கலைக்கு ஒரு சிலை!
பூநகரான்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் சிலை. சிலையாகிவிட்ட கலைக்கு இது ஒரு விலை நிலையாக மலையாக மனித வரலாற்றில் பதிவாகும் அலை இது. ஒப்பிடவே முடியாமல் சில மனிதர்கள் சில நேரங்களில் பிறந்து விடுகிறார்கள். அப்படி தமிழினத்தில் பிறந்த ஒரு அபூர்வப் பிறவி நீ கொடுத்த பாத்திரத்தை பிரதிபலிக்க முடியாது திண்டாடும் பட்டாளத்தில் ' ஓவர் அக்ரிங்" என்று அளக்கப்பட்ட நடிப்புக் குவியல் சிவாஜி. சோகம் என்றால் அடங்கி ஒடுங்குவது வழமை அதையே அட்டகாசமாக நடித்துக் காட்டியவன் நீ! ஓ கலைஞனே! நீ நடிப்பின் சிகரம் மட்டுமல்ல நடிப்பின் இலக்கணமே நீ தான். ஏதோ ஒரு துறையில் சிகரத்தை தாண்டியவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் அந்த மலையின் ஒரு பக்கத்தால் உச்சிக்கு சென்றிருப்பார்கள். நீயோ நடிப்பின் அத்தணை பக்கங்களையும் அணு அணுவாக அலசி அந்த வட்டத்தின் 360 பாகையையும் தொட்டவன்.
நவதானியம் நவரத்தினம் நவராத்திரி என்று முழுமை காட்டிய நவரசம் நீ!
அமெரிக்காவின் நகரங்களால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்கள் இருவர். முதலாமர் பண்டித நேரு. அடுத்தவன் நீ . ஹவஹர்லால் நேருவிற்கான அந்த மதிப்பில் இந்தியா என்ற காரணமும் அவர் பதவியும் காந்தியவாதி என்பன போன்ற பல காரணங்களும் பங்கெடுத்திருக்கலாம். ஆனால் உனக்கு அளிக்கப்பட்ட அந்த ஒரு நாள் நகர முதல்வர் என்ற கௌரவத்திற்கு அத்தனை காரணங்களுமே நீ ஒரு தலை சிறந்த நடிகன் என்பது மட்டுந்தான்.
ஓ ராசாவே ! நீ நடிப்பால் உயர்ந்த மனிதன்.
'சக்ஜஸ்" என்று கூவிக் கொண்டு வந்து திரையில் நடிப்புச் 'சேர்க்கஸ்" காண்பித்து விட்டுச் சென்றவன் நீ.
உன்னை இழந்ததாக ரசிகர்கள் உணராத அளவிற்கு அத்தணை நடிப்புக்களையும் அள்ளிக் கொட்டி விட்டு சென்ற நிறைகுடம் நீ.
உன்னைப் பார்த்தாலே பசி தீரும்.
ராஜ ராஜ சோழன் படம் வெளியான போது அரசியல் காரணமாக அடிமைப் பெண்ணை வியந்து பேசிய வசனவாள் கலைஞர் உண்மையான ராஜ ராஜ சோழனிற்கே இவ்வளவு கம்பீரம் இருந்திருக்குமா? என்றது.
எதிலுமே அடிபட்டு மூழக்கிப் போகாத பகுத்திறவு நீ மேடையில் சிவாஜியாகவே மாறியதைக் கவனித்து விட்டு தந்த பெயர் தான் சிவாஜி.
அண்ணாவோ மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றது உனக்குத் தான் பொருந்தும்.
திருத்தமாகப் பேசி தமிழை வளர்த்தவன் நீ.
ஓ உலகப் பெரு நடிகனே!
பாரிஸ் நகர அந்த உயர்ந்த கலைப் கோபுரமே உன்னை செவலியர் என்று உயர்த்திய போது தான் டில்லி விழித்துக் கொண்டது.
நீ நடந்தாலும் அழுகு விழுந்தாலும் அழகு. அழக்ககான பாத்திரங்களை எடுத்தாலும் அதுவும் அழகு

திருவிளையாடற் சிவனே!
திருவருட் செல்வர் அப்பரே!
கப்பலோட்டிய தமிழனே!
கர்ணனே!
வீர பாண்டிய கட்டப் பொம்மனே!
திரிசூலமான தெய்வ மகனே!
நடிப்புப் பிரபஞ்சத்தின் விஸ்வரூபமே!
தமிழ்த்தாயின் தவப் புதல்வனே!
கனடாத் தமிழராகிய நாமும் பதிவுகளுடன் சேர்ந்து உன் சிலையின் முன் மானசீகமாக
கனடாவிலிருந்தவாறே சிரந் தாழ்த்தி கரங் கூப்புகிறோம்.
poonagaran@rogers.com