| செப்டம்பர் மாதக் கவிதைகள்! நட்சத்திரவாசி |
  மட்டுவில் ஞானக்குமாரன் |
  ப.மதியழகன் |
  சக்தி சக்திதாசன் |
  கவி | ரூசோ 
  | தமிழநம்பி |
  வேதா. இலங்காதிலகம். |
  ரிஷி (ஆங்கில மொழிபெயர்ப்பு) |
  பிரதீபா |
  ராம்ப்ரசாத்
 
 என்றாலும் கவிதையே
 
 - நட்சத்திரவாசி -
 
 பதினைந்து வருடமாகநானும் பார்த்துகொண்டிருக்கிறேன்
 அந்த இற்றுப் போன் கிளையை
 ஒடிந்து விழவும் இல்லை
 முறித்து எடுக்கவும் இல்லை
 பலசமயமும் மனைவி
 விறகு எரிக்க இல்லை
 என்ற போதும்
 அந்த மரத்துக்கு
 இற்று போன கிளை
 என்னவோ கொள்ளை
 அழகு தான்.
 
 மழை காலங்களில்
 எறும்புகள்
 தானியங்களை
 இங்கிருந்து அங்கும்
 அங்கிருந்து வேறெங்கும்
 கொண்டு செல்வதை தவிர்த்து
 வேறு வேலை ஏதேனும் வேலை உண்டோ?
 
 பூக்களின் வாசத்தை கண்டும்
 காணாமலும் போய்க்
 கொண்டிருக்கிறது
 ஒரு வண்டு
 என்னை சமன்குலைய
 செய்யும்
 உத்தேசத்துடன்
 
 மௌனமாய் உதிர்ந்து
 விழுந்து கொண்டிருக்கிறது
 ஓர் ஆலிலை
 கார்டூன் நெட்வொர்க்கில்
 டோமுக்கு பயந்து
 ஓடும் ஜெர்ரிக்கு
 அது பயன்படக் கூடும்
 என்பதை தவிர்த்து
 வேறென்ன யோசிக்க முடிகிறது
 இப்போது?
 
 ஆடு கரையும் போது
 ஏன் கரைகிறது என்று
 நினைக்காமலில்லை
 என்றாலும்
 கரைந்து விட்டு தான்
 போகட்டுமே என்பதான
 மனசை போலொரு
 மனசா உனக்கு?
 
 இரவில் எழுப்பச் சொல்லி
 ஒரு நட்சத்திரம்
 உறங்கி போனது
 நட்சத்திரங்களை பற்றி
 யாரும் கவலை
 கொள்வதில்லை என்ற போதும்
 நடத்திரம் என்றோ
 விண்மீன் என்றோ
 எப்படி வேண்டுமானாலும்
 அழையுங்கள்
 ஆனால்
 பகற்பொழுதில் காட்டச்சொல்லி
 தொந்தரவு தராதீர்
 
 mujeebu2000@yahoo.co.in
 
 நஞ்சுக் கொடியாகியதோ
 தொப்புள் கொடி .....?
 
 - மட்டுவில் ஞானக்குமாரன் _
 
   ஏதேன்சு நகரத்து தீPவந்;;;;து
 வயிற்றுள்ளே ஒப்;பாரி வைக்;கிறது.
 
 நைல் நதியோடு
 போட்டி போடுகிறது
 கண்ணீர் ஆறு.
 
 நொருங்கி
 விழுந்த இதயத்துண்டுகள்
 சிதறி
 கவிதைகளாகிக்
 கிடக்கிறது.
 
 இந்த இடத்திலும்
 கவிதையா என நீ கேட்கலாம்.
 வேறென் செய்ய
 பீரங்கிகளுக்கு முன்னே நின்று
 கல்லெறியும்
 பலஸ்தீனச் சிறுவன் நிலை
 
 தொப்புள் கொடி
 கூட
 நஞ்சுக்கொடியாகிப் போயிற்று ....
 
 மைக்கல் ஐக்சக்சனுக்;;காக
 கொட்டிய
 ரகுமான் விழிகள்
 எமக்காக
 ஒரு துளி சொட்டவில்லை
 
 விஞ்ஞானத்தமிழ் மகன்
 கலாமுக்கோ
 ஒரு வார்த்தை செலவிட
 நேரமில்லை.
 
 கதை தேடும்;;;
 இயக்குனர்கள் கூட
 எங்கள் கண்ணீர்க் கதையினை
 கடன் கேட்;கிறார்கள்.
 
 தமிழகத்து
 அரசியல்வாதிகளோ
 பேசும்பொருளுக்காக
 எங்கள் பிணங்களை தோண்டி
 எடுக்கிறார்கள்.
 
 மூத்திரத்தைக்;
 கயிறென எண்ணியதன்
 விளைவு .
 
 ஒளிந்திருந்து கல்லெறியும்
 தரகர்களல்
 கூடிழந்து போயின
 குருவிகள்.
 
 சிறு துரும்பையேனும் பிடித்து
 கரை சேர முயலும்
 எறும்பின் நிலை
 எமது .....!
 
 maduvilan@hotmail.com
 
 ப.மதியழகன் (திருவாரூர் மாவட்டம். தமிழ்நாடு ) 
  கவிதைகள் இரண்டு!
 
 1. வானமெங்கும் வஞ்சியின் வடிவம்
 மெல்லிடையாள், கொடிநடையாள்
 விழிகளிரண்டால் சமர் புரிவாள்.
 
 கண்மணியாள், பொன் நிறத்தாள்
 செவ்விதழால் நவிலும் தேன்குரலால்
 மயிலிறகாய் தேகமெங்கும் வருடிக்கொடுப்பாள்.
 
 நிலவொளியாள், மலர் முகத்தாள்
 மென் பஞ்சுப் பாதங்களால் மண் அளப்பாள்.
 
 ஈசனின் இடப்பாகமானவள், உயிர்களுக்கு வித்தானவள்
 நாணி நிலம் பார்த்து வெட்கி கன்னம் சிவப்பாள்.
 
 ஒளியின் கிரணமானவள், வானவில்லின் வண்ணங்களானவள்
 தனது தோற்றப் பொலிவைக் கொண்டு
 விண்ணையே வியக்க வைப்பாள்.
 
 ஸ்படிக நீரானவள், மழையின் சுவை போன்றவள்
 முத்துப் போன்ற பற்களைக் கொண்டு
 சிந்தும் புன்னகையால் அந்த மின்னலையே தோற்கடிப்பாள்.
 
 நதியின் நீரலையானவள், புயலின் மையம் போன்றவள்
 சிறு நகத் தீண்டலிலே மானிடனை தேவனாக்கி
 தனது வியத்தகு ஆற்றலை உலகோருக்கு உணர வைப்பாள்.
 
 கார்மேகமானவள், விருட்சத்தின் வேர் போன்றவள்
 தனது தயை குணத்தால் பூமிப்பந்தின் சுழற்சியையே
 கண நேரம் நிறுத்திவைப்பாள்.
 
 நிலைச்சுடரானவள், குழந்தையின் பசியைப் போக்கும்
 பால் போன்றவள்
 ஏக்கத்தினை காதல் பரிசாக தந்து,
 காதலையும், காதலனையும்
 உயிரோடு கல்லறையில் புதைத்து வைப்பாள்.
 
 மலரின் நறுமணமானவள், விடை காண இயலாத
 புதிர் போன்றவள்
 என்றும் வளராத தேய்பிறையாய்
 ஆடவர்களின் வாழ்வை மாற்றி வைப்பாள்.
 
 தெய்வத்தாயானவள், கருவறை தெய்வச்சிலை போன்றவள்
 தனது உணர்வெழுச்சிகளை சம்ஹாரம் செய்து
 உள்ளத்திலேயே பூட்டி வைப்பாள்.
 
 ஐம்பூதங்களானவள், உடலை இயக்கும் உயிர் போன்றவள்
 அன்று தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை
 மனக்கண்ணால் கண்டு அகிலம் வியக்க
 உள்ளிருந்து அந்தச் சிவகாமி ஆட்டுவித்தாள்.
 
 ********************
 
 2. ஆசை மேகங்கள்
 
 பால்யத்தில்
 அழுது அடம்பிடித்து வாங்கிய
 கரடி பொம்மை
 அனாதையாகிப் போனது
 சைக்கிள் எனது
 அன்புச் சகோதரனானதால்...
 
 வாகன மோகத்தை வாபஸ் வாங்கி
 வலைத்தளங்களில் வகையாகச்
 சிக்கிக்கொண்டதினால்
 வீட்டில் கணினி என் இன்னொரு கையானது.
 
 கவரில் இருந்த முதல் மாதச் சம்பளம்
 எனது தகுதி இன்னதென்று
 என்னை உணரச்செய்தது.
 
 அதுவரையில விருப்பட்ட
 உயிரற்ற ஜடப்பொருட்கள்
 உண்டாக்காத வடுவை
 ஒரு பெண்ஜீவன் தந்துபோனது.
 
 மனைவி என்ற உறவு
 மணவறையில் மலர்ந்த பின்னர்
 கொஞ்சிக் கொண்டாட
 குழந்தை வேண்டும் என்ற கனவு
 கண்முன்னே கலர் கலராய் விரிந்தது.
 
 ஆசைப்படும் வரை
 மலை போல் தெரியும் எதுவும்
 அடைந்த பின்பு
 மடுவாகிப் போகும் மர்மம்
 என்னவென்று புரியாமல்
 புதிரோடு நகர்கின்றது நாட்கள்.
 
 mathi2k9@gmail.com
 
 ****************************************
 
 கனவு காணலாம் வாருங்கள்
 
 - சக்தி சக்திதாசன் ( லண்டன் ) -
 
 கவிதை பாடும்காரணமல்ல
 கவிஞன் என்னும்
 நோக்கமும் அல்ல
 மனிதன் என்னும்
 மாண்பு மட்டும்
 மனதில் கொண்டதால்
 கனவு காணலாம்
 வாருங்கள் !
 கவிதை சொல்லி
 அழைக்கின்றேன்
 
 நிலவு சுடும் வேளை
 நெருப்புக் குளிரும் சோலை
 கண்டு மகிழும் உலகம்
 கனவில் உண்டு காண்பீர்
 
 ஆற்ற முடியாத் துயரம்
 தீர்க்க முடியா வறுமை
 மாற்ற முடியா நோய்
 அனைத்தும் அற்ற உலகம்
 கனவில் உண்டு பாரீர்
 காண்போம் அதனை வாரீர்
 தேவைகளின் நிமித்தம்
 தாவுகின்ற மாந்தர்
 தேவையற்ற போதும்
 சீண்டுகின்ற கூட்டம்
 தேவையில்லை என்றால்
 சேர்ந்து செல்வோம் நாம்
 கனவு என்னும் உலகம்
 
 பூட்டன் கம்பனோடு
 பாட்டன் பாரதியோடு
 கூட்டமாய்ச் சேர்ந்து
 பாரதிமுதலாய் கண்ண
 தாசர்களெல்லாம் கண்ட
 கனவுலகைக் காண்போம்
 காற்றிலேறிக் கலப்போம்
 
 அழிகின்ற உலகத்தில்
 அழியாத வடிவமாய்
 செல்வந்தோர் ஏழையென்று
 பேதமொன்றும் பாராமல்
 கண்களை மூடியதும்
 காட்சி தரும் கனவுலகம்
 சமத்துவத்தின் சாட்சி அது
 சத்தியத்தின் நியதி அது
 கனவுகளில் கண்டாவது
 காண்போம் ஒரு புனித பூமி
 
 கனவு
 காணலாம்
 வாருங்கள்
 
 http://www.thamilpoonga.com
 ssakthi@btinternet.com
 
 
 ஏன் மறுக்கிறான்?
 
 - கவி -
 
 வேட்டையாடி,விலங்கு வளர்த்து,
 வேளாண்மை செய்தார் - அப்போது
 அவர்களுக்கு ஊரும் இல்லை - அங்கு
 கோயிலும் இல்லை
 
 இனங்கள் பெருகின
 போட்டிகள் தோன்றின
 தன்னை விஞ்சிய
 அனைத்தையும் வணங்கினர்
 விதிமுறை வகுத்தனர்
 எல்லைகள் குறித்தனர்
 
 தேவைக்கேற்பவே
 கண்டுபிடிப்புத் தொடர்ந்தது
 சாதிகள் வளர்ந்தது
 சமயங்கள் பெருகின
 
 சமூக ஒழுங்கிற்காய்
 சாத்திர விதிகள்
 சாத்வீக வாழ்வுக்காய்
 சத்திய போதனைகள்
 
 மறந்தான் மனிதன்
 மானுடத்தை
 மனிதத்தை
 ஆன்மாவின் நேயத்தை
 
 இழந்தான் வாழ்வின்
 இன்பத்தை
 அமைதியை - தன்
 இருப்பைக்கூட
 
 வலியன் கூறுவதே
 வேதம் ஆனது
 எழியவர் என்றுமே
 அடிமைகள் ஆயினர்
 
 கடவுளைப் படைத்தான் - ஆனால்
 கருணையை மறந்தான்
 தானங்கள் கொடுத்தான் - ஆனால்
 ஏழையை மறந்தான்
 
 சாத்திரம் சடங்கை
 மாற்றினான் தன் வசதிக்காக
 மாற்ற மறுக்கிறான் - சில
 மூட நம்பிக்கைகளை மட்டும்
 
 nkaviyan@gmail.com
 
 
 ரூசோவின் கவிதை!
 
 என்னைப் பற்றிவிரிவாக விளக்கினால்
 நீ என்ற
 ஒற்றை வார்த்தையில்
 மொத்தமாக அடக்கிவிடலாம்
 
 marine_engineeruso@yahoo.com
 
 இன்முகத்தோடு உள்ளனராம்!
 
 - தமிழநம்பி -
 
 
  இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீறஇனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
 மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
 மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே
 இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
 எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
 தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
 தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!
 
 சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
 செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
 இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
 ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
 எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
 எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
 பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
 போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!
 
 உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
 ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
 செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
 சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
 அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
 அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
 எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
 இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!
 
 அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
 அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
 முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
 முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
 கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
 களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
 விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
 விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்!
 
 thamizhanambi44@gmail.com
 
 படிகள்.
 
 - வேதா. இலங்காதிலகம்.
 ஓகுஸ், டென்மார்க். -
 
 
  சுடரும் புகழின் படிகள்இடறும் சூறாவளி நொடிகள்,
 படரும் பாசிகள், கொடிகளால்,
 தொடரும் வாழ்கைப் படிகள்.
 
 பிறப்பு இறப்பெனும் படிகளில்
 முதற்படியாம் வளர்படியாளருக்கு
 அறிவு தரும் அனுபவப்படி பெரும்
 ஆரோக்கியப்படி, நம்பிக்கைப்படி.
 
 ஏறுபடி நோக்கும் அடிகள்
 ஊறுபட வரும் மிடிகள்(துன்பம்).
 மாறுபடா நம்பிக்கைப் பிடிகள்
 கூறுபடாது தரும் வெற்றிப் படிகள்.
 
 இறங்கு படியாம் மாடிப்படியின்
 கைப்பிடி ஒரு ஆதாரப்படி.
 நிலைப்படியின் வாசற்படியால் உட்புக
 தலைகுனியும் நிலை தலைக்கனம் இறக்குமாம்.
 
 எடுத்தடி வைக்கும் ஒவ்வோரடியும்
 கற்படியோ ஏணிப் படியோ
 தப்படியின்றிப் பல படிகள்
 எட்டிட வேண்டும் உயர்படிகள்.
 
 இலக்கியப் படிகள் ஆர்வம் தரும்.
 ஆய்வுப் படிகள் மகத்துவம் தரும்.
 இசைப்படிகள் இனிமை தரும்.
 கவிதைப்படியெனக்கு வெளிச்சம் தரும்.
 
 vetha@stofanet.dk
 
 
 IN THE NAME OF LOVE….
 (surrounded by silence, our suffering brethren)
 A poem by ‘rishi’
 
   The ideal parent I am-Being both, the Mother and the Father!
 I love my children
 all too intensely.
 That’s the reason why
 I refuse to allow them to go out and learn;
 to receive education and
 earn a life of their own.
 For, if they go out to make themselves
 knowledgeable and self-reliant,
 that would surely break my heart
 The separation, I mean-don’t misinterpret.
 What, do I treat them as dogs?
 Don’t blurt out words
 that are at your beck and call.
 I’ve never allowed you inside at all.
 What? are you in receipt of those horrible images?
 Whoever dared to send those emails?
 Hei, You – catch hold of those scoundrels
 and beat them black and blue.
 The rod shouldn’t be spared.
 If they grow up into adults asking for their rights?
 Oh, no- that ignominy shouldn’t befall us.
 I should rear my off-springs without blemish.
 The more I beat them
 the better parent I become.
 The way, dreading the prospect of being away
 from her son
 The way Kannan’s foster-mother kept him
 tied to a grinder,
 I have safeguarded my children
 within a barbed- wire den.
 No, they are not my
 foster-sons and daughters.
 They are my very own; my beloved heirs.
 And, I would indeed thrash them all the more
 till blood springs from every pore
 of their body and soul.
 Indeed, that is my goal.
 The hand that hurts
 is the hand that hugs.
 Haven’t you read?
 So only I have not yet ended their sufferings.
 So strong is the love that I have
 for my off-springs.
 Oh, please understand
 I would treat them in the
 worst possible manner.
 If you remain a mute spectator-
 well and good.
 Instead, if you start spelling out aloud
 such terms as Global Village, Human Rights
 And all such nonsense
 I would just cut you into slices.
 Take care.
 The piles of weapons hauled
 are also at my disposal.
 Beware.
 Already I have severed
 my children’s hands
 Tongue
 Eyes
 Wings
 Days
 Hopes
 Precious life-
 ‘Of many more years of prosperity’- you can add,
 if you want. I don’t mind.
 Be it the First Century
 Or, the Twenty-First Century
 most of those who arrive
 as the self-appointed saviours of Mankind
 make it a habit
 of being the voice of the masses,
 all the while slitting their throats
 with a classic finesse.
 When this being the case
 why find fault with me?
 You fool of an ass-
 when the whole world
 watches on with indifference
 why the wickedness in you alone
 to accuse me inhuman?
 I oppress and suppress my people,
 leaving them hungry and depressed.
 I stamp on them and crush them.
 I make them bleed
 I kill them.
 I annihilate them at will.
 I deprive them of a
 decent life;
 A sense of dignity.
 I Plunge them in gloom.
 (Let them be doomed).
 All out of my
 wholesome love for them-
 You see…
 They are not They but We.
 I keep re-iterating this.
 Those bums who refuse to believe me
 and try their best to
 have a glimpse inside
 and ascertain the facts
 with their own eyes,
 would surely have to pay the price.
 Please, don’t call it a threat, now-
 These are just words of caution
 Given, in the name of Love…
 .
 ramakrishnanlatha@yahoo.com
 
 பிரதீபா (புதுச்சேரி) கவிதைகள்!
 பயணம்
 
 - பிரதீபா,புதுச்சேரி -
 
   வெண்ணிலவு வீடு திரும்பகதிரவன் கண்விழிக்கும்
 சாயல் படர
 விடிந்தும் விடியாமலும்
 இருந்த அந்த
 காலைப் பொழுதில்
 முத்துமுத்தாய்ப் படர்ந்த
 பனித்துளிகளில் நனைந்த
 வயல்வெளிகளும் ,
 விறைத்து நிற்கும்
 காவலர்களைப்போல்
 இருபுறமும் அணிவகுத்து
 நிற்கும் மரங்களும் ,
 மீனவன் வலையில்
 அகப்படாது பிழைக்க
 இங்கும் அங்கும் நீந்தும்
 உயிர் போராட்டத்தை
 தன்னுள் மறைத்து
 அமைதியையே ஒலமிடும்
 நீரோடைகளும் ,
 கதிரவனின் பார்வை பட்டு
 மொட்டவிழ காத்து நிற்கும்
 தாமரைகள் நிரைந்த
 தடாகங்களும் ,
 குஞ்சிகளை கூட்டில் விட்டு
 நீர்னிலைகளை நாடி
 கூட்டங்கூட்டமாய் பறக்கும்
 பறவைகளும் ,
 மெகங்களுடன் ரகசியம் பேசும்
 உயர்ந்த மலைகளுமாக
 மெல்லியதாய் ஒளிபடர்ந்து
 சிலுசிலிர்த்து வீசும் காற்றை
 சீறி ஊடுருவும் ரயிலின்
 இதமான தாலாட்டில்
 பயணித்தேன் ரம்மியமான
 அந்த காலைப்பொழுதில்
 ஒன்றன்பின் ஒன்றாக
 இக்காட்சிகளை ரசித்தபடியே
 
 உன் நினைவுகள்
 
 கதிரவன் கண்விழித்த
 விடியற்காலை தொட்டு,
 தன் ஒளியை
 சந்திரனுக்குத் தாரைவார்த்த
 மாலை வரை
 என் உள்ளமெல்லாம்
 உன் நினைவே,
 என் கண்கள் காணுகின்ற
 காட்சிகளில் எல்லாம் நீயே..
 என் செவிகள் கேட்பது
 என்னுள் இருந்து
 நீ உரைக்கும் வார்த்தைகளே..
 இவ்வாறே
 நான் உறங்கினாலும்
 உறங்க மறுக்கிறது
 உன் நினைவுகள்
 என் சுவாசத்தைப்போல...
 
 bradipagen@yahoo.com
 
 ராம்ப்ரசாத் (ஸ்காட்லாண்ட்) 
  கவிதைகள்!
 
  1. களவு போன கதை
 
 ஏதோ ஒரு வேகத்தில்,
 என்னிடத்தில் தஞ்சமடைந்திருந்த
 துணிச்சலின் முற்பாதி
 அறியாமல்,
 அதன் விரல் பிடித்தே
 உறங்கிக்கொண்டிருந்த என்
 அலைபேசியை செல்லமாய்க்
 கிள்ளி எழுப்பி,
 எண்களால் உருவான
 அவளின் பத்திலக்க
 புதுக்கவிதையை
 அச்சிலேற்றி,
 அலைவரிசைகளுள்
 தொலைந்து போன
 என்னவளை அழைக்கிறேன்...
 
 விரல் பிடித்திருந்த
 துணிச்சல் சட்டேன
 விலகி ஓட,
 அவசரமாய் அழைப்பைத்
 துண்டித்தே அதனுடன்
 ஓடத்துவங்கியிருந்த என்
 இதயத்துடிப்பை இழுத்துப்பிடித்து
 நிறுத்தி சற்றே
 ஆசுவாசம்
 கொள்ளும் நொடிகளில்,
 திடீரென்று அவளின் அதே
 புதுக்கவிதையை பதிலாய்ச்
 சுமந்தபடி கண்சிமிட்டி
 அதிர்ந்தது என் அலைபேசி...
 
 துணுக்குற்று மீண்டும்
 அவளை அழைத்து துண்டிக்க,
 போட்டிக்கு அவளும்
 என்னைக் கூவி நிறுத்த,
 அவளைத் திருட முயன்று
 தோற்று தற்காலிகமாய்
 நான் திருடிய அவளின்
 பத்திலக்க முகவரி போல்,
 பதிலுக்கு
 அவளால் திருடப்பட்ட
 என் முகவரி கண்கூடாய்
 என்னிடமே தான் களவாடப்பட்ட
 கதை சொல்லத் தொடங்கியது...
 
 2. பாடம்
 
 மழைக்கால
 மேகத்தின் சாயலை
 விழிப்புருவங்களில்
 கொண்டவளே...
 
 பூக்களுக்கே பூவாய்
 இருப்பதெப்படியென்று
 கற்றுக்கொடுத்தவளே...
 
 இந்நாளிலுன்
 பாடம் மறந்து
 சில பூக்கள்
 அனிச்சையாய்
 வாசம் வீச,
 அதை உணர்ந்தே
 நானுனக்கு அவைகளை
 உன் கூந்தலில் சூடத்
 தருகிறேன்...
 அவைகள் மறந்த
 பாடங்களை உன் கூந்தல்
 நினைவூட்டட்டும்...
 
 இனி வரும்
 காலங்களில் இதை,
 பூக்கும் எல்லா
 பூக்களுக்கும் செய்திட
 என் ஆயுள் முழுதும்
 அர்ப்பணிக்க
 சித்தமாயிருக்கிறேன்...
 
 3. தற்கொலை
 
 உயிர் கொண்டு
 வாழும் ஜீவராசிகளுள்
 எதுவும்
 தன்னுயிரைத் தானே
 எடுப்பதில்லை...
 தன் வாழ்கையைத்
 தானே வெறுப்பதில்லை...
 தானே முன்னின்று
 தன் காரியத்திற்குக்
 காரணமாவதில்லை...
 நிறுத்தி நிதானித்துத்
 தன்னைத் தானே
 கொல்லுவதில்லை,
 மனிதனைத்தவிர...
 
 குரங்காய் இருந்தபோதில்லாதது
 கால மாற்றத்தில்
 வளர்ந்துவிட்டதோ...
 மனிதனென்று பெயர்
 கொண்டபின் வந்து
 ஒட்டிக்கொண்டதோ?
 இந்த கோழைத்தனத்தைத்
 தோற்றுவித்த நுண்ணறிவும்
 ஓர் அறிவோ?
 
 தன்னைத்தானே கொன்றுபோடவோ
 இத்தனை நவீனங்களும்,
 இத்தனை கண்டுபிடிப்புகளும்...
 
 துன்பத்தை ஆய்வது...
 மீள வழியின்றேல்
 மாய்வது...
 இதற்கு குரங்குகளாய்
 இருப்பது மேல்
 என்ற கரைச்சல்
 கேட்கிறது காடுகளில்...
 உன் மரணத்தைக் கூடவா
 ஆள நினைப்பாய்?
 என்றே கேளிபேசுகிறது
 அக்கூட்டம்...
 
 உண்மை யாதெனில்,
 அறிவை ஆளும்
 விலங்குகள் அடைந்தன
 கூண்டுகளில்...
 அறிவை
 ஆள விட்டு விட்டவன்
 புதைந்தான் மண்ணுக்கடியில்...
 
 4. கனவு
 
 படுக்கையில், படுக்கையில்
 வெடுக்கென்று என்னைத்தள்ளி
 எழுந்தது உறக்கம்...
 மெல்ல அர்த்தங்களின்
 ஒற்றையடிப்பாதை வழியே
 வனாந்திரத்தில் நடந்த
 அதனுடன் நானும்
 துணையாய் நடக்கிறேன்
 காரணமின்றி...
 அவ்வப்போது கடந்து போன
 எத்தனையோ முகங்களில்
 நினைவில் நின்ற
 ஒரு முகம், அது
 உன் முகம், அதனைத்
 தேட யத்தனிக்கும்
 நொடிகளில் ஏனோ
 பனிமூட்டங்களாய்க்
 கரைந்துவிடுகிறது அதுவும்...
 எதற்காக நிற்கிறேன்,
 ஏன் நிற்கிறேன்,
 எங்கு நிற்கிறேன் என்று
 எதுவும் நினைவில் இல்லை,
 இருந்தபோதிலும் உன்
 முகம் மட்டுமே தேங்கி
 நிற்கிறது உன் கன்னக்குழிகளில்
 குழைந்துபோன என் நெஞ்சுக்குழியில்...
 
 காய்ந்த சருகுகளாய்
 சில விளக்கங்கள்
 மண்ணிலிருந்து எழும்பி
 உன்னையும் என்னையும்
 கடந்து கிளைகளை எட்டி
 பச்சை இலைகளாவதை
 கண்கூடாய்ப் பார்த்து
 நிற்கிறோம் நாம் அங்கு...
 
 -.(ashwin_i1980@yahoo.co.in)
 |