பதிவுகள்
|
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில்
வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை
சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம்.
விபரங்களுக்கு ngiri2704@rogers.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு
விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும்
ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில்
தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
|
மணமக்கள்! |
|
தமிழ்
எழுத்தாளர்களே!..
|
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை
வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள்
ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை
கருதி பிரசுரிக்கப்படும். பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள்
யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல்
ngiri2704@rogers.com
மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு
ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு
அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு
ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின்
நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப்
படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே
சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர்
மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது. 'பதிவுக'ளின் நிகழ்வுகள்
பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப்
பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது
மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து
கொள்ளலாம். |
|
கவிதைகள்! |
சௌந்தரி கவிதைகள்1
மௌனம்!
நானும் நீயும் இணைந்து நடந்தோம்
நடந்த பாதையெல்லாம்
கதைத்துக் களைத்தோம்.
நீண்ட இடைவெளி,
இனிமையான சந்திப்பு
வன்கோவும் பிக்காசோவும்
உன் மனவெளியில்
வாலியும் கண்ணதாசனும்
என் விழியோரத்தில்
நானும் நீயும் படித்த புத்தகங்கள்
பதித்த தத்துவங்கள்
முரண்பட்டு நிற்கின்றன
முரண்பட்ட கருத்துக்கள்
மோதுகின்ற கட்டத்தில்
மூச்செறிந்துவிட்டு, ஏனோ
மௌனித்து விடுகின்றோம்
ஏன் இந்த மௌனம்
சொல்ல நினைப்பதை
சொல்ல விரும்பாத மௌனம்
ஒருவரை ஒருவர்
அறிந்து கொண்டோமா - இல்லை
உடலும் மனமும்
தேடும் அடைக்கலம்
அழிந்துவிடும் என்ற வருத்தமா!
நானும் நீயும் நாமாக . . . .
.
நீ நினைக்கும் பொழுதெல்லாம்
தென்றலாக வீசமறந்தால்;
என்னை புயலென்று சொல்லிவிடாதே!
நீ தூங்கும் நேரமெல்லாம்
உன் கனவோடு வருவதனால்;
என்னை நிஐம் என்று நம்பிவிடாதே!
நீ போகும் பாதையெல்லாம்
உன் நிழல்போல் தொடராவிடில்
என்னை முடமென்று பெயர்சூட்டாதே!
நீ விரும்பும் கணமெல்லாம்
உன்னைப் படரமறுத்துவிட்டால்
என்னை மரமென்று கொச்சைப்படுத்தாதே!
நீ கேட்கும் போதெல்லாம்
நான் வெளிச்சம் தரமறுத்தால்
என்னை இருட்டென்று மாட்டிவிடாதே!
நீ குட்டும் போதெல்லாம்
நான் குனிந்து கொள்வதனால்
என்னை அடிமையென்று அவமதிக்காதே!
நீ பேசும் போதெல்லாம்
நான் மௌனித்திருப்பதனால்
என்னை ஊமையென்று எண்ணிவிடாதே!
நான் நானாகவும் நீ நீயாகவும்
நானும் நீயும் நாமாகவும் இருக்கும்போதே
நாளைய பொழுது நலமாக விடியும்;.
ஈர்ப்பு
தனிநிகரான உன் உலகத்தில்
துணிவாக தடம்; பதித்தேன்
அந்நியமான என் கண்களுக்கு
ஆச்சரியமான பல தோற்றங்கள்;
ஈர்த்துக் கொண்டேன் - நீ
விரும்பியும் விரும்பாமலும்
சேர்த்துவைத்த பெரும் ஊதியத்தை
உன் நிகரற்ற மண்டலத்தில்
ஆர்வமிக்க மாணவி நான்
சீர்ப்படாத தொடர் வரலாற்றில்
வியப்பான நாகரீகப்படிவம் நீ
உன் சிந்தனையின் ஆழத்தை
உற்றுநோக்கி பதிவுசெய்தேன்
திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டேன்
முன்பே உனதாக்கிக் கொள்ளென்று
உன் மனமாற்றப் படிநிலையின்;
நிழல்வெளியில் எனக்குள் பலமாற்றம்;
நகைப்பொலியில் முகமலர்வேன்
ஊற்றெடுக்கும் நீர்த்துளியில்
உடையாமல் போட்டியிட்டு
உள்ளத்தால் முதிர்வடைந்தேன்
என் தொலைத்தோற்ற மனக்காட்டி
உள்முகம் நோக்கி சொன்னது
உன்விலை என்னவென்று
நீ அடிக்கடி மிதிபட்ட பாதையில்
முடிவெச்ச வடிவமானேன்;
உன் கரையற்ற நீர்வரைவில்
காற்றோடு கரையேறும் படகானேன்
நீ இடைவிடாது செதுக்கிய
பாறைவெடிப்பு இடைவெளியில்
ஊடுருவி தேடிக்கண்டேன்
பசும்புல்தரை கொண்ட
சுரங்க வழிப்பாதையொன்றை
அளவுகோல் வைத்து
அளக்கமுடியாத எல்லைபோலும்
அமைதியாக செல்கின்றேன்
அமிழ்வுக்குப் பின்னாலும்
மிதந்துவரும்; மிதவையாகி
tary22@yahoo.com.au |
|
©
காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன்
|
|
|
|