை எதன் பொருட்டும் விட்டுக் கொடுக்க தயாரில்லை. நெருப்பின் 
தீவிரத்தை கொஞ்சமும் மாற்றாமல் தன்னுள்ளே அப்படியே பொதிந்து அணுப்பிளவு போல 
வாசகனின் மனதில் வெடித்து உன்னதம் பரப்பும் வித்தையை தேர்ந்த ஹைக்கூவால் செய்ய 
முடியும்" என்பார் பாரதியார் பல்கலைக் கழகம் - கோவை. ஜெ.பாலகிருஷ்ணன்.
 
 சமூக அக்கறையுள்ள கவிஞராக படைப்புலகில் முத்திரைப் பதித்திருப்பவர் கவிஞர் 
அன்பாதவன். அதனால்தான் இயற்கை காட்சி அனுபத்திலிருந்து விலகிய லிமரைக்கூ, 
சென்ரியூகளுக்கான ஹைபுன்களையும் மாயவரத்தில் காணலாம் 'எழுதும்போது உனக்கும் உன் 
கருப்பொருளுக்கும் இடையில் ஒரு மயிரிழைகூட இடைவெளி இருக்கக்கூடாது. உள்மனதை 
நேரடியாகப் பேசு" என்பார் பாஷோ. கவிஞர் அன்பாதவனின் மாயவரத்தில் கவிஞரின் பல்வேறு 
அனுபவங்களை வார்த்தைகளில் காட்டும் மாயவித்தையைச் செய்திருக்கிறார்.காதலும் காமமும் 
தனிமையும் மாநகர வெறுமையும் நட்பும் மவுன உரையாடல்களும் சமூகத்தைப் பாதிக்கும் 
சாதி, யுத்தம்
 எல்லாவற்றிலும் இழையோடி இருக்கும் மனிதநேயம் அத்தனையும் கலந்த வரப்பிரசாதமாக 
மாயவரம்.
 
 வரங்களே சாபங்களானால்!!??
 
 ஹைக்கூவின் சிறப்பே அது வாசகனுக்கு ஏற்படுத்தும் பல அதிர்வுகள்தான். "ஒரு நல்ல 
ஹைக்கூ படித்து முடித்தான பின் அதைப் பற்றிய சிந்தனைக்கே மிகுதி நேரத்தை ஒதுக்கியாக 
வேண்டும். உரக்கப் படித்தல், தொடர் கவிதை வாசித்தல் சமாச்சாரமெல்லாம் ஒவ்வாது. 
அவரவர்க்கு ஏற்றபடி தனியாக அமர்ந்து விசிறிக்கொண்டு முகத்தில் படரும் மெல்லிய 
காற்றை அனுபவிப்பது போன்று அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது ஹைக்கூ 
கவிதை" என்பார் சிறகு இரவிச்சந்திரன். எனவேதான் ஹைக்கூவில் படைப்பாளியைப் போலவே 
வாசகனும் முக்கியமானவன். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு வாசகனும் ஹைக்கூ 
அனுபவத்தில் ஒரு படைப்பாளியாகிறான். இப்படியிருக்க, ஹைக்கூவுக்கு முன் படைப்பாளியே 
எழுதும் ஹைபுன் குறிப்பிட்ட ஹைக்கூவின் பன்முக வாசிப்பு அனுபவத்தைக் குறைத்துவிடும் 
அபாயமும் உண்டு மாயவரமும் இதற்கு விதிவிலக்கல்ல.
 
 ** யாருமற்ற தனிமையில்
 அறைக்குள் நடனம் பயிலும்
 ஊதுபத்தியின் நறுமணம் **
 
 இந்த ஹைக்கூவின் ஹைபுன் ஒரு காதலிசையை வேண்டி நிற்கும் காட்சி,
 
 ** வெட்டிப் போட்ட
 மரத்துண்டிலும்
 துளிர்கள் **
 
 இந்த ஹைக்கூ பன்முக வாசிப்புகளுக்கு வழிவகுக்கும் மிகச்சிறந்த ஹைக்கூ. ஒரு 
பெண்விடுதலையுடன் மட்டுமே முடிந்து போகும் சிந்தனையல்ல. ஒரு ஹைக்கூவிற்கு ஓராயிரம் 
ஹைபுன்கள் எழுத முடியும். எழுத வேண்டும். இதைப் புரிந்து கொள்ளும் போது தான் 
வரங்கள் சாபங்களாகது.
 
 அட்டைப்படம், வடிவமைப்பு, அச்சாக்கம் அனைத்தும் மாயவரத்திற்கு சிறப்பு 
சேர்க்கின்றன. சோதனை முயற்சியாக பல்வேறு மாயவித்தைகளை மாயவரத்தில் காட்டியிருக்கும் 
கவிஞருக்கு வாழ்த்துகள்.
 
 puthiyamaadhavi@hotmail.com
 |  
| 
 |  
| © 
காப்புரிமை 2000-2007 Pathivukal.COM முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
 |  
|   |  
|  |  |